கர்நாடகாவில் மிக பிரசித்தி பெற்ற நடைபெறும் கரகம் திருவிழா . இதை முழுக்க முழுக்க தலைமை ஏற்று நடத்துபவர்கள் சம்பு குல க்ஷத்ரியர் எனப்படும் திகுளர் இனத்தவர் .திகுளர் என்பது(தீ குலத்தவர் (அ) வன்னியர் ) எனப்படும் . இவர்கள் தமிழகத்தின் வன்னியர்குல க்ஷத்ரியர்களின் ஒரு பிரிவு ..பொதுவாக இந்த வன்னியர்கள் கர்நாடகத்தில் சம்புகுல க்ஷத்ரியர் என்றும் ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர் என்றும் அழைக்க்படுபவர்கள் ... இவர்களே இங்கு கர்நாடகத்தில் சாளுக்கிய மன்னர்களாக அறிய படுபவர்கள் . நம் ராஜேந்திர சோழனின் மகளை திருமண செய்து குலோத்துங்க சோழனாக முதல் தமிழகத்தை ஆண்டது இந்த வன்னிய திகுளர் வழி வந்தவர்கள் . அதனாலேயே இவர்களை சாளுக்கிய சோழர் என்பர் .இவர்கள் கன்னடம் பேசினாலும் , தம் தொப்புள் கொடி உறவான வன்னியர்களின் தமிழையே தாய் மொழியாக கருதுபவர்கள் .பொதுவாக தமிழகத்தில் வன்னியர்கள் வசிக்கும் பகுதியில் திரௌபதி அம்மன் காணப்பெறும் .. திரௌபதி அம்மன் கோவில் இருந்தாலே அந்த பகுதியில் வன்னியர்கள் வாழ்வதாக அர்த்தம் . அதேபோல் இந்த வன்னியர் பிரிவாங்க திகுளர் எனப்படும் சம்புகுல க்ஷத்ரியர்கள் வாழும் பகுதிகளில் ஏராளமான திரௌபதி அம்மன் கோவில்களை காணலாம் .