Tuesday, November 6, 2012

பாதி சிதம்பரத்தையே அடைத்து கொண்டிருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் எப்படி வந்தது தெரியுமா ?



சிதம்பரத்தில் பாதி நிலம் பிச்சாவரம் மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது . செட்டியார் நடத்தும் அந்த அண்ணாமலை பல்கலைகழகம் நிலம் கூட இந்த சோழனார் குடும்பத்திடம் தான் இருந்தது .

இவரின் மூதாதையர் ஒரு திருமணத்திற்க்காக முகையூர் சுப்ரமணிய பிள்ளையிடம் அறுபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்கள் .அந்த பணத்தை திருப்பி தர இயலாத நிலைமை வந்ததால் நிலத்தை ஏலமிடும் நிலைமைக்கு வந்தார்கள் . அப்போது ராமநாதபுரம் கானாடுகாத்தானை சேர்ந்த அண்ணாமலை செட்டியார் அவர்கள் அந்த நிலத்தை ஏலம் எடுத்தார் .அந்த நிலம்தான் இன்று அண்ணாமலை பல்கலைகழகம் .

---- நக்கீரன்

வன்னியர்களுக்கு நன்றியாக படையல் போடும் செங்குந்த முதலியார் சமூகத்தினர்

தமிழ்நாட்டில் இடங்கை வலங்கை தகராறு நடந்த சமயத்தில் பிராமணர், வன்னியர் தவிர மற்ற சமூகங்கள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதி கொண்டனர். அப்போது சிதம்பரம் பகுதியில் வேளாளர் சமூகத்தினர் செங்குந்தர் சமூகத்தினரை மிக கடுமையாக தாக்கினர். அது வரை இடங்கை வலங்கை சண்டையில் பங்கேற்காத வன்னியர்கள், செங்குந்தர் சமூக மக்களை காக்க வேளாளர்களோடு சண்டையிட்டனர். 

அந்த சண்டையில் பல உயிர் சேதம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியை ஆட்சி செய்து வந்த தில்லை சோழர்களான பிச்சாவரம் ஜமீனுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை ஆங்கிலேய அரசு நிறுத்தி கொண்டது. அது முதலே அந்த சோழர் குடும்பம் வறுமையில் விழுந்தது. இருபினும் அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

வன்னியர்களின் இந்த தியாகத்திற்கு நன்றியாக இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழும் செங்குந்த முதலியார் சமூகத்தினர் சாமிக்கு படையல் போடும் போது வன்னியர்களுக்கும் ஒரு படையல் போட்டு தங்கள் நன்றியை தெரிவிகின்றனர் .

வன்னியர்கள் இடங்கை சாதி தலைவனாக அறியப்பட்டனர் . இதனால் அவர்கள்  இடங்கைப் பெரியோன், இடங்கையாதிபர் என்று அழைக்க பட்டனர்

குறிப்பு : இடங்கை வலங்கை தகராறு புத்தகம்.

நன்றி : கார்த்திக் சம்புவராயர் 

Monday, November 5, 2012

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)


மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012) .........................

 "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் "


=============



Sunday, November 4, 2012

களப ராஜராஜன் என்றுள்ள கல்வெட்டு சாளுக்கிய சோழனது . நேரடி சோழனது அல்ல




“ களப ராஜராஜன்”

“ கள்வன் ராஜராஜன்”

என மெய்க்கீர்த்தி கல்வெட்டு "இராண்டாம் இராசராச சோழனை" களபர்-கள்வன் எனவும் குறிப்பிடுவதால் , "முதலாம் ராஜ ராஜனும் " கள்ளர் சமூகமாக இருக்கலாம் என்று கள்ளர் சமூக நண்பர்கள் கூறுவதால் , அது மிகப்பெரும் பிழை என்று சொல்கிறேன் .

இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல். ) என்பது கள்ளர் சமூகத்தார் வாதம் .

இது மட்டமான ஆதாரம் .

காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?

இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன்  சாளுக்கிய சோழன் ...

ஆகவே இது மட்டமான ஆதாரம் .

அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு .  களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .

எடுத்துக்காட்டு :

1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.       

2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய       வீதியையும்

Refer:  http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=7

3. களப வன முலைப் பொறை சுமந்து உருகி இறந்ததோ -சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ

Refer : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=63&pno=64

4. பரிமள களப சுகந்த -- நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும்

Refer : http://www.kaumaram.com/thiru_uni/tpun0078.html

இதுபோன்ற பல பொருள்  உண்டு .

ஆகவே இம்மன்னன் யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்று புகழ  “ களப ராஜராஜன்” என்று பாராட்ட பெற்றிருக்கலாம் .

 சாளுக்கிய மரபுடைய இந்த சோழனை "களப " என்பது என்று கூறுவது அவன் களம் கண்டவன் என்பதனாலோ, அல்லது யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்பதாலோ ,அல்லது சோழ மற்றும் சாளுக்கிய குலத்து கலப்பில் வந்த மன்னன் என்பதாலோ என்று பல பொருள்கள் இதில் அடங்கும் .அந்த கல்வெட்டின் முழு வாக்கியம் படித்தால்தான் அதன் முழு செய்தி நமக்கு கிடைக்கும் .

“ கள்வன் ராஜராஜன்” என்றாலும் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்ல இயலாது . கள்வன் என்பது திருடனை குறிப்பது . ஒருதன் நாட்டு மக்களை காக்கும் ஒரு  மன்னனை அப்படி கூற காரணம் , அவன் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் கூட இருக்கலாம் .

அடுத்து முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்

Refer: http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312112.htm

ஆக முத்தரையர் மன்னருக்கும் இந்த கள்வர் பட்டம் உண்டு . அதோடு முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று சொல்வதாலும், இவர்கள் கன்னட நாட்டவர் என்பதாலும் , இதே போல இரண்டாம் ராஜ ராஜனும் சாளுக்கிய (கன்னடர் ) பகுதியில் இருந்து வந்தமையால் அதே கள்வர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கலாம் அல்லவா .........

அதோடு  சாளுக்கிய மரபுக்கும் கள்ளர் சாதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சாளுக்கிய மரபு கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனே பூணூல் அணிந்தவன் . இதை அப்போது எழுதிய களிங்கத்துபரணியும் உறுதிபடுத்துகிறது .

பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,

'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'


கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.

இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர்
 பலரைக் கூறுவதும் 
ஈண்டு நோக்கத்தக்கது. 

இவரை அடுத்துச் சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '...
----------------------- கலிங்கத்துப்பரணி

Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm



கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'

இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
அதாவது சாளுக்கியர் கீழ் குறுநில மன்னராக இருந்துள்ளனர் என்பது இதன் அர்த்தம் .அது மட்டுமல்லாது வன்னியர்களுக்கு சாளுக்கியர் என்ற பட்டமும் உண்டு .

அடுத்து தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) - (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்) என்ற பகுதியில் இடங்கை வலங்கை சாதியை பற்றி குறிப்பிடும் போது ,

வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

Reference : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21440:2012-09-27-18-44-18&catid=25:tamilnadu&Itemid=137

தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை . அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது படையாச்சி ,  மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்ந்தார்கள் என்றால் ஏன் அவர்கள் குறிப்பிட படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது .


நன்றி : இந்த களப என்னும் கல்வெட்டு குறிப்பை பற்றி செய்தி எனக்கு கிடைக்க காரணமாக இருந்த திரு.ராஜேஷ் பிள்ளை அவர்களுக்கு நன்றி 

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :


சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :






----நன்றி
சோழர் கரந்தை செப்பேடு தொகுதி
ஆசிரியர்: சி.கோவிந்தராசன்
சி.கோ.தெய்வநாயகம்
மதுரை பல்கலைக்கழகம்

Friday, November 2, 2012

கி.பி.7 ஆம் நூற்றாண்டு மஹேந்திரவர்ம பல்லவர் காலத்திய கல்வெட்டு : காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்ற செய்தி



ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.


இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"


(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர்


ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர் குறிப்பிடப்படுகிறார்.

"வேசாலி பிரமதேயத்திலிருக்கும் குடிப்பள்ளி பெருமான் இரண்டாயிரவனான ஸேநாபதி ராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" (ARE 124 of 1902)

இரண்டாயிரவன் என்பதால் இந்த பள்ளி இனத்தவர் இரண்டாயிரம் வீரர்கள் கொண்ட படைப்பிரிவிற்கு தளபதியாக இருந்தார் என்பது தெரிய வருகிறது.

###

நன்றி : தகவலை அளித்த திரு சுவாமி அவர்களுக்கு நன்றி :

Monday, October 29, 2012

வன்னியர்கள் போர்குடி - சட்டநாதன் குழு

"வன்னியர்களுடைய மூதாதையர்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செங்கல்பட்டு, தென்னார்க்காடு, தஞ்சாவூர் மாவட்டங்களில் சாதாரணமாக வழக்கத்திலிருக்கும் பட்டம் 'படையாட்சி' என்பதாகும்.

சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு பழங்குடியினருக்கு இருக்க வேண்டிய இயல்புகள் அனைத்தும் அச்சாதிக்கு இருக்கின்றன. கடந்த காலத்தில் போரிடும் வர்க்கமாக இருந்ததாலும் எண்ணிக்கையில் பெருமளவில் இருப்பதாலும் இத்தகைய இயல்புகள் இருப்பது இயற்கைதான்"

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கை 1970 (சட்டநாதன் குழு) பக்கம் 108


நன்றி : செய்தியை அளித்த அருள் அண்ணன் அவர்களுக்கு நன்றி 

Friday, October 26, 2012

சோழ மன்னர்கள் யார்? அண்ணாமலை நகரிலேயே அரங்கேறிய ஓர் ஆதாரம்!








தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.

அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.
அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவாரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார்.

அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.




சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.

இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன் தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார். இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம், தில்லைக் கோயில் உரிமையாளர்கள் யார் என்பதைக் கூறுகிறது.

அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.

நடுநிலையாளர்களே நாட்டோர்களே! பாருங்கள் இந்த உண்மை வெளிச்சத்தை எங்களுக்குத்தான் உரிமை என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிச் சத்தியவாக்கு என்ற பெயரில் பொய்சத்தியம் செய்து கொடுக்கும் இவர்களின் யோக்கியதையை. தங்களுக்குச் சொந்தக் கோவிலாளால் தினமும் சாவியைக் கொண்டு போய் ஒப்படைத்தது ஏன்? திரும்பவும் போய்த் தினமும் வாங்கி வந்தது ஏன்?

