தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
சம்புவராயர்,காடவராயர்,
கச்சிராயர்,வாணகோவரையர், மழவராயர் என்ற பெயர்களில் வன்னியர்கள் சிறு
பகுதிகளை சோழர் காலந்தொடங்கி ஆண்டு வந்துள்ளனர்.
வன்னிய குலத்தினருள் கடந்தையார் என்ற பிரிவினர் உள்ளனர்.
இவர்கள் கி.பி. 16 ஆம் நுற்றாண்டில் பெண்ணாடத்தை ஆண்ட பாளையக்காரர்களாக அறியப்படுகின்றனர்.
இரு நூல்களைக் கொண்டு இப்பாளையக்காரர்கள் பற்றியும் அவர்கள் யார் என்பது பற்றியும் அறிய முடிகிறது.
கடந்தையார்களைப் பற்றி ஒரு செப்பேடு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.
தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 1 இல் பக்கம் 1263 இல் இதனை
பற்றிய செய்தி உள்ளது.
செப்பேட்டின் மூலம் அறியப்படும் பெண்ணாடம் பாளையக்காரர்கள் :
1.பிரளயங்காத்த கடந்தையார் 2. பொன்னளந்த கடந்தையார் 3.பெரிய நாயக கடந்தையார் 4.ராமநாதக் கடந்தையார்.
இக்கடந்தையார்களின் உறவினராக அறியப்படுபவர்கள் குண்ணத்தூரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்களான மழவராய நயினார்கள்.
கடந்தையார்களும், குண்ணத்தூர் மழவராயர்களும் உறவின் முறையினராக (பெண் கொண்டு பெண் கொடுப்பவர்களாக) இருந்திருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட அந்தச் செப்பேட்டை கி.பி.1512 இல் பெரிய நாயகக் கடந்தையார் வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணாடம் பகுதியில் வாழ்ந்து வரும் கடந்தையார் பட்டம் கொண்ட
வன்னியர்களுக்கு கடந்தை ஈச்சரன் கோயிலில் இன்றும் முதல் மரியாதை செய்யப்
பெற்று வருகிறது.
(நன்றி: வன்னியர் - நடன.காசிநாதன்)
------
இந்த கடந்தையார் என்பவர்களின் முந்தைய நிலை என்ன?
பென்ணாகடம், குடிகாடு, திட்டக்குடி,பெரம்பலூர், செந்துறை பகுதிகளில்
வாழ்ந்த வன்னியர்களான இக்கடந்தையார்கள் சோழர் காலத்தில் குறுநிலத்
தலைவர்களாகவும், பாடி காவல் அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு
"வங்கார முத்தரையர்" என்ற பட்டம் உண்டு.
சோழர் காலத்தில் ஆட்சியாளர்களாக அறியப்பட்ட வங்கார முத்தரையர் பட்டம் கொண்ட கடந்தையார்கள்:
1. சேந்தன் கூத்தாடுவானான ராஜராஜ வங்கார முத்தரையன் (2 ஆம் ராஜ ராஜ சோழன் காலம்)
2.கடந்தை சேந்தன் ஆதித்தன் ராஜராஜ வங்கார முத்தரையன்.
3.ஆதித்தன் மண்டலியான ராஜாதிராஜ வங்கார முத்தரையன் (சோழன் 2 ஆம் ராஜாதிராஜன் காலம்)
4.பொன்பரப்பினான் வீர வங்கார முத்தரையன் (3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)
5.கடந்தை ஆதித்தன் மண்டலியான வங்கார முத்தரையன் ( 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)
6.மண்டலியான ராஜராஜ வங்கார முத்தரையன்.
7.வங்காரமுதரையனான பொன்பரப்பினார் (3 ஆம் ராஜராஜ சோழன் காலம்)
(நன்றி: வரலாற்றில் பெண்ணாகடம்)