Monday, February 4, 2013

மயிலாடுதுறை அஞ்சாத சிங்கங்கள் (நாகை மாவட்ட மயிலாடுதுறை "அஞ்சாத சிங்கம்" பட்டம் பெற்ற வன்னியர் குல க்ஷத்ரியர் சமூக ஆட்சியாளர்கள் ) :



மயிலாடுதுறை அஞ்சாத சிங்கங்கள் (நாகை மாவட்ட மயிலாடுதுறை "அஞ்சாத சிங்கம்" பட்டம் பெற்ற வன்னியர் குல க்ஷத்ரியர் சமூக ஆட்சியாளர்கள் ) :
===============================================

“திருக்கைவளம் ” நூலின் 61 ஆம் பாடல்

“அஞ்சாத சிங்கர் தம்மேலருநாம மாலை சொல யெஞ்சலிலாப் பொன் கொடுத்த இன்பக்கை ” 

என்று காணப்பெறுகிறது . 

இப்பாடலுக்கு உரை எழுதிய பெரும் புலவர் குக.ஸ்ரீ.பு.பா.இரத்தின சபாபதி நாயகர் அவர்கள் .

“எவரையும் வெற்றி கொண்ட அஞ்சாத சிங்கர் மேல் அருமையான பிரபந்தம் பாட , பாடிய புலவருக்கு எண்ணிறந்த பொன் கொடுத்த இன்பத் திருக்கரம் “ 

என்று பொருள் எழுதியுள்ளார் .

அஞ்சாத சிங்கம் பட்டம் ஏற்ப்பட்ட வரலாறு :
=====================================

“வட நாட்டில் கொள்ளுதேசம் என்ற பகுதியிலிருந்து வீரசாமி என்றவர் தம் குடும்பத்துடனும் சேனைகளுடனும் ராமேஸ்வரம் செல்லும் வழியில் , மாயூரத்தையடுத்துள்ள சித்த காட்டில் , இரவு நேரமாகி விட்டபடியால் தங்கியிருக்கின்றனர் . 

இரவில் இவர்களது பொருட்களை கொள்ளையிடக் கொள்ளை கூட்டம் வந்திருக்கிறது . அக்கூட்டத் தலைவனை வீரசாமி வெட்டி வீழ்த்தி விட்டார் . ஆதலால் கொள்ளைக் கூட்டம் ஓடி விட்டது .

இதனைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய மன்னர் வீரசாமியை அழைத்து அவரது வீரத்தை பாராட்டி அவருக்கு “அஞ்சாத சிங்கம் ” என்ற பட்டத்தையளித்து , “ நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டாம் . சித்தக்காட்டிலேயே அரண்மனைக் அமைத்துக்கொண்டு அப்பகுதியை ஆட்சி செய்யுங்கள் என்று ஆணையிட்டார் ... வீரசாமி இறப்புக்குப்பின்னர் , தம்பிக்கு நல்லான் பட்டணத்தில் அரண்மனை அமைத்துக்கொண்டு , 250 கிராமங்களில் இருந்த 300 வேலி நிலங்களை நிர்வகித்து கொண்டு ராஜ மரியாதையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் “.

பெரிய வகுப்பு சிறிய வகுப்புப் பாகப்பிரிவினை விவரம் :
========================================
பெரிய வகுப்புக்கு 
1. தம்பிக்கு நல்லான் பட்டணத்தில் பெரிய வகுப்புத் தெற்கு அரண்மனை
2. பெரிய மாரியம்மன் கோயில் 
3. மூங்கில் தோட்டம் , காத்தாயி அம்மன் கோயில் 
4. நெடுந்திடல் கிராமம் , விநாயகர் கோயில் 
5. நலத்துக்குடி கிராமம் 
6. குழிச்சர் கிராமம் 

சிறிய வகுப்புக்கு 
1. குமர கட்டளைத் தெருவில் சிறிய வகுப்பு வடக்கு அரண்மனை 
2. சிறிய மாரியம்மன்
3. விளநகர் கிராமம் மற்றும் காத்தாயி அம்மன் கோயில் 
4. அச்சந்தாபுரம் கிராமம் 
5. வாத்தி கட்டளை கிராமம் 

இந்த ஆட்சியாளர்கள் சிலரது கடன் தொகைக்கு தாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் 60 வேலி நிலங்களை அவர்களிடமிருந்து அரசு கைப்பற்றிக் கொண்டது .

இவ்வாட்சியாளர்களின் சில வேலி நிலங்கள் தருமபுர ஆதீன மடத்துக்குக் கொடையாக வழங்க பெற்றுருகிறது . தருமபுர மடத்தில் தற்பொழுதும் இவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படுகிறது .

அஞ்சாத சிங்கம் ஆட்சியாளர்களின் வம்சாவழி :
======================================
1. வீரசாமி துரை அஞ்சாத சிங்கம் , இவரது மகன்கள் 
2. தம்புசாமி துரை அஞ்சாத சிங்கம்
3. துரைசாமி துரை அஞ்சாத சிங்கம்
4. 4.மூன்றாமவரின் மகன் வெள்ளிவேலாயுதசாமி துரை அஞ்சாத சிங்கம்
5. நான்காமவரின் மகன்கள் நால்வர் .அவர்களில் மூன்றாமவர் 
6. தம்புசாமி துரை அஞ்சாத சிங்கம். அவரது மகன் 
7. முத்துகுமாரசாமி துரை அஞ்சாத சிங்கம்

இதே போன்று சிறிய வகுப்பு அரண்மனையிலும் க.ராஜகேசர துரை அஞ்சாத சிங்கம் அவரது உடன் பிறப்பு க.ராஜமூர்த்தி துரை அஞ்சாத சிங்கம் ஆகியோர் உள்ளனர் .

இவர்களது ஆவணங்களில் தங்களை “க்ஷத்திரிய ஜாதி” என்றும் “இராஜ வன்னியர்” என்றும் எழுதியிருக்கின்றனர் .




Reference:
=========

தமிழ்நாட்டரசு தொல்லியல் துரை மேனாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் மாட்சி . .. பக்கம் - 136