சாவியை எங்கே கொண்டு போய், எவரிடம் கொண்டு போய் ஒப்படைத்திருக்கிறார்கள்? அக்கம்பக்கத்திலே உள்ள அரசு அலுவலகத்தில் எதுவும் ஒப்படைக்க வில்லை. அவர்களில் மூத்த தீட்சிதரிடம் ஒப்படைக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து அங்கிருந்து தினமும் காலை கொணர்ந்திருக்கிறார்கள். இச்செய்தி மறுக்கப்படாமல் நடைபெற்ற செய்தி.

ஆகத் தீட்சிதர்கள் கோயிலைக் காவல் காக்க இரவில் தங்குவது, காவல் காப்பது ஆகியனஎல்லாம் கடந்த நூற்றாண்டின் இடையில் ஏற்பட்ட பழக்கம் என்பது தெரிகிறது.

சிதம்பரம் கோயில் ஆட்சி உரிமையைப் பிச்சாவரம் ஜமீன்தார்கள் பெற்றிருந்ததில்லை மூவாயிரவர்க்குள் ஏற்படும் சிக்கல்களையும், வழக்குகளையும் பிச்சாவரம் ஜமீன்தாரே தீர்த்துவைத்தனர்.

நன்கு கவனிக்கவேண்டும். தீட்சதர்கள் தங்கள் வழக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளாது பிச்சாவரம் ஜமீன்தாரின் தீர்ப்புக்கு விட்டனர் அதாவது பொது தீட்சிதர்கள் என்றும் தீட்சிதர்கள் சபை என்றும் அவர்கள் கொண்டிருக்கிற அமைப்பு சமீப காலங்களில் உருவாகி இருக்கிறது. இந்தப் பொது சபை கூடுவது. பொது சபை வழங்கும் தீர்ப்பு நடாராசர் வழங்கும் தீர்ப்பு என்பதெல்லாம் சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ளது.

பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை 1 மகாளளஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன.

முடிசூட்டு விழா என்பது ஆரிய முறைப்படி நடக்கத் தலைப்பட்ட பின்னர், முடிசூட்டுதலை தீட்சதர்கள் செய்து வந்துள்ளனர்.

வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.

அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே
கோயில் தீட்சிதர்களுக்கு உரிமை யுடையது என்றால் அவர்களுடைய கோயிலில் போய் சோழ மரபினர் என்று கூறப்படுவோர் முடி சூட்டிக் கொள் வார்களா?

பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,

ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.

எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது பெறப் படுகிறது.

விடுதலைக்குப்பின் காங்கிரசு அரசு மய்யத்திலே பதவி ஏற்றபின் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இவ்வாறு ஜமீன் ஒழிப்புச் சட்டமாக நிறை வேறியதும் ஜமீன்தார்கள் தாங்கள் கொண்டிருந்த அரண்மனை, கோயில், நிலம் ஆகியவற்றில் உரிமைகளை இழந்தனர்.

எனவே ஜமீன் ஒழிப்பிற்குப்பின் அதுவரை பிச்சாவரம் ஜமீன்தாரிடத்தில் இருந்த கோயில் உரிமையைப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் உரிமை கொண்டாடுபவர்கள் உரிமை யாளர்களாக மாறியதுபோல் தீட்சிதர்கள் உரிமை கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

அதுவரையில் ஜமீன்தாரிடம் சென்று கோயில் சாவியை ஒப்படைத்து பின் பெற்று வந்தவர்கள் சாவியைக் கொண்டு சென்று கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொண்டு நிருவாகம் செய்யத் தலைப்பட்டு விட்டனர். இதுதான் உரிமை. எனவே, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடி வருவது எப்படி சொந்தமாகும்?

நாட்டுடைமை என்பது பல துறைகளிலும் நிறைவேறியதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததன் விளைவாகக் கலைஞர் அந்த பேருந்துகளைத் தேசியமயம் எனப்படும் நாட்டுடைமையாக்கியது அதற்கு என்ன அரசியல் நோக்கமா இருந்தது? மக்கள் நலன்தான் முன்னின்றது. அது போலத்தான் நிருவாக அலுவலரை நியமித்துக் கோயில் நிருவாகம் நேர்மையாக வெளிப்படையாக நடைபெறச் செய்வதில் என்ன அரசியல் நோக்கமிருக்கமுடியும்?

தமிழகத்திலுள்ள மற்றைய கோவில் நிருவாகம் அப்படித்தானே நடை பெறுகிறது? இத்தகு நடவடிக்கைக்கு அர்த்தம் பொருள், உள்நோக்கம் கற்பிக்கலாமா? அர்ச்சகர்களான தில்லைத் தீட்சிதர்களுக்கும் தமிழக அரசுக்கும் இதுவரை பகையோ, மோதலோ ஏற்பட்டதும் கிடையாது. இதுபோல் மய்யஅரசு வங்கிகளை நாட்டுடமையாக்கியது, ஜமீன்தாரி முறையை ஒழித்தது. மன்னர் மானியம் ஒழிப்பைச் செய்தது இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு பொது நோக்கத்தின்பால் ஏற்பட்டவை. இதனால் சமூகம் பயன்பெற்றிருக்கிறது. ஜமீன் ஒழிப்பினால் ஏழை எளிய மக்கள் வயலில் உழுது உழைத்தவர்கள் நில உடைமையாளர் ஆயினர்.

எனவே மக்கள் நலனுக்குச் சட்டங்கள், விதிமுறைகள் உருவாகின்ற போது அதற்குக் குறுக்கே நிற்காது துணை நிற்பது, காலமாறுதலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் நல்ல புத்திசாலித்தனமான அணுகுமுறை. அதனால் ஏற்படும் இழப்புகள் இருந்தால் இழப்பீடுகள் கேட்கலாம். வருமானக் குறைவு ஏற்படுமானால் ஈடுசெய்ய நிதி உதவி வேண்டலாம். தவறில்லை.


பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்


Monday, October 22, 2012

வன்னிய குல பல்லவ மன்னர் "மாமல்லன்" நரசிம்ம பல்லவர் கதை சொல்லும் , எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சி தலைவன்" திரைப்படம் :



                                                                      பகுதி 1 


பகுதி 2


பகுதி 3


                                                                              பகுதி 4


                                                                               பகுதி 5


பகுதி 6


பகுதி 7



பகுதி 8


பகுதி 9


பகுதி 10



பகுதி 11


பகுதி 12


பகுதி 13


பகுதி 14


பகுதி 15


Saturday, October 20, 2012

ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்





வணக்கம் தோழர்களே ,

அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்டு , வன்னியர்களின் உடையார் மற்றும் கண்டிய தேவர் பட்டம் கொண்ட ஸ்ரீ பெரும்பள்ளி க்ஷத்ரிய சிகாமணி ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு  சோழர் படை வீரர் கூட்டம் படையாட்சிகளின் சார்பாக இந்த வன்னிய குல சத்ரிய இனம் அழைப்பு விடுக்கிறோம் .

......தில்லையில் " சோழர்க்கன்றி சூட்டோம் முடி" என்றுரைத்து இந்நாள் வரை அந்த பெருமையை வன்னியர்களுக்கே அளித்து , சோழர் பரம்பரை என்று உலகுக்கு பறைசாற்றிய அந்த தில்லை நடராஜன் ஆசீர்வாதத்தோடு சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்.




Wednesday, October 17, 2012

அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்பு



புகையிலை பொருட்கள் தடுப்பிற்காக , அமெரிக்கா வாஷிங்கடனில் ஜூலை14 , 2006 ஆம் ஆண்டு , அமெரிக்க புகையிலை தடுப்பு மையம் , நமது சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்பு இங்கே :

அதோடு அவர் செய்த சாதனைகளும் , ஒரே நாளில் அவரின் பசுமை தாயகம் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற செய்தியும் கொண்ட வீடியோ தொகுப்பு .



புகைப்படங்கள் :









திராவிட வாளை ஏந்தி இனியும் தமிழினத்தை வீழ்த்தலாம் என கனவு காணாதே வைகோ - "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்








# மேடை போட்டுக் கொடுத்தால்; அங்கே ஆக்ரோ­மாகப் பேசி சிலர் பெரிய ஆள் ஆகி விடுகிறார்கள்.

#ஈழப்பிரச்சனையில் நாம் தோற்றுவிட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்துவிட்டனர். தமிழரினம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


#திராவிடத்தைப் பேசி தமிழர்களை மழுங்கடித்து விட்டனர்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன் அவர்களின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பாரதிராஜா பேசியது இது.
==========================

# அரசியல்வாதிகளையும்; திராவிடத்தையும் பற்றிப் பேசுவது சிலருக்குப் பொழுதுபோக்கு.

# திராவிடம் இல்லையயன்றால் இங்கே எதுவுமே இல்லை.

# பெரியாரும் அண்ணாவும் இல்லாமல் இங்கு எதுவுமே நடந்திருக்காது.

# இனி திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால் பத்து வார்த்தை நாங்கள் திருப்பி பேச வேண்டி வரும்.

பாராதிராஜாவின் பேச்சுக்கு எதிராக பேச்சுமேடை நடிகன் கோபால்சாமி நாயுடுவின் பேச்சு இது.
============================

திராவிடத் தலைவர்களால்தான் ஈழத்தமிழரினம் அழிந்தது என்ற வரலாற்று உண்மையை நீண்டநாள் மறைத்து வே­ம் போட முடியாது. பாரதிராஜா சொன்னது கொஞ்சம்தான். மேடை நாகரீகம் கருதி தொட்டுச் சென்றுள்ளார்.

இதற்கேவா இந்தக் குத்தாட்டம்?

மேடைபோட்டுக்கொடுத்தால், அங்கே ஆக்ரோ­மாகப் பேசிச் சிலர் பெரிய ஆள் ஆகி விடுகிறார்கள் என்று மேடையிலிருந்த சீமானை மறைமுகமாக விளாசினார் பாரதிராஜா என ஜூனியர் விகடன் குறிப்பிட்டிருந்தாலும்,

ஜூனியர் சும்மா இருக்க; சீனியர் மேடைப்பேச்சு நடிகனான கோபால்சாமி நாயுடுவை அதிகம் பாதித்து அனுமான் வே­ம் போட வைத்துவிட்டது.

