Monday, December 26, 2011

சோழர்கள் வன்னியர் சாதி என்பதற்கும் ஆதாரம் :




முதலில் தேவர் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் ..தேவர் என்பது ஒரு  பட்டம் . தேவர் என்னும் பட்டம் தமிழகத்தில் பல சாதியினருக்கு உள்ளது ... இங்கே வன்னியர்,முத்தரையர் ,கள்ளர் ,மறவர், அகமுடையார் என்பவர்களும் தேவர் பட்டம் தரித்தவர்கள் ..

சரி இப்பொழுது மற்ற சாதியினர் தாங்கள் சோழர்கள் என்பதற்கு முன் வைக்கும் கேள்விக்கு வருவோம் ..

கேள்வி :  ராஜ ராஜனும் அவரது முன்னோர்களும் தேவரென்று பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டனர்.    உதாரணமாக யானை மேல் துஞ்சிய தேவர்,    ராஜராஜ சோழ தேவர் என்று,  

பதில் : 

(சோழர் கால)   மதுராந்தகம் கல்வெட்டு வாசகம் இதோ: 

"இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்" 
இந்த தேவரும் நீங்கள் நினைக்கும் தேவரா?

இதொ இன்னும் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள்:

சேக்கிழார் குன்றத்தூர் தொண்டை மண்டல சைவ வேளாளர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும்.    அவர் பற்றி திருமழபாடி கல்வெட்டு  (12 ம் நூற்றாண்டு)   
"குன்றத்தூர் சேகிழான் மாதவடிகள் இராம தேவனான உத்தமச் சோழப் பல்லவரையன்"   
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

செங்குன்றாபுரம்,   விருதுநகர் கல்வெட்டு (13 ம் நூற்றாண்டு) 

"கம்பன் தேவனான நாற்பத்தெண்ணாயிர ஆச்சாரி" 
இது கம்மாளருக்கு இருந்த தேவர் பட்டம்.
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

திருச்சி மாவட்டம்,    12 ம் நூற்றாண்டு கல்வெட்டு: 
"வண்ணான் அழிவில்லாத தேவன்" 

இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?


ஆக, வெறும் தேவர் என்னும் பட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ,அதற்க்கு உரிமை கொண்டாடுவது அறியாமையே ... காரணம் தேவர் என்னும் பட்டம் கொண்ட சாதிகள் பல உள்ளன தமிழகத்தில் .....


அப்படியானால் ராஜராஜ சோழன் யார் ?

ஷத்ரியனான சுந்தர சோழனுக்கும்,  மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன்.   மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது.    மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.    இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும்.    அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.   

குலத்தலைவர் படைச் சிறப்பு

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலதுசோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது


திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.. இது வன்னியர்களின் கோட்டையான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

‎"சேதிராயர் "(மலையமான் ) பட்டம் கொண்ட வன்னியர்களை பற்றிய கல்வெட்டு:  


1. VANNIYANAR alias Manabharana-CHEDIYARAYAR

Pallva Inscriptions (A. R. No. 290 of 1919 at Avur Tiruvannamalai Taluk, North Arcot District, On the south wall of the central shrine in the ruined Siva temple.)

“This is a fragmentary record dated in the 32nd year of the chief. It registers some provision made to the god Tiruvagattisuramudaiya-Nay
anar for the welfare of Vanniyanar alias Manabharana-Chediyarayar.”

2. VANNIYANAYAN CHEDIRAYAN

Pallva Inscriptions (A. R. No. 300 of 1919, On the south wall of the mandapa in front of the central shrine of the same temple)

“This inscription of the 32nd year records a gift of land by Vanniyanayan Chediray
 
an to Bharadvaji Va[ra*]ntandan devan, a Brahmana of the village, for supplying on festival days, sandal paste, scented powder and incense for the sacred bath of the god Tiruvagattisuramudaiya-Nay
anar at Avur.”


இங்கே ராஜ ராஜனும் க்ஷத்ரியனே...

ஆதாரம் பின்வருமாறு :

சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள்.    சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.    மேலும்,    சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது,    க்ஷத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.    மேலும் க்ஷத்ரிய சிகாமணி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது.    எனவே அவன் க்ஷத்ரியனே.

இப்பொழுது சோழர் வன்னியர் குல க்ஷத்ரியர்  என்பதற்கு முக்கிய ஆதாரத்திற்கு வருவோம் :

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.



இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர்.

Friday, December 23, 2011

காடவராயர்களின் ஆயுத தொழிற்சாலை- விழுப்புரம் மாவட்டம்


காடவராயர்களின் ஆயுத தொழிற்சாலை

பல்லவ வழித்தோன்றல்களான காடவராயர்கள் சேந்த நாட்டை 
(உளுந்தூர்பேட்டை அருகே) தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். 
இவர்களில் கோப்பெரும் சிங்கன் என்பவன் சோழ, பாண்டிய 
மன்னர்களைவென்றவன். சோழ மன்னன் மூன்றாம் இராசராசனை 
சிறைப்பிடித்தான்என்பது வரலாறு.

