Thursday, October 11, 2012

வன்னியர்களை நக்சலைட்டு என்று சொல்லி சுட்டு கொன்றவர் எம்ஜிஆர்

வடதமிழகத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரை அழைத்து வந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதல் மாணவரணி நாத்தி காட்டியவர் வன்னியரான வல்லம்படுகை பாலசுந்தரம் .

இவரது தீவிர செயல்பாட்டின் காரணமாக திமுக மாணவர் அணியை சாரந்தவர்களால் , அதே மண்ணில் வெட்டி சாய்க்கப்பட்டார்...



....... 1972 இல் திமுகவை விட்டு எம்ஜிஆர் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுகவினரோடு எழுந்த அரசியல் விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டவர் சுகுமாரன் . இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் .

அப்போது இவரின் உயிர் தியாகம் எம்ஜியாரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம் .

சுகுமாரன் கொலையுண்ட சுவரொட்டி புகைப்படங்களை ஊரெங்கும் ஒட்டிதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது .
###
ஆனால் இந்த தியாகங்களுக்காக எல்லாம் எம்ஜிஆர் வன்னியர் இனத்திற்கு பெரிதாக எதுவும் செய்து விடவில்லை . மாறாக, தருமபுரி , வடார்க்காடு , திருப்பத்தூர் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளை கொம்புசீவி விட்டு பல வன்னிய இளைஞசர்களை நக்சலைட்டுகள் என்ற பெயரில் சுட்டு கொள்ள செய்தார் .