Google+ Followers

Saturday, December 3, 2011

பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம்.
யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிய ஆராய்ச்சிக்குத் தேவையான வரலாற்றாதாரங்களைச் சேர்க்க முயன்றபோது வட இலங்கை அரசர் எழுதுவித்த இரு செப்பேடுகள் இருப்பதாகச் செய்தி கிடைத்தது. அவை சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்தின் முகாமையாளரும் நல்லு}ர்க் கந்தசாமி கோயிலில் ஓதுவாராக முன் பணிபுரிந்த சிவஞானம் அவர்களின் மகனுமாகிய திரு. சிவக்கொழுந்து என்பவரிடமுள்ளன. இச் செப்பேடுகளைப்பற்றி இதுவரை வரலாற்று மாணவரும் ஆராய்ச்சியாளரும் நன்கறிந்திருக்கவில்லை.

இவற்றிலொன்று யாழ்ப்பாணத்து மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பர தரிசனஞ் செய்து அங்கு ஆற்றிய திருப்பணிபற்றிக் கூறுகின்றது. இச் செப்பேடு 9 அங்குல நீளமும் 12 அங்குல அகலமுங் கொண்டுள்ளது. இப்பட்டயத்தில் இலக்கண வழுக்களும் பிரதேச வழக்கிலுள்ள சொற்களின் திரிபுகளும் இடையிடையே வருகின்றன. நாடு என்பதற்குப் பதிலாக னாடு (வரிகள் 2-3) என்ற சொல்லும் தர்மம் என்பதற்குப் பதிலாக தறுமம் என்ற சொல்லும் பட்டயத்தில் வருகின்றன. சர்வமானியம் என்ற சொல்லும் பட்டயத்தில் வருகின்றன. சர்வமானியம் என்ற சொல் இங்கு சறுவ மானியம் என வருகின்றது. மேலும் சில சொற்களில் கரம் வரவேண்டிய இடங்களில் கரம் வந்துள்ளது. (22. கிளக்கும், 49. எழுதினது).

வைத்து, சம்மதித்து என்ற சொற்கள் வைச்சு (16), சம்மதிச்சு எனச் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திலே, இராஜ்யத்துக்குள்ளே என்ற மொழிகளின் ஈற்றில் வரும் காரம் ஐகாரமாகி வந்துள்ளது. மேலும் அர்த்த சர்ம வேளை என்ற மொழித் தொடரில் வரவேண்டிய கர மெய் மருவியுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்கல மொழிகளில் உள்ள ஸ்ரீ என்னும் கரந்தத்தில் வரும் பதத்திற்குப் பதிலாக சீ என்னும் கிரந்தத்தில் வரும் பதத்திற்குப் பதிலாக சீ என்னும் எழுத்துப் பிழையாக வந்துள்ளது.

ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்ட கொண்டநாடு குடாதான் பூர்வ தbpண பஸ்சி மோத்திர சமுத்திராதிபதி கஜவேட்டை கண்டருளிய ...என்று விஜயநகர மன்னரின் மெய்க் கீர்த்திகளில் வழமையாக வரும விருதுகள் இச் செப்பேட்டிலும் வருகின்றன. விஜயநகரப் பேரரசு நிலைபெற்ற காலத்திற் குறு நில மன்னர்களும் இவ்வாறான வாசகங்களைத் தம் மெய்க்கீர்த்திகளிலே சேர்த்துக் கொண்டனர். விஜயநகரப் பேரரசு அழிவுற்ற பின்பும் விஜயநகர மன்னரின் மெய்க்கீர்த்திகளிலுள்ள வாசகங்களைக் குறுநில மன்னரும் பிறரும் பயன்படுத்தி வந்தனர் போலத் தோன்றுகின்றது.

