அடங்காப்பற்றிலே அதிகாரஞ் செலுத்திய வன்னியரின் ஆவணங்களில் இரண்டு மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றுளொன்று பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் வழங்கிய ஓலை@ மற்றையது இதுவரை பிரசுரிக்கப்பட்டாத கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம். இப் பட்டயம் 11 அங்குல நீளமும் 10 ½ அங்குல அகலமுங் கொண்ட செப்புத் தகட்டிலே இரு பக்கங்களிலும் எழுதப்பெற்றுள்ளது. இச்செப்பேடு சக வருடம் 1644இல் (கி. பி. 1742) யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னியர் பலர் சிதம்பரத்திலுள்ள அற நிலையமொன்றுக்குக் கொடுத்த தானங்களைப்பற்றிக் கூறுகின்றது.
வன்னியர் சிதம்பரத்திலே பரராச சேகர மகாராசனின் கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானிடம் தாம விட்ட நிவந்தங்களை ஒப்படைத்தனரென்று செப்பேடு கூறுவதால் பரராச சேகரன் முன் சிதம்பரத்தில் அமைந்திருந்த இராசாக்கள் தம்பிரான் மடம் எனப் பெயரிய அறநிலையத்தை வன்னியரும் ஆதரித்து வந்தனரென்பது புலனாகின்றது.
‘தங்கயிலைப் பிள்ளை வன்னியனார் மடதர்மத்துக்கு’ என்ற மொழித்தொடர் செப்பேட்டில் வருவதால் கயிலாய வன்னியன் என்ற பிரதானியும் முன்பு இம் மடத்திற்குச் சில சிவந்தங்களை விட்டிருந்தான் என்று கருதலாம். எனவே, யாழ்ப்பாண மன்னர் குலம் அழிந்தொழிந்து நெடுங் காலஞ் சென்ற பின்பும் யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் சிதம்பரத்திலே பரராசசேகரன் அமைத்திருந்த மடத்தைப் பேணிவந்ததோடு மட தர்ம ஏற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதற்கான ஆதரவையும் அளித்து வந்தனர் என்பது இச் செப்பேட்டில் வரும் தகவல்களினாற் புலனாகிறது.
அடங்காப் பற்றைச் சேர்ந்த வன்னியர் பலர் ஒன்று சேர்ந்து மடதர்ம ஏற்பாடுகளைச் செய்தமை கவனத்திற்குரியது. வன்னியர் தம்மிடையே போர் புரிந்து வந்தபோதும் ஒல்லாந்த ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சியேற்படுத்துங் காலங்களில் ஒத்துழைத்தனர். அடங்காப்பற்றிலிருந்த வன்னியர் பதினெட்டாம் நு}ற்றாண்டிற் சமய விவகாரங்களைப் பொறுத்தமட்டில் இணைந்து பணியாற்றத் தயங்கவில்லை என்பதற்கு இப்பட்டயத்திலுள்ளவை சான்றளிக்கின்றன.
அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தேவையான அரிய சான்றுகள் இப்பட்டயத்திலே வருகின்றன. அடங்காப் பற்றிலுள்ள வன்னிநாடுகள் பலவற்றின் பெயர்களும் அவற்றில் அதிகாரஞ் செலுத்தியிருந்த குறுநில மன்னர்களின் பெயர்களும் பட்டயத்தில் வந்துள்ளன. பனங்காமம் பத்தில் நிச்சயசேனாதிராய முதலியாரும் கரிகட்டுமூலை, தென்னமரவடி என்னும் பத்துக்களில் புவிநலல்மாப்பாண வன்னியனார், புண்ணியபிள்ளை வன்னியனார் என்போரும் வன்னிபங்களாயிருந்தனர். மேல்பத்தில் சூராண தீர வன்னியராய முதலியாரவர்களும் கந்தையினா வன்னியனாரவர்களும், மேல் பத்து - முள்ளியவளையில் இலங்கை நாராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உடையாரும் வன்னிபங்களாயிருந்தனர். என்பதைச் செப்பேட்டின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த நீலையினா வன்னியனார், மூத்தர் வன்னியனார் ஆகியோரைப் பற்றியும் செப்பேடு குறிப்பிடுகின்றது.
