பங்கள நாட்டு கங்கரையர்கள் பல்லவர் காலம் தொட்டு இருந்து வரும் மிக முக்கிய குறுநில மன்னர் மரபினர்கலாவார்கள் .பங்கள நாடு என்பது பழைய வட ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக அன்றைய காலகட்டத்தில் விளங்கியிருக்கிறது . இவர்கள் மேற்கு கங்கரையர்களின் ஒரு பிரிவினர்கலாக இருந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது .ஆனால் இவர்கள் தமிழ் மரபினை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டு சார்ந்த ஆதாரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன .
ஆதித்ய சோழன் தொண்டை மண்டலத்தை வெற்றிகொண்ட பொழுது , பங்கள நாட்டு கங்கரையர்களை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்திருக்க கூடும் .பங்கள நாட்டு மகாதேவர் ஆகியோர் முதலாம் ஆதித்ய சோழனின் காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர் .இவர்கள் கோவிலுக்கு கோடை அள்ளித்ததை தவிர வேறெதுவும் சாசனங்களின் வாயிலாக கண்டறிய முடியவில்லை .அவனின் உடன் பிரந்தவனான செம்பியன் புவளி கங்கரையன் , முதலாம் ஆதித்ய சோழனின் கீழ் சிற்றரசனாக இருந்தான் .
தக்கோலப் போரில் கங்கரையர்களின் பங்கினை பற்றி தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் சில சாட்ன்றுகள் மூலமாக கங்கரையர்கள் சோழர்களுக்கு எதிராக இராட்டிர கூடர்களுடன் தொடர்பு வைத்திருந்ததை நம்ப வேண்டியுள்ளது. கி.பி .949 ஆம் ஆண்டை சார்ந்த கல்வெட்டு பங்கள நாட்டு குறுநில மன்னன அத்தி மள்ளரான கன்னரதேவ ப்ரித்தீவி கங்கரையர் என்பவரை குறிப்பிடுகின்றது . அதில் கன்னரதேவ கங்கரையர் சோழ மன்னன முதலாம் பராந்தகனின் மைந்தனான ராஜாதித்யனிடம் பெற்ற வெற்றியை பற்றிய குறிப்பு காணப்படுகிறது . மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் பங்கள நாட்டு குறுநில மன்னர் பற்றியும் மற்றும் இராட்டிர கூடர்களின் வெற்றியை பற்றியும் குறிப்பை காணும்போது , பங்கள நாட்டு கங்கரையர்கள் தக்கோலப் போருக்கு முன்பாகவே இராட்டிர கூடர்களுடன் இணைந்திருப்பர் என்ற எண்ணம எழுகிறது .எதுவாக இருப்பினும் கங்கரையர்கள் சோழ மன்னர்களுடன் இணைந்திருக்க வில்லை. பங்கள நாட்டு கங்கரையர்களின் பெயர்களை காணும்பொழுது ,அவர்கள் இராட்டிர கூடர்களின் கீழ் குறுநில மன்னனாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
சுந்தர சோழனின் மைந்தனான இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் காலக்கட்டத்தில் கங்கரையர்கள் மீண்டும் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக விளங்கினார்கள். இச்சோழ இளவரசனின் சாசனத்தில் மும்முடிச் சோழ செம்பியன் சீய கங்கரையன் தொண்டைமண்டல ஆட்சியின் ஒரு பொறுப்பினை பெற்றிருந்ததாக அறிய முடிகிறது .உத்தம சோழன் காலத்தில் பிரித்தீவி கண்கரையன் அளித்த கொடியை தவிர வேறேதும் தெரியவில்லை .
பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பங்கள நாட்டுக் கூத்தாடும் தேவன் ப்ரித்தீவி கங்கன் வன்னிய மாதேவன் அழகிய சோழனும், குலோத்துங்க சோழ ப்ரித்தீவி கங்கனான திருவண்ணாமலையுடையானும் குறுநில மன்னராக திகழ்ந்தனர்.
வன்னிய மாதேவன் அழகிய சோழனுக்கு சௌந்திர சிம்ம ப்ரித்தீவி கங்கரையனான அழகிய சோழன் வரம் தரும் பெருமாள் என்று மற்றொரு பெயர் இருதிருக்கிறது . இவரும் திருவண்ணாமலையுடையானும் காடவர்களும் எதிரான கூட்டில் சேர்ந்திருந்தது ஒரு கல்வெட்டில் இருந்து தெரிகிறது .
சௌந்திர சிம்மனின் புதல்வன் சீய கங்கனான சிறைமீட்ட பெருமாள் மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் ராஜராஜனின் குறுநில மன்னனாக விளங்கினான் .சிறைமீட்ட பெருமாள் என்ற பட்டம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆட்சி ஆண்டில் பெற்றிருக்கிறான் .
அதேபோல் உத்தம சோழன் கங்கனான செல்வா கங்கனும் அப்போழுதிருந்தவனே. மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் மேற்கூறிய சிறைமீட்ட பெருமாளும் , குலோத்துங்க சோழ ப்ரித்தீவி கங்கனும் , வீர கங்கன் என்பவனும் சிற்றரசர்களாக இருந்தனர். மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் கங்கரையர் சோழருடன் முரண்பட்ட செய்தி ஒரு கல்வெட்டிலிருந்து அறியபடுகிறது.