Thursday, December 1, 2011

பல்லவர் சத்திரியரே


இவர்கள் தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் 'பல்லவ சத்திரியர்' என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ்வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி - தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர். (57)

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப்பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாகல் வேண்டும். பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது. (58)

பின்குறிப்புகள்

48. Vide Dr.S.K.Aiyangar's Int to "The Pallavas of Kanchi" by R.Gopalan

49. D.Sircar's Successors of the Satavahanas, pp.97-140

50. Ibid. pp. 73,82,83

51. Ibid pp.163-165

52. Dr.K.Gopalachari's 'Early History of the Andhra country', pp.151-159

53. D.Sircar's Successors of the Satavahanas, pp.56,52

54. Ibid, Iat pp.3-4

55. 'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's "Administration and Social Life under the Pallavas" pp.6-10

56. Vide Dr.S.K.Aiyangar's Valuable Introduction to the "Pallavas of the Kanchi", by R.Gopalan.

57. Dr.C.Minakshi's "Administration and Social Life under the Pallavas", pp 12-13