வடஇலங்கையில் யாழ்ப்பாண அரசு எழுச்சிபெற முன்;பே வன்னிமைகள் தோன்றியிருந்தன. பாண்டிநாட்டிலிருந்து ஆரியச்சக்கரவர்த்தி படையெடுத்து வந்து வட இலங்கையைக் கைப்பற்றி நல்லு}ரில் இராசதானி அமைத்திருந்த நாட்களில் அவனோடு கூடி வந்த படைத் தலைவர்கள் பலர் அடங்காப் பற்றுக்குச் சென்று அங்குள்ள குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். எனவே யாழ்ப்பாண அரசின் எழுச்சியோடு வன்னி நாடுகளிற் பல புதிய குறுநில மன்னர் குலங்கள் அதிகாரம் பெற்றன. பதின்மூன்றாம் பதினான்காம் நு}ற்றாண்டுகளில் வன்னியிலே ஏழுக்கு மேற்பட்ட குறுநில அரசுகளிருந்தன வென்று கொள்வதற்கிடமுண்டு. காலப் போக்கில் அயல்நாடுகள் மேற்பலம் வாய்ந்த வன்னியர் ஆக்கிரமித்ததின் விளைவாக ஏழு வன்னி நாடுகள் வளர்ச்சி அடைந்தன.
செட்டிக்குளம். மாதோட்டம் போன்ற இடங்களிற் பறங்கியர் காலத்தில் வன்னியரின் ஆட்சி அழிவுற்றது. அடங்காப்பற்றிலுள்ள வன்னியரை அடக்கித் திறை கொள்வது போத்துக் கேயருக்கு மிகச் சிரமமாக இருந்தது. கி. பி. 1645 இல் வன்னி நாடுகளிலிருந்து 37 யானைகளை யாழ்ப்பாணத்துப் பறங்கியதிகாரிகள் திறையாகப் பெற்றனர்.
ஒல்லாந்தரும் வன்னியரை ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வழமையான திறையைப் பெற முயன்றனர். ஒல்லாந்த தேசாதிபதிகளும் ஒல்லாந்தராட்சியில் யாழ்ப்பாணப்பட்டினத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகளும் எழுதிய அறிக்கைகளில் வன்னியர்பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வடஇலங்கையில் முள்ளியவளை, கருவநாவல்பத்து, கரிகட்டுமூலை, தென்னமரவடி, மேல்பத்து, பனங்காமம் என்ற ஆறு வன்னிகளில் வன்னிபம், வன்னியனார் என்னும் பட்டங்களைக் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்தனர் என்பதை இவ்வறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (9-11-1979) வன்னியர் பற்றி மேல்வருந் தகவல்கள் கிடைக்கின்றன.
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் நல்லமாப்பாணன் 11½ யானை
காசியனார்
விளாங்குளம் நல்லமாப்பாணன் 4(½)
பரந்தன் வெளி நல்லமாப்பாணன் 2
2. மேல்பத்து-முள்ளியவளை குட்டிப்பிள்ளை 8(½)
3. கரிகட்டு மூலை சியாந்தனார் 7
4. கருநாவல் பத்து திரிகயிலை 7
புதுக்குடியிருப்பு வன்னியனார்
5. தென்னமரவடி சியமாத்தை 7
யாழ்ப்பாணப் பட்டினத்திலே தலைமை யதிகாரியாக விருந்த கெந்திரிக் ஸ்வாதிக்குருன் எழுதிய அறிக்கையில் (1697) மேல் வருந் தகவல்கள் உள்ளன.
