Google+ Followers

Monday, December 12, 2011

பள்ளி (அரசன்)


பள்ளி என்பது புனிதத்தை மற்றும் அரசனை குறிக்கும் சொல் என்பதை தமிழ் அறிந்த அனைவரும் அறிவார்கள்.
பள்ளிகூடம், பள்ளிவாசல், என்பது எல்லாம் புனிதத்தை குறிக்கும் சொற்கள் ஆகும்.தமிழ் அகராதியில் "பள்ளி" என்ற சொல் இழிவானதாக எங்கும் சொல்லப்படவில்லை என்பதை தமிழ் உலகம் அறியும்.தமிழ் மட்டும் அல்ல மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் "பள்ளி" என்பது பெருமைக்குரிய சொல்லாக தான் விளங்குகிறது.

ஆண்ட பரம்பரை சூழ்ச்சியில் வீழ்ந்து வறுமையில் உழன்ற சமயத்தில் வன்னிய ஏழைகளை ஏளனம் செய்ய "பள்ளி" என்ற சிறப்பு பெயர் இழிவானதாக சித்தரிக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நாற்றம்" என்றால் வாசனை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் காலப்போக்கில் துர்நாற்றம் என்னும் வார்த்தைக்கு பதில் நாற்றம் பயன்படுத்தப்படுவதை போல தான் அரசன் என்னும் பொருள் கொண்ட "பள்ளி" என்ற சொல் மாற்றப்பட்டது.

அரசர்கள்அமர்ந்து ஆட்சிபுரிந்த சிம்மாசனம் ஆகிய இருக்கைகளும் பெயர் சூட்டப்பெற்றிருந்தன. சிம்மாசனம் 'அரியணை' எனப்பட்டது. பாண்டியராசன், மழவராயன்,முனையதரையன், காலிங்கராயன் என அரியணைகள் தனிப் பெயரிட்டு அழைக்கப்பட்டன.அவை பள்ளிப்பீடம், பள்ளிக்கட்டில் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும்.

பல்லவர்கள் பவுத்த மதத்தை தழுவியதால் "பள்ளி" என்று அழைக்கப்பட்டனர். சமன பள்ளிகள் என்று சமன குருமார்கள் அழைக்கப்பட்டனர். சம்புவராய மன்னர்கள் தங்களை பள்ளி குலத்தவர் என்று தான் கல்வெட்டுகளில் பதித்து இருக்கிறார்கள்.

சேரர் அக்நி குலத்தவர். அனற் புதல்வன் என்று சேரன் பேரூர் புராணத்தில் குறிப்பிடப்படுகிறான்.சேர வம்சத்தின் வழி வந்த திருவனந்தபுர மன்னர்கள் "பள்ளிமார்" என்றே அழைக்கப்படுகின்றனர்.அரசனைக் கேரளத்தில் பள்ளி என்றும் கூறுகின்றனர். உதாரணத்திற்கு அரசனுடைய யானையை "பள்ளியுடைய யானை" என்றும் குதிரையை "பள்ளியினுடைய குதிரை" என்றும் குறிப்பிடுவர்.பள்ளி என்பது சேர அரசனைக் குறிப்பதாக அமைகிறது.அரசன் வருகிறாரென்றால் "பள்ளி வருகிறார்" என்று கூறும் வழக்கமும் அங்கு இருந்தது.பள்ளி(வன்னியர்) இனத்தார் விருதுப் பெயர்களில் "சேரநாட்டுக்கு அதிபதி" , "வயநாட்டுக்கு அதிபதி" போன்றவை அடக்கம்.


"பள்ளிப்படை"

தீப்பாய்ந்து இறந்த பெண்களை "வீரமாசத்தி'' என்பர். பின்னர் இவர்கள்"வீரமாசத்தி'' என்று வழிபடப்பட்டனர். சமுதாயத்தில் எல்லாப் பெண்களும்கணவன் இறந்த பின்னர் தீப்பாய்ந்தனர் என்று கொள்ள முடியாது. இவ்வழக்கம் மிகஅருகியே காணப்பட்டது. பலர் "கைம்மை" நோன்பாகவும்வாழ்ந்திருக்கக்கூடும். கண்டராதித்தன் திருத்தேவியரரான செம்பியன் மாதேவி தன் கணவன்இறந்தபின், பல ஆண்டுகள் மூன்று அரசர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து, பலஇறைபணிகள் செய்துள்ளார். இவர்கள் கைம்மை நோன்பு நோற்றவர்கள் ஆவர். அரசனும்அரசியும் இறந்தபின்னர் அவர்கட்குப் "பள்ளிப்படை"என்னும் சமாதிக்கோயில்கள் எடுக்கப்பட்டன. "பஞ்சமாதேவி பள்ளிப்படை'' என்ற பெயரைக் கல்வெட்டில் காணுகின்றோம்.

இப்படி மேலே சொல்லப்பட்டிருக்கும் வரிகள் தமிழ்நாடு பல்கலைகழகத்தின் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்க பட்டது....

ராஜராஜசோழனின் சமாதி கூட "பள்ளிப்படை வீடு" என்று தான்அழைக்கப்படுகிறது...இப்போது அந்த சமாதி இருப்பது ஒரு பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஒரு வன்னியர் வீட்டிற்க்கு பின்புறம்....

"போரிடும் பெரும்படை பள்ளி(அரசன்) வாழ் போர் படை" என்னும் வரிகள் வன்னியர் வீரத்தை பறைசாற்றும்...அரசன் இடம்பெறும் படை தான் பெரும்படையாகும்.

இதை எல்லாம் பற்றி எதுவுமே தெரியாமல்...சில முட்டாள் பசங்க...வன்னியக்குல க்ஷத்ரியர்களை "பள்ளி" என்றும் சொன்னால் அவர்கள் அதை இழிவாக நினைப்பார்கள் என்று தாங்களாகவே நினைத்து கொண்டு காலம் காலமாக சொல்லி வருகிறார்கள் :) ...இது எப்படி தெரியுமா இருக்கு?..ஒரு அரசனை...மோசமான அரசன் என்று சொன்னாலும் அவன் அரசன் என்பதை எப்படி மறுக்க முடியாதோ அப்படி இருக்கு...

இன்னும் சிலர். வன்னியக்குல க்ஷத்ரியர்கள் "பள்ளி" என்ற பெயரை நீக்கி விட்டதாகவும் சொல்வார்கள்.பெருமைக்குரிய வார்த்தையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை..இன்றும் தமிழ்நாடு சாதி பட்டியலில்.வன்னியக்குல க்ஷத்ரியர்கள் உட்பிரிவாக "பள்ளி" என்று இருப்பதை பாருங்க.

http://ncbc.nic.in/backward-classes/tamilnadu.html

இது எல்லாத்தையும் விட முக்கியமா.தமிழ் நாட்டில் வன்னியர்களை தவிர வேறு தமிழ் சாதி க்ஷத்ரியர் என்று சொல்லப்பட்டிருக்கிறதா என்பதையும் பாருங்க.