Thursday, December 1, 2011

கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம் சிதம்பரம்:


அடங்காப்பற்றிலே அதிகாரஞ் செலுத்திய வன்னியரின் ஆவணங்களில் இரண்டு மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றுளொன்று பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் வழங்கிய ஓலை@ மற்றையது இதுவரை பிரசுரிக்கப்பட்டாத கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம். இப் பட்டயம் 11 அங்குல நீளமும் 10 ½ அங்குல அகலமுங் கொண்ட செப்புத் தகட்டிலே இரு பக்கங்களிலும் எழுதப்பெற்றுள்ளது. இச்செப்பேடு சக வருடம் 1644இல் (கி. பி. 1742) யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னியர் பலர் சிதம்பரத்திலுள்ள அற நிலையமொன்றுக்குக் கொடுத்த தானங்களைப்பற்றிக் கூறுகின்றது.

வன்னியர் சிதம்பரத்திலே பரராச சேகர மகாராசனின் கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானிடம் தாம விட்ட நிவந்தங்களை ஒப்படைத்தனரென்று செப்பேடு கூறுவதால் பரராச சேகரன் முன் சிதம்பரத்தில் அமைந்திருந்த இராசாக்கள் தம்பிரான் மடம் எனப் பெயரிய அறநிலையத்தை வன்னியரும் ஆதரித்து வந்தனரென்பது புலனாகின்றது.

‘தங்கயிலைப் பிள்ளை வன்னியனார் மடதர்மத்துக்கு’ என்ற மொழித்தொடர் செப்பேட்டில் வருவதால் கயிலாய வன்னியன் என்ற பிரதானியும் முன்பு இம் மடத்திற்குச் சில சிவந்தங்களை விட்டிருந்தான் என்று கருதலாம். எனவே, யாழ்ப்பாண மன்னர் குலம் அழிந்தொழிந்து நெடுங் காலஞ் சென்ற பின்பும் யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் சிதம்பரத்திலே பரராசசேகரன் அமைத்திருந்த மடத்தைப் பேணிவந்ததோடு மட தர்ம ஏற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதற்கான ஆதரவையும் அளித்து வந்தனர் என்பது இச் செப்பேட்டில் வரும் தகவல்களினாற் புலனாகிறது.

அடங்காப் பற்றைச் சேர்ந்த வன்னியர் பலர் ஒன்று சேர்ந்து மடதர்ம ஏற்பாடுகளைச் செய்தமை கவனத்திற்குரியது. வன்னியர் தம்மிடையே போர் புரிந்து வந்தபோதும் ஒல்லாந்த ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சியேற்படுத்துங் காலங்களில் ஒத்துழைத்தனர். அடங்காப்பற்றிலிருந்த வன்னியர் பதினெட்டாம் நூற்றாண்டிற் சமய விவகாரங்களைப் பொறுத்தமட்டில் இணைந்து பணியாற்றத் தயங்கவில்லை என்பதற்கு இப்பட்டயத்திலுள்ளவை சான்றளிக்கின்றன.

அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தேவையான அரிய சான்றுகள் இப்பட்டயத்திலே வருகின்றன. அடங்காப் பற்றிலுள்ள வன்னிநாடுகள் பலவற்றின் பெயர்களும் அவற்றில் அதிகாரஞ் செலுத்தியிருந்த குறுநில மன்னர்களின் பெயர்களும் பட்டயத்தில் வந்துள்ளன. பனங்காமம் பத்தில் நிச்சயசேனாதிராய முதலியாரும் கரிகட்டுமூலை, தென்னமரவடி என்னும் பத்துக்களில் புவிநலல்மாப்பாண வன்னியனார், புண்ணியபிள்ளை வன்னியனார் என்போரும் வன்னிபங்களாயிருந்தனர். மேல்பத்தில் சூராண தீர வன்னியராய முதலியாரவர்களும் கந்தையினா வன்னியனாரவர்களும், மேல் பத்து - முள்ளியவளையில் இலங்கை நாராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உடையாரும் வன்னிபங்களாயிருந்தனர். என்பதைச் செப்பேட்டின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த நீலையினா வன்னியனார், மூத்தர் வன்னியனார் ஆகியோரைப் பற்றியும் செப்பேடு குறிப்பிடுகின்றது.

வடஇலங்கையில் யாழ்ப்பாண அரசு எழுச்சிபெற முன்;பே வன்னிமைகள் தோன்றியிருந்தன. பாண்டிநாட்டிலிருந்து ஆரியச்சக்கரவர்த்தி படையெடுத்து வந்து வட இலங்கையைக் கைப்பற்றி நல்லு}ரில் இராசதானி அமைத்திருந்த நாட்களில் அவனோடு கூடி வந்த படைத் தலைவர்கள் பலர் அடங்காப் பற்றுக்குச் சென்று அங்குள்ள குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். எனவே யாழ்ப்பாண அரசின் எழுச்சியோடு வன்னி நாடுகளிற் பல புதிய குறுநில மன்னர் குலங்கள் அதிகாரம் பெற்றன. பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளில் வன்னியிலே ஏழுக்கு மேற்பட்ட குறுநில அரசுகளிருந்தன வென்று கொள்வதற்கிடமுண்டு. காலப் போக்கில் அயல்நாடுகள் மேற்பலம் வாய்ந்த வன்னியர் ஆக்கிரமித்ததின் விளைவாக ஏழு வன்னி நாடுகள் வளர்ச்சி அடைந்தன.

செட்டிக்குளம். மாதோட்டம் போன்ற இடங்களிற் பறங்கியர் காலத்தில் வன்னியரின் ஆட்சி அழிவுற்றது. அடங்காப்பற்றிலுள்ள வன்னியரை அடக்கித் திறை கொள்வது போத்துக் கேயருக்கு மிகச் சிரமமாக இருந்தது. கி. பி. 1645 இல் வன்னி நாடுகளிலிருந்து 37 யானைகளை யாழ்ப்பாணத்துப் பறங்கியதிகாரிகள் திறையாகப் பெற்றனர்.

ஒல்லாந்தரும் வன்னியரை ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வழமையான திறையைப் பெற முயன்றனர். ஒல்லாந்த தேசாதிபதிகளும் ஒல்லாந்தராட்சியில் யாழ்ப்பாணப்பட்டினத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகளும் எழுதிய அறிக்கைகளில் வன்னியர்பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வடஇலங்கையில் முள்ளியவளை, கருவநாவல்பத்து, கரிகட்டுமூலை, தென்னமரவடி, மேல்பத்து, பனங்காமம் என்ற ஆறு வன்னிகளில் வன்னிபம், வன்னியனார் என்னும் பட்டங்களைக் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்தனர் என்பதை இவ்வறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.

தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (9-11-1979) வன்னியர் பற்றி மேல்வருந் தகவல்கள் கிடைக்கின்றன.


வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் நல்லமாப்பாணன் 11½ யானை
காசியனார்
விளாங்குளம் நல்லமாப்பாணன் 4(½)
பரந்தன் வெளி நல்லமாப்பாணன் 2
2. மேல்பத்து-முள்ளியவளை குட்டிப்பிள்ளை 8(½)
3. கரிகட்டு மூலை சியாந்தனார் 7
4. கருநாவல் பத்து திரிகயிலை 7
புதுக்குடியிருப்பு வன்னியனார்
5. தென்னமரவடி சியமாத்தை 7

யாழ்ப்பாணப் பட்டினத்திலே தலைமை யதிகாரியாக விருந்த கெந்திரிக் ஸ்வாதிக்குருன் எழுதிய அறிக்கையில் (1697) மேல் வருந் தகவல்கள் உள்ளன.