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் (1) தொன்பிலி;ப்பு 17
நல்ல மாப்பாணன்
(2) தொன் கஸ்பாறு
இலங்கை நாராயணன்
2. கரிகட்டுமூலை (2) தொன்தியாகோ 7
புவிநல்ல மாப்பாணன்
3. மேல்பத்து தொன் தியோகோ
புவிநல்ல மாப்பாணன் 5
4. கருநாவல்பத்து தொன் அம்பலவாணர் 4
5. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 2
6. முள்ளியவளை தொன் பெருமையினார் 3(½)
பதினெட்டாம் நு}ற்றாண்டிலே தேசாதிபதியாக விருந்த சுரோய்டரின் அறிக்கையிலும் (1762) மேல் வரும் விவரங்கள் கிடைக்கின்றன.
வன்னி வன்னிபம் திறை
1. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 1
2. பனங்காமம் 16
3. மேல்பத்து அமரக்கோன்முதலியார் 1
4. முள்ளியவளை அமரக்கோன்முதலியார் 1
5. கரிக்காட்டுமூலை அழகேசன் புவிநல்லமாப்பாணன் 7
6. கருநாவல்பத்து அழகேசன் புவிநல்லமாப்பாணன் 4
இதுவரை குறிப்பிடப்பெற்ற ஒல்லாந்தர் காலத்து ஆவணங்கள் வாயிலாகச் சில வன்னிகளிலே இரு வன்னிபங்கள் இருந்தனரென்பதையும் சில கால கட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வன்னிமைகளை ஒரே வன்னியனார் ஆண்டாரென்பதையும் அறிய முடிகின்றது. பனங்காமம், மேல்பத்து, மேல்பத்து-முள்;ளியவளை ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் இவ்விரு வன்னிபங்கள் இருந்து ஆட்சி புரிந்தமைக்குக் கயிலாய வன்னியன் தர்ம சாதனப் பட்டயம் சான்றளிக்கின்றது.
பரராசசேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயத்திற் போல இப் பட்டயத்திலும் விஜய நகர மன்னரின் மெய்க்கீர்த்தி வருகின்றது. அத்துடன் வேங்கடபதி தேவரின் பெயரும் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனினும் செப்பேடு மன்னனுடைய ஆட்சியாண்டைக் கூறாத சக வருஷத்தையே குறிப்பிடுகின்றது. (1644) பட்டயம் எழுதப்பெற்ற காலத்தில் விஜய நகரப் பேரரசு அழிவுற்றுத் தொண்டை மண்டலத்தில் இஸ்லாமியரின் ஆட்சி ஏற்பட்டிருந்தது. எனினும் பட்டயங்களை எழுதுமிடத்து விஜய நகர மன்னரின் மெய்க்கீர்த்தியைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து வந்ததெனத் தோன்றுகிறது.
பரராச சேகரனின் திருப்பணி பற்றிய பட்டயத்திற் போல இதிலும் கிரந்த எழுத்துக்கள் ஆங்காங்கு வந்துள்ளன. அத்துடன் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையிலேயே பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பட்டயம் தமிழ் நாட்டில் எழுதப்பட்டபோதும் அங்கு பேச்சு வழக்கிலும் ‘ள’ கர, ‘ழ’கர வேறுபாடுகள் அவதானிக்கப்பெற்று வருகின்ற போதும் பட்டயத்தில் ‘ழ’கரம் வர வேண்டிய இடங்களில் ‘ள’கரம் வருவது கவனித்தற்பாலது. ‘ர’கர மெய் வரவேண்டிய இடங்களில் ‘று’கரம் (பூர்வ-பூறுவ, 2-3 தர்மம்-தறுமம் 25-26) வந்துள்ளது. மேலும் மூர்த்தி என்பது ‘மூற்த்தி’ (9) என எழுதப்பட்டுள்ளது. இக்காலப் பேச்சு வழக்கிற் போலப் பதினெட்டாம் நு}ற்றாண்டிலும் ‘ற’ கர ‘ர’கர மயக்கம் தொண்டை மண்டலத்திலிடம் பெற்ற தென்பதற்குச் செப்பேடு சான்றளிக்கின்றது. நாடு, சம்மதித்து என்ற சொற்களும் முறையே ‘னா’டு, சம்மதிச்சு எனப் பிழையாக எழுதப் பெற்றுள்ளன.
