Sunday, April 13, 2014

பாண்டியர் அரசர் சிவகிரி ஜமீன்தார் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார் 100 ஆண்டு நினைவு அஞ்சலி



பாண்டியர் அரசர் சிவகிரி ஜமீன்தார் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார் 100 ஆண்டு நினைவு அஞ்சலிக்கு , நமது அண்ணன் சமுசிகாபுரம் திரு. சரவண பாண்டிய வன்னியனார் அவர்கள் ஏற்பாடு செய்த விளம்பரம் தந்தியில் வந்தது (january 8, 2014)









பாண்டியர் வம்சத்தை சேர்ந்த சிவகிரி வன்னியர் சமஸ்த்தானத்தின் ஐந்தாம் சமீன்தார் “மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் “ அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பு .

நெல்லை மாவட்டம் சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “ சங்கத்தின் தலைவரும் சமுசிகாபுரம் இளைய ஜமீன்தாருமான சரவண பாண்டிய வன்னியனார் , சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “சங்கத்தின் செயலாளரும் தென்மலை இளைய ஜமீன்தாருமான “வீர பாண்டிய வன்னியனார் ” மற்றும் சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “ சங்கத்தின் பொருளாளரும் பந்தல்புளி “சராச்சர பாண்டிய வன்னியனார் “ ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர் .

சிவகிரி சமஸ்தானத்தின் வாரிசுகளாலும், சிவகிரி பகுதி வன்னியர் மக்களாலும் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி 2014 அன்று நினைவுநாள் அனுசரிக்க பட்டது .

மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் அவர்கள் 1910 ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் சிவகிரியின் ஐந்தாம் ஜமீனாக பட்டமேற்றார் .

இவர் சிவகிரியின் நான்காம் ஜமீன்தார் “மகாராஜா ஸ்ரீ சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் ” அவர்களின் மகனாவார் .

மகாராஜா ஸ்ரீ சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் காலம் சிவகிரியின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது . இவர் 1896 இல் இயற்கை எய்தினார் . அப்போது , அவரது மகன் “இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார்’ அவர்கள் சிறுவயதாக லண்டனில் படித்து கொண்டிருந்தார் .தனது சிறுவயதிலே , ஜமீன்தாராக முடி சூடப்பட்டதால் , இவர் “மைனர் ஜமீன்தார் ” என்று பொதுமக்களால் அழைக்க பட்டார் . குதிரை பந்தயத்தில் ஆர்வமுள்ள இவர், கிண்டி குதிரை பந்தயத்தில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார் . மன்னராக பட்டம் சூட்டிய சில வருடங்களிலேயே மைனர் ஜமீந்தாரகிய இவர் இறந்து விட்டார் .

அனைவரும் “மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் “ அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பிற்கு வருகை புரிய வேண்டுமென்று வன்னிய சமூக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்ள பட்டது  .