திராவிடம் இல்லையயன்றால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்று நாயுடு கூறியிருப்பது பாரதிராஜா மீதான தாக்குதல் இல்லை.

தமிழ்நாட்டின் மீதான தாக்குதல். தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்றால் நீ எதற்கு இங்கே கட்சி நடத்துகிறாய்? எல்லாம் இருக்கிற உன் தெலுங்கு தேசத்துக்குப் போய் கட்சி நடத்துவதுதானே?

திராவிடம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்றதற்கே உன்னைத் தமிழ்நாட்டை விட்டு தெலுங்கு தேசத்திற்குக் கடத்த வேண்டும். காலம் வரும்... வராமலா போகும்?

அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பற்றிப் பேசுவது பொழுதுபோக்கு என்கிறார் நாயுடு. திராவிடத்தைப் பேசி பிழைப்பு நடத்தும் கருணாநிதி, கோபால்சாமி நாயுடுவைப் பார்த்த பிறகும் அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பொழுதுபோக்காக யாராவது பேசினால். தப்புதான் நாயுடு ஜி.

புறம்போக்கும்படி செயல்பட வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு நன்றி.

பெரியாரும் அண்ணாவும் இல்லயயன்றால் இங்கு எதுவுமே நடத்திருக்காது என்கிறார் நாயுடு.

உண்மைதான், பெரியாரும் அண்ணாவும் இல்லை என்றால் தமிழ்நாடு சித்தூரோடும்; கோலாரோடும்; தேவிகுளத்தோடும்; பீர்மேட்டோடும்; எதுவுமே நடக்காமல் இங்கேயேதான் இருந்திருக்கும். இவைகள் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்திற்கும் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்குமாகி நடந்தது எல்லாம் பெரியாராலும்; அண்ணாவாலும்தானே?

திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால், பத்து வார்த்தை பேசுவாயாமோ? நல்லது நல்லது. பேசு பேசு.. அப்போதுதான் நீபேசும் திராவிடத்திற்கு ஆதரவான பத்து வார்த்தைகளுக்கு நூறு வார்த்தைகள் எதிராக எங்களால் பேச முடியும்.

திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிடத் தலைவர்களான பெரியார்; அண்ணாத்துரை; கருணாநிதி; எம்.ஜி.ராமச்சந்திரன்; .... உன்னை நீயே ஒரு திராவிடத் தலைவன் என நினைத்துக்கொண்டால் நீயும்.
தமினத்தின் சாபக்கேடே...

நீ இதற்கு தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் எதிர்த்து பத்து வார்த்தையில் பதில் சொல். உனக்கு நாங்கள் திராவிடத் தீமையை எதிர்த்து நூறு வார்த்தையில் பதில் சொல்கிறோம்.

துருப்பிடித்து; இற்றுப்போய்; காயலாங்கடைக்குப் போக நாள் பார்த்துக் கொண்டிருக்கும் திராவிட வாளை ஏந்தி இனியும் தமிழினத்தை வீழ்த்தலாம் என கனவு காணாதே நீ ....

-------------------------------- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன் 


முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் வன்னிய தியாகிகள் இருட்டடிப்பைக் கண்டிக்கிறோம். --- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்








முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் வன்னிய தியாகிகள் இருட்டடிப்பைக் கண்டிக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினமான 15.08.2012 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


“....65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அடிமைத்தனத்தை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.

ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் சேவல் பூலித்தேவன்; தூக்குமேடை ஏறிய வீரபாண்டியக் கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி காக்க உயிர்துறந்த திருப்பூர்க் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலு நாச்சியார்; மாவீரன் வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்çம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வூட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர் சத்தியமூர்த்தி; சுப்பிரமணிய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகுமுத்துக்கோன்; பெருந்தலைவர் காமராசர்; தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தியாக சீலர்களைப் போற்றி வணங்குகிறேன்.”

ஒரு மாநிலத்தின் முதல்வர் சுதந்திரதின விழாவில் பேசுகிற பேச்சில் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் பெயர்ப்பட்டியல் இடம்பெறும்போது:

முழுமையானதாகவும்; உண்மையான தியாகிகளின் பெயர்ப்பட்டியலாகவும்; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

முதல்வரின் சுதந்திரதின விழா பேச்சு என்பது - அரசியல் கட்சி மேடைப்பேச்சாளிகளின் பொறுப்பற்ற பேச்சாக இருந்துவிடக் கூடாது என்பது அதைவிட முக்கியம்.

2012 சுதந்திரதின விழாவில் முதல்வர் ஜெயலலிதா வாசித்த பேச்சு ஒரு கட்சியின் மேடைப்பேச்சாளி ஒருவனின் பொறுப்பற்ற பேச்சாக இருந்தது என்பதுதான் அவலம்.

பூலித்தேவன்
கட்டபொம்மன்
மருது சகோதரர்கள்
வேலுநாச்சியார்
தீரன் சின்னமலை
அழகுமுத்துக்கோன்

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா பேச்சில் இவர்கள் எல்லோரும் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாக சீலர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளா?

வெள்ளையர்களால் தங்கள் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது தங்கள் ஆட்சியைக் காத்துக் கொள்ள வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வர்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

வெள்ளையனே வெளியேறு என போராடினார்களா?

இவர்கள் போராட்டங்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நடந்த போராட்டங்களே தவிர வெள்ளையனே வெளியேறு என இந்திய தேச விடுதலைக்காக நடந்த போராட்டமல்ல
எனவே இவர்களை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் எனச் சொல்வது வரலாற்றுப் பிழை.

#
அடுத்த பிழை-

பெரியாரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. இது அறிந்தே செய்த பிழை என்றே கருதுகிறோம்.

1926 ஆம் ஆண்டிலேயே பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறிவிட்டார். அது கூட பரவாயில்லை. விலகியபின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த நீதிக்கட்சியோடு சேர்ந்துகொண்டு # இந்திய விடுதலை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

அது மட்டுமல்ல -
இந்திய விடுதலைப் போராளிகளின் தியாகத்தால் பெற்ற சுதந்திர தினத்தை துக்க தினமென அறிவித்தவர்.

இவரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகி என போற்றுவதும் வணங்குவதும் - உண்மையான இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இதனை இந்திய போராட்ட தியாகிகளின் ஆவி கூட மன்னிக்காது.

விடுதலைப் பேராட்ட தியாகிகளின் பெயர்ப் பட்டியலில் காமராசர் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவரைவிட அதிக காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த - ஆதிகேசவ நாயகர் பெயரோ; தென்னிந்திய பெண் போராளிகளில் அதிக கால சிறை தண்டனையை தன் கணவரோடும் குடும்பத்தோடும் அனுபவித்த பெண் போராளியான அஞ்சலையம்மாளையும் ஜமதக்னியையும் தியாகிகள் பட்டியலில் சேர்க்காதது ஏன்? அவர்கள் வன்னியர்கன் என்பதாலா? அல்லது - முதலமைச்சர் ஆனவர்களுக்குத்தான் தியாகிகள் பட்டியலில் இடமளிக்கும் தகுதி உண்டு எனக் கருதுகிறாரா?

அடுத்தது தில்லையாடி வள்ளியம்மை

இவர் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நல்வாழ்விற்காக - காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்.
இவரும் கூட இந்திய விடுதலைக்காக இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர் அல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கு உரிமை கேட்டுப் போராடியவரே.

இவரை இந்திய விடுதலைப் போராளிகள் பட்டியலில் சேர்த்ததும் கூடப் பிழையானதே.

தென்னாப்பிரிக்கா வாழ் இந்திய மக்களுக்காக போராடிய தியாகி என்பதால் இவரை தியாகிகள் பட்டியலில் சேர்த்ததைக் கூட ஒருவகையில் ஏற்கலாம்.

ஆனால் இவர் ஒருவர்தான் தென்னாப் பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காகப் போராடிய தியாகியா?

தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு -
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரம் என்ற நூலில் காந்தியார் மூன்று தியாகிகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

1.நாகப்பன் படையாட்சி 2.நாராயணசாமி 3.தில்லையாடி வள்ளியம்மை
இதுவே காந்தியடிகளின் தியாகப்பட்டியல்.

தமிழகத்தை தட்டி எழுப்ப இந்த மூன்று பெயர்களையும் தாரக மந்திரமாக தமிழகப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார்
- (1969இல் வெளியான தமிழ்நாட்டில் காந்தி என்ற நூல் பக்கம் 252).

இந்த மூவரில்-
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முதல் பலியாகிய முதல் தியாகி நாகப்பன் படையாட்சியே. சிறைக்கொடுமை காரணமாக இவர் இறந்தது - 6.7.1909.

தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரப் போராட்டத்தில் இரண்டாவதாக பலியான இரண்டாவது தியாகி - நாராயணசாமி இவர் இறந்தது - 16.10.1910

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மூன்றாவதாக பலியான மூன்றாவது தியாகி - தில்லையாடி வள்ளியம்மை. இவர் இறந்தது 22.2.1914.

இதில் முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியையும் இரண்டாம் தியாகியான நாராயணசாமியையும் ஒதுக்கிவிட்டு -
மூன்றாவது தியாகியான தில்லையாடி வள்ளியம்மையை மட்டும்; தன் சுதந்திரதின விழா பேச்சில் - இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியின் தியாகம் குறைவானதா?
மகாத்மா காந்தியே அவரது தியாகம் குறித்து என்னவெல்லாம் சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

"நாகப்பா தாய் நாட்டிற்காக உன் உயிரை நீ ஈந்தபோது நீ ஒரு இளைஞன் தானே? உன் குடும்பத்திற்கு அருளப்பெற்ற ஓர் ஆசீர்வாதமாகவே உன் தியாகத்தை நான் கருதுகிறேன். நீ இறந்துவிட்டாய் என்றாலும் சிரஞ்சீவியே" என்று இந்திய ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். (தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகம் 1969இல் வெளியிடப்பட்டது அதில் பக்கம் 39,40)

அதே புத்தகத்தில் 41ஆம் பக்கத்தில் -
பிளேம் போண்டீன் சிறையில் வள்ளியம்மாளுக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுக்கல் 1914 ஜூலை 15ஆம் நாள் திறந்து வைக்கப்படுகிளது இந்த நினைவுக்கல்லைப் பிலிப் என்ற அம்மையார் திறந்து வைத்தபின் காந்தியடிகள் பேசியதாவது:

"வள்ளியம்மாளுடைய முகத்தைப் போன்று நாகப்பனுடைய முகம் எனக்கு அவ்வளவாக தெளிவாக நினைவில் இல்லை. ஆனால் அந்த பயங்கரமான சிறை வாழ்க்கையில் கடுமையான குளிரைத் தாங்கிக் கொண்டு அஞ்சாநெஞ்சம் படைத்த அந்த இளைஞன் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தான் என்பதை நான் நன்றாக அறிவேன். அவனை அங்கே அனுப்பியது எவ்வளவு அனாவசியமானது என்பதையும் நான் அறிவேன். ஆனால் அந்த சமயத்திலெல்லாம் சத்தியாகிரகிகளுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பதில் அல்லாமல்; அவர்களுடைய உணர்ச்சிகளை எவ்வாறு திருப்புவது என்பதில்தாம் நாம் கவனம் செலுத்தினோம்.

