Thursday, August 19, 2021

வலங்கை இடங்கை இரண்டிலும் இல்லாத வன்னியர்கள்

 வருடம் - 1429

  • துளுவ வேளாளர் இல தியாகராஜன் பதிவு செய்த கல்வெட்டு

    கடலூர் அரியலூர் மாவட்டத்தில் (விருத்தாசலம் , திட்டக்குடி , ஜெயம்கொண்டாம் , பெண்ணாடம் , பழுவூர் , ஆடுதுறை , திருப்பனந்தாள் , கொருக்கை, அசூர் , எலவனாசூர் , கோவிந்தபுத்தூர்

    பகுதியில் விஜயநகர அரசின் புதிய வரி விதிப்பை எதிர்த்து வரிகளால் துன்பம் அடையும் வலங்கை இடங்கை சாதிகள் இணைந்து தீர்மானம் போடுகிறார்கள்

    அதாவது வரிகளை போட்டு வலங்கை இடங்கை மக்களை துன்புறுத்திய

    விஜயநகர பிரதானிகள் / அதிகாரிகள்
    ஜீவிதக்காரர்கள்

    "காணி உரிமையுடைய " சாதிகளான பிராமணர்கள் , வேளாளர்கள் , வன்னியர்கள் க்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் புதிய வரி தரமாட்டோம்னு

    இதுல பார்க்க வேண்டியது ,

    1. இந்த பகுதி அனைத்துமே வன்னியர் பகுதி . இங்கு 1429 களில் வன்னியர் என்றே அழைக்கப்படும் பள்ளிகள்

    2. வன்னியர்கள் " வலங்கை இடங்கை " இரண்டிலுமே இல்லை . பிராமணர் வேளாளர் வன்னியர் மூவரும் இரண்டிலும் இல்லை .

    வலங்கை இடங்கை பொறுத்த வரையில் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றாற்போல சாதிகள் உள்ளன . வன்னியர்கல் வலங்கையிலும் உண்டு , இடங்கையிலும் உண்டு , இரண்டிலும் இல்லாமலும் இருந்து உள்ளனர்

    3. காணியாளர்கள் வன்னியர்கள்