இப்பட்டயம் யாழ்ப்பாண மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பர தரிசனஞ்செய்து ஓர் அற நிலையத்தை அங்கு ஏற்படுத்தியமை பற்றிக் கூறுகின்றது. பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற்கூற்றில் பாண்டி நாட்டின் தென்முனையில் சேதுவை அடுத்துள்ளதும் சேது கரையினை எல்லையாகக் கொண்டதுமான செவ்விருக்கை நாடு என்னும் பதியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டைக் கைப்பற்றி நல்லு}ரில் அரசிருக்கையை அமைத்த சிங்கையாரியன் எனப்படும் பெருந்திறல் படைத்த பாண்டிய சேனாதிபதியான ஆரியச்சக்கரவர்த்தியின் மரபில் வந்தோரே பதினேழாம் பதினேழாம் நு}ற்றாண்டின் முற்பகுதி வரைக்கும் வடஇலங்கையை ஆண்;டனர். அம் மன்னர்கள் தாம் முடி சூடிய பொழுது பரராசசேகரன், செகராசசேகரன்என மாறி வரும் பட்டப் பெயர்களைப் பெற்றனர்.

யாழ்ப்பாண அரசர்களின் கல்வெட்டுக்கள் என்று கொள்ளக் கூடியன இரண்டு மட்டுமே இதுவரை ஈழ நாட்டிற் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று தென்னிலங்கையில் கோட்டகம எனுமிடத்திற் கண்டெடுக்கப்பட்டது. அது பதினான்காம் நு}ற்றாண்டில் ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன் மலைநாட்டினுள் நுழைந்து கம்பளையிலிருந்து ஆட்சிபுரிந்த தென்னிலங்கை வேந்தனைத் தோற்கடித்தமையை மேல்வருமாறு கூறுகின்றது.

சேது
கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர் வளைப்
பங்கையக் கைமேற்றிலதம் பாரித்தார் பொங்கொலி நீற்
சிங்கை நகராரியனைச் சேராவனு ரேசர்
தங்கள் மடமாதர் தாம்.

பதவியாவிற் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலுள்ள வடமொழிக் கல்வெட்டு ஒன்று லோகநாதன் என்ற தண்டநாயக்கன் மணிகளாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிக ஒளிபொருந்திய முடியைக் கொண்ட விகாரம் ஒன்றை அமைத்து, அதற்கு வேளைக்கார விகாரமெனப் பெயரிட்டான்; என்று கூறுகின்றது. இக் கல்வெட்டின் தொடக்கத்திலே சேதுகுலத்தின் கீர்த்தி குறிக்கப்படுவதால் சேதுவை இலச்சினையாகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சமான யாழ்ப்பாண மன்னர் குலமே ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளதென ஊகிக்கலாம். எனவே அவ்விகாரையை அமைத்த லோகநாதன் ஆரியச்சக்கரவர்த்தியின் தளபதிகளுள் ஒருவனாக இருந்திருத்தல் கூடும்.

பரராசசேகர மகாராசாவின் திருப்பணி பற்றிக் கூறும் இப்பட்டயம் 56 வரிகளைக் கொண்டுள்ளது. சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டிற் பரராசசேகரன் சிதம்பரத்திற்குப் போனானென்று பட்டயம் கூறுகின்றது. சகவருடம் 944 இல் (கி. பி; 1022) வட இலங்கையில் ஒரு தமிழரசு ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் விஜயநகர மன்னரின் ஆட்சி பதினான்காம் நு}ற்றாண்டிலேயே ஏற்பட்டது. எனவே பட்டயத்தில்; ஆண்டு பிழையாக எழுதப்பட்டுள்ள தென்பது தெளிவாகின்றது. இப்பட்டயம் பரராசசேகரனின் ஆணைப்படி எழுதப்பட்டிருப்பின் பட்டயத்தை எழுதியவரின் அவதானக் குறைவினாலும் அறியாமையினாலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம். இப்பட்டயத்திலுள்ளவை மூலசாசனத்திலிருந்து பெயர்த் தெழுதப்பட்டிருத்தலுங் கூடும். அவ்வாறாகில் மூலத்தைப் பார்த்துப் பட்டயத்தை எழுதியவர் ஆண்டினைப் பிழையாக எழுதியிருத்தல் வேண்டும்.