பட்டயத்தின் 39ம் வரி முதல் 43ம் வரி வரை கிரந்த எழுத்துக்களில் இரு வடமொழிச் சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான சுலோகங்கள் கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் முதலிய விஜய நகரப் பேரரசர் கால ஆவணங்களிலே வருகின்றன. இச் சுலோகங்களின் பொருள் மேல் வருமாறு:
தானம் செய்வது, அளித்த தானத்தைப் பரிபாலிப்பது இவ்விரண்டினுள், தானத்தைக் காட்டிலும் பரிபாலனமே மேன்மையானது. தானம் செய்வதாற் சொர்க்கம் கிட்டுகிறது. பரிபாலனத்தால் அழியாத நிலையே (வைகுந்தப் பதவி) கிட்டுகின்றது.
தானம் அளிப்பதைக் காட்டிலும் பிறர் கொடுத்ததைப்பரி பாலனம் செய்வது இரு மடங்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பிறர் கொடுத்ததை அபகரப்பதாலே தான் கொடுத்ததும் பலனற்றதாகிவிடும்.
செப்பேட்டிலுள்ளபடி
கயிலை வனனியனா மட தாமசாதனப் படடயம சிதமபரம
1. ஸவஸதி சீமன மஹா மணடலெசுரன ஹரி ஹராய விபாடன பாஷைககு
2. த தபபுவராயா கணடன மூவராயா கணடன கணட னாடு கொணடு
3. கொணட னாடு குடாதான பூறுவ தbpண பஸசி மோததர சதுஸஸமு
4. தராதிபதி கஜ வெடடை கணடருளியபதி வெஙகடபதி தெவ மகாரா
5. யா பரிதிவி ராஜயம பணணி யருளா நினற ஸகாபதம ககா இதன
6. மேற செலலா நினற சுபகிறுது சிததிரை யும பூறுவ பb
7. ததில பறுவமும சுவாதி நbததிரமும் குரு வாரமும் கூடி
8. ன சுபதினததிலே சிதமபரம பரராசசெகர மகாராசாவின
9. கடடளை நடததும சூரிய முறததித தமபிரானவாகளுககுப ப
10. னைங காமப பத்து வனனிபம நிசசெய செனாதிராய
11. முதலியாரவாகளும குலசெகர முதலியாரவாகளும
12. கரிகடடை மூலைபததுத தெனன மரவடிப பதது
13. வனனிபம புவிநலல மாபபாண வனனியனாவாக
14. ளும புணணிய பிளளை வனனியனாவாகளும மெலப
15. தது வனனிபமான சூரான தீரராக வனனியராய
16. முதலியாரவாகளும கநதையினா வனனியனாரவாக
17. ளும மெலபதது முளளியவளை வனனிபம இலஙகைனா
18. ராயண முதலியாரவரகளும மயிலாததை உ
19. டையாரவாகளும பசசிலைபபளளி இறைசுவ
20. தொர இலஙகை நராயண முதலரியாரவா
21. களும நீலயினா வனனியனாரவாகளும மூ
22. ததா வனனினாரவாகளும இவ
23. hகளைச சொநத ஊரிலககுடியானவர
24. களும தஙகள கயிலைப பிளளை வனனியனார
25. மடதறமததுககுத தறம சாதனப
26. படடையங குடுதத படி கமததுககு மூன்று மர
27. க கால நெலலு மட தறமததுககுச சநதராதிதய வ
28. ரைககும புததிர பவுததிர பாரமபரிய மும கொடுதது வ
29. ரக கட வொமாகவும இபபடி சமமதிததுச சூரிய மூறததித
30. தமபிரான வாகளுககு நாங்களெலலாதருந தறமசாத
31. னப படடையங கொடததொந தாங்களெனறென
32. றும தறமததைப பரிபாலனம பணணி நடபபிததுக
33. கொளளக கடவராகவும இநதத தறமததுககு யாதாமொ
34. ருவர சகாயம பணணினாரகள அவாகள பூலொக சபா
35. சமாகிய சிதமபரததிலே அறதத சாம வெளையிலே சபா
36. பதி தெரிசனம பணணின புணணியம பெறக கடவராகவும
