Google+ Followers

Saturday, May 19, 2012

ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கே ஆட்சியுரிமை; அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை வன்னியரின் பிறப்புரிமை இதுவே இனி நம் போராட்ட முழக்கமாகட்டும்.

இட ஒதுக்கீடு எனும் மாயமான் வேட்டையில் வன்னிய சமூகம் 60 ஆண்டுகளை வீணடித்தது போதும்;

வன்னியர் மகா சங்கத்தின் 123ஆம் ஆண்டுவிழாவில் ந.இறைவன் பேச்சு.


வன்னியகுல சத்திரிய மகா சங்கத்தின் 123ஆவது ஆண்டு விழாவும்; சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும் 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஏ.என்.ராமசாமி திருமண மாளிகையில் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் விருது; வாழப்பாடியார் விருது ஆகியவற்றை வழங்கி ‡  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி சிறப்பு பேருரையாற்றினார். மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். மகாசங்கப் பொதுச்செயலாளர் கோவி தட்சிணாமூர்த்திஆண்டறிக்கையை வாசித்தார்.

மகாசங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ.முத்து தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்.

டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாசு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்; வாழப்பாடி இராம.சுகந்தன்; சி.ஆர்.தசரதன்; நண்பர்கள் நலமன்ற தலைவர் எ.பாலகிருஷ்ணன், கட்டிடத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், அருள் முருகன் பில்டர்ஸ் ராமமூர்த்தி; கெஜபதி நாயகர், ஓவியர் ராகி.பாரி, அச்சமில்லை ஆசிரியர் ந.இறைவன் ஆகியோர் சமுதாய முன்னேற்றம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

மகாசங்கத் தலைவரும் விழாவின் தலைவருமான இலக்கியப் புரவலர் உ.பலராமன் நிறைவுரையாற்றினார்.

தலைவர் உ.பலராமன்; கோ.சூரியமூர்த்தி; வழக்கறிஞர் முத்து ஆகியோர் உரைகள் அடுத்த இதழில் இடம் பெறும்.

========================================================================
 
வன்னிய மகாசங்கத் தலைவர் சகோதரர் பலராமன் அவர்களே,
மகா சங்கத்தின் பொறுப்பாளர்களே, உறுப்பினர்களே உரையாற்ற வந்திருக்கும் தலைவர்களே, அனைவருக்கும் வணக்கம்.

நம் சமூக முன்னேற்றத்திற்காக இப்படி ஓர் சங்கம் அமைக்க வேண்டும் என 123 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயல்பட்ட நம் சமூக சான்றோர்கள் என்றைக்கும் நம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.

இந்தப் பழம்பெரும் சங்கத்தின் 123ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வாய்ப்பு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.

123ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‡ இந்த சங்கத்தின் முக்கியக் கொள்கை வன்னியர் சமூகக் கல்வி முன்னேற்றம் என சங்கத்தின் சட்டதிட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை எண்ணி வியக்கிறேன். அடுத்த முக்கியக் கொள்கையாக நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை சங்கத்தின் விதியாக வரையறுத்திருக்கிறார்கள்.

இந்த 123 ஆண்டுகளில் வன்னியர் சமூகம் கல்வியில் முன்னேறி இருக்கிறதா
நம்மிடையே சமூக ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறதா?
இல்லை. இல்லை என்பதுதானே பதில்.
ஏன் இந்த அவலம் என்பது குறித்தாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? என்றால். அதுவும் இல்லை.

எனவேதான்-
இந்த சங்கத்தை நிறுவியவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கிறது இன்றளவும்.

வன்னிய சமூகமே தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம்.
தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் நாம்தான். எந்த ஆதாரமும் இல்லாமல் தாங்கள்தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சமூகங்கள் என மற்ற சமூகத்தவர்கள் சொல்லித் திரிகிறார்களே அது போன்றதுதானா நாம் சொல்வது?

