Google+ Followers

Friday, May 22, 2015

மன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர் - மொழி அல்லஆதித்தய சோழன் மனைவிகளில் பட்டத்தரசி ராஷ்ட்டிரகூடர் இளவரசி "இளங்கோப்பிச்சி" ஆவார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு .. அவர்கள் பெயர்

கன்னர தேவன்
பராந்தகன்.


ஆனால் சோழர் குலத்தில் பின்னாளில் எப்படி சாளுக்கியரில் திருமணம் செய்த சோழ அரசியின் புதல்வன் குலோத்துங்கன் , சோழ மன்னனாக ஆட்சி புரிந்தானோ , அதே போல

பல நூற்றாண்டு முன்பே

ராஷ்டிர கூடர் அரசில் , அரசனாக முடி சூடி ஆட்சி செய்தவன் சோழ அரசன் கன்னர தேவன் ஆவான்.

பராந்தகன் சோழனாக முடி சூடிகொண்டான்.
கன்னர தேவன் ராஷ்டிர மன்னனாக முடி சூடினான்..

ராஷ்டிரர் , சாளுக்கியர் இருவருமே ஒரே குலம்தானே ?

வேளிர் யது குலம், அக்னியில் பிறந்தவர் என்றெல்லாம் சொல்லப்படும் ஹோய்சாலர் போன்றவர்கள்தானே..

அப்படி இருக்க சாளுக்கிய வம்சத்தில் சோழ ரத்தம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்பே கலந்து விட்டது போலும்.

அப்படிதானே ?

படம் - பிற்கால சோழர் வரலாறு..

குறிப்பு :

மன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர்..

மொழி அல்ல..


புதுச்சேரி "வன்னிய பெருமாள்

+சோழர்களின் விற்படை - வன்னியர்கள் - "Noboru Karashima" அறிக்கை - ஆடுதுறை கல்வெட்டு

சுமார் 100 கி.மீ பரப்பளவிற்கு அரியலூர் பகுதியில் சோழர்களின் வில் படையை நிர்மானித்தவர்கள் வன்னியர்கள் .


The scholar "Noboru Karashima" says about the "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-

"The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple. The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D).

According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion. At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.

The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola. The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.

வன்னிய கல்வெட்டுகள் சில


திருதுறைப்பூண்டி கல்வெட்டு.

அரசுபேறாக பெற்ற பள்ளிகள் (வன்னியர்கள்) நிலத்தை பற்றியது.

வன்னியர்களுக்கு "மதுராந்தக பேரரையன் " என்ற பெயர் உள்ள கல்வெட்டு 

குடிபள்ளி "நரலோக வீர பேரரையன்" கல்வெட்டு 

வன்னியர் சமூகத்திற்கு உள்ள "கிடாரத்தரையன் , விழுப்பதிராசன் " பெயர்கள்.

பனையூர் நாட்டின் பொய்கைப்பாக்கம் குடிபள்ளி பெயர்.

ராஜேந்திர சோழ விழுப்பதிராசன் .

இவன் தம்பி பெயர்

சேந்தன் கரனை (எ) கிடாரத்தரையன். 

விழுப்பரையன் நாடாள்வான்..

"ஜெயம்கொண்ட சோழ விழுப்புரைய நாடாள்வான் "

ராஜேந்திரசோழ வளனாட்டை சேர்ந்த பனையூர் நாட்டின் பொய்கைப்பாக்கம் ஊரின் குடிபள்ளி இவன்.

குடிப்பள்ளி மதுராந்தக நாடாழ்வான் 


அச்சுதப்ப உடையார் பட்டம் கொண்ட பத்திரிகை

அச்சுதப்ப உடையார் பட்டம் கொண்ட பத்திரிகை


பாமக சோழமண்டல மாநாடு - May 17, 2015

மே 17 அன்று சோழர் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கூடிய பாமக கூட்டத்தின் சில புகைப்படங்கள்


மண் முழுக்க மன்னவர் கொடி
வழி நெடுக்க வன்னியர் கொடி
களம் முழுக்க கவுண்டர் கொடி
நாடு செழிக்க நாயகர் கொடி

இது
பார் போற்றும் "படையாட்சி" கொடிசோழ படை அய்யா  :) கோவில் அமைப்பில் மேடை சிங்கத்தின் குகை
மூவர்ண கொடி
எனக்கு
மும்முடி சோழ புலிகொடியாக தெரிகிறது


                     ராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டும் படத்துடன் மேடை...
                                                     வீரசோழபுரம் ஊரில்

இலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன்இலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவ பத்திரிகை

 

இலங்கை மட்டக்களப்பில் உள்ள பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் விழா..

தமிழகத்தில் வன்னியர்கள் விழா நடத்துவது போல கையில் வாள், தீமிதிப்பு என்று நடக்கும் திரௌபதி விழா..

பாண்டவர் வந்து தங்கிய இடம் என்பது ஐதீகம்..அதனால் பாண்டிருப்பு என்று பெயர்.

பெரும்பாலும் திரௌபதி வழிபாடு உள்ள பகுதி மட்டகளப்பு தான்


        

சம்புவராய அரசர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடும் கங்காதேவியின் "மதுராவிஜயம்"சம்புவராய அரசர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடும்
====================================================
கங்காதேவியின் "மதுராவிஜயம்"
==============================

 வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.

மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42 ஆம் ஸ்லோகம் வன்னிய சம்புவராயர்களை பற்றி குறிப்பிடுகிறது.

அது :-

"அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்"

மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். கவன்னியபூபரத்-- வன்னிய ராஜா//// மதுரா விஜயம் சமஸ்கிருதம்
புகைப்படம் தந்ததற்கு நன்றி : ந.முரளி நாயக்கர்

Thursday, January 22, 2015

வரலாற்றில் மலையமான்கள் - நா. முரளி நாயக்கர்வரலாற்றில் மலையமான்கள் - (நா. முரளி நாயக்கர்)
===============================================


சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது.தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

 கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-

"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர்.

வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. 

 மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். 

 சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னித் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"


(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).

மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "


என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-

"ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.

திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. 

 சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.