பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழமன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். தொண்டைமான் என்பவர் உண்மையில் பல்லவக்குடிகளே. பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.இளந்திரையன் 'தொண்டைமான்' என்ற பட்டத்தை தரித்திருந்தான்.கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது கம்பரின் சிலையெழுபது நூல். கருணாகார தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும்.. சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது...
http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html
இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள்.இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.
பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர்.16 ஆம் நூற்றாண்டின் பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்போர் உண்மையான பல்லவர்குடி கிடையாது.அவர்கள் வடுகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.வடுகர் உண்மையான பல்லவராய மன்னனைக் கொன்று விட்டு தம்மை பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர். இதற்கிடையில் பிற்காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த வடுகர் 'தொண்டைமான்' பட்டத்தை தாங்கி வந்தனர்.அவர்களின் கீழ் பணிபுரிந்த கள்ளர் குலத்தார் தங்களை தாங்களாகவே 'தொண்டைமான்' என அழைத்துக் கொண்டனர்.இதுதான் கள்ளர் குலத்தாருக்கு தொண்டைமான் பட்டம் வந்தமுறை (இதன் பொருட்டே இவர்கள் தனியாக 'கள்ளர் குல தொண்டைமான்' என்றே தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படுகிறார்கள்). காரணம் உண்மையான 'தொண்டைமான்' 'பல்லவராயர்' பரம்பரையினருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் பல்லவர்களும் சேரர்களும் அக்னிக் குல க்ஷத்ரியர்கள் என்பதும். அக்னிக்குல க்ஷத்ரியர்கள் வன்னியர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. உண்மையான 'பல்லவராயர்' 'தொண்டைமான்' என்போர் 'பண்டாரத்தார்' என்ற விருதுப் பட்டம் கொண்ட வன்னிய பரம்பரையினரே. வன்னியரான தமிழ் அறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் (சோழர் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதியவர்)பற்றி அனைவரும் அறிவர்.