சிதம்பரத்திலே பரராசசேகரனின் பெயரைக் கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப்படுவதால் இந்தப் பட்டயத்திற் கூறப்படுவன உண்மையாகவே நடைபெற்றிருக்க வேண்டும். பட்டயத்திலே குறிப்பிடப்பெற்றுள்ள பரராசசேகர மகாராசன் சங்கிலிங்கு முன் அரசு புரிந்த மன்னனே என்று கொள்வதற்கிடமுண்டு. சங்கிரலியின் முன்னோனாகிய பரராசசேகரன் வடதேசம்சென்றதற்கு யாழ்ப்பாண வைபவமாலை சான்றளிக்கின்றது.

கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் (1450-67) சேனாதிபதியான செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா) யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் (1450-67) கனகசூரியசிங்கையாரியன் வடதேசம் சென்றிருந்தான். அவனுடைய புதல்வர்கள் திருக்கோவலு}ர் அரச குடும்பத்தாருடன் வாழ்ந்து அரசு நெறியும் படைக்கலப் பயிற்சியும் கற்றனர். இவ் விளவரசருள் ஒருவனே கனகசூரிய சிங்கையாரியனின் பின் முடி சூடிய பரராசசேகரன். இவனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை மேல் வருமாறு கூறுகின்றது.

... “...
சில காலத்தின் பின் இராசாவின் முதற்ம குமாரன் சடுதி மரண முண்டுபட்டு இறந்து போனான். சங்கிலி நஞ்சூட்டிக் கொன்றானென்பது ஒருவருக்கும் தெரியாதே போயிற்று. மூத்த குமாரன் இறந்து போக அரசன் தன் இளைய குமாரனாகிய பண்டாரம் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்களுடனே கும்பகோணத்துக்கு யாத்திரை பண்ணினான். சோழ தேசத்தரசனும் மகாமக தீர்த்த மாடுவதற்குப் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் வந்திருந்தான். அவ்வித்தில் அச்சங்கிலி செய்த குழப்பத்தினால் அவனையும் பரராச சேகரனையும் பரிவாரங்களையும் அவ்வரசன் பிடித்துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னாகப் போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச் சண்டை ஆரம்பித்துக் கடும் போர் பண்ணுகையிற் பரநிருபசிங்கத்துக்கு வலுவான காயங் கிடைத்தது. அப்படியிருந்தும் அவன் அந்தக் காயங்களையும் எண்ணாமல், வீராவேசங்கொண்டு போராடி அவ்வரசனைப் பிடித்துச் சிறையிலிட்டு பரராச சேகரன் முதலானோரைச் சிறையிலிருந்து நீக்கி, மூன்று மாதம் அங்கேயிருந்து தனக்குப் பட்ட காயங்களையும் மாற்றினான். அப்பொழுது சோழ நாட்டரசன் தன் இராட்சியத்தைத் தான் ஆளும்படி விட்டால் திறை யிறுப்பதாக வேண்டிக்கொள்ள அவனிடத்தில் அதற்கேற்ற பிணை வாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்து விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினான்.

யாழ்ப்பாண வைபவமாலை கூறுமாப் போல் பரராச சேகரன் சோழ அரசனைத் தோற்கடித்துத் திறை பெற்றானென்று கொள்வதற்கு எதுவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இக்காலத்தில் யாழ்ப்பாண மன்னர் விஜயநகர மேலாணைக்குள் அடங்கி யிருந்தனர். கிருஷ்ண தேவராயர் (1509-30) அச்சுதராயர் போன்றோர் ஆரியச்சக்கரவர்த்திகளிடமிருந்து திறை பெற்றனரென்று கொள்வதற்கு விஜய நகரச் சாசனங்கள் சான்றளிக்கின்றன. தமிழ் நாடுகளில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நாயக்கர்களிடையே ஏற்பட்ட ஏதோவொரு போரற் பரராசசேகரன் பங்கு கொண்டமையை யாழ்ப்பாண வைபவமாலை திரிபுபடுத்திக் கூறுகின்றது. எனினும் பரராச சேகரனோடு படைத் தலைவனாகப் பிரநிருபசிங்கமுஞ் சோழநாட்டுக்குச் சென்றானென்று இந் நு}ல் குறிப்பிடுவது கவனித்தற்பாலது. செப்பேடும் பரநிருபசிங்கப் படையாண்டவர் பற்றிக் குறிப்பிடுகின்றது.

