Thursday, November 27, 2014

வெள்ளாளர்களுக்கு "முதலி " பட்டம் அளித்த வன்னியர்கள்


"நல்லமாப்பாண வன்னியர்" அவர்கள்  "கந்த உடையான் " என்னும் வெள்ளாளனுக்கு "முதலி " என்னும் பட்டம்  வழங்கிய நியமனப் பத்திரம்

பனங்காமத்து வன்னிபம்
=======================

1.     1781 ஆண்டு சித்திரை மாதம் 8 திகதி பனைங்காமப்பற்று அயுதாந்தி வன்னியந்

2.     தொஞ்சுவாங் குலசேகர நல்லமாப்பாண வன்னியனார் அவர்கள் கற்பித்தபடியாவது:

3.     பனைங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிளக்கு மூலைக்குச்  சேர்ந்த விளாங்குளம்

4.     சாதி வெள்ளாழன் ஆள்வயினார்  கந்த  உடையான் வந்து கிழக்குமூலைக்குத் தொளிலும்

5.     முதலியாரென்கிற  பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று மிருந்த எளிதாவுடனே மன்றாடிக் கேட்

6.     டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந்த உடையானுக்கு திசைவிளங்கு நாயக

7.     முதலியென்கிற பட்டமுங் கட்டிக்
கிளக்குமூலைப் பிறிவுக்குத் தொளிருங் கற்பித்திருக்கிற

8.     படியால் கிளக்கு மூலைக்குச் சேர்ந்த உடையார்,  அயுதாந்தி, மொத்தக்கர்,

9.     பணிக்கமார், போதிய கமக்காறர், மற்றுங் குடியானவர்கள், வரத்தர், போக்கர்,

10.     கச்சவடகாறர், இனிமேல் வரப்பட்ட குடியானவர்கள், தலையர், பட்டங்கட்டிமார் சகலரும்

11.     இவனைத் தங்கள் முதலியாரென்கிறதறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்ற

12.     பேர் சொல்லி அழைக்கவும்,
இன்னமுமந்த ஊருக்குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங் கேட்டு        

13.     பிழை கண்ட இடந்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற்றம் போட்டு வாங்கவும் (.) குற்றங் கொடுக்க

14.     இடமில்லாத தாள்ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இரு பத்தஞ் (சடி)  

15.     அரைக்குப் பணிய அடிப்பிக்கவும்(.) இவன் சொல்லப்பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்டார பணிவிடை சகலமும்

16.     இவன்சொற் கீளமைச்சலுடனே கேட்டு நடந்து கொள்ளவும் (.) இன்னமுயிந்தத் திசைவிளங்கு நாயக முதலியுடைய நயத்தக்கு வேண்டி  இவனுக்கு        

17.     வெள்ளாண்மை செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்றுக்கும் ஆள் அஞ்சு பேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும் அடையிறை சவுந்திர

18.     உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாகவும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளை மேற் கட்டி கூரை முடி    

19.     சேறாடி இருபத்து நாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளைப் பலகைக்கு வெள்ளை க

20.     திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பகற்பந்த மேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், தாரை, மேளம் இப்படிக் குறித்த வரிசைகள் செய்வித்துக்   

21.     கொள்ளவும் (.) கோயிற் சபை, கொண்ட சபை, கலியாணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத்துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (.) ஆடி

22.     கார்த்திகை, வருஷப்பிறப்பு, தைப்பொங்கலுக்கு வண்ணான் வந்து வெள்ளை கட்டவும் (.) பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும் (.) கொல்லன், தச்சன், அம்பட்டன்,

23.     வண்ணான், பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமையும் அழைத்த நேரம் அவரவர் தொழிலுடனே போய் அடுத்த

24.     வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக்கொள்ளவும் (.) கற்பித்த கட்டளைப்படிக்கு எழுதினது பரநிருபசிங்க முதலி    

Sunday, November 16, 2014

வாணர் குலத்து வந்தியத்தேவன் - வன்னியனே !