37. இநதத தறமததுகரு அகிதம பணணினவாகள சிதமபரத
38. தலததிலே தீயிடடவரகள போகிற தோஷத்திலே பொகக
39. கடவொராகவும உஸ{பமஸது1 தாந பாலநயொற மதயெ
40. தாநா ஸரயொ நுபாலநம 1 தாநாஸவறகமவாப நொதி பா
41. லநாத அசயுதம பதம 1 ஸவ ததததா தவிகுணம புணயம பர
42. தததாநு பாலநாத 1 பரதததாபஹா ரெண ஸவதததம
43. நிஷபலம வவெத1 அரிய நலலற முறறினொள றனனினு
44. மதனைபபுரிதியெனபவன காபபவன புகலிருவாககு
45. ம பெருகுமப பயன பதின மடங கெனறனர பெருநு}
46. ற குரிய மாநதாகள தீவினை வளிககு மீதொககும உ.ம
47. னை மடததிடை யெலலையின ம ணறுக ளொனறு க க
48. னைய செயதவா சிவ பதத தாயிரங கறபமுனைவர
49. பொறறிட வீறறினி திருபபரிம முறை பொயினைய நற பயனெற
50. றுக விசைக குமாறெனனொ உஸ{பமஸது
51. இபடிச சிதமபர புராணததிற சிவபுணணிய
52. மகிமையுரைத தலினஇநநச சாதன மெழுதின
53. நனமைககுக கஙகாணி தாணடவ ராயன
54. கை எழுதது இபபடிககு நிசசயச செயனாதி
55. ராய முதலியார
கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம்
சிதம்பரம்
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமன் மஹா மண்டலேசுரன் ஹரி ஹராய விபாடன் பாஷைக்கு
2. த் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்டநாடு கொண்டு
3. கொண்ட நாடு கொடாதான் பூர்வ தbpண பஸ்சி மோத்தர சதுஸ் ஸமு
4. த்திராதிபதி கஜ வேட்டை கண்டருளியபதி வேங்கடபதி தேவ சதுஸ் ஸமு
5. யர் பிருதுவி ராஜ்யம் பண்ணியருளா நின்ற சகாப்தம் இதன்
6. மேற் செல்லா நின்ற சுபகிருது வருஷம் சித்திரை மாதம் உயஉ திகதியும் பூர்வ பb
7. த்தில பறுவமும் சுவாதி நட்சத்திரமும் குரு வாரமுங் கூடி
8. ன சுப தினத்திலே சிதம்பரம் பரராச சேகர மகாராசாவின்
9. கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரihனவர்களுக்குப் ப
10. னங் காமம் பத்து வன்னிபம் நிச்சய சேனாதிராய
11. முதலியா ரவர்களும் குலசேகர முதலியா ரவர்களும்
12. கரிக்கட்டு மூலைப் பத்துத் தென்ன மரவடிப் பத்து
13. வன்னிபம் புவி நல்ல மாப்பாண வன்னியனாரவர்க
14. ளும் புண்ணியபிள்ளை வன்னியனாரவர்களும் மேல்ப
15. த்து வன்னிபமான சூராண தீரரான வன்னியராய
16. முதலியாரவர்களும் கந்தையினா வன்னியனாரவர்க
17. ளும் மேல்பத்து முள்ளியவளை வன்னிபம் இலங்கை நா
18. ராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உ
19. டையா ரவர்களும் பச்சிலைப் பள்ளி இறை சுவ
20. தோர் இலங்கை நாராயண முதலியாரவர்
21. களும் நீலயினா வன்னியனாரவர்களும் மூ
22. த்தர் வன்னியனாரவர்களும் இவ
23. ர்களைச் சேர்ந்த ஊர்களிற் குடியானவர்
24. களும் தங்கள் கயிலைப்பிள்ளை வன்னியனார
25. வர்கள் மடதர்மத்துக்குத் தர்ம சாதனப்
26. பட்டயம் கொடுத்தபடி கமத்துக்கு மூன்று மர
27. க்கால் நெல்லு மட தர்மத்துக்குச் சந்திராதித்திய வ