சிங்கையூர் பற்றியும் இப்பட்டயத்திற் குறிப்புண்டு. ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகராகிய யாழ்ப்பாணப் பட்டினம் சிங்கை எனவும் சிங்கை நகர் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து ஆண்டமையால் தbpணகைலாச புராணம், செகராசசேகரம், செகராசசேகரமாலை என்னும் நு}ல்களில் சிங்கையாதிபன், சிங்கைமேவும் செகராசசேகரன், சிங்கைகாவல் மன்னன் என்னும் அடைமொழிகளால் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளனர்.

படையாட்சி என்ற சொல்லும் இங்கு காணப்படுகிறது. ஆராட்சி (ஆராய்ச்சி) என்ற மொழி வழமையாக ஒரு படைப்பிரிவின் தலைவனைக் குறிப்பதுண்டு. தமிழ்நாடுகளின் இராணுவ முறையிலும் ஆராச்சி என்னும் படைத்தலைவர்கள் இடம்பெற்றனர். மேலும் குவேறோஸ் சுவாமியாரின் நு}லின்படி சங்கிலியின் படைகளிற் பல ஆராச்சிமார் இடம்பெற்றிருந்தனர்.

செப்பேட்டிலுள்ளபடி

1.
ஸவஸதி சீமந மஹா மணட லெசுரன ஹரீஹராய விபா ட ந பாஷைக
2.
குததபபுவராயர கணடன மூவரயர கணடன கணட னாடு கொண்டு
3.
கொணடனாடு குடாதான பூறுவ தbpண பஸசி மோததர
4.
சதுஸ ஸமுததிராதிபதி கஜ வெடடை கணடருளிய பதீ வெங்கடபதி தெ
5.
வ மஹாராயர பருதிவி ராஜயம பணணியருளிய பதீ வெங்கடபதி தெ
6.
கன சகாரதம தொளாயிரதது யச மெற செலலா நினற சுபகிறு
7.
து வருஷம தை மாதம குருவாரமும சுவாதி நசசெததிரமும
8.
பறுவமும கூடின சுபதினததிலெ யாடபாணம இராசசிய
9.
ம பணணியிருந்த பரராசசெகர மகாராசா அவர்கள சிதமப
10.
ரததுக்கு வந்து சிதமபரரெசுர தெரிசனம பணணி சபாப
11.
திககு குணடலமும பதககமும சாததி திலலை மூவாயிர ருக கும கு
12.
ணடலம பொடடு சுவாமிககு எனறும கடடளை நடககும படி நி
13.
ததிய மொரு வராகனுககுப படிககடடளையும தினமொனறு
14.
ககு ஜஙகல அரிசி நெய வெததியமும மடததிலெ பிட
15.
சனாச கல அரிசியும சுவாமிககு பரி வடடமும இபபடி எ
16.
நத வெளை தறுமம நடககும படிககு முதலு வைசசு வாகனம
17.
வைககிற தறகு அங்கண ஒததியும வாஙகி ஒரு நாளை
18.
யிற திருவிளாவும நடபபிசசு வநத பரதெசிகளவநத
19.
வெளை யிருகதிறதறகு இராசாககள தமபிரான தெரு வீ
20.
தி எனறு முனனு}றறறுவது மனையும வாஙகி வீடு கடடி
21.
நநதாவனம பொடுகிறதறகு நலல தணணிக கிணதது
22.
ககு கிளககும தெறகும முபபதினாயிரம குளி நிலமும
23.
வாஙகி இ(ரா)சாககள தமபிரான வெளியெனறு தொததங
24.
குடியிலை பாதி ஊரும வாஙகி யாடபாணததிலை தனது
25.
இராசசியததுககுளளை அசசுவெலி புதது}ர அளவெட
26.
டி இநத மூனறு ஊரும சறுவமானியமாக சிதமபர தறும
27.
ததககு கொடுதது இநதக கடடளை என எனறும தறுமம
28.
விசாரிகளும படிககு இராசாவாசலுககு மநதிரிமாராகவும
29.
இராச வஙகிஷமாகவும இருககிறவாகள திலலியூர
30.
செனாப (தி)யாh சிஙகையூரப படை ஆணடவா திலலியூர
31.
குலததுஙகா பரநிருபசிஙகா குலநிருவாஙகப படையா
32.
ராசசியாரிவாகள வஙகிஷததிலெ நாலுபேரும சமம
33.
திசசு தஙகளினததுககுளளே ஒருதரைக காவிவெ
34.
டடித தமபிரனாராக வைதது இராசாககள தமபிரானா
35. h
திருசசிறறமபல மெனறவருககு படடமும கடடிவைத
36.
து எனஎனறைககு இநதத தறுமம விசாரிசசுகொளளும 