                             







வாணர் குலத்தை சேர்ந்த "வந்தியத்தேவன் " வன்னியர் குலத்தவனா ? என்று நமது சொந்தகளின் சதேகங்களுக்கு ..

1. வந்தியத்தேவன் பல்லவ நாட்டில் இருந்து சோழநாட்டிற்கு செல்லும் பல்லவ மரபை சேர்ந்தவன் 

2. வந்தியத்தேவன் என்பது சகாதேவன், மதாதேவன் போல அவன் பெயரே தவிர பட்டமும் அல்ல .

3. இவன் வாணர்குலத்தவன் . வாணர்குலத்தவர்கள் பல்லவர்களின் கிளைகுடிகலாக பார்க்க படுகிறது , சம்புவராயர் காடவராயர் போல .

ஆக வாணர்குலத்து அரசர்கள் தங்களை எந்த சாதியா கூறியுள்ளனர் என்று ஆரியும்போழுது, பல இடங்களில் தங்களை வன்னியர், பள்ளி என்று அழைத்துள்ளனர் .

இக்கல்வெட்டுகள் பற்றிய செய்திகள் :

###
கல்வெட்டு செய்தி 1:


"மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
மஹாதெவர்க்கு" (Line - 2).

"இச்சாத்தன் விரசொழனான வாணராஜர்" (Line - 3).

(S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola - I).
###
கல்வெட்டு செய்தி 2:

"நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்"


(I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).

###

செய்தி 3 :


கல்வெட்டு துறை ஆய்வாளர் திரு, தியாகராஜன் அவர்கள் , வாணர் குலத்தவர்களை வன்னியர்களே என்கிறார். (குறிப்பு : தியாகராஜன் அவர்கள் முதலியார் சமூகம் ..வன்னியர் அல்ல )

"An officer of 'Palli caste' named 'Sendan Sutta Mallan alias Vanakovaraiyan' received land called tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D". "His another record in Aduturai 1130 A.D mentions that he guilded the Tiruchirrambalamudaiyar temple with gold".

(N.D.I. No.169), (Newly Discovered Inscription by Dr. L. Thiyagarajan) : (A.R.E No.16 of 1913).

Friday, November 14, 2014

The cholas descendants are “Pichavaram Poligars” (Royal Family).






The cholas descendants are “Pichavaram Poligars” (Royal Family). 


They are entitled to crown in the “Thillai Natarajar Temple”, the family deity of imperial cholas. Others are not entitled for the same is clearly mentioned in the hymns of “Periya Puranam” of 12th century A.D written by the noted poet “Sekkizhar”. The “Pichavaram Cholas” are mentioned in their documents as “Kshatriya” by caste. The “Umapathi Sivacharya” (14th century) one among the “Thillai Dikshidars”, period “Parthavanam Mahatmiyam” and “Rajendrapura Mahatmiyam” published by the “Madras Sanskrit College” clearly says about the chola king “Vira Varma Chola of Pichavaram”. That is why, the “Thilla Dikshitars” used to crown to “Pichavaram Cholas Royal Family”.


The great imperial chola dynasty hails from the Vanniya Kula Kshatriya. The Poligars (Zamindar) of Pichavaram near Chidambaram are the descendant of imperial cholas. Only the clans of Cholas are entitled for crowing in the Golden roofed Chidambaram Natarajar temple, which is the family deity god (Kuladeivam) of imperial cholas. Others are not entitled for the same, according to well known Tamil Periya Puranam hymns. The imperial cholas are the real kshatriyas of Southern India. According to Anbil copper plate of Sundara chola (10th century A.D) and the birudas assumed by the King Raja Raja Chola, the cholas are the real Kshatriyas. The descendant of the imperial cholas (i.e) the "Pichavaram Cholas" are Kshatriyas (i.e) Vanniya Kula Kshatriyar by caste according to the documents of the Royal Family.

