Saturday, December 3, 2011

நல்லமாப்பாண வன்னியரின் ஓலை




கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயம் அடங்காப்பற்று வன்னிகளினதும் வன்னிபங்களினதும் பெயர்களைத் தருகின்ற போதும் வன்னிகளின் நிர்வாக முறை பற்றிய தகவல்களைத் தரவில்லை. நல்ல மாப்பாண வன்னியரின் ஓலை வன்னி நாடுகளில் நிலவிய நிர்வாக முறையைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரிகின்றது.

பனங்காமம் பற்று வன்னிபம் நல்ல மாப்பாணன் கிழக்கு மூலையைச் சேர்ந்த ஆள்வயினார் கந்த உடையானுக்கு முதலியார்ப் பட்டமும் கிழக்குமூலை மேல் அதிகாரமும் வழங்கியமை பற்றி இந்த ஆவணம் கூறுகின்றது.

யாழ்ப்பாண மன்னர் போத்துக்கேயரோடு போராடி இறுதி மன்னனான இரண்டாம் சங்கிலி கைதியாகும்வரை பனங்காமத்து வன்னியர் யாழ்ப்பாண மன்னருக்குப் பெரிதும் ஆதரவாயிருந்தனர். பறங்கியரும் பின் ஒல்லாந்தரும் வட இலங்கையை ஆட்சி புரிந்த காலத்திலே பனங்காமம்பற்று வன்னியரின் ஆதிக்கம் வளர்ச்சியடைந்தது. பரந்தன்வெளி, புதுக்குடியிருப்பு, பூநகரி முதலிய பகுதிகளில், அவ்வன்னியரின் செல்வாக்குப் பரந்திருந்தது. அத்துடன் பனங்காமப்பற்று வன்னியர் அடங்காப்பற்றிலுள்ள ஏனைய வன்னியர்களிலும் மிகக் கூடிய பலத்தையுஞ் செல்வாக்கையும் பெற்றிருந்தனர்;

ஒல்லாந்தர் காலத்திற் பனங்காமத்து வன்னியர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பதினாறுக்கு மேற்பட்ட யானைகளை ஆண்டு தோறும் திறையாகக் கொடுத்தனர். எனினும் ஒல்லாந்த அதிகாரிகள் பயமுறுத்தல், சூழ்ச்சி முதலிய உபாயங்களைக் கையாண்டு அதிக சிரமத்துடனேயே வன்னியரிடமிருந்து திறைபெற்றனர். வன்னி நாட்டை வன்னியர் சுதந்திரமாகவே ஆண்டுவந்ததுடன், வன்னியிலுள்ள மற்றைய எல்லா நிர்வாக அதிகாரிகளின் மேல் ஆதிக்கம் பெற்றிருந்ததோடு அவர்களை நியமிக்கும் உரிமையையுங் கொண்டிருந்தனர். நல்ல மாப்hபண வன்னியனின் ஓலையும் இதனை நருபிக்கின்றது.

யாழ்ப்பாணத்திற்போல முதலியார். உடையார், பண்டாரப்பிள்ளை. கண்காணி, தலையாரி என்ற பட்டங்களைப் பெற்றிருந்த பல தரப்பிலுமுள்ள அதிகாரிகள் வன்னிமைகளின் நிர்வாகத்திலும் இருந்தனரென்பதை இவ்வோலை மூலம் அறிய முடிகின்றது. முதலியார் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த பிரதானிகளின் அதிகாரம், கடமை என்பவற்றைப்பற்றி இவ்வாவணம் பல சான்றுகளைத் தருகின்றது. ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திலும் அதன பின்பும் யாழ்ப்பாணத்திலிருந்த நிர்வாகமுறையில் முதலியார் என வழங்கிய தலைவர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர். மாகாணங்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கித் தேச வழமைகளைப் பேணி, மக்களிடையே ஏற்படுந் தகராறுகளைத் தீர்த்து வந்ததோடு பண்டாரப் பிள்ளைகள் இறைவரி முதலியவற்றை மக்களிடமிருந்து பெறுவதற்கும் முதலியார்கள் உதவியளித்தனர்.

பனங்காமத்தில் முதலியார்கள் இக்கடமைகளை நிறைவேற்றியதோடு அந்த வன்னிமையின் உட பிரிவுகளுக்கும் அதிபதிகளாயிருந்தனர் என்பதை நல்லமாப்பாணனின் ஓலை மூலம் அறிய முடிகின்றது. ஆள்வயினார் கந்த உடையானைக் கிழக்கு மூலையின் முதலியாராகவும் நியமித்த பின் அப்பகுதியிலுள்ள உடையார் கண்காணி முதலிய எல்லோரும் அவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்று நல்ல மாப்பாணன் ஆணை பிறப்பித்தான்.