இரண்டாம் பாகம்

37.
படிககு இநத நாலு பெரையும பரராசசெகரமக
38.
ராசா இதபபடி கடடளை பணணி தறுமம நடக
39.
ம படிககு கலலு காவெரியும புலலு பூமியும முள
40.
ள மடககும இவாகளே இது விசாரிசசு கொளு
41.
மபடிககு கடடளைபணணி எளுதிப பொடடது இ
42.
பபடிககு பரராசசெகரமகராசா அநதத தறுமதது
43.
ககு யாதொரு சகாயம பணணினவாகள சிதமபரத
44.
திலெ அததசாமவேளை சபாபதி தெரிசனமபண
45.
ணின பலன பெறுவாhகள இததறுமததுககு அகிதம
46.
பணணினவாகள சிதமபரதலததிலெ தீயிட
47.
டவாகளபொற தொஷததிலெ பொவாhகள இபப
48.
டிச சமமதிசச இநத படடய மெளுதினது பரர
49. h
சசெகர மகாராசா அவாகள திலலியூர குலத
50.
யாh சிஙகையூரப படை ஆணடவா திலலியூர சேனாபதி
51.
துஙகா பரநிருபசிஙக குல நிருவாஙகப படையாரா
52.
டசியா உ அரிய நலலறம முறறினொன நனறினு மத
53.
னை புரிதி யெனபவன காபபவன புகலிருவறகுமபெரு
54.
குமமபபயன பதின மடஙகெனறனா பெருநு}லகுறி
55.
யமாநதாகள தீவினை வளிககு மீ தொககும இநதபப
56.
டடையம எளுதினது பரநிருபசிஙக படையாணடவா