இன்று நாகப்பனுடைய உள்ளம் எவ்வளவு எஃகு போன்ற உறுதியுடன் இருந்தது என்பதை நாமெல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். உடல் நலமெல்லாம் சீர்குலைந்து போய் அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான். அப்போது அவன் சொன்னான். ‘இதனாலென்ன? ஒரே ஒரு முறைதான் நான் சாக முடியும். அவசியமானால் மீண்டும் நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்.’

கடைசியாக அவன் கூறியது சரியாகப் போயிற்று. தோல்வியை அறியாத அவன் ஆன்மா பிரிந்தது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த நாகப்பன் படிப்பறிவில்லாதவன். அனுபவத்தில் ஆங்கிலம்; ஜூலு ஆகிய இரண்டு மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டவன். 

அவனிடம் எந்தவிதமான துன்பத்தையும் சகித்துக்கொள்ளும் மனத் திண்மையும்; பொறுமையும்; நாட்டுப்பற்றும் சாவுக்கு அஞ்சாத மன உறுதியும் இருந்தன. இதைவிட ஒரு மனிதனுக்கு என்னதான் வேண்டும்" என்று நாகப்பனைப் பாராட்டிப் பேசுகிறார் காந்தி.

இரண்டாவது தியாகியான நாராயணசாமியின் தியாகத்தைப் பற்றி பாராட்டி எழுதி முடிக்கும்போது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள்:

‘‘நாகப்பனையும் நாராயணசாமியையும் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஜே’’! என முடிக்கிறார்.

இந்த இரண்டு மாபெரும் தியாகிகளையும் ஒதுக்கவிட்டு தில்லையாடி வள்ளியம்மையை மட்டும் விடுதலைப் போராட்டத் தியாகிப் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

நாகப்பன் படையாட்சி என்ற பெயரை முதல்வர் ஜெயலலிதாவின் போராட்டத் தியாகிகளின் பட்டியலில் சேர்க்காததற்கு; வன்னியரில் ஒரு தியாகி இருந்தான் என்பதை இருட்டடிப்பு செய்ய வேண்டும்; வெளிச்சப்படுத்திவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியானால் நாராயணசாமியை ஏன் சேர்க்கவில்லை? நாராயணசாமியை சேர்த்துவிட்டு ; நாகப்பன் படையாட்சியை மட்டும் சேர்க்காமல் விட்டுவிட்டால் - வன்னிய சமூகத்திற்கு எதிரான துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிடுமே என்ற பயம் காரணமாக இருக்கலாம்..

அல்லது-
இரண்டாவது தியாகியான நாராயணசாமியும் ஒரு வன்னியனோ என்னவோ தெரியவில்லை.

இப்படி-
வன்னிய விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்வது இப்போதுதான் ஜெயலலிதா செய்கிறர் என்பதில்லை.

இதற்கு முன்-
நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்தபோது தில்லையாடி வள்ளியம்மைக்கு விழா எடுத்து தன் முதலியார் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது நெடுஞ்செழியன் செய்ததும் - வன்னிய தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்த துரோகமே.

நெடுஞ்செழியனுக்கு முன்பே காமராச நாடார் வன்னிய தியாகிகளின் பெயர்களை எப்படியயல்லாம் இருட்டடிப்பு மற்றும் துரோகங்களைச் செய்தார் என்பது குறித்து 1.9.1949 நாளிட்ட பல்லவநாடு இதழில் வன்னியகுல மித்திரன் இதழ் ஆசிரியரான பெரம்பூர் திரு.ஆ.சுப்பிரமணிய நாயகர் வன்னிய மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெளிவாக்கியுள்ளார்..

வன்னிய துரோகம் காமராசரால் ஆரம்பிக்கப் பட்டது. என்பதற்கு 1949இல் வெளியான மேற்கண்ட கட்டுரையும்; அது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு - முதல்வர் ஜெயலலிதாவின் சதந்திர தின உரையில் இந்திய விடுதலைப் போராளிகளின் பெயர்ப் பட்டியலில் - தில்லையாடி வள்ளியம்மைப் பெயரை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு; முதல் தியாகியான நாகப்பப் படையாட்சியைஇருட்டடிப்பு செய்த துரோகமும் - உதாரணங்களாகும்.

ஜெயலலிதாவின் இந்திய வடுதலைப் போராட்டத் தியாகிகள் பட்டியலில் முக்குலத்தோர் வாடை அதிகமாக வீசுவதற்கும் வன்னிய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் முழுçமாக இருட்டடிப்பு செய்ததற்கும்; முதல்வரின் பேச்சைத் தயாரித்தவர் ஒரு முக்குலத்தோர் என்பதுதான் காரணமா?

பேச்சுத் தயாரிப்பவர்களை எல்லாம் அவர்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்க அனுமதிப்பது முதலமைச்சருக்கு அவப்பெயரைத் தேடித் தந்துவிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இத்தகைய இருட்டடிப்புகளும் ஒரு வகை வன்முறையே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சமூகத்தின் தியாகங்களை இருட்டடிப்பு செய்வதும். உண்மை வரலாற்றை மறைத்து ஒடுக்க முயல்வதும்தான் வன்முறைகளிலேயே கொடிய வன்முறை என்பதை காமராஜர் முதல் ஜெயலலிதா வரையிலான தமிழக முதல்வர்கள் இனியேனும் உணர வேண்டும்.
அல்லது தங்கள் மீது ஏவப்படும் இந்த கொடிய வன்முறையை அவர்களுக்கு புரியும் வகையில் வன்னியர் சமூகம் உணர்த்த வேண்டும்.

(அச்சமில்லை அக்டோபர் 2012 இதழில்) 

---------------------------------------- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்


பெரியார் பெரியார்தானா ? ஒரு விவாதம் - "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்








பெரியார்
பெரியார்தானா?

------------------------------------------------------------------------------------------

வன்னியர் தலைமையிலான கட்சிகளை
சாதிக்கட்சிகள் - அவமானம்; என்றது குறித்த விவாதம்

கடந்த ஜூலை திங்கள் இறுதியில் ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்த திருவான்மியூர் தோழர் புருஷோத்தமன் - காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கோபண்ணா என்பவர் நடத்தும் ‘தேசிய முரசு’ ஜூலை இதழில் - 1954இல் விடுதலை நாளிதழில் பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துப் போட்டுள்ளார். 

அந்த இதழை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் அதற்கு மறுப்பு எழுத வேண்டும் என்றார்.

1954இல் பெரியாரின் தலையங்கத்திற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எதற்கு மறுப்பு எழுதச் சொல்கிறீர்கள் என்றேன்.

1954இல் எழுதிய தலையங்கத்தை 60 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியிடும் அவசியம் கோபண்ணாவுக்கு இப்போது இருக்கிறது என்றால்‡

60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த தலையங்கத்திற்கு மறுப்பு எழுத வேண்டிய அவசியம் நமக்கும் இருக்கிறது என்றார்.

இரண்டு நாட்கள் கழித்து - ‘தேசிய முரசு’ இதழ் கூரியரில் வந்தது. அதில் பெரியார் எழுதிய தலையங்கத்தை - அதற்கு கோபண்ணா ரெட்டி எழுதிய முன்னுரையையும் இங்கே மறுவெளியீடு செய்துள்ளோம்


‘‘பெருந்தலைவரை ஆதரித்து
பெரியார் எழுதிய தலையங்கம்’’

1937இல் இருந்து 17 வருட காலம் எந்த காங்கிரசை ஒழித்தே தீருவது என்று பாடுபட்டாரோ; அந்த காங்கிரசு ஆட்சியை ஆதரிக்க தாமாகவே பெரியார் முன்வந்தார்.

காமராஜ் ஆட்சியமைத்த மறுநாளே, பெரியார் கீழ்க்கண்ட தலையங்கத்தை எழுதியுள்ளார்.

‘‘சாதி ஒழிப்புக்கு இது நல்ல தருணம். திரு.காமராசர் அவர்கள் முதலமைச்சராகி இருக்கிறார். அவருக்கு ஜாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றிப் பலதடவைப் பேசி இருக்கிறார்.
இப்பேர்பட்டவர், இனி செய்கை மூலம் தன் லட்சியத்தைப் பெறவேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவே என்று தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளைக் கலைத்து விட்டார்.

காங்கிரசு கட்சியையே எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உழைப்பாளர் கட்சி; பொதுநலக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் காங்கிரசுக் கட்சிக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக ஆககிவிட்ட தனித் திறமைக்காகப் பாராட்ட வேண்டும்.

அரசியல் துறையில் இக்காரியம் எப்படிக் கருதப்பட்ட போதிலும்; தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தைப் போக்கிவிட்ட வகையில்; சமுதாயத்துறையில் இக்காரியம் வரவேற்கப்பவட வேண்டியதுதான் என்பதே நம் கருத்து.

சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு இது ஒரு நல்ல தருணம். சுயமரியாதைக் காரருக்கும் இது ஒரு நல்ல தருணம். சட்ட திட்டங்கள் மூலம் முதலமைச்சர் இக்காரியத்தைச் சாதிக்கலாம். வழக்கமான பிரச்சாரத்தின் மூலம் சுயமரியாதைக் காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம்.