28. ரைக்கும் புத்திர பவுத்திர பாரம்பரியமும் கொடுத்து வ
29. ரக்கடவோமாகமவும் இப்படிச் சம்மதித்துச் சூரிய மூர்த்தித்
30. தம்பிரானவர்களுக்கு நாங்களெல்லாருந் தர்ம சாத
31. னப் பட்டயம் கொடுத்தோம். தாங்களென்றென்
32. றும் தர்மத்தைப் பரிபாலனம் பண்ண நடப்பித்துக்
33. கொள்ளக் கடவராகவும் இந்தத் தர்மத்துக்கு யாதா மொ
34. ருவர் சகாயம் பண்ணினார்கள் அவர்கள் பூலோக கயிலா
35. சமாகிய சிதம்பரத்திலே அர்த்த சாம வேளையிலே சபா
36. பதி தரிசனம் பண்ணின புண்ணியம் பெறக்கடவராகவும்
37. இந்தத் தர்மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் சிதம்பரத்
38. தலத்திலே தீயிட்டவர்கள் போகின்ற தோஷத்திலே போகக்
39. கடவோராகவும் ஸ{பமஸ்து 1 தாந பால நயோர் மத்தேய
40. தாநா ஸ்வரயோநு பாலநம் 1 தாநாஸ்வர்கம வாப்நோதி பா
41. லநாத் அச்சுதம் பதம் 1 ஸ்வ தத்தா த்வி குணம் புண்யம் பர
42. தத்தாநு பாலநாத் 1 பரதத்தா பஹாரெண ஸ்வதத்தம்
43. நிஷ்பலம் வவேத் 1 அரிய நல்லற முற்றினோன் றன்னினு
44. மதனைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவர்க்கு
45. ம் பெருகுமப்பயன மதின் மடங் கென்றனர் பெரு நு}ற்
46. ற் குரிய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீ தொக்கும். ம
47. னை மடத்திடை யெல்லையின் மண்று களொன்றுக்க
48. னைய செய்தவர் சிவபதத்தாயிரங் கற்ப முனைவர்
49. போற்றிட வீற்றினி திருப்பரிம்முறை போயினைய நற் பயனேற்
50. றுக விசைக் குமாறென்னோ ஸ{பமஸ்து
51. இப்படிச் சிதம்பர புராணத்திற் சிவபுண்ணிய
52. மகிமையரைத்தலின் இந்தச் சாதன மெழுதின
53. நன்மைக்குக் கண்காணி தாண்டவராயன்
54. கை எழுத்து இப்படிக்கு நிச்சயச்சேனாதி
55. ராய முதலியார்.
ஆறாம் இயல்
அடிக்குறிப்பு
1. கயிலாயவன்னியன் என்ற பெயருள்ள பிரதானிகள் பலர் இருந்தனர். பதினேழாம் நு}ற்றாண்டின் நடுவில் வாழ்ந்த கயிலாயவன்னியனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. (ப. 88. 90) கயிலாயவன்னயனின் சகோதரியைப் பூதத் தம்பி முதலி மணம் முடித்திருந்தான். தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள கைல வன்னியனைப் பற்றியே யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றதெனக் கருதலாம்.
பனங்காமத்து வன்னியர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் திறை அனுப்பவில்லை எனவும் அதிக எதிர்ப்புக் காட்டிவந்த கைல வன்னியனார் இறந்த பின் வன்னிபமாகிய அவனுடைய பேரன் காசியனார் ஒல்லாந்த அதிகாரிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கை கூறுகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் வரும் கைலாய (கைல) வன்னியனாரே சிதம்பரத்தில் மட தர்ம ஏற்பாடுகளைச் செய்திருத்தல் கூடும்.
