Google+ Followers

Monday, December 12, 2011

இலங்கையில் வன்னியர் குடியேற்றமும் , வன்னியரின் ஆரம்ப வரலாறும் - வையாப்பாடல் :


வன்னியர் குடியேற்றத்தின் காலம்

கூழங்கையாரியச் சக்கரவர்த்தியின் காலம் கி. மு. 101 எனக் கண்டோம். அவனது மாமன் மகளான மாருதப் பிரவை காலமும் அதனையண்டியேயிருத்தல் வேண்டும். ஒரு சமயம் கி மு. முதலாம் நு}ற்றாண்டின் முற்பகுதியாதல் கூடும்.

அவளின் மகனான சிங்கமன்னவன் காலம், கி. மு முதலாம் நு}ற்றாண்டின் நடுப்பகுதியாகலாம், வையா பாடலின்படி இவனே அறுபது வன்னியர்களை அடங்காப்பற்றிற் குடியேற்றியவனாவான். எனவே, வன்னியர் இலங்கையிற் குடியேறிய காலம் கி மு 50 ஆம் ஆண்டு வரையிலென வையாபாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கிறது.

மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடகசவுந்தரியின் அரசு காலம் கலிபிறந்து மூவாயிரத்தொரு நு}ற்றெண்பதாம் ஆண்டு முதல் நாற்பது வருடங்களெனச் சொல்லப்படுகிறது. அது கி. பி. 79 முதல் கி. பி. 119 வரையுள்ள ஆண்டுகளுக்குச் சமமானது. இவளது கணவனான மகாசேனனே குளக்கோட்ட மன்னன் என்று கருதப்படுவதால், அவன் வன்னியரை இலங்கையிற் குடியேற்றுவித்த காலம் இம்மான்மியத்தின்படி கி. பி. 100 வரையிலெனக் கொள்ளலாம்.

இவ்விரண்டு கணிப்புகளுக்குமிடையில் 150 ஆண்டுகளே வித்தியாசமாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

வன்னியரின் ஆரம்ப வரலாறு

இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு பற்றிய குறிப்புக்களே வையாபாடலிற் பெரிதுங் காணப்படுகின்றன. கோணேசர் கல்வெட்டிலும் அவ்வகைக் குறிப்புக்களை அதிகமாகக் காணலாம். இரு நு}ல்களிலும் கூறப்படும் வன்னியர் வருகை இருவேறு காரணங்களுக்காக ஏற்பட்டனவாகக் காண்கிறோம். அவ் வன்னியர்கள் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்தே இலங்கைக்கு வந்தனரென இரு நு}ல்களும் கூறும்.

தற்பொழுது தமிழ் நாட்டிலே சேலம் முதற் புதுச் சேரிவரை வன்னிகுலத்தினர் பரந்து வாழ்கின்றார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார், எவ்வாறு அவர்கள் அங்கெல்லாம் பரந்தனர் என்பன பற்றிப் பல புராணக்கதைகளும் ஐதீகங்களும் உள.

வன்னியர்கள் அக்கினி குலத்தவர் என்பது புராணக்கதை. இது வஃநிஎன்ற வட சொல்லின் பொருளாய அக்கினி என்ற கருத்தைக் கொண்டெழுந்ததாகலாம். சிலை எழுபதுஎன்னும் நு}ல் அவர் குல மான்மியத்தைஅவ்வாறு கூறும். வன்னியருக்குரிய சின்னம் சிலை (வில்) ஆகும். கல்லாடத்தில் வன்னியருக்குப் பன்றியுற்பத்தி கூறப்பட்டுள்ளது.

இந்த நவீன உற்பத்தி வெறுங் கற்பனையன்று, உண்மைச் சம்பவமொன்று பொதிந்த உருவகமேஎன்பர். திரு. வி. குமாரசுவாமி அவர்கள். வன்னியர்கள் பலர் பன்றிக் கொடி யுடையோரான சாளுக்கிய அரசரின் கீழ்ச் சேவகத்தமர்ந்திருந்து, பின் தெற்கின் கண்ணிழந்து மதுரைப் பாண்டியனாகும் சோமசுந்தரனிடம் பணிவிடை பூண்டனரென்பதும். சோமசுந்தர பாண்டியனெ சிவபெருமானாகக் கொள்ளப்பட்டமையின் இப்பெருமான் கார்நிறத்த செங்கட் பிறை எயிற்றுப் பள்ளியீன்ற பன்னிரு குட்டிகளை நாற்படையிலும் புகழ் சிறந்த வன்னியராக்கினாரெனக் கற்பிக்கப்பட்டதுஎன்பதும் அன்னார கருத்தாகும்.