செப்பேட்டில் திருத்திய வாசகம்

1.
ஸ்வஸ்தி ஸ்ரீமத் மஹ மண்டலே சுரன் ஹரீஹராய விபாடந் பாஷெக்
2.
குத்தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு
3.
கொண்ட நாடு குடாதான் பூர்வ தbpண பஸ்சிமோத்தர
4.
சதுஸ் சமுத்திராதிபதி சஜவேட்டை கண்டருளிய பதிவேங்கடபதி தேவ
5.
மஹாராயர் பிருதுவி ராஜயம் பண்ணியருளாநின்ற சாலிவா
6.
சன சகாப்தம் தொளாயிரத்து மேற் செல்லா நின்ற சுபகிரு
7.
து வருஷம் தை மாதம் குரு வாரமும் சுவாதி நட்சத்திரமும்
8.
பறுவமும் கூடின சுபதினத்தில் யாழ்ப்பாணம் இராச்சி
9.
ம் பண்ணியிருந்த பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்ப
10.
ரத்துக்கு வந்து சிதம்பரரேசுர தரிசனம் பண்ணி. சாபாப
11.
திக்குக் குண்டலமும் பதக்கமும் சாத்தி, தில்லை மூவாயிரவருக்கும் கு
12.
ண்மலம் போட்டுச் சுவாமிக்கு என்றும்ம கட்டளை நடக்கும் படி நி
13.
த்தியமொரு வராகனுக்குப் படிக்கட்டளையும் தினமொன்று
14.
க்க ஐங்கலி அரிசி நெய்வேத்தியமும் மடத்திலே பிட்
15.
ச்சை கல அரிசியும் சுவாமிக்குபட் பரிவட்டமும் இப்படி எ
16.
ந்த வேளை தர்மம் நடக்கும் படிக்கு முதுல வைத்து, வாகனம்
17.
வைக்கிறதற்கு அங்கண ஒத்தியும் வாங்கி, ஒரு நாளை
18.
யிற் திருவிழாவும் நடப்பித்து, வந்த பரதேசிகள் வந்த
19.
வேளை யிருக்கிறதற்கு இராசாக்கள் தம்பிரான் தெரு வீ
20.
தி என்று முன்னு}ற்று பது மனையும் வாங்கி வீடு கட்டி,
21.
நந்தாவனம் போடுகிறதற்கு நல்ல தண்ணீர்க் கிணற்று
22.
க்குக் கிழக்கும் தெற்கும் முப்பதினாயிரம் குளிநிலமும்
23.
வாங்கி, இ(ரா)சாக்கள் தப்பிரான் வெளியென்று கொத்தங்
24.
குடியிலே பாதி ஊரும் சர்வமானியமாகச் சிதம்பர தர்ம
25.
த்துக்குக் கொடுத்து, இந்தக் கட்டளை என என்றும் தர்மம்
26.
இந்த மூன்ற ஊரும் சர்வமானியமாகச் சிதம்பர தர்ம
27.
த்துக்குக் கொடுத்து, இந்தக் கட்டளை என என்றும் தர்மம்
28.
விசாரிக்கும் படிக்கு இராசாவாசலுக்கு மந்திரிமாராகவும்
29.
இராச வம்சமாகவும் இருக்கிறவர்கள் தில்லையூர்
30.
சேனாப(தி) யார், சிங்கை யூர்ப் படை ஆண்டவர், தில்லையூர்
31.
குலத்துங்கர், பரநிருப சிங்கர் குல நிருவாங்கப் படையா
32.
ராச்சியாரிவர்கள் வம்சத்திலே நாலுபேரும் சம்ம
33.
தித்து தங்களினத்துக்குள்ளே ஒருதரைக் காவி வெ
34.
ட்டித் தம்பிரானாக வைத்து, இராசாக்கள் தம்பிரானா
35.
ர் திருச்சிற்றம்பல மென்றவருக்குப் பட்டமும் கட்டி வைத்
36.
து என்றென்றைக்கு இந்தத தர்மம் விசாரித்துக் கொள்ளும்

இரண்டாம் பக்கம்

37.
படிக்கு இந்த நாலு பேரையும் பாராசசேகர மகா
38.
ராசா இதப்படி கட்டளை பண்ணித் தர்மம் நடக்கு
39.
ம் படிக்கு கல்லு காவேரியும் புல்லு மூமியு முள்ள
40.
மட்டுக்கும் இவர்களே இது விசாரித்துக் கொள்ளு
41.
ம் படிக்கு கட்டளை பண்ணி எழுதிப் போட்டது. இ
42.
ப்படிக்கு பரராசசேகர மகாராசா இந்தத் தர்மத்து
43.
க்கு யாதொருவர் சகாயம் பண்ணினவர்கள் சிதம்பரத்தி
44.
திலே அர்த்த சாமவேளை சபாபதி தரிசனம் பண்
45.
ணின பலன் பெறுவார்கள். இத்தர்மத்துக்கு அகிதம்
46.
பண்ணினவர்கள் சிதம்பரத் தலத்திலே தீயிட்ட
47.
டவர்கள் போகிற தோஷத்திலே போவார்கள் இப்ப
48.
டிச் சம்மதித்து இந்தப் பட்டய மெழுதினது பரர
49. h
ச சேகர மகாராசா அவர்கள், தில்லையூர் சேனாதிபதி
50.
யார், சிங்கையூர்ப் படை ஆண்டவர், தில்லையூர் குலத்
51.
துங்கர், பரநிருப சிங்க குல நிருவாங்கப் படையாரா
52.
ட்சியார். அரிய நல்லறம் முற்றினோன் நன்றினு மத
53.
னைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவற்கும் பெரு
54.
குமப்பயன் பதின் மடங்கென்றனர் பெரு நு}ல் கூறி
55.
ய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீதொக்கும் இந்தப் ப
56.
ட்டயம் எழுதினது பரநிருப சிங்கப் படையாண்டவர்.