Sunday, December 4, 2011

தெலுங்கானாவும் வடதமிழ்நாடும் - ஒரு பார்வை


வஞ்சிக்கப்பட்டு சுரண்டப்படுவதில் ஆந்திராவில் தெலுங்கானாவும் , தமிழகத்தில் வடதமிழ்நாடும் ஒரே மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பவை .
ஒரு 50 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு , தெலுங்கானா ஏறக்குறைய சுரண்டலில் இருந்து மீட்கப்பட்ட பகுதியாகிவிட்டது .
வடதமிழ்நாடு மட்டும் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை நிலையிலேயே உள்ளது . ஒரு போராட்டம் இல்லை , ரத்த பலி இடப்படவில்லை அதனால்தான் –
தெலுங்கானா கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட மத்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் , வடதமிழ்நாடு கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் .
பார்ப்பன குழந்தையான சம்பந்தனை தேடி வந்து , ஞானப்பால் சுரந்து ஊட்டி வெறும் சம்பந்தனை திருஞானசம்பந்தனாக மாற்றி காட்சியும் தந்தாள் ‘அகிலாண்டேஸ்வரி பார்வதி ‘ என்பதும் –
பார்பனர் அல்லாத அப்பர் சுவாமிகள் ஆண்டு பலவாக அழுது அரற்றி விழுந்து புரண்டு கண்ணீர் மல்கி –
அப்பனும் நீயே ! அம்மையும் நீயே ! என சித்தம் கசிந்துருகிப் பாடிய பிறகே அப்பர் சுவாமிகளுக்கு சிவா தரிசன காட்சி கிடைத்தது என்பது புராணக்கதை. இந்தியாவில் மாநில பிரிவுகளும் மேற்கண்ட
புராணக்கதை அடிப்படியிலேதான் நிறைவேற்றப்படுகின்றன .
பார்ப்பனர் சாதியின் நலக்கானது உத்தர்கண்ட் மாநிலம் என்பதால்தான் ,எந்தவித போராட்டமும் இன்றி , வலுவான கோரிக்கைகளும் இன்றி , உத்தர்கண்ட் மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது .
பழங்குடியினர் மற்றும் உழைக்கும் மண்ணின் மைந்தர்களின் நலனுக்கானது என்பதால்தானே ஜார்க்கண்ட் மாநிலம் 50 ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட கடின போராட்டங்களுக்கு பிறகே பிரித்தளிக்கபட்டது .
ஜார்க்கண்ட் போலவே ஏழை எளிய மக்களின் நலனுக்கானது என்பதால்தான் தெலுங்கானாவுக்காக ஐம்பது ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது .
போட்டி ஸ்ரீ ராமலு உயிர்ப்பலி கொடுத்த பிறகுதானே ஆந்திர மாநிலக் கோரிக்கையை ஏற்று கொண்டார்கள் .
ஏழைகளின் நலனுக்காக எந்தக் கோரிக்கைக்கும் குடம் குடமாய் பச்சை ரத்தமும் , குலை குலையை உயிர்ப்பளிகளும் கொடுத்தால்தான் மத்திய ஆட்சியாளர்கள் கவனிப்பார்கள் என்பது நமக்கு தெரியும் .
இந்தக் காணிக்கைகளை செலுத்தாதவரை , வடதமிழ்நாடு கோரிக்கை அபத்தமானது என்றும் முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்றும் பேசினார் ப.சிதம்பரம் போன்றவர்கள் .
மகாத்மா காந்தியிடம் இவர்கள் கற்றுக் கொண்ட பாடம் இதுதான் என்பதும் நமக்குத் தெரிந்ததே .
வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைக்காக தியாகம் செய்ய நாங்கள் தயார்!