வன்னியும் வன்னியர்களும்என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நு}லில், வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் (சுநதிரவள) என்று கூறலாம்எனக் குறித்துள்ளார்.

வையாபாடல் நு}லை 1922 ஆம் ஆண்டு பினாங்கில் (Pநயெபெ) பதிப்பித்த திரு. இ. து. சிவானந்தன் அவர்கள் அதன் முகவுரையில் வன்னியர் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:-

கருமுகிற் கயிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கொன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள் வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்
(கல்;லாடம் - செய்யுள் - 37)

இந்தியாவிலிவர்கள் கமத்தொழில் செய்யுங் குடியானப் பிள்ளைகளிலொரு வகுப்பினராய் எண்ணப்படுகிறார்கள். கமத்தொழில் செய்பவர்கள் இப்பொழுதும் சுகபெலமுள்ளவர்களானபடியால், ஆதிகாலத் தமிழர்கள் கமத்தொழிலைச் செய்த அச் சாதியிலிருந்தே தங்கள் படைகளுக்கு வேண்டிய போர்வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். படையிற் சேர்ந்த அவர்கள் படையாட்சியாரென்றழைக்கப்பட்டார்கள்.

படையிலுள்ள ஒருவன் அநேக சண்டைகளுக்குப் போய், அதிவீரபராக்கிரம முள்ளவனாகவும், விவேகியாகவும் காணப்பெறின், அவன் வன்னியன்என்ற உத்தியோகத்திற் குயர்த்தப்படுவான். இப்படியாக, “வன்னியன்உத்தியோகத்தைப் பெற்றவர்களிலிருந்தே வன்னியச்சாதி தோன்றிற்று. வன்னிய உத்தியோகத்தில் அதிகம் திறமையுடையவர்களை ராசாக்கள் தெரிந்து கவண்டன்என்னுமுத்தியோகத்திலமர்த்தி வந்தார்கள்.

ஒரரசன் தனக்குப் பின்னர் லிராச்சியத்தைப் பரிபாலனஞ் செய்யத்தன் வமிசத்தில் உரிமையின்றி இறக்குங் காலத்தில், அவன் படையில் முதன்மையாயிருந்த வன்னியர்களவ்விராச்சியத்தைக் கைப்பற்றி யரசு புரிந்தார்கள். இவ்விதமாக வரசு புரிந்த வன்னிய ராசாக்கள் சத்திரிய வன்னியர்களென அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு இராயரென்றும், பாளையப்பட்டு வன்னியர்கள் என்றும், பள்ளிராசாக்கள் என்றும் நாமங்களுண்டு

வன்னியர்கள் பல்லவர் குலத்தவர் என்றும் ஒரு கொள்கையுண்டு. பல்லவர் ஆதியிலே பழங்குடி மக்களுக்குத் தொல்லை கொடுக்காது காடுகளை வெட்டிக் குடியேறி வந்த காரணத்தால் அவர்கள் காடுவெட்டிகள் எனவும் அக்காலத்தில் வழங்கப்பட்டனர். அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ்;ப் புலமையுடையவரும், தொண்டை நாட்டரசருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நு}ற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் என்னும் பல்லவர்கோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிறார். இவரது பெயர் செப்பேடுகளிற் பரமேச்சுரவன்மன் என்றே காணப்படுகிறது. காடவர் என்னும் பெயரின் வடமொழிப் பெயர்ப்பாகிய வன்னியரென்னும் பெயரான் பின்னர் அப்பல்லவர் வழங்கப்பட்டாரென்று கொள்ள இடமுண்டு. இது வனமென்ப தடியாகத் தோன்றிய வடசொற் சிதைவு. காலப்போக்கிற் பல்லவரென்னும் பெயர் பள்ளிகளென மருவி வழங்கலாயிற்று என்பது புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் கருத்து.

இவ்வாறாக வன்னியரின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் எது கொள்ளப்படினும், அவர்கள் அரசர்களாற் கௌரவிக்கப்பட்ட குலத்தினராகவும் பெரும் வீரர்களாகவும் விளங்கினார்கள் என்பது பெறப்படும்.