புத்தர்கள்; சித்தர்கள்; பிரம்ம சமாஜ் தலைவர்கள்; சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை ஒரு சாதாரண முதலமைச்சர் வெற்றிகரமாக செய்து முடிததுவட்டார் என்ற நிலை ஏற்பட்டால்; இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது?’’

(15.4.1954 விடுதலை தலையங்கம்)
(தேசிய முரசு மாத இதழ் வெளிட்டபடி)

இந்தத் தலையங்கத்தைப் படித்த பிறகு பெரியார் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குலைந்து போனதற்கு காரணம்..

வன்னியர் தலைமையிலான கட்சிகளை அடாவடித்தனமாக அவமானமென அவதூறு பேசியதற்காக மட்டுமல்ல-

காமராஜ் நாடாரை புத்தருக்கும் சித்தர்களுக்கும் மேலான ஜாதி ஒழிப்பு வீரரென - பெரியார் - துதிபாடி காமராஜருக்கு பாதபூசை செய்ததன் காரணமாகவும்தான்.

1954இல் பெரியார் எழுதிய  இந்த தலையங்கத்தின் மீது  இப்போது ஏன் விவாதம்?

இந்த விவாதத்திற்கு நாம் காரணமல்ல.

நம்மை உரசி எழுத வைத்த கோபண்ணா ரெட்டியே காரணம்.

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு- 

வன்னியருக்கு எதிராக வி­ம் கக்கிய பெரியாரின் இந்த நச்சு எழுத்தை தோண்டி எடுத்து -

கோபண்ணா ரெட்டி என்ற தெலுங்கு வந்தேறி தேசிய முரசு என்ற இதழில் இப்போது மறுவெளியீடு செய்தது எதற்காக?

39 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போன பெரியாருக்குப் புகழ் சேர்க்கவா?
36 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போன காமராசநாடாருக்குப் புகழ் சேர்க்கவா?

ஒரு எழவும் இல்லை.

செத்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டி மாரடிக்கும் வெட்டி வேலைகளை எல்லாம் - கோபண்ணா ரெட்டி போன்ற வந்தேறிகள் செய்யமாட்டார்கள்.
பிறகு எதற்கு இந்த மறு வெளியீடு?

வன்னியர் தலைமையில் இன்னமும் கட்சிகள் இருக்கின்றனவே. அவைகள் சில சில வெற்றிகளையும் பெறுகின்றனவே.
அதை ஒழிக்கும் நப்பாசையில்தான்-

பெரியார் அன்று கக்கிய வன்னியர் ஒழிப்பு வி­த்தை - தோண்டி எடுத்து இன்றைய வன்னியர் தலைமையிலான கட்சிகளை ஒழிக்கும் நோக்கோடு வி­ ஊசியாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபண்ணாரெட்டி.

வன்னியர் தலைமையில் கட்சிகள் உருவாவதை எந்த வந்தேறியும் தாங்கிக்கொள்ளமாட்டான் என்பதற்கு -

நேற்றைய உதாரணம் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர்
இன்றைய உதாரணம் கோபண்ணா ரெட்டி.

தோழர் புருஷோத்தமன் சொன்னதுபோல-
1954 இல் பெரியாரின் வன்னியர் எதிர்ப்பு நச்சு எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியம் கோபண்ணா ரெட்டிக்கு இன்றைக்கும் இருக்கிறது என்றால் -

அந்த பெரியாரின் எழுத்தில் புதைந்து கிடக்கும் பித்தலாட்டங்களை தாக்கித் தகர்க்க வேண்டிய அவசியம் இன்றைக்கும் நமக்கு இருக்கிறது என்பதாலேயே இந்த விவாதம் - இந்தக் கட்டுரை.

பெரியாரையும் அவரது சாதி ஒழிப்பு பிரச்சாரத்தையும் காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களான வன்னியர் பகுதிதான் வரவேற்றது; சீராட்டியது; பாராட்டியது; வளர்த்தது.

இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில்; தென்மாவட்டங்களில் எத்தனைக் கூட்டங்கள் பேசினார் - வட மாவட்டங்களில் எத்தனைக் கூட்டங்கள் பேசினார் என்று கணக்கெடுத்து தெளியலாம். வடக்கேதான் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருப்பதையும் அறியலாம்.

தன் மகளுக்கு ‘சாதி’ ஒழிப்பு என்று பெயரிட்ட வன்னியக் கிறுக்கன் ஒருவரை அரியலூர் பகுதியில் சில வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அந்த பெயருக்காக அந்தப் பெண் எத்தனை கேலியையும் கிண்டலையும் சும்ந்திருப்பாள் என்று எண்ணுகிற போதே நெஞ்சு பதைக்கிறது. இப்படிப்பட்ட முட்டாள் சிறுக்கனை தெற்கே எங்கேயும் காண முடியாது; வடக்கேயும் கூட வன்னயசாதி தவிர மற்ற எந்த சாதிகளிலும் காண முடியாது.

இப்படி கண்மூடித்தனமான பக்தியோடு பெரியாரை ஆதரித்ததற்கு நன்றிக் கடனாகத்தான்; வன்னியர் தலைமையிலான கட்சிகளை சாதிக் கட்சிகள் என்றும்; சாதிக்கு ஒரு கட்சி என்று இருப்பது அவமானம் என்றும் இந்த தலையங்கத்தில் வன்னியருக்கு எதிராக விச­ம் கக்கி இருக்கிறார் பெரியார்.

சாதி உணர்வோடு நாடார்களைப் போல காரியம் செய்து முன்னேறுங்கள் என்ற பெரியார் - சாதிக்கட்சிகள் அவமானம் என்று பேசலாமா?

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி எம்.எல்.ஏ; எம்.பி.களுக்கு 13.3.1952 அன்று பெண்ணாடத்தில் ஈ.வெ.ரா. தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடை பெற்றது.
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., வரவேற்றுப் பேசினார்.
.
‘‘வன்னியர்கள் தங்கள் முன்னேற்றம் கருதிதான் சங்கம் அமைத்திருக்கிறோமே தவிர - மற்றவர்களோடு மோதிக் கொள்வதற்கோ வகுப்புவாதம் பேசவோ’’ அல்ல என்று பேசினார் கோவிந்தசாமி.

பின்னர் பெரியார் பேசியது.

‘‘வகுப்புகள் நிலைபெற்று இருக்கும் வரை; அந்தந்த வகுப்பினர் அந்தந்த வகுப்புகளின் உணர்ச்சியுடன், அதாவது வகுப்பு வாதத்துடன் பாடுபட்டால்தான் வகுப்புகள் முன்னேற முடியும்.

உதாரணமாக - 25 ஆண்டுகளுக்கு முன்பு இழிந்திருந்த நாடார் வகுப்பு; அவர்களது வகுப்பு உணர்ச்சி பெற்று; வகுப்பின் அடிப்படையில் காரியம் செய்து வந்ததினால்; இன்று நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றும்;
எனவே பார்ப்பான் -

வகுப்புவாதம் கேவலம் இழிவானது என்று சொல்வதற்கு பயந்து கொண்டு -
நாம் நம்மை வகுப்புவாதிகள் அல்ல என்று சொல்லிக் கொள்வது கோழைத்தனம்.

வகுப்புவாதம்தான்; வகுப்புவாதம் இல்லாவிட்டால் முன்னேற முடியாதே’’ என்று விளக்கினார்.

(22.3.1952 விடுதலை இதழில் பெரியார் பேச்சின் மேற்கண்ட பகுதியை வெளியிட்டுவிட்டு; முழுபேச்சு பின்னர் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 1952ஆம் ஆண்டு ஏப்ரல் முதலான இதழ்கள் பெரியார் திடலிலேயே இல்லை. அதனால் முழு பேச்சு அதற்கு பின் வெளியானதா இல்லையா என்பது கூடத் தெரியாது).

இப்படி எல்லாம் சாதிகள் அந்தந்த சாதி உணர்வோடு இருக்க வேண்டுமென 1952இல் சாதி உணர்வை நியாயப்படுத்தி பேசிய பெரியார் -

சாதிக்கு ஒரு கட்சி இருப்பது அவமானம் என்றும் அதை ஒழித்த காமராசரின் தனித் திறமையைப் பாராட்ட வேண்டும் என 1954இல் பேசலாமா?

காமராஜ் நாடாரின் ஒடுக்குமுறைக்கும் துரோகத்திற்கும் எதிராக -
வன்னியர் உரிமைகளைக் காக்க உருவானக் கட்சிகள் சாதிக்கட்சிகளா?

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட உழைப்பாளர் கட்சியும்; எம்.ஏ.மாணிக்கவேல் நாயகர் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட பொதுநலக் கட்சியும்;

இவ்விரு தலைவர்களின் சாதி வெறி காரணமாகத் தோற்றுவிக்கப்பட்ட சாதிக்கட்சிகள் என்று - பெரியார் போன்ற விபரம் தெரிந்தவர்களும்; விபரம் தெரியாதவர்களும் அவதூறு பேசுகின்றனர்.

உண்மையில்- இவ்விரு கட்சிகளும் தோன்றுவதற்கு-
காங்கிரசுக் கட்சித்தலைவராய் இருந்த காமராஜ் நாடாரின் சாதி வெறியும்; இந்திய விடுதலைப் போராட்ட வன்னிய தியாகிகளுக்கு காமராஜ் நாடார் செய்த துரோகமுமே காரணம் என்பதை விரிவாகப் பார்க்க வேண்டியது அவசியமாகும்..

காமராஜ நாடார் வன்னியருக்கு செய்த துரோகம் குறித்து 1949இலேயே வன்னிய குல மித்திரன் இதழாசிரியரான சுப்பிரமணிய நாயகர் குமுறலைக் கேளுங்கள்

‘‘கோபாலகிருஷ்ண கோகலே அவர்களைப் பின்பற்றி சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்கத் தலைவர்களும் நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சிக்காகவே உழைத்தனர்.

பின்னர் மகாத்மா காந்தியடிகள் காலத்து வன்னிய சங்கமும்; சங்கத் தலைவர்களும் அவர் வழியையே பின்பற்றி உழைத்தனர். அவர் நடத்திய தென்னாப்பிரிக்க நெட்டால் சத்தியாக்கிரகப் போரிலும்; தென்னாட்டிலும் என்னற்ற வன்னிய தேசாபிமான சிங்கங்கள் சிறை சென்றனர். உயிர் துறந்தனர்,

வன்னியர் இளைஞர்களோ சிறைச்சாலையில் (மற்ற வகுப்பாரைப் போல்) முதல் வகுப்பில் இரண்டாம் வகுப்பில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவித்தவர்கள் அல்லர்.

