Saturday, December 10, 2011

மலையமான்கள் வன்னியக்குலத்தவரே

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்
வன்னியர் அக்காலத்திற் படைக்கலப் பயிற்சியைச் சிறப்புறத்தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் மன்னராகவுமிருந்தகாரணத்தினாலே வன்னியரைச் க்ஷத்ரியர்கள் என நூல்கள் வருணித்தன.வன்னியரின் சிறப்பை எடுத்துரைக்குமிடத்தில் சிலை எழுபது நூல்இவ்வாறு கூறும்:

படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ
வெனலுடையர்நடையுடையார் மிடியுடைய
நாவலர் மாட்டருள் கொடையார்குடையுடையார்
மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார்
வன்னியர் பிறரென்னுடையார் பகரிரே

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும்வருணிப்பது குறிப்பிடத்தக்கதுசோழப்பெருமன்னர் காலத்திலேதொண்டைமண்டலத்திலாண்ட கிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.இக்குறுநில மன்னர் வன்னியராயிருந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள்ஆதாரமாயுள்ளன.