முதலியார்கள் வழக்குகளை விசாரித்துக் குற்றங் கண்டவிடத்து குற்றவாளிகளிடமிருந்து ஐந்து பொன்னுக்கு மேற்படாத தண்டனை விதிப்பதற்கும் குற்றங் கொடுக்க முடியாதவர்களை அடிப்பிப்பதற்கும் உரிமைபெற்றிருந்தனர். இவற்றோடு முதலியாருக்குப் பல சிறப்புரிமைகளும் கொடுக்கப்பட்டன. பதவிச் சின்னங்களாகப் பல்லக்கு, வெள்ளைக் கதிரை, வில்லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பாவாடை, கொடி, நாகசுரம், தாரை, மேளம் முதலிய வரிசைகளையும், கார்த்திகை, வருஷப்பிறப்பு, தைப்பொங்கல் முதலிய தினங்களிலே குடிமைகளின் சேவைகளைப் பெறுவதற்கும் முதலியார்கள் உரிமைபெற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்போல வன்னியிலும் முதலியார் போன்றோர் தம் சேவைக்கு ஊதியமாகப் பணத்தையன்றி நிலங்களையே பெற்றனர்.

நல்ல மாப்பாணன் என்ற பெயரைக் கொண்ட பலர் பனங் காமத்தில் வன்னிபங்களாயிருந்தனர். பதினேழாம் நு}ற்றாண்டின் இறுதியிலே கயிலை வன்னியனாரின் ஆட்சி முடிந்த பின் நல்ல் மாப்பாணன் என்ற ஒரு பிரதானி பனங்காமத்திற்கு வன்னிபமாகியிருந்தான். தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணன் தமக்கு மாறான பல செயல்களைப் புரிந்ததால் 1762ம் ஆண்டளவில் ஒல்லாந்த அதிகாரிகள் அவனை நீக்கி வி;ட்டுக் கருநாவல் பத்து, கரிகட்டுமூலை என்பவற்றின் வன்னிபமான அழகேசன் புவிநல்ல மாப்பாணனின் மேற்பார்வையிற் பனங்காமத்தை விட்டிருந்தனர். அதன்பின்பே தொஞ்சுவாங் குலசேகர நல்ல மாப்பாணன் வன்னிபமாகியிருக்க வேண்டும். கி. பி. 1782ம் ஆண்டில் வன்னியர் மீண்டும் ஒல்லாந்தருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கி. பி. 1790ம் ஆண்டளவில் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி பனங்காமத்து நல்லமாப்பாண வன்னியனை ஒல்லாந்தர் சிறைப்படுத்தினர். அதன் பின் பனங் காமத்து வன்னிமை அறிவுற்றது.

நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை

1. 1781
ஆண்டு சித்திரை மீ அ திகதி பனைங்காமப்பற்று அயுதாந்தி வன்னிபந்
2.
தொஞ்சுவாங்குலசெகர நல்ல மாப்பாண வன்னியனார் அவர்கள் கற்பித்தபடியாவது.
3.
பனைங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிள(ழ)க்கு மூலைக்குச் சேர்ந்த விளாங்குளம்.
4.
சாதி வெள்ளாழ(ள)ன் ஆள்வயினார் கந்த உடையான் வந்து கிழக்கு மூலைக்குத் தொளி(ழி)லும்.
5.
முதலியாரென்கிற பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று மிகுந்த எளிதாவுடனே மன்றாடிக் கேட்
6.
டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந்த உடையானுக்கு திசைவிளங்க நாயக
7.
முதலியென்கிற பட்டமுங்கட்டிக் கிள(ழ)க்கு மூலைப் பிறி(ரி)வுக்குத் தொளி(ழி)ரு(லு)ங் கற்பித்திருக்கி (ற).
8.
படியால் கிள(ழ)க்கு மூலைக்குச் சேர்ந்த உடையார், அயுதாந்தி, மொத்தக்கர்.
9.
பணிக்கமார், போதியகமக்காற(ர)ர், மற்றுங் குடியானவர்கள், வரத்தர். போக்க(ர்)
10.
கச்ச வடகாற(ர)ர், இனிமேல் வரப்பட்ட குடியானவர்கள், தலையர், பட்டங்கட்டிமார் ச(கலரும்)
11.
இவனைத் தங்கள் முதலியாரென்கிறதறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்(ற)
12.
பேர் சொல்லி அழைக்கவும்(.) இன்னமுமந்த ஊருக்குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங்கெட்(டு).
13.
பிளை(ழை) கண்ட இடத்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற்றம்போட்டு வாங்கவும்(.) குற்றங் (கொடுக்க)
14.
இடமில்லாத தாள்(ழ்)ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இருபத்தஞ்(சடி)
15.
அரைக்குப் பணிய அடிப்பிக்கவும் (.) இவன் சொல்லப்பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்hர பணிவிடை சகலரும்
16.
இவன் சொற் கீள(ழ)மைச்சலுடனே கேட்டு நடந்துகொள்ளவும்(.) இன்னமுமிந்தத் திசை விளங்க நாயக முதலியுடைய நயத்துக்கு வேண்டிய இவனுக்கு
17.
வெள்ளாண்மை(ச்) செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்றுக்கும் ஆள் அஞ்சுபேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும் அடையிறை சுவந்திர (?)
18.
உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாகவும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளைமேற் சட்டி கூரைமுடி.
19.
சேறாடி இருபத்துநாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளை பலகைக்கு வெள்ளை
20.
திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டுவிளக்கு, பகற்பந்தமேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், தாரை, மேளம், இப்படிக் குறித்த வரிசைகள் செய்(வித்துக்).
21.
கொள்ளவும்(.) கோயிற் சபை கொண்டச் சபை கலியாணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத்துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (.) ஆ(டி)
22.
கார்த்திகை வருஷப் பிறப்பு தைப்பொங்கலுக்கு வண்ணான் வந்து வெள்ளை கட்டவும்(.) பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும்(.) கொல்லன், தச்சன், அம்பட்(டன்).
23.
வண்ணன் பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமையும் அழைத்த நேரம் அவரவர் தொழலுடனே போய் அடுத்த
24.
வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக் கொள்ளவும்(.) கற்பித்த கட்டளைப்படிக்க எழுதினது( ) பரநிருப சிங்க முதலி (.)