போருக்கான ஆயுதங்களை தயாரிக்க சேந்தநாடு அருகே 
ஒல்லியாம்பாளையம், கன்னிக்குப்பம், தொப்பளாம்குப்பம் 
ஆகிய ஊர்களின் இரும்பு கனிமப் பொருள்களை செம்மண் 
கலயங்களில் இட்டு இரும்பை பிரித்து எடுக்கும் தொழிற்சாலை 
நிலுவியதை அறிய முடிகின்றது.

வெப்பம் தேவையான இத்தொழிலுக்கு  காற்றடிக்கும் 
துருத்துக்குழாய் பேருதவியாக இருந்துள்ளது. மிக 
அதிக வெப்பநிலையில் உருக்கப்படும்கனிமம், தீ
தேவைப்படும் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். 
சுடுமண் குழாய் முனைகளில் உருகிய சிதறிய இரும்பு 
எடுக்கப்பட்டுகருவிகள் வடிக்கப்படும்.

இத்தடயங்கள்  இப்பகுதியின் தரைக்கூட்டு பகுதியிலும் 
செம்மண்நிலப்பரப்பில் இரும்பு உருக்கு சுடுமண் 
பாத்திரங்களும்,பாத்திரங்களுடன் இணைக்கப்பட்ட குழாய்களும் 
சிதைந்த நிலையில்ஏராளமாக கிடைக்கின்றன.

கி.பி.13 ஆம் நூற்றாண்டின் தடயங்கள் என ஆய்வாளர்கள் 
எடுத்துரைக்கின்றனர்.

Monday, December 19, 2011

வன்னிய குல அரசர் சம்புவராயர் கட்டிய கைலாசநாதர் திருக்கோயில், நார்த்தம்பூண்டி




மூலவர்-கைலாசநாதர்
அம்மன்-பெரியநாயகிஉமையம்மை
பழமை-500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்-நாரத பூண்டி
ஊர்-நார்த்தம்பூண்டி
மாவட்டம்-திருவண்ணாமலை
மாநிலம்-தமிழ்நாடு

சிவபெருமானிடம் இடப்பாகத்தைப் பெறவேண்டி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட உமையம்மை திருவண்ணாமலை நோக்கி செல்லும் போது வாழைப்பந்தல் என்ற இடத்தில் தங்கினாள்அங்கு சிவலிங்க வழிபாடு செய்வதற்காக இலிங்கத்தை தேடி அலைந்தாள்இலிங்கம் எதுவும் கிடைக்கவில்லை.எனவே மணலால் ஆன இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தாள்.
இலிங்கத்தை வடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டது.எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள்முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார்.அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்ததுஅந்த மலையில் புத்திராண்டன்,புருகூதன்பாண்டுரங்கன்போதவான்போதன்,கோமன்வாமன் ஆகிய ஏழு முனிவர்கள் தவமிருந்து வந்தனர்முருகன் வீசியவேல் அந்த ஏழு முனிவர்களையும் ஊடுருவிச் சென்றதால் ரத்தம் கொட்டி செந்நீராக வந்தது.
அதே நேரம் முருகனின் திருவேல் பட்ட புனிதத்தால் அந்த ஏழு பேரும் சாபவிமோசனம் பெற்று முக்தி அடைந்தனர்பின்பு உமையம்மை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்ததுஇந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோயில்களையும்,தென்கரையில் ஏழு கோயில்களையும் ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம்கடலாடிமாம்பாக்கம்மாதிமங்கலம்,எலத்தூர்பூண்டிகுருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன.தாமரைப்பாக்கம்வாசுதேவம்பட்டுநார்த்தம்பூண்டி,தென்பன்றிப்பட்டுபழங்கோவில்கரப்பூண்டி,மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன.
சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோயிலாகும்.கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளதுதட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார்ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவானுபோத உபதேசம் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார்தனது பிள்ளைகளைத் தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்குஉடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான்நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார்இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சிதந்து சாபத்தை நீக்கினார்.
பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப்பதவியை அடைந்தார்.நாரதரின் பேரால் இவ்வூர் நாரத பூண்டியாக இருந்து காலப்போக்கில் நார்த்தம் பூண்டி என அழைக்கப்படுகிறதுகயிலாசநாதர் கோயிலை சம்புவராயர் மற்றும் வல்லாள மன்னர்கள் கட்டினர்.விஜயநகர அரசர்களால் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இங்கு அம்பாள் பெரியநாயகி என அழைக்கப்படுகிறாள்.
முருகன் தனது தோஷம் நீங்க சிவபூஜை செய்த தலங்களில் இது மிகவும் முக்கியமான தலமாகும்.
திருவிழா:
பிரம்மோற்சவம்கிருத்திகைமாசி மகம் ஆகியவை முக்கியமானவை.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்ககுழந்தைச் செல்வம் பெற,கல்வியில் சிறந்து விளங்கஇறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்துபுத்தாடை அணிவித்துசிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.