The family deity God (Kuladeivam) of imperial Cholas is Chidambaram Nataraja Temple. That is why the Chola King Parantaka made a roof with five tons of pure Gold. Crowning ceremony will be performed in Nataraja temple to the Pichavaram Zamindars, who supercedes the heiarchy as next Chola king. Those days the Kings were considered as equivalent to God and the Pattabishekam had been conducted in the sanctum sanctorum of Nataraja temple (i.e) Panchachara Padi. The Chief Priest used to wash the head of the king in Valampuri Sangu (a unique conch), which is used for God to perform abishekam. 


Then the priest perform mantram and then anoint with pattam in the forehead of the king in "Palm Leaf with Mantras" and garland with "Aathi Malai", the chola clan family garland. After pattabishekam, the crowning ceremony held at 1000 pillar mandapam, which is called as "Raja Sabai." The Chief Priest (they called as Thillai Dikshidhars) anoint the Crown to the Chola King at the appropriate time with the slogans, that the Chola King to long live and the country to flourish. After that, they handover the victorious Sword and their "Tiger Flag." 

The poets praise the Kings about the valours and prides. This custom and rituals clearly shows that the Pichavaram Zamindars are the descendants of imperial Cholas family and are very Pure Kshatriyas. It is the custom of Chola Kings to crown in Chidambaram Nataraja Temple (Cholas family deity god) and that too, the Thillai Dikshidhars are only eligible to crown the Chola Kings and no other kings are not eligible for the same rights is clearly explained in "Kutruvanayanar episode" by the great poet "Sekhizhar" of 12th century.


Names of the Pichavaram Zamindars, the imperial Cholas descendants, Crowned in Chidambaram Nataraja Temple in the 20th century :

(a) Maha Raja Raja Sri Samidurai Surappa Chola (Crowned in 1908 A.D).

(b) Maha Raja Raja Sri Thillai Kannu Surappa Chola (Crowned in 1911 A.D)

(c) Maha Raja Raja Sri Andiyappa Surappa Chola (Crowned in 1943 A.D)

(d) Maha Raja Raja Sri Chidambaranatha Surappa Chola (Crowned in 1978 A.D).


His elder son yet to crown, since they are now in low economic conditions. The big Chidambaram Natarajar temple belongs to the property of Pichavaram Zamindars. The temple priest daily used to close the temple and handover the key to the Palace of Pichavaram (nine km from Chidambaram town), through palanquin bearers. In the early morning King used to handover the key to temple priest through palanquin bearers. If any problem rose among the temple priest, the Pichavaram King come and solve the problem by sitting in "perambalam". 


The "Chola Mandagapadi" still conducted by the Pichavaram Chola King twice in a year at the sanctum Sanctorum in the dais of "Surya Chandra Mandapam". This practice existing from the times of the great Kulotunga Chola-1. The Pichavaram Royal Family have the marriage alliance at par with the Vanniya Kula Kshatriyas Royal Families such as "Udaiyar Palayam Zamindars", "Ariyalur Zamindars", "Mugasaparur Poligars" (Virudachalam), "Vadakal Poligars" (Sirkali), "Mayavaram Poligars", "Kadalangudi Poligars" (near Kumbakonam) ect.


With regards to the existence of Pichavaram cholas, my beloved Guru and eminent archaeologist Thiru. Natana Kasinathan Sir, has done research work along with myself and my friend annal. Many valid evidence such as inscriptions/documents relates the Pichavaram cholas existence from 16th century A.D. onwards. After the downfall of the chola empire in the end of 13th century A.D., the chola clans settled in the secured place in “Devikottai”, 05 kms from Pichavaram. I have visited to “Devikottai” fort alongwith Thiru. Chandrapandia Padaiandavar of Chidambaram a few years before.

The fort is totally damaged and few ramparts are scattered in the marooned area. Most of the Learned Scholars are in the opinion that the Pichavaram cholas are the descendants of imperial cholas. However, the lack of evidence for 14th and 15th century A.D. In order to bridge the gap for the lack period, I have tried through several sources and prayed God to render evidence for the lack period. The God has fulfilled my pray. Now, I have discovered an unshakable evidence proving the Pichavaram cholas are the descendant of imperial cholas. The evidence is from Sanskrit and that too, the “Thilla Dikshidars” certified that, Pichavaram cholas are chola kings.