(மூன்றாம் வகுப்புச் சிறையில்) கல் உடைத்தும்; செக்கிழுத்தும்; மிளகாய் பொடி இடித்தும்; கேழ்வரகரைத்தும். க்ஷத்ரியத் தன்மையுடன் தேசத் திருப்பணி செய்தவர்கள்.

சத்தியாக்கிரகப் போரில் - தமிழ்நாட்டில் 1930 முதல் 1942 வரை சிறை சென்ற சுமார் 5700 பேர்களில் 1500 பேர் வன்னியர்கள்.

இது மட்டுமல்ல, தென்னாட்டில் உள்ள எந்த சாதி சங்கங்களும் காந்தியைப் பற்றிப் பிரச்சாரங்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால் வன்னியர் சங்கம் மட்டும்தான் வன்னிய சங்க உபதேசம் என்ற புத்தகத்தின் மூலம் காந்தியடிகள் பற்றிய பாடல்களையயும்; தேசாபிமானக் கவிகளையும் ஆயிரக்கணக்காக அச்சிட்டு தமிழ்நாட்டில் உள்ளஅநேக கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தோம். இப்போது காங்கிரசில் மந்திரியாகி உள்ள எந்த வகுப்பாரும் காங்கிரசுக்கு இப்படி உழைத்ததில்லை.

காங்கிரஸ் தோன்றிய காலம் முதல் பெரும் தியாகம் செய்த வகுப்பாகவும்; தென்னாட்டில் சுமார் அரைக்கோடி மக்களாய் உள்ள வீரவன்னியகுல சத்திரியர்களாகிய எங்களை நேற்றுவந்த காமராஜர் ஒதுக்கித்தள்ளி நாடகம் ஆடி வருகிறார்.

கள்ளுக்கடை சாராயக் கடை விற்றவர்களும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாய் இருந்து இன்று கதர் சொக்காய் போட்டுக்கொண்டு காங்கிரஸ் தேசாபிமானிபோல் நடிக்கிறார்கள்.

வன்னியரில் பெரும்பாலோர் (இப்போது) காங்கிரசை எதிர்ப்பதற்கு அச்சமூகத் தலைவர்கள் பலருக்கு காமராசர் கோஷ்டி செய்த பெரும் துரோகமே காரணம் ஆகும்.’’

- 1.9.1949 பல்லவநாடு இதழ்
#####

காங்கிரசும் காமராஜ் நாடாரும் வன்னியருக்கு செய்த துரோகம் குறித்து 1949இலேயே - விழுப்புரம் தென்னவராயன்பட்டு சுதந்திரப்போராட்டத் தியாகி இரா.வேணுகோபால்சாமியின் குமுறலைக் கேளுங்கள்.
தென்னாப்பிரிக்காவில் இன்றும் காங்கிரசு தலைமை பீடத்தை ஏற்று நடத்தி பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகுபவர் நம் இனப் பெரியவர் டாக்டர் ஜி.எம்.நாயகர் அல்லவா?

1930ஆம் ஆண்டு உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது; தன் தீப்பொறி பறக்கும் எழுத்தாலும்; வீர எழுச்சியூட்டும் கவிதையாலும்; மக்களைத் தட்டி எழுப்பிய காரணத்தால்; அன்றைய வெள்ளையர் அரசு அச்சுக்கூட ஒழுங்குமுறைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை புதிதாக இயற்றி அந்த சட்டத்தை வைத்து முதன் முதலில் தடை செய்யப்பட்ட இதழ்; நம் குலக கவிச்சிங்கம்; ராஜரிசி´ அர்த்தநாரீச வர்மா நடத்திய ‘‘வீரபாரதி’’ என்ற இதழல்லவா?

நியாயமாக இன்று இவரல்லவா ஆஸ்தான கவியாகி இருக்க வேண்டும்? ஏன் ஆகவில்லை? அவர் ஒரு வன்னியர் என்பதன்றி வேறு என்ன காரணம்?
வீரபாரதி இதழ் வீரமுழக்கம் செய்த காலத்தில் (1930களில்) நாமக்கல் கவிஞரைத் தமிழகம் அறிந்திருக்குமா? இன்று அவர் எப்படி ஆஸ்தானக் கவியானார் என்பதை நம் குல தேசியவாதிகள் சிந்திக்க வேண்டும்.
அவதிப்படுவது ஒரு குலம்; ஆட்சிபுரிய ஒரு குலமா? பாடுபடுவது ஒரு குலம்; பயனடைவது ஒரு குலமா?

கதர்சட்டை கள்ள மார்கெட்காரர்களின் போர்வையாகிவிட்டது காங்கிரஸ் மானம் போகிறது.

ஆகவே தோழர்களே காங்கிரசு இனி நமக்குத் தேவையில்லை. வன்னியனை எந்த அரசியல் கட்சியும் முன்னேற அனுமதிக்காது.

வன்னியன் தன் அரசியல் உரிமைகளைப் பெற வேண்டுமானால்;
வன்னியன் பிற இனத்திற்கு அடிமைப்படாமல் வாழ வேண்டுமானால்.
வன்னியன் பொருளாதாரத்தில் உயர வேண்டுமானால்
வன்னியனுக்கு வன்னியர் கழகம் தவிர வேறு புகலிடமில்லை.
(17.7.1949 விக்கிரவாண்டி - வாக்கூரில் நடைபெறற தமிழரசர்குல வாலிபர் சங்க முதல் மாநாட்டில் தியாகி வேணுகோபால்சாமி உரையின் ஒரு பகுதி).
####

காங்கிரசின் பேரால்-
ரெட்டியார்களும்; பிள்ளைமார்களும்; முதலியார்களும்; நாயுடுகளும் வன்னியர்மீது செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து வென்ற வன்னியர் குல வாலிபர் சங்க வரலாற்றை அறிஞர் வே.ஆனைமுத்து ‘முன்னேற்ற வந்த மூன்று தலை முறைகள்’ புத்தகத்தில் ஆவணப் படுத்தி யுள்ளார். ஆழ்ந்து படியுங்கள்.

1920 - 1947களில் அரசியல் பதவிகள் என்பவை ஊராட்சி மன்றம்; நகராட்சி மன்றம்; வட்டாட்சி மன்றம்; மாவட்ட ஆட்சி மன்றம்; மற்றும் கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் உறுப்பினர் மற்றும் தலைவராக வருவதுதான்.

இவை எல்லாவற்றிலும்-

காங்கிரசின் பேரால்
பேராதிக்கம் செலுத்தியவர்கள்:

தென்னாற்காடு மாவட்டத்தில்: சீத்தாராம் ரெட்டியார்; வேங்கடகிருஷ்ணா ரெட்டியார்; பாஷ்யம் ரெட்டியார்; லெட்சுமி நாராயண ரெட்டியார்; மற்றும் மார்க்கண்டம் பிள்ளை வேணுகோபால் பிள்ளை கனகசபை பிள்ளை முதலானவர்களே.

திருச்சி மாவட்டத்தில்: பெருவளப்பூர் பி.பி.கே ராஜா சிதம்பரம் ரெட்டியார்; திருவானைக்காவல் ராஜா சிதம்பரம் ரெட்டியார்; துறையூர் கிருஷ்ணசாமி ரெட்டியார்; அரும்பாவூர் நாட்டார் மற்றும் அரியலூர் வெங்கடாசலம் பிள்ளை காடூர் நடராசம்பிள்ளை உடையார்பாளையம் பி.நடராசம் பிள்ளை இவர்களே.
வடாற்காடு செங்கற்பட்டு மாவட்டங்களில்: ரெட்டியார்: தொண்டை மண்டல முதலியார்; கம்மவார் நாயுடு கோன்ற வகுப்பாரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்தது.

இத்தகைய மேல்சாதிக்காரர்களின் ஆகிக்கத்திற்கு எதிராக-
1944-1946 கால கட்டத்தில் கடலூரில் அரசர்குல வாலிபர் சங்கம் என்ற அமைப்பை வன்னிய வகுப்பு இளைஞர்கள் நிறுவினர்.

வாழ்வியல் - மற்றும் அரசியல் அமைப்புகளிலும் நிலவிய இந்த மேல்சாதிகளின் ஆதிக்கம் பளிச்சென இவர்களுக்கு தெரிந்தது.
இதன் விளைவாக-

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியைத் தலைவராகவும்; கடலூர் ஆ.கோவிந்தசாமி; பி.ஜி.நாராயணசாமி ஆகியோர்களைச் செயலாளர்களாகவும் கொண்டு 1946இல் கடலூரில் வன்னியகுல சத்திரியர் சங்கம் மலர்ந்தது.

இதனால் பயன்கள் விளைந்தனவா? ஆம்.
(1) 1949இல் தமிழ்நாட்டில் மாவட்ட மன்றத் தேர்தல் நடந்தது.
தென்னாற்காடு; திருச்சி; தஞ்சை மாவட்டங்களில் வன்னியகுல க்ஷத்திரியர் சங்கம் என்ற அங்கீகாரத்துடனேயே (Officially Recognised) அத்தேர்தலில் போட்டியிட்டனர்.

வன்னியர்கள் நிரம்பிய தென்னாற்காடு மாவட்ட மன்ற உறுப்பினர்களில் சரிபாதிக்கு ஒருவர் குறைவாக - வன்னியகுல சத்திரியர் சங்கம் மாவட்ட மன்ற இடங்களைப் பிடித்தது.

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களையும்; தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களையும் பிடித்தது.

காங்கிரசின் பேரால் போட்டியிட்ட மேல்சாதிக்காரர்களுக்கு அப்போதுதான் (முதன் முதலாக) ஓர் அடி விழுந்தது.

வடாற்காடு மாவட்டத்தில் ஏ.எஸ்.அருணாச்சலம் பிள்ளை (வன்னியர்) எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர்; பிரசங்கமணி கோ.சாரங்கபாணிக் கவுண்டர்; ஆசிரியர் பூ.மு.ஏகாம்பரக் கவுண்டர்; பேரா.யோகசுந்தரம் (கவுண்டர்) போன்றோர் முயற்சியால் மாவட்ட மன்ற தேர்தலில் சில இடங்களைக் கைபபற்றினர்.

