Wednesday, October 10, 2012

உடையார்பாளையம் வேலாயுதத்தின் படுகொலை சம்பவம்

திராவிட கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற கழகம் முதலில் வடதமிழகத்தில்தான் வேரூன்றி வளர தொடங்கியது . இதற்க்கு அடித்தளமாய் அமைந்தது உடையார்பாளையம் வேலாயுதத்தின் படுகொலை சம்பவம் . இவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் . இதை சகித்து கொள்ள முடியாத பார்ப்பனர்கள் ஒன்றுகூடி நவம்பர் 13, 1947இல் அவரை கொலை செய்தனர் .

பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், வழக்கு அவர்களுக்கு சாதகமாக இருந்ததோடு அவர்கள் 1949 இல் விடுதலையும் செய்யப்பட்டார்கள்
அப்போது திமுக கட்சியை தொடங்கியிருந்த அண்ணாதுரை , இதை கண்டித்து பல இடத்தில் அவரின் உருவ படத்தை திறந்து வைத்து பிரச்சாரம் செய்தார் . இந்த ஆதரவு குரலால் , திமுக என்பது தங்களுக்கான கழகம் என்று வன்னியர்கள் நம்பி திமுகவில் இணைய தொடங்கினார்கள் .

இதன் விளைவாக திமுக 1957 யில் போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் , 14 தொகுதிகள் வன்னியர்களின் பகுதியாக இருந்தது . ஆனால் எந்த வேலாயுதத்தை முன்னிறுத்தி வன்னியர்கள் மத்தியில் ஆதரவை தேடி கொண்டார்களோ, அந்த வேலாயுதத்தை அப்புறம் மறந்து விட்டார்கள் .