வையாபாடல் ஆய்வுரை
நுலாசிரியர் வரலாறு
வையாபாடல் என்ற நு}லை, யாழ்ப்பாண மன்னர்களுள் ஒருவனான செகராசசேகரனின் அவைப்புலவர் வையாபுரி ஐயர் இயற்றினார் என்று வையாபாடல் ஏட்டுப் பிரதிகள் குறிக்கும். யாழ்ப்பாண வைபவமாலை என்ற நு}ல் “வையா என்னும் புலவர் சயவீரசிங்கை ஆரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரனின் காலத்தில் (கி. பி. 1380 – 1414) சமஸ்தானப்புலவராய்க் கீர்த்தியுடன் விளங்கினார்@ இவர் “வையாபாடல்”, “பரராசசேகரன் உலா”, “பரராசசேகரன் இராசமுறை” என்னும் நு}ல்களின் ஆசிரியர்”, எனக் கூறும்.
யாழ்ப்பாண வைபவமாலையின் ஆசிரியர் மாதகல் மயில் வாகனப்புலவர் வையா என்னும் புலவர் மரபிலுதித்தவர் என்பர்.
நு}ற் பொருள்
வையாபாடல் என்ற இந்நு}ல் “இலங்கை யரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையினையும்” கூற எழுந்த ஒன்றாகையால், நு}லாசிரியன் காலத்தரசாண்ட பரராசசேகரன், செகராசசேகரன் சூலத்தைக் காட்டுமுகத்தால், யாழ்ப்பாணத்து முதலரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் சூலத்தையும், அவன் மைத்துனியாய மாருதப்பிரவையின் வரவையும் முதலிற் கூறிப் பின் வன்னியர் குடியேற்றம் பற்றிய செய்திகளையும், அவர்கள் அடங்காப்பற்றில் ஆதிக்குடிகளை அடக்கி ஆண்டசம்பவங்களையும் விரித்துரைக்கும்.

இராணவன் இறந்தபின் இலங்கை மன்னனாய் இராமனால் முடிசூட்டப்பெற்ற விபீஷணன் முன்னிலையில் யாழ் வாசிப்பவன் ஒருவன், இலங்கையின் வடகடற்கரையிலே தனக்குக் கிடைத்த மணற்றிடற் காட்டைத் திருத்தி நற்பயிர் செய்து சோலையாக்கி, ஆங்கு மண்டபமமைத்துப் பின் தசரதன் மைத்துனனான குல(க்)கேது என்பவனது மகன் கோளுறு கரத்துக் குரிசி’லைக் கூட்டி வந்து, சக்கரவர்த்திப் பட்டஞ் சூட்டி, அந்நாட்டிற்கு யாழ்ப்பாணமெனப் பெயருமிட்டு அதனை அரசாள வைத்தான் என்றும், அப்பொழுது கலியுக ஆண்டு 3000 ஆகியிருந்தது என்றும் இந்நு}ல் கூறும். இதுவே இதன் முதற் சம்பவமும் ஆண்டுக் குறிப்புமாகும்.
கலியுக ஆண்டு 3000 என்பது, கி. மு 101 க்குச் சமமானதாகும். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழரசிருந்ததென்பதனையும், யாழ்ப்பாணம் என்ற பெயர் வையா பாடலிற் கூறியுள்ள யாழ் வாசிப்பவன் காரணமாகவே எழுந்த தென்பதனையும், அக்கதை வையாபாடலில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டதன்றென்பதையும், இதிற் கூறப்பட்டுள்ள கண்ணகி பற்றிய ஆண்டுக்கணக்கு ஆதாரபூர்வமானதே .

“கோளுறுகரத்துக் குரிசி” (கூழங்கைச் சக்கரவர்த்தியின்) மாமனான உக்கிரசோழனது மக்கள் சிங்ககேதென்பவனும் மாருதப்பிரவை என்பவளும் இலங்கை சேர்ந்தனரென்றும், மாருதப்பிரவைக்கிருந்த குதிரைமுகநோய் கீரிமலைத்தீர்த்தத்திலாட மாறிற்றென்றும், அதன் பின் அவள் கதிரையம்பதியிற் சென்று, “அரன் மகவினை” வணங்கி வருங்கால், உக்கிரசிங்கசேனன் அவளை மணந்து வாவெட்டி மலையில் மண்டபமியற்றி அங்கிருந்தரசாட்சி செய்தானென்றும், அவர்களுக்குப் பிறந்த “சிங்க மன்னவன்” தன் மாமனாய காவலன் சிங்ககேதென்பவனிடம் பெண் கேட்டனுப்ப, அவனும் சமது}தி என்ற தன் மகளை அறுபது வன்னியர் புடை சூழ அனுப்பி வைத்தானென்றும் வையாபாடல் கூறும்.
இக்கதையினைச் சுவாமி ஞானப்பிரகாசர் ஆராய்ந்து, இங்கு கூறப்படும் உக்கிரசிங்கசேனனே குளக்கோட்டு மன்னன் எனவும், மாருதப் பிரவையே ஆடக சவுந்தரி யெனவுங் கருதுவர். மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடக சவுந்தரியின் கதை கூறப்படுமிடத்து, அவள் கணவன் மகாசேனன் எனவும் அவன் “தட்சணாகயிலையில் சிவாலயங்களை நேர்பண்ணினா” னெனவும், அவர்கள் புத்திரன் சிங்ககுமாரனனவும் விவரிக்கப்பட்டிருக்கிறது. கோணேசர் கல்வெட்டிலே, குளக்கோட்டிராமன் திரிகோணமலையிற் கோயிலுங் குளமுங் கட்டுவித்து, அவற்றிற்கான கடமைகள் செய்வித்ததற்காக வன்னியரை ஆங்கு குடியேற்றுவித்தானென்று சொல்லப்படுகிறது. கைலாய மாலை என்ற நு}லில், “மன்னர் மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி” கடலருவித் தீர்த்தமாடித் தன் நோய் தீர்க்க வந்தவிடத்துக், “கதிரைமலை வாழு மடங்கன் முகத்தாய்ந்த நராகத்தடலேறு” அவளைக் கைப்பிடித்து, “வரசிங்கராயன்” எனும் புதல்வனைப் பெற்றனன் என்று சொல்லப்படுகிறது.
இக்கதைகள் அனைத்திலும் சில பொதுத் தன்மைகள் இருத்தலை அவதானிக்கலாம். “சிங்கமன்னவன்” என்று வையாபாடலிற் கூறப்படுபவனே. “சிங்ககுமாரனென மட்டக்களப்பு மான்மியத்திலும், “வரசிங்கராய” னெனக் கைலாய மாலையிலும் “வீரவரராய சிங்கம்” என வையா பாடல் வசனத்திலும் சொல்லப்படுகிறான். உக்கிரசிங்கனென யாழ்ப்பாண வைபவ மாலையிலும், உக்கிரசிங்க சேனனென வையாபாடலிலும், மகாசேனனென மட்டக்களப்பு மான்மியத்திலும், உக்கிரசேன சிங்கமென வையாபாடல் வசனத்திலும், குளக்கோட்டிராமனெனக் கோணேசர் கல்வெட்டிலும் கூறப்படுபவன் ஒருவனேயாகலாம். இவனே முதலில் வன்னியர்களை இலங்கையிற் குடியேற்றினானெனக் கோணேசர் கல்வெட்டுக் கூறும். ஆனால் வையாபாடல், அவன் மகனான, சிங்கமன்னவன் அறுபது வன்னியர்களை அடங்காப்பற்றில் முதலிலே குடியேற்றினானென்னும்.