(ளு. புயெnயிசயபயளயசஇ ‘யேடடயஅயிpயயெ ஏயnnலையn யனெ வாந பசயவெ ழக ய ஆரனயடலையசளாip’இ தழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல (ஊ. டீ.) ஏழட. ஓஓஓஐஐஐஇ ழே 89இ 1936இ PPஇ 221 - 222)
1. யு பரராசசேகரன் சிதம்பரத்துக்குப் போய் நிலங்களை வாங்கிப் பரதேசிகளின் வசதிக்காக இராசாக்கள் தம்பிரான் மடம் என்னும் அற நிலையத்தை அமைத்தான் என அவனுடைய திருப்பணி பற்றிக் கூறும் பட்டயம் சொல்லுகின்றது.
2. வரிகள். 24 - 25
3. வரிகள், 10-18
4. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஓ
5. ஆநஅழசை ழக ஏயn புழநளெ (1675-79) வழ டுயரசநளெ Pலடஇ டயவந ஊழஅஅயனெநரச ழக துயககnயியவயெஅஇ வசயளெடயவநன டில ளுழிhயை pநைவநசளஇ ஊழடழஅடிழஇ 1910
6. ஆநஅழசை ழக ர்நனெசiஉம ணுறயயசனநஉசழழn pஇ 97
7. ஆநஅழசை ழக துயn ளுஉhசநரனநசஇ வசயளெடயவநன டில நு. சுநiஅநசளஇ ஊழடழஅடிழ 1946இ PP 56 - 58
8. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் ஐஐஐஇ பிற்சேர்க்கை ஐஏ
9. ஐந்தாம் இயல், அடிக்குறிப்புகள் 3இ 11 ஆகியவற்றைப் பார்க்க
10. தம்பிரான் - மடாதிபதி
11. ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் ஓர் அதிகாரியே பச்சிலைப்பள்ளிக்குப் பொறுப்பாகவிருந்தான். பதினெட்டாம் நு}ற்றாண்டில் இரு வன்னியர் ஏதோ விதத்தில் இப்பகுதியின் மேல் அதிகாரம் பெற்றிருக்கவேண்டும். இறைசுவதோர் என்பது ‘ரெசீபதோர்’ என்ற போர்த்துக்கேயச் சொல்லின் வழியாக வந்தது. இச்சொல் வரிகளைச் சேர்க்கும் பண்டாரப்பிள்ளை என்னும் சேவையாளரைக் குறிக்கும்.
12. பரராசசேகர மகாராசன் திருப்பணி கூறும் பட்டயத்தில் இம்மொழித் தொடருக்குப் பதிலாக ‘கல்லுக் காவேரியும் புல்லுப் பூமியமுள்ள வரைக்கும்’ என்ற சொற்கள் வந்துள்ளன.
13. தலைமுறை தலைமுறையாக
14. அகிதம் - இடையூறு
15. ‘நன்மை உண்டாகட்டும்’ எனப் பொருள் படும் மங்கள மொழி
16. பட்டயத்தில் வரும் வடமொழிச் சுலோகங்கள் விஜயநகர காலக் கல்வெட்டுக்களிலே வழமையாக வருகின்றன. மல்லிகார்ஜுன தேவர், பிரவுட தேவராயர், கிருஷ்ண தேவராயர் முதலியோரின் கல்வெட்டுக்களில் முதலாவது சுலோகம் மட்டுமே வருகின்றது. வேறு சில ஆவணங்களில் இரண்டாம் சுலோகம் முன்பாகவும் முதலாம் சுலோகம் பின்பாகவம் முறைமாறி வருகின்றன. தென்னிந்திய கோயிற் சாசனங்கள்
17. அரிதான நல்லறததைச் செய்தவன் அடையும் பயனிலும் பதின் மடங்கு பயனை அவ்வறத்தைச் செய்யுமாறு து}ண்டியவர்களும் காப்பாளர்களும் பெறுவார்களென்று சிறந்தநு}ல் வல்லோர் கூறியுள்ளனர். அற நிலையங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு இம் மடங்கான தீய பலன்கள் கிடைக்கும். பொது மனை, மடம், மன்று போன்றவற்றிற்கு தர்மஞ் செய்பவர்கள் மோலோர் போற்றும் வண்ணம் சிவபதத்தில் ஆயிரம் கற்பங்களுக்கு வாழுவார்கள்.