இவைகளின் வழியாக -
வன்னியர்களுக்கு அரசியல் களத்தில் ஓர் வெற்றி கிட்டியது. காங்கிரசுக்கும் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது.
-(முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் புத்தகத்திற்கு அறிஞர் வே.ஆனைமுத்து எழுதிய முன்னுரையிலிருந்து)
###
1952 தேர்தலில் வன்னியர் மீதான காமராஜ நாடாரின் எல்லை மீறிய ஒடுக்குமுறையை எதிர்த்து தோன்றியதே உழைப்பாளர் கட்சியும்; பொதுநலக் கட்சியும் என்பது குறித்து அச்சமில்லைக்கான நேர்காணலில் பதிவு செய்துள்ளார் வன்னிய அடிகளார்..

(வன்னியர் சங்கம் மற்றும் உழைப்பாளர் கட்சி ஆகியவற்றோடு 50 ஆண்டுகால தொடர்புடையவரும்; தனது 72வது வயதிலும் வன்னியர் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தவருமான - வன்னிய அடிகளாரிடம் - வன்னியர் சமூகப் போராட்டங்கள் ; பெற்ற எழுச்சிகள்; வன்னியத்தலைவர்கள் பெற்ற வெற்றிகள்; தோல்விகள்; தவறான முடிவுகள் பற்றிய நேர்காணல் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒரு பகுதி)
#

அச்சமில்லை: ராமசாமி படையாட்சியார் உழைப்பாளர் கட்சி அமைக்க என்ன காரணம்?

வன்னிய அடிகளார்: இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1952இல் நடக்க இருந்த முதல் தேர்தலில் - வன்னியர்களில் இரண்டு பேர்களுக்கு மட்டுமே போட்டியிடும் வாய்ப்பளிக்க காங்கிரஸ் முன்வந்தது. இது காங்கிரசில் இருந்த வன்னிய பிரமுகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராமசாமி படையாட்சியார்; மாணிக்கவேல் நாயகர்; சேலம் சுந்தர்ராஜன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தைச் சந்தித்து தேர்தலில் வன்னியர்களுக்கு அதகப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என வாதாடினார்கள். இவர்களது கோரிக்கையை டெல்லி தலைமையும் ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி படையாட்சியாரும்; மாணிக்கவேல் நாயகரும் தனிக்கட்சி அமைக்கும் முடிவுக்கு வந்தனர்.
-(ஆகஸ்ட் 2000 அச்சமில்லை இதழ்).
#
இந்த நிலையில் 22.9.51 பிற்பகலில் தென்னாற்காடு ஜில்லா வன்னியகுல சங்க நிர்வாகிகள் கூட்டம், மேற்படி சங்கத்தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் தலைமையில், கடலூர் முத்தையா ஹாலில் நடைபெற்றது.
பொதுவாக - வன்னியமக்கள் உழைப்பாளிகள் ஆனபடியால் அவர்களுடைய நலனை உத்தேசித்தும்; இதேபோல் உழைப்பாளிகளாய் இருக்கின்ற இதர சமூகத்தினரின் நலனை உத்தேசித்தும் - தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் ஓர் கட்சி ஏற்படுத்தி அதில் வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

23.9.51இல் காட்பாடியில் மாணிக்கவேல் நாயகர் தலைமையில் நடந்த சென்னை மாகாண சத்திரிய சங்கக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாகாணப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு சப். கமிட்டி அமைக்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 6.10.1951இல் கடலூரில் மேற்படி சப்.கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வி­யமாய் நடைபெற்ற ஆலோசனையில் கட்சிக்கு பெயர் வைப்பது பற்றிய விவாதம் நிகழ்ந்தது.

மாணிக்கவேல் நாயகர் பொதுநலக் கட்சி எனப் பெயர் இருக்க வேண்டுமெனக் கூறினார்.

சேலம் சுப்பிரமணியம் பிற்போக்கு வகுப்பினர் கட்சி என இருக்க வேண்டுமென்றார்.

தென்னாற்காடு ஜில்லா நிர்வாகிகள் உழைப்‡ பாளர் கட்சியயனும் பெயரை வேண்டுமென்றனர்
சென்னை கே.வினாயகம் பிரஜா கட்சியை முன்மொழிந்தார்.
இக்கூட்டத்தில் உழைப்பாளர் கட்சி என்ற பெயருக்கே கூட்டத்தின் தீர்ப்பு கிடைத்தது.

மாணிக்கவேல் நாயகரும்; கே.வினாயகமும் இந்த முடிவை ஏற்காமல் மாணிக்கவேல் நாயகர் பொதுநலக்கட்சியைத் தோற்றுவித்தார். கே.வினாயகம் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் போட்டியிட்டார்.
படையாட்சியார் உழைப்பாளர் கட்சி என்ற பெயரை ஏற்றார்.
(அர்த்த நாரீசவர்மாவின் இதழ் தொகுப்பு - தொகுதி - 17).

தேசியத் தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட காமராஜ் நாடார்
சாதிவெறிக்கு உதாரணம்
-------------------------------------------------------------------
1952 பொதுத்தேர்தலின்போது - நாடார்கள் சுமார் 50 சதவீதம் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இல்லை.
இந்த நிலையில்-

1931 சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி 29,24,014 மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர் சமூகத்துக்கு நாடாளுமன்றத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்றும்; சட்ட மன்றத்திற்கு இரண்டு பேர்களுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்க முடியும் என்றும் கூறி - வன்னியரை அரசியல் ரீதியாக ஒடுக்கிய காமராஜ் நாடார்-

1952 பொதுத்தேர்தலில்-
1.டி.பழலூர் 2.சேரன் மாதேவி 3.ஆலங்குளம் 4.தூத்துக்குடி 5.திருச்செந்தூர் 6.சாத்தான்குளம் 7.விளாத்தி குளம் 8.விருதுநகர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளை நாடார்களுக்கு ஒதுக்கியதோடு-

1.சங்கரன்கோவில் 2.ஸ்ரீவில் லிபுத்தூர் 3.ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாடார் களுக்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் நாடார்களின் மக்கள் தொகை 1931 கணக்கெடுப்புப் படி 6,73,399 மட்டுமே..

காமராஜ் நாடாரின் சாதி வெறிக்கு நல்ல உதாரணம் இது.

நாடார் மக்கள் தொகைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமானால், 8,07,558 மக்கள் தொகை கொண்ட கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமே 10 சட்டமன்றத் தொகுதிகளையும் 4 நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 29,24,014 மக்கள் தொகையைக் கொண்ட வன்னிய சமூகத்திற்கு; நாடார்களுக்கு ஒதுக்கப்பட்ட விகிதாச்சாரப்படி தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமானால் - 35 சட்டமன்றத் தொகுதிகளும்; 13 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட ஒதுக்க முடியாது என்றும்; சட்ட மன்றத் தொகுதி இரண்டே இரண்டு தான் ஒதுக்க முடியும் என்கிறார் காமராஜ் நாடார்.
காமராஜ் நாடாரின் வன்னியர் ஒடுக்கு முறைக்கும்; துரோகத்திற்கும் இது உதாரணம்.

வன்னிய சாதித் தலைவர்கள் என்று
முத்திரை குத்தப்பட்ட
ராமசாமிப் படையாட்சியார்
மாணிக்கவேல் நாயகர் ஆகியோரின்
சாதி கடந்த செயல்பாட்டிற்கு உதாரணம்
---------------------------------------------------------------------
இந்தக் கட்சிகள் சாதிக் கட்சிகளாக செயல்படவில்லை என்பதற்கான உதாரணம்:

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்; மாணிக்கவேல் நாயகர் என்ற வன்னியர் தலைமையில் இவ்விரு கட்சிகளும் தோன்றினாலும் - இவைகள் மற்ற கட்சிகளைப் போலவே வன்னியர் மடடுமல்லா மல் மற்ற சாதியார்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தன.

உழைப்பாளர் கட்சியில் 29 பேர்கள் சட்டமன்றத்திற்கும்; 6 பேர் நாடாளுமன்றத்திற்கும் போட்டியிடுகின்றனர்.

19 பேர் சட்டமன்றத்திற்கு வெற்றி பெறுகின்றனர். இதில் 11 வன்னியர் 6 தாழ்த்தப்பட்டோர். திருக்கோவிலூர் தொகுதியில் முத்துக்குமாரசாமி என்ற ஒரு நாயுடு; புதுக்கோட்டையில் வென்ற பாலகிருஷ்ணன் (சாதி தெரியவில்லை).

6 பேர் நாடாளுமன்றத்திற்கு நின்றதில்: 1 வன்னியரும் 1 தலித்தும் தோல்வி அடைந்தனர் வெற்றி பெற்ற நால்வரில் 3 பேர் வன்னியர், ஒருவர் தலித்.
பொதுநலக்கட்சி:

3பேர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதியில் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் வெற்றி பெறுகிறார் மற்ற இருவரும் வன்னியர்.

வன்னியர் 7 பேர் சட்ட மன்ற உறுப்பினராகின்றனர்.
இவ்விரு கட்சிகளிலும் வன்னியர்களை மட்டுமே வேட்பாளர்கள் அல்லர். தலித்துகள்; முதலியார்; நாயுடு; உடையார் போன்றவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, பல சாதியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே இவ்விரு கட்சிகளையும்-

சாதிக்கட்சிகள் என பெரியார் கூறுவது மடத்தனமானது; பித்தலாட்டமானது.
இவ்விரு தலைவர்களும்; கட்சிகளும் சாதி கடந்த செயல்பாடுடையவர்கள் என்பதற்கு மேற்கண்டவைகளே உதாரணம்.
காங்கிரசுக்கு கல்லறை கட்ட சொன்ன பெரியார்
அக்கட்சிக்கு

உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும்
வெண்சாமரம் வீசும் கட்சிகளாக்கிய
காமராசர் திறமையைப் பாராட்டிப் பேசலாமா?

