Sunday, December 4, 2011

சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகர்


  இவர் பெயருக்கு முன்னாள் இருக்கும் சர்தார் பட்டம் ஆங்கில அரசு வழங்கியதல்ல .  இவரது துணிவையும் மக்கள் சேவையும் பாராட்டி மாகத்மா காந்தி வழங்கிய பட்டமாகும் . தமிழகத்தில் ஐவரும் சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியிடம் இப்பட்டத்தை பெற்றவர் இருவர் ஆவர் .
ஆதிகேசவ நாயகர் தனது 27 வது வயதிலேயே  -
1.மதராஸ் சதர்ன் மராட்டா ரயில்வே யூனியன் 
2.சதர்ன் ரயில்வே யூனியன்
3.ரயில்வே யைங்க்மன் யூனியன் ஆகிய முன்று தொழிழ்ச்சங்கங்களை தோற்றுவிட்டு அவைகளின் தலைவராகி தொண்டாட்டாற்றியவர் .
    1921 இல் பம்பாய் சென்று காந்தியடிகளை சந்தித்து தமிலகத்திருக்கு அழைத்துவந்து மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தினார். காந்தியடிகளை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆதிகேசவ நாயகர்.
மீண்டும் சிறையில் இருந்து விடுதலையான  காந்தியை சென்னைக்கு அழைத்து வண்டு 21.12.33 அன்று ராபின்சன் பூங்காவில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் . காந்தியின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்தார்.
1921, 36  ஆகிய ஆண்டுகளில் நேரு தமிழக சுற்றுபயணம் மேற்கொண்ட போது; அவருடன் தமிழகம் முழுவது பிரச்சாரம் செய்தவர் நாயகர் .

காந்தியடிகள் அறிவிட்ட வரிகொடா இயக்கத்தை தீவிரமாக ஆதரித்து சென்டிரல் ரயில் நிலையம் அருகில் இருந்த தனது நூற்றுகணக்கான ஏக்கர்களுக்கு வரிக்கட்ட மறுத்ததால் அந்த நிலங்களை அரசு எடுத்து கொண்டது . அந்த நிலங்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரங்கோடி.
காந்தியடிகள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தீவீரமாக பங்காற்றி பல முறை சிறை சென்றுள்ளார். இவர் மொத்தம் 11  ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். காமராசரே கூட 9  ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடதக்கது .

இப்படி -

தமிழகத்தின் ஒப்பற்ற சுதந்திர போராட்ட போராளியாக விளங்கிய சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகருக்கு சென்னையில் எங்குமே சிலை இல்லை .ஆனால் இங்கு யார் யாருக்கோ பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது, வன்னியர் வரலாறு இங்கு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது அதற்கு சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகர் வரலாறு ஒன்றும் விதிவிலக்கல்ல ......

மூலம் : அச்சச்சமில்லை அறக்கட்டளையின் வன்னியர் நூலில் இருந்து