Friday, November 14, 2014

ஐந்திணை மக்கள் யார் ? க்ஷத்ரியர் யார் ? - திரு. சதாசிவ பண்டாரத்தார் கருத்து



ஐந்திணை மக்கள் யார் ?
க்ஷத்ரியர் யார் ?


பிற்கால சோழர் பாண்டியர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு. சதாசிவ பண்டாரத்தார் கருத்து

##
திருப்புறம்பியம் திருவாளர் திரு.சதாசிவ பண்டாரத்தாவர் அவர்கள் , மழவர் பற்றிய செய்திகளை திரட்டி கரந்தை தமிழ்சங்கம் சார்பில் வெளியாகும் "தமிழ் பொழில் " (1925-ஆம் ஆண்டு) என்னும் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்கள் .


சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கூறும் செய்திகள் ,

1.தொலகாப்பியம் எவ்வாறு மக்களை பிரிக்கிறது
2.திணை மக்கள் வேறு . க்ஷத்ரியர் வேறு .


மிகப்பழைய காலத்தில், தமிழ் நூல்கள் பலவும் கடல் கொண்டு சென்றாலும், மிஞ்சியுள்ள பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும் .

இந்நூல் அகத்தியரின் மாணாக்கர் , இடைசங்க புலவர்களுள் ஒருவருமான திரு.தொல்காப்பியனரால் இயற்றப்பட்டது .

“நிலந்தரு திருவிற் பாண்டியன்” அவைகளத்தில் அரங்கேற்றப்பெற்றது .

இடைசங்கத்தார்க்கும், கடை சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமைந்தது .

இத்தகைய அருமை வாய்ந்த நூலில் முற்காலத்திய தமிழ் மக்களுள் காணப்பெற்ற குல வேறுபாடுகள் இனிதாக கூறப்பட்டுள்ளன . அதனை ஆராயும்பொழுது ,

“பார்ப்பனர் (அந்தணர்),
அரசர் (க்ஷத்ரியர்),
வணிகர்,


என்ற வகுப்பினரும் முற்காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது மரபியலால் பெறப்படுகிறது .

அதுமட்டுமில்லாது ,

ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையலில் கருப் பொருளின் பாகுபாடாகிய மக்களை உணர்த்துமிடத்து ,
நிலம்பற்றி வாழும் ஐந்திணை மக்களும் வாழ்ந்தனர் என்று கூறியுள்ளார் .

அன்னோர் , “குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை” என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த குறவர், ஆயர், உழவர், வேட்டுவர் , பரதவர் என்போர் .

அவர்கள் அன்றி ,
“குற்றேவன் மக்களும்”,
” தொழிலாளரும்”

இருந்தார்கள் என ,அகத்திணையில் உள்ள 25-ஆவது சூத்திரம் தெரிவிக்கின்றது .

இதுவரை குறிப்பிட்ட பிரிவினருள், உயர்திணை குடிகளான பார்ப்பனர், அரசர், வணிகர் ஆகியோர் அனைத்து திணைகளுக்கும் உரித்தவர்களான உயர்குடிகள் .

குறவர் ஆயர் போன்ற ஐந்திணை மக்கள் , அந்த நிலத்திற்கு மட்டும் உரித்தவர்களான, நிலம்பற்றி வாழும் கீழ்மக்கள் ஆவர் .

குற்றேவன் மாக்களும், தொழிலாளரும் கீழ்மக்களான ஐந்திணை மக்களை விட தாழ்ந்த மக்கள் என்று அக்காலம் முதல் கருதப்பட்டு வந்தது என்பதை

"அடியோர் பாங்கினும் வினை வலர் பாங்கினும் "

என்ற தொலக்காப்பிய சூத்திரத்தால் அறியப்படுகின்றது .

ஈண்டு தொழிலாளர் எனப்பட்டோர் மேல்மக்களும் கீழ்மக்களும் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றியமையாதவர்களாக உள்ள "தச்சர், கொல்லர். வண்ணார், அம்பட்டர், குயவர் " முதலியானோர் .

குற்றேவன் மக்கள் அடித்தொழில் செய்வோர் .அவர்கள் அடியோர் என்று கூறப்பெற்றுள்ளனர் .

மேன் மக்கள், கீழ்மக்கள் ,தொழிலாளர், குற்றேவன் மக்கள் ஆகிய அனைத்து மக்களுக்கும் தலைவராக இருந்து ஆட்சி புரிவோர் மேல்மக்களுள் ஒரு வகுப்பினராக இருக்கும் அரசர் (க்ஷத்ரியர் ) என்பவர் .

குறிஞ்சி முல்லை போன்ற ஐந்திணை நிலங்களுக்கும் , குறவர் ஆயர் போன்ற அவ்வைந்து நில மக்களுள் தலைவர்கள் உண்டு . அவர்கள் குறும்பொறை நாடன், ஊரன் ,சேர்ப்பன் ,மீளி என்று அழைக்க பட்டுள்ளனர் .

அவர்கள் அந்த ஐந்து நிலத்திற்கு தலைவராயினும் (ஐந்திணை நிலத்து தலைவர்கள் ), எல்லா நிலத்திற்கும் மக்களுக்கும் தலைமை பூண்டு விளங்கிய மேன் மக்களாகிய நெடுமுடி வேந்தர்க்குக் கீழ் வாழ்ந்து வந்தனர் .

அக்காலத்தில் , "அறிவர் , தாபதர், பரத்தையர் " என்போரும் சிறப்புற்று விளங்கினர் .

இவர்களுள் அறிவர் என்போர் முக்காலமும் உணர்ந்து , எல்லா உயிரிடத்தும் செந்தண்மை பூண்டு பேரரிஞராய் நிலவிய நிறை மொழி மாந்தர் . அறிவரே அந்தணர் என்றும் கூறப்பெற்றனர் . அவர் ஆணையிட்டு கூறும் யாவும் மறையெனவும் மந்திரமெனவும் சொல்லப்படும் .

தாபதர் என்போர் தவ வேடமுடையவராய் விரதம் ஒழுக்கம் மேற்கொண்டவர் ஆவர் . பார்ப்பனருள் "அறிவரும் தாபதரும் " ஆயினர் .
ஆனால் அறிவரெல்லாம் பார்ப்பனரும் அல்லர். அதே போல தாபதர் எல்லோரும் பார்ப்பனரும் அல்லர் .

அறிவரும் தபதரும் ஒரே குலத்தை சேர்ந்தவரும் அல்லர்.

பரத்தையர் காதற்பரத்தையரும் ,காமக்கிழத்தையருமென இருவகையாக வாழ்ந்த மகளிர் ஆவர் .

இதுவரை யாம் கூறிய வகுப்பினர் யாவரும் தமிழகத்தில் வாழ்ந்த வகுப்பினர் ஆவர் .

“எனவே அரசன் அல்லது க்ஷத்ரிய குலத்தவன் , எந்த திணையையும் சேர்ந்தவன் அல்ல. அவன் அனைத்து திணைக்கும் பொதுவானவன் .. பிராமணர், வணிகரும் அவ்வாறே ..

ஒவ்வொரு திணைக்கும் உள்ள தலைவர்கள் அந்தந்த திணைக்கு மட்டுமே தலைவர்கள் .. அவர்கள் தலைவர்களாக, திணை மன்னர்களாக இருக்கலாமே தவிர, ஒருபொழுதும் க்ஷத்ரியர் ஆகிவிட முடியாது .

எவன் ஒருவன் திணை மக்களாக வருகிறானோ, அவன் "பிராமண, வைசிய, க்ஷத்ரிய " பிரிவில் வர இயலாது .”