1.காங்கிரசை ஒழித்துக்கட்ட தக்க சமயம் வந்து விட்டது. காங்கிரசுக்காரர் ஓட்டுப்பெட்டியில் ஆளுக்கொரு பிடி மண் அள்ளிப் போடுங்கள்
-24.10.1951 விடுதலையில் பெரியார்

2.காங்கிரசுக் கட்சிக்கு யார் வேட்பாளர்களாக இருந்தாலும் ஓட்டு செய்யாதீர்கள்
-25.10.1951 விடுதலையில் பெரியார்

3.காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே தி.க.வின் ஒரே லட்சியம்
-15.11.1951 விடுதலையில் பெரியார்

4.இந்த தேர்தலில் காங்கிரசை 500 அடி ஆழத்தில் புதையுங்கள்
-21.11.1951 விடுதலையில் பெரியார்

5.நாட்டில் பலாத்காரம் ஏற்படாமல் இருக்க காங்கிரசு ஒழிய வேண்டும்.
-24.11.1951 விடுதலையில் பெரியார்

6.காங்கிரசு அபேட்சகர்களைத் தோல்வியுறச் செய்வதே கழகத்தின் குறிக்கோள். தி.க.நிர்வாகக் கமிட்டி தீர்மானம்.
-27.11.1951 விடுதலை

7.காங்கிரசை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நமது லட்சியம்.
-14.12.1951 விடுதலையில் பெரியார்.

8.கிடைத்த தடியைக் கொண்டு காங்கிரஸ் என்ற ஆதிசே­ன் பாம்பை அடித்துக் கொல்லுங்கள்
-22.12.1951 விடுதலை தலையங்கம்.

9.சென்னையில் காங்கிரசுக்கு கல்லறை.
-8.1.1952 விடுதலைச் செய்தி

10.புதைக்கப்பட்ட காங்கிரசுக்கு கருமாதி செய்து கல்லறை கட்டப்போகும் நற்செய்தி.
-9.1.1952 விடுதலையில் பெரியார்

11.பிணத்துக்கு திருமணம்
ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு தோற்றுப்போனபின் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க காங்கிரசு முயன்றதைக் கண்டித்து பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கத்தின் தலைப்பு இது.
-21.3.1952 விடுதலை.
மாட்டுப்பெட்டிக்கு மறந்தும் ஓட்டுப் போடாதீர்கள்.
(விடுதலையில் தினம் தினம் வெளியிடப்பட்ட பெட்டிச் செய்தி)

இப்படி எல்லாம்-
காங்கிரசு செத்த பிணம் என்றும்; 500 அடி ஆழத்தில் புதையுங்கள் என்றும்; கருமாதி செய்து கல்லறை கட்டுங்கள் என்றும் 1951இல் பேசிய பெரியார்‡
உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும் செத்த பிணமான காங்கிரஸ் கட்சிக்கு வெண்சாமரம் வீச வைத்துவிட்டாயே பாவி; நீ உருப்படுவாயா. நாசமாய் போ என்றெல்லாம் ஆத்திரம் கொண்டு சபிப்பதற்கு பதிலாக

காங்கிரயையே எதிர்த்து வென்ற உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும் காங்கிரசுக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக்கி விட்ட தனித்திறமைக்காக காமராசரைப் பாராட்ட வேண்டும் என்று பேசலாமா?
இதனாலன்றோ

நாங்கள் ஒன்றும் வெத்தலைப் பாக்கு வைத்து எங்களை ஆதரியுங்கள் என அழைக்கவில்லை. பெரியார் தாமாகவே முன்வந்து காமராஜ் ஆட்சி அமைத்த முறுநாளே 17 வருடமாக எதிர்த்த காங்கிரசையும்; காங்கிரசு ஆட்சியையும் ஆதரித்தார் என உமிழாமல் உமிழ்கிறார் கோபண்ணா ரெட்டி.

காமராசர் என்னும் விச­ப்பல்லைப்
பிடுங்கி எறியச் சொன்ன பெரியார் -
அவரை புத்தருக்கும், சித்தர்களுக்கும் மேலான
சாதி ஒழிப்பு வீரர் என அடிதொழலாமா?
--------------------------------------------------------------------------------------------
எட்டு விச­ப்பற்கள்
(விடுதலை தலையங்கத்தின் தலைப்பு இது)
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு சில முக்கியமான காங்கிரசு தலைவர்களையாவது அவசியம் தோற்கடிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது ஆகும்.

கீழ்க்கண்டவர்களைத் தோற்கடித்தால் காங்கிரசின் விச­ப்பற்களைப் பிடுங்கியது போலாகும் என்பது நமது கருத்து.
1.காமராசு
2.டி.கே.கிருஷ்ணமாச்சாரி
3.சந்தானம் அய்யங்கார்
4.ராம்நாத் கோயங்கா
5.பக்தவச்சலனார்
6.ஆலாஸ்யம் அய்யர்
7.தேனி தியாகராஜன்
8.குமாரசாமி ராஜா
முரட்டுக்காளைக் கொம்புகளை நறுக்கிவிட்டு தீய்த்துவிடுகிற மாதிரி பொதுமக்கள் இவர்களைக் கூர்ந்து கவனிக்க (ஒழிக்க) வேண்டும். அலட்சியம் கூடாது.

இந்த எட்டு பேரும் டெபாசிட் தொகையை இழக்கடிக்கப்படும் அளவுக்கு தோற்கடிக்கப் படுவார்களானால்; தமிழர்களுக்கு நல்ல அரசியல் அறிவு வந்துவிட்டதாகக் கருதலாம்.

இந்த எட்டு பேர் மட்டும் எப்படியாவது தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும். வெறும் தோல்வி மட்டும் போதாது. டெப்பாசிட் போகிற மாதிரியான தோல்வியாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் காங்கிரசு எதிர்ப்பு சக்தி முழுவதும் இந்த எட்டு இடங்களில் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும்.
-18.12.1951 விடுதலை தலையங்கம்.

தமிழ்நாட்டு சர்வாதிகாரி காமராசர்.
1.2.1952 விடுதலை
காமராசர் தொடர்ந்து பல ஆண்டுகள் நிரந்தர தலைவராக இருக்கக் கருதுவது சரியல்ல.

காமராசர் காங்கிரசை ஒழித்துக்கட்ட தம்மாலான சேவையைச் செய்துவிட்டார். இனி மற்றவர்கள் யாராவது வந்து காங்கிரசின் இறுதி கடனைச் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

விடுதலை.........
சாதி ஆதரவில் நிரந்தர தலைவராக முயல்வது சரியல்ல.
விடுதலை.....

இப்படி எல்லாம்-
பிடுங்கி எறிய வேண்டிய நம்பர் 1 வி­சப்பல் என்றும் சர்வாதிகாரி என்றும்; சாதி ஆதரவில் நிரந்தர தலைவராக முயன்றவர் என்றும் காமராசர் பற்றி 1951இல் பேசிய பெரியார்-

1954இல் சாதி ஒழிப்பு வீரர் என்றும்; புத்தருக்கும் சித்தருக்கும் மேலாக வரலாறு படைக்கப் போகிறவர் என்றும் பெரியார் பேசுகிறார்.

------------------------------------  "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்


Tuesday, October 16, 2012

"சென்னையின் சர்தார்"


"சென்னையின் சர்தார்" திரு எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைமையில், சென்னை மெரினா கடற்கரையில் திலகர் கட்டத்தில் மகாத்மா காந்திஜிக்கு வரவேற்பு இதழை ஆர்வத்துடன் படித்து அளிக்கிறார் திரு ஆதிகேசவலு நாயகர்.


Saturday, October 13, 2012

பாமக சார்பாக வெளியிடப்பட்ட மூன்று வீடியோக்கள் :



பாமக சார்பாக வெளியிடப்பட்ட மூன்று வீடியோக்கள் :

1. வன்னியர்கள் வரலாறும் , மற்றும் அரசியலில் வன்னியர்கள்  :





               2. இடஒதுக்கீடு போராட்டம் :



               3. பாமக கட்சியின் போராட்டங்களும் கட்சி உருவானதும் :



Thursday, October 11, 2012

ஜெயலளித்தாவும் பண்ரூட்டியாரும்





தன்னை தவிர அரசியல் கவர்ச்சிக்கும் மேடை ஏறி வாக்கு சேகரிக்கவும் ஒரு நடிகையும் தேவை பட்டது எம்ஜியாருக்கு . தன்னோடு இணையாய் நடித்த யார் யாரையோ அவர் பரிசீலிக்க , அவரிடம் ஜெயலலிதாதான் பொருத்தமானவர் என்று பரிந்துரைத்து , ஜெயலளித்தாவின் அரசியல் பிரவேசத்திற்கு காரணமாக இருந்தவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் என்ற வன்னியர்தான் .

மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த சந்திரலேகாவின் கீழ் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய நடராஜனை அழைத்து ஜெயலலித்தா தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய சொன்னவரும் பண்ரூட்டி ராமச்சந்திரன் தான்.

அதன்பின்தான் நடராஜனின் மனைவி சசிகலாவோடு நட்பு ஏற்ப்பட்டு உடன்பிறவா சகோதரி ஆனார் .

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிரிந்த போது , ஜெயலலித்தாவை பண்ரூடியார் தலைமையிலான நால்வர் அணிதான் முன்னிலை படுத்தியது .

1996 தேர்தலுக்கு பின் ஜெயலளித்தாவின் அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகும் நிலை ஏற்ப்பட்டது . 1998 இல் வந்த பாராளுமன்ற தேர்தலில் மருத்துவரோடு கூட்டணி வைத்து , வன்னிய ஓட்டுக்களை பெற்று அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது . தொடர்ந்து 2001 சட்டமன்ற தேர்தலிலும் மருத்துவர் அய்யாவால் வன்னியர் ஆதரவு அதிமுகவிற்கு இருந்தது .

ஆனால் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்காது என்பது தெரிந்த ஒன்றுதான் . 27 அமைச்சர்கள் இருந்த அவையில் இரண்டு வன்னியர்களுக்குதான் வாய்ப்பு அளிக்க பட்டது .

வன்னியர்கள் மருத்துவர் பின்னால் நின்று நமது ஆதரவை தந்து வெற்றி பெற செய்தாலும், செய்த உதவிகளை மறந்தது ஒரு புறம் என்றால் அதிமுக அரசுதான் வன்னியர் மீது பொய் வழக்கு போட்டதும், மரவெட்டிகள் என்று வன்னியர்களை இழிவாக பேசியதும் ஜெயலலித்தாதான்..

போர் என்று வந்தால் வாளெடுத்து வீசும் சமுதாயம், இன உணர்வு மறந்து எவன் எவன் காலிலோ விழுந்து, அரசியல் சூழ்ச்சிகளால் உரிமை இழந்து நிற்கிறோம் .