Thursday, December 1, 2011

லீய்டன் சிறிய செப்பேடு



முதலாம் குலோத்துங்க சோழன், மேற்கண்ட பௌத்தபள்ளிக்கு 

அளிக்கப்பட்ட தானத்தை அவன்காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் 

விரிவாக்கிய தானத்தை  அளிக்கவும் அக்காலத்திருந்த மேற்படி 

கிடாரத்தைரயனின் தூதன் ராஜவித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க 

ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பித்தபடி, மன்னன் தன் இருபதாவது ஆண்டில் தன் 

ஆயிரத்தளியான ஆகவமல்ல குலகாலபுரத்து கோயில் (அரசன் இல்லம்) 

உள்ளால் திருமஞ்சன சாலையில் பள்ளிபீடம் 'காலிங்கராய'னில் எழுந்தருளி

 இருந்தேபாது சோழகுலவல்லி பட்டினத்து (நாகப்பட்டினம்) இராஜராஜ 

"பெரும்பள்ளி" (மேற்படி விகாரம்) மற்றும் இராஜேந்திர "பெரும்பள்ளிக்கு" 

(இவர் காலத்து இராஜேந்திர சோழன் பெயரிலும் வேறு விரிவுற்றது போலும்)

 அளித்திட்டைத விவரிக்கும் ஆவணமாகும்.தற்காலம் ஐேராப்பாவில் 

லீய்டன் (deg.52-10' N; 4-30' E - நெதர்லாந்து)

நகரத்து காப்பகத்தில் இருப்பதால் இவை 'லீய்டன் செப்பேடுகள்' என

குறிக்கப்படுகின்றன.