நாம் அப்படிச் சொல்லவில்லை.
வெள்ளைக்கார அரசு 1871 முதல் 1931 வரை ஒவ்வொரு பத்தாண்டும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அதன் விபரங்கள் அப்போதைய அரசிதழ்களில் வெளியிடப்பட்டது. அந்த புள்ளி விபரங்களின்படி நாம்தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம். தாங்கள் தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சமூகங்கள் என இன்று வாய்ப்பறை அடித்துக்கொண்டிருக்கும் சாதிகளில் ஒன்றுகூட அந்த புள்ளி விபரப்படி வன்னிய சமூக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட இல்லாதவையே. நம்மோடு ஒப்பிட முடியாத சிறுபான்மைச் சாதிகளே.

புலவர்கள் மொழியில் சொல்வதானால் வன்னியர்கள் தமிழ்நாட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரும்பான்மைச் சமூகம்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் நான் தமிழன் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் முக்கிய சாதிகள் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையில்.

வன்னியர் சமூகம் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டை இவர்களே ஆள்வார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதியவர் வன்னியர் அல்ல.
வன்னியர் அல்லாத ஒருவர் நம்மைப்பற்றி இப்படி எழுதி இருப்பது‡
வன்னியர்கள் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் என்ற உண்மை வன்னியர் அல்லாத மற்ற சமூகத்தவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாகும்.
வன்னியரின் மகாசக்தி
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையாக இருப்பது ஒரு சக்தி. அதிலும் நம்பம் 1 பெரும்பான்மைச் சமூகமாக இருப்பது ஒரு மகா சக்தி.
இன்று  சிறுபான்மைச் சமூகங்கள் எல்லாம் அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறதே.
மகா சக்தியாக இருக்கின்ற வன்னிய சமூகம் அரசியலும்; ஆட்சியிலும்; அதிகாரத்திலும் என்னவாக இருக்கிறது?
சொன்னால் வெட்கக்கேடு; சொல்லாவிட்டால் மானக்கேடு என்பார்களே அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
ஆளவேண்டிய வன்னியர்சமூகம், தங்களுக்குரிய ஆட்சி உரிமையை வந்தேறி சிறுபான்மைத் தலைவர்களிடம் கொடுத்துவிட்டு;
அவர்களது கட்சியில் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்கும்; அவர்களது ஆட்சியில் கடைகோடி எடுபிடி மந்திரி பதவிகளுக்கும் பிச்சைகேட்டு நிற்கும் யாசகர்களாகத்தான் ஒவ்வொரு கட்சியிலும் வன்னியர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரத்தில் வன்னியர் நிலை என்ன?
60 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒரே சாதி வன்னியர் சாதிதான்.
இந்திய அளவில் வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை நடத்த முடிந்த சக்தி மிக்க சமூகமாக வன்னியர் சமூகம் இருந்தும்‡
அந்த போராட்டத்தால் வந்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் வன்னியர் சமூகத்திற்கு லாபமா நஷ்டமா என்ற கணக்கைப் பார்க்கத் தெரியாத சமூகமாக வன்னியர் சமூகம் இருக்கிறது என்பதுதான் வேதனை.
அதுமட்டுமல்ல-
எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் கிடைக்கும் சில பியூன் பதவிகளையும்; சில குமாஸ்த்தா பதவிகளையுமே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக எண்ணிக்கொண்டு-
இதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் என்று துதிபாடிக் கிடக்கும் அப்பாவி சமூகமாகவும்  வன்னிய சமூகம் இருக்கிறது.
எதொன்றிலும் லாபநட்டம் பார்க்கத் தெரியாத சமூகம் முன்னேறுவது முடியாதது.

நமது நிலை என்ன?
அதே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நில உடைமையாளர்களாக; மிராசுதாரர்களாக திருநெல்வேலி சிவகிரி வரை விரிந்து பரந்த ஜமீன்களைக் கொண்ட சமூகமாக வன்னியர் சமூகம் இருந்தது.
இன்று என்ன நிலை?
நம்மவர்களில் பெரும்பாலோர் டாஸ்மாக் கடைகளையே கோயில்கள் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலைதானே நம் நிலை?
நாடார்களின் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கும் நமது அதலபாதாள வீழ்ச்சிக்கும் என்ன காரணம்?
பார்வைத் தீட்டிலிருந்த சமுதாயத்தில் பிறந்த காமராச நாடார் காங்கிரசுக் கட்சித் தலைவராக ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருந்தார். தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்து தமிழ்