The details of the evidence : The “Parthavana Mahatmayam” and “Rajendrapura Mahatmayam”. Both the mahatmayams are published by Madras Sanskrit College/K.S.R. Institute, Mylapore, Chennai – 06. The mahatmayams are in Sanskrit and its about “Umapathi Sivacharya”, one among the “Thillai Dikshidars” of 14th century A.D. The mahatmayams mentions “Chola king named Vira Varma Chola of Pichapuram” is significant in history.

In Parthavana Mahatmayam : “A lady reported to the chola king named Vira Varman, who ruled the Pichapuram.”

In Parthavana Mahatmayam : “Umapathy Sivacharyar went to Vira Varma Chola and asked for a land grant to a lady. The king donated the land and went to Pichapuram.”

In Rajendrapura Mahatmayam : “Umapathy Sivacharyar went to south east of Chidambaram area the Rajendirapuram (alias) Kottrankudi and stayed along with his disciples in the madalayam constructed by Vira Varma Chola.”

In the preface of the book “Sri Umapati Sivacarya / His Life, Works and Contribution to Saivism”, the K.S.R. Institute adviser S.S. Janaki has stated the following :

“As is usual with great religious teachers and philosophical leaders there is no authentic history about the personal, religious and literary life of Umapathy Sivacharya except some scattered information. His traditional biography is found in Sanskrit at some detail in the two texts, Parthavana Mahatmya or Korravangudi Purana in 240 verses as found in Chidambarasara and in the form of a dialouge between Brahmanan dayati and Sankaracarya and Rajendrapura (Tillai) – Mahatmya or Umapati Vijaya in 108 verses by Tillai Sivananda Diksita. Both Rajendrapura and Parthavana are identical with the place Kottrangudi, the modern Kottangudi, east of the Chidambaram Railway station.

The two puranic accounts glorify Umapathi Sivacharya as having performed or participated in some miraculous deeds at Chidambaram and its vicinity. The two puranas were published in Grantha Script with summaries in Tamil in the introduction to the Chidambaram edition of the Pauskara Agama with the bhasya of Umapathi Sivacharya. They were edited from mss. secured from “Bhrama Sri Somayaji Appaswami Diksita” and Bhrama Sri Somayaji Rajaratna Diksita at Chidambaram.”


The above mentioned facts clearly shows that the Pichavaram cholas are the descendants of imperial cholas. Without knowing the fact , some elements spread the irrelevant message, stating that the, Pichavaram Zamindar is a “Pannaiar”. In what way, a pannaiar allowed in the world class Thillai Nataraja temple to crown as a Chola King. It is family deity God (Kuladeivam) of imperial cholas and that is why the, Thillai Dikshidars” crown to the Pichavaram cholas. 


It is the custom/rituals to crown in the Nataraja temple by chola clans. From the times of later cholas, the “Thillai Bramins” used to crown to chola clans. Others (which includes other kings) are not entitled for the same rights. The “Thirumanikuzhi” inscription of Kulotunga Chola-II states that, he crowned in “Thilla temple. The “Thirugokarnam” inscription of Kulotunga Chola-I states, that the “Thillai Bramins” crown to chola kings. The noted poet of 12th century A.D, the “Sekkilar” clearly specify in the “Kuttuvanayanar episode” the “Thillai Bramins” refused to crown to non-chola king and said “We crown only to Chola’s clan and not to any other"

In view of the above facts, it is established that, the Pichavaram Cholas are the descendants of imperial cholas clans.



Thanks to : Murali Nayagar

வேடசந்தூர் (பள்ளிநாடு) - திண்டுக்கல் - "பள்ளி வேளான்"



திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது. இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.

இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்". இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது. இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது.

பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது.

முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர்.

கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது.

இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-

"பள்ளி வேளான்"

"பராந்தக வேளான்"

"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"

"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"


(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)

இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.

அக்னியில் உதித்தவர் க்ஷத்ரியர்

சோழருக்கு நடராஜர் எப்படியோ, அதே போல பாண்டியர் நிலத்தில் , மதுரையில் பார்வதி (மீனாட்சி) தேவி அக்னியில் உதித்தால் என்கிறது திருவிளையாடல் புராணம்.

பாண்டியர்களும் தங்களை க்ஷத்ரியர் என்பது குறிப்பிட தக்கது .

வேளிர் மன்னர்களும் அக்னியில் உதித்தவர்கள் என்கிறது கபிலரின் புறநானூறு பாடல் .

க்ஷத்ரியர் உலகை காக்க புனிதத்தன்மையுடன் இருக்க கூடிய அக்னியில் உதித்தவர்கள் என்பதற்கு இதுவும் சாட்சிகளே . அக்னி அசுத்தம் அடைவதில்லை . தன்னுடன் வருவதையும் இணைத்து அசுத்தத்தை அழித்து புனிதம் அடைய செய்கிறது .

நூல் - சங்க இலக்கிய ஆராய்ச்சிகள் 


மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் வீட்டில் நான்

மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சம்யுத்தா அவர்களின் திருமண விழா பத்திரிக்கையை நான் பெரும்பொழுது ,மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் வீட்டில்









பாமக தலைவர் ஜிகே மணி , மற்றும் Action King A.K.மூர்த்தி அண்ணன் அவர்களுடன்

சிவகிரி ராஜா "ராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னதம்பியார்" அவர்களின் நினைவு நாள் அன்னதான விழா .

சிவகிரி ராஜா "ராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னதம்பியார்" அவர்களின் நினைவு நாள் அன்னதான விழா .

சிவகிரிக்கு உட்பட்ட தென்மலை சமுசிகாபுர ஜமீனை சேர்ந்த சிவகிரி ஜமீன் உறவினர்கள் விழாவை நடத்தினர் ..

இவர்கள் சுத்தமான வன்னியர் குடிகள் ...
*மறவர் கலப்பு இல்லாதவர்கள் *



மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சம்யுக்தா அவர்களின் திருமண விழாவின் சில புகைப்படங்கள்

மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சம்யுக்தா அவர்களின் திருமண விழாவின் சில புகைப்படங்கள்







ராஜராஜ சோழனின் சதய விழா - 1029



ராஜராஜ சோழனின் சதய விழா - 1029 ஆம் ஆண்டிற்கு, க்ஷத்ரியர் சமூகம் சார்பாக உடையாளூரில் பேனர்கள் போஸ்ட்டர்கள் வைத்து , மற்றும் உடையாளூரில் அருள்மொழிவர்மனின் சமாதிக்கு , பூஜையும் செய்யப்பட்டது.


 






மாலைமலரில் வந்த விளம்பர பதாகை 

பெங்களூர் தர்மராஜா கரக திருவிழா



வன்னியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும், வன்னியர்களால் நடத்தப்படும் பெங்களூர் தர்மராஜா கரக திருவிழா .... வாள் ஏந்தும் இவ்வன்னியர்கள் ராஜ குமாரர்கள் என்று அழைக்கபடுவர் ...

இந்திய நாட்டில் ராஜவாள் வைத்திருக்க உரிமை பெற்ற இரண்டு சமூகங்களில் பெங்களூர் வன்னிய சத்ரியர்களும் ஒன்று .. மற்றொன்று வட இந்திய ராஜபுத்திரர்கள்

சோழர்களின் வாரிசு - பிச்சாவரம் ஆண்டியப்ப சோழகனார் - Chidambaram Golden Temple


சோழர்களின் வாரிசு - பிச்சாவரம் ஆண்டியப்ப சோழகனார்

book name: Chidambaram Golden Temple

page -26

thanks : பிரேம் குமார்

கரிசல்பட்டி - திண்டுக்கல் வன்னிய சேர்வை



கரிசல்பட்டி - திண்டுக்கல்

கரி என்றால் யானை .. காட்டு யானைகளை அடக்குவதில் வல்லவர்களாக வீர வன்னியர்கள் இருந்துள்ளார்கள் ..

இதனால் இப்பகுதி கரிசல்பட்டி என்றானது

thanks : விஜயகுமார் சுப்புகலை சேர்வை (வன்னிய சேர்வை )

கடந்தையார் - சோழர் படைத்தளபதி , குறுநில மன்னர் வம்சம் (வன்னியர் சமூகம் )



சோழர் படைத்தளபதி , குறுநில மன்னர் வம்சம் (வன்னியர் சமூகம் )

தென்னார்க்காடு பகுதியில் பெண்ணாகடம், குடிகாடு , திட்டக்குடி போன்ற பகுதியிலும், கீழ்பெரம்பலூர் பகுதியிலும் வன்னியர் குடும்பத்தினர் கடந்தையார் பட்டம் சூடியவர்கள் .

இவர்கள் அனைவருமே தங்களை ஒரே குடும்பமாக ,பங்காளி முறை என்று கருதுபவர்கள் .அதனால் பெண் எடுப்பதோ கொடுப்பதோ வேறு பட்டத்தில்தான் .

பெண்ணாகடம் சிவன் கோவிலில் நடக்கும் தேரோட்டத்தில் தேர்வடம் பிடிக்கும் முதல்மரியாதை கடந்தையார்களுக்கே .
தேரோட்டத்தின் போது இக்குடும்பத்து மூத்த பிரதிநிதிகளுக்கு சந்தனம், மாலை , வெற்றிலை பாக்கு , தீபாராதனையுடன் பரிவட்டம் கட்டபடுகிறது...

பெண்ணாகடம் ஊரின் பழைய பெயர் கடந்தை (ஏழாம் நூற்றாண்டு ). இப்பகுதியை ஆட்சி செய்ததால் இவ்வன்னியர்களுக்கு கடந்தையார் என்ற பெயர் .

கிபி 1136 கல்வெட்டில் "பெண்ணாகடமான ஸ்ரீமுடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலம் " என அழைக்க பட்டது .

விக்கிரம சோழன் காலத்தில் திட்டக்குடி - உகளூரை சேர்ந்த பகுதிகளில் வன்னிய இனத்தை சேர்ந்த அதிகாரிகள் முத்தரையர் என்ற பட்டத்துடன் விளங்கியதை ஆடுதுறை கல்வெட்டுகள் தெரிவிக்கிறது .

1. உகளூர் கூற்றத்து இறையான் புஞ்சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னான முடிகொண்ட சோழ முத்தரையன்

2. ஒலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காணி திரிச்சன் விக்ரமசோழன் முத்தரையன்

3. துங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகன் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன்

4. மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன்

என கல்வெட்டு வாசகம் வருகிறது .

இதிலிருந்து , கடந்தையை பூர்வீகமாக கொண்ட வங்காரம் ஊரில் காணி உரிமை உடையவர்களாகவும் முத்தரையர் என்ற அரசியல் பட்டபெயர்கொண்டும் விளங்கிய மேற்சொன்ன பள்ளிகள் (வன்னியர்கள் ) தெளிவாகிறது .

இன்றளவும் இப்பகுதியில் கடந்தையார் என்பது வன்னியர் இனத்திடையே மட்டுமே இருக்கும் பட்டமாகும் .

குறிப்பு :

நூல் : திருக்கடந்தை வரலாறும் உறையும்
ஓலைச்சுவடி உரிமை : கோவிந்தசாமி கடந்தையார்
வெளியீடு : ச.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் - 245

"சூரியகுலம் சுரைக்கானூர் வகையறா திருவயலூர் வன்னிய கவுண்டர்கள் "

"சூரியகுலம் சுரைக்கானூர் வகையறா திருவயலூர் வன்னிய கவுண்டர்கள் " கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் - கிருஷ்ணகிரி

நன்றி திரு Adigan Anci Goundar


வீர நாராயண ஏரி - வன்னியர் பூமி - "பொன்னியின் செல்வன்"

"பொன்னியின் செல்வன்" நாவலின் தொடக்கம்
வன்னியர் பூமி
வீர நாராயண ஏரி


"முதலி கவுண்டர்கள் வகையறா " - வன்னிய கவுண்டர்கள் நடத்தும் விழா

கிருஷ்ணகிரி தருமபுரி எல்லைக்குட்பட்ட வன்னிய கவுண்டர்களின் விழா : 

அரிச்சந்திரன் விழா

"முதலி கவுண்டர்கள் வகையறா " என்று அழைக்கப்படும் வன்னிய கவுண்டர்கள் நடத்தும் விழா


ஐந்திணை மக்கள் யார் ? க்ஷத்ரியர் யார் ? - திரு. சதாசிவ பண்டாரத்தார் கருத்து



ஐந்திணை மக்கள் யார் ?
க்ஷத்ரியர் யார் ?


பிற்கால சோழர் பாண்டியர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு. சதாசிவ பண்டாரத்தார் கருத்து

##
திருப்புறம்பியம் திருவாளர் திரு.சதாசிவ பண்டாரத்தாவர் அவர்கள் , மழவர் பற்றிய செய்திகளை திரட்டி கரந்தை தமிழ்சங்கம் சார்பில் வெளியாகும் "தமிழ் பொழில் " (1925-ஆம் ஆண்டு) என்னும் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்கள் .


சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கூறும் செய்திகள் ,

1.தொலகாப்பியம் எவ்வாறு மக்களை பிரிக்கிறது
2.திணை மக்கள் வேறு . க்ஷத்ரியர் வேறு .


மிகப்பழைய காலத்தில், தமிழ் நூல்கள் பலவும் கடல் கொண்டு சென்றாலும், மிஞ்சியுள்ள பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும் .

இந்நூல் அகத்தியரின் மாணாக்கர் , இடைசங்க புலவர்களுள் ஒருவருமான திரு.தொல்காப்பியனரால் இயற்றப்பட்டது .

“நிலந்தரு திருவிற் பாண்டியன்” அவைகளத்தில் அரங்கேற்றப்பெற்றது .

இடைசங்கத்தார்க்கும், கடை சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமைந்தது .

இத்தகைய அருமை வாய்ந்த நூலில் முற்காலத்திய தமிழ் மக்களுள் காணப்பெற்ற குல வேறுபாடுகள் இனிதாக கூறப்பட்டுள்ளன . அதனை ஆராயும்பொழுது ,

“பார்ப்பனர் (அந்தணர்),
அரசர் (க்ஷத்ரியர்),
வணிகர்,


என்ற வகுப்பினரும் முற்காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது மரபியலால் பெறப்படுகிறது .

அதுமட்டுமில்லாது ,

ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையலில் கருப் பொருளின் பாகுபாடாகிய மக்களை உணர்த்துமிடத்து ,
நிலம்பற்றி வாழும் ஐந்திணை மக்களும் வாழ்ந்தனர் என்று கூறியுள்ளார் .

அன்னோர் , “குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை” என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த குறவர், ஆயர், உழவர், வேட்டுவர் , பரதவர் என்போர் .

அவர்கள் அன்றி ,
“குற்றேவன் மக்களும்”,
” தொழிலாளரும்”

இருந்தார்கள் என ,அகத்திணையில் உள்ள 25-ஆவது சூத்திரம் தெரிவிக்கின்றது .

இதுவரை குறிப்பிட்ட பிரிவினருள், உயர்திணை குடிகளான பார்ப்பனர், அரசர், வணிகர் ஆகியோர் அனைத்து திணைகளுக்கும் உரித்தவர்களான உயர்குடிகள் .

குறவர் ஆயர் போன்ற ஐந்திணை மக்கள் , அந்த நிலத்திற்கு மட்டும் உரித்தவர்களான, நிலம்பற்றி வாழும் கீழ்மக்கள் ஆவர் .

குற்றேவன் மாக்களும், தொழிலாளரும் கீழ்மக்களான ஐந்திணை மக்களை விட தாழ்ந்த மக்கள் என்று அக்காலம் முதல் கருதப்பட்டு வந்தது என்பதை

"அடியோர் பாங்கினும் வினை வலர் பாங்கினும் "

என்ற தொலக்காப்பிய சூத்திரத்தால் அறியப்படுகின்றது .

ஈண்டு தொழிலாளர் எனப்பட்டோர் மேல்மக்களும் கீழ்மக்களும் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றியமையாதவர்களாக உள்ள "தச்சர், கொல்லர். வண்ணார், அம்பட்டர், குயவர் " முதலியானோர் .

குற்றேவன் மக்கள் அடித்தொழில் செய்வோர் .அவர்கள் அடியோர் என்று கூறப்பெற்றுள்ளனர் .

மேன் மக்கள், கீழ்மக்கள் ,தொழிலாளர், குற்றேவன் மக்கள் ஆகிய அனைத்து மக்களுக்கும் தலைவராக இருந்து ஆட்சி புரிவோர் மேல்மக்களுள் ஒரு வகுப்பினராக இருக்கும் அரசர் (க்ஷத்ரியர் ) என்பவர் .

குறிஞ்சி முல்லை போன்ற ஐந்திணை நிலங்களுக்கும் , குறவர் ஆயர் போன்ற அவ்வைந்து நில மக்களுள் தலைவர்கள் உண்டு . அவர்கள் குறும்பொறை நாடன், ஊரன் ,சேர்ப்பன் ,மீளி என்று அழைக்க பட்டுள்ளனர் .

அவர்கள் அந்த ஐந்து நிலத்திற்கு தலைவராயினும் (ஐந்திணை நிலத்து தலைவர்கள் ), எல்லா நிலத்திற்கும் மக்களுக்கும் தலைமை பூண்டு விளங்கிய மேன் மக்களாகிய நெடுமுடி வேந்தர்க்குக் கீழ் வாழ்ந்து வந்தனர் .

அக்காலத்தில் , "அறிவர் , தாபதர், பரத்தையர் " என்போரும் சிறப்புற்று விளங்கினர் .

இவர்களுள் அறிவர் என்போர் முக்காலமும் உணர்ந்து , எல்லா உயிரிடத்தும் செந்தண்மை பூண்டு பேரரிஞராய் நிலவிய நிறை மொழி மாந்தர் . அறிவரே அந்தணர் என்றும் கூறப்பெற்றனர் . அவர் ஆணையிட்டு கூறும் யாவும் மறையெனவும் மந்திரமெனவும் சொல்லப்படும் .

தாபதர் என்போர் தவ வேடமுடையவராய் விரதம் ஒழுக்கம் மேற்கொண்டவர் ஆவர் . பார்ப்பனருள் "அறிவரும் தாபதரும் " ஆயினர் .
ஆனால் அறிவரெல்லாம் பார்ப்பனரும் அல்லர். அதே போல தாபதர் எல்லோரும் பார்ப்பனரும் அல்லர் .

அறிவரும் தபதரும் ஒரே குலத்தை சேர்ந்தவரும் அல்லர்.

பரத்தையர் காதற்பரத்தையரும் ,காமக்கிழத்தையருமென இருவகையாக வாழ்ந்த மகளிர் ஆவர் .

இதுவரை யாம் கூறிய வகுப்பினர் யாவரும் தமிழகத்தில் வாழ்ந்த வகுப்பினர் ஆவர் .

“எனவே அரசன் அல்லது க்ஷத்ரிய குலத்தவன் , எந்த திணையையும் சேர்ந்தவன் அல்ல. அவன் அனைத்து திணைக்கும் பொதுவானவன் .. பிராமணர், வணிகரும் அவ்வாறே ..

ஒவ்வொரு திணைக்கும் உள்ள தலைவர்கள் அந்தந்த திணைக்கு மட்டுமே தலைவர்கள் .. அவர்கள் தலைவர்களாக, திணை மன்னர்களாக இருக்கலாமே தவிர, ஒருபொழுதும் க்ஷத்ரியர் ஆகிவிட முடியாது .

எவன் ஒருவன் திணை மக்களாக வருகிறானோ, அவன் "பிராமண, வைசிய, க்ஷத்ரிய " பிரிவில் வர இயலாது .”