அடிக்குறிப்பு 

1.
ஆநஅழசை ழக ஏயn புழநளெ வழ டுயரசநளெ Phட. (9-11-1979) வசயளெடயவநன டில ளுழிhயை Pநைவநசளஇ ஊழடழஅடிழஇ 1910. ஆநஅழசை ழக ர்நனெசiஉம ணுறயயசனநஉசழழn கழச புரனையnஉந ழக வாந ஊழரnஉடை ழக துயககnயியவயெஅ (1697) வசயளெடயவநன டில ளுழிhயை Pநைவநசளஇ 1911p 97.
2.
ஐடினை
3.
முiபெனழஅ ழக துயககயெ PP. 365 - 366
4.
ஐடினைஇ P 355 - 359.
5.
ஐடினை
6.
ஐடினை 377
7.
மாப்பாணன் என்ற பெயரைப் பெற்றிருந்த பல வன்னியரைப்பற்றி வையாபாடல் குறிப்பிடுகின்றது. நல்ல மாப்பாணன் என்ற பெயரைக் கொண்ட பல வன்னியபங்கள் அடங்காப்பற்றி லிருந்தனர். தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (1679) பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் பற்றிக் குறிப்புண்டு. பதினேழாம் நு}ற்றாண்டின் இறுதியில் (1697) தொன் பிலிப்ப நல்ல மாப்பாணன் பனங்காமம் பத்தில் வன்னியமாய் இருந்தான். பதினெட்டாம் நு}ற்றாண்டின் நடுவில் தமக்குப்பணிந்து திறைகொடுத்தமையால் தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணனை வன்னிபம் என்னும் பதிவியிலிருந்து ஒல்லாந்த அதிகாரிகள் நீக்கி யிருந்தனர்;.
8.
கி. பி. 1658ம் ஆண்டு முதல பன்னிரண்டு ஆண்டுகள்வரை பனங்காமத்து வன்னியர் திறை கொடுக்கவில்லையென்றும் கைலாச வன்னியனார் இறந்த வின் வன்னிபமாகிய காசியனார் ஒல்லாந்தருக்கு அடங்கியிருந்தான் என்றும் ஒல்லாந்த அதிகாரிகளின் அறிக்கைகள் கூறுகின்றன.
ளு. புயெnயிசயமயளயசஇ யேடடயஅயிpயெ ஏயnnலையn யனெ வாந பசயவெ ழக ய ஆரனயடலையசளாip’ துழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல (ஊ. டீ) ஏழட ஓஓஓஐஐஐஇ ழே 89. PP 221 - 222.

9.
கண்காணிகளுக்குத் துணையாகவிருந்த நிர்வாக சேவையாளர். அயுதாந்தி என்னுஞ் சொல் போத்துக்கேயர் காலத்தில் வழக்கில் வந்தது போத்துக்கேயர் வன்னிபங்களையும் அயுதாந்திகளென்று குறிப்பிட்டனர்.
10.
மிகவுந் தாழ்மையாக
11.
உடையார் என வழங்கிய பிரதானிகள் ஊர்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்தனர்.
12.
கண்காணி என வழங்கிய சேவையாளர் நிலங்களை அளவிடுதல், வரிமதிப்பீடு முதலிய கடமைகளைச்செய்து வந்தனர்.
13.
யானைகளைக் கைப்பற்றுவித்ததோடு மொத்தக்கர் என்போர் பணிக்கர்களின் அதிபர்களாயுமிருந்தனர்;
14.
பணிக்கர் யானைகளைக் கைப்பற்றிப் பழக்குவதைத் தம்முடைய தொழிலாகக் கொண்டிருந்தனர்.
15.
தலையர் (தலையாரி) என்போர் ஊர்த்தலைவர்களாயிருந்தனர்.
16.
மீனவர் வாழும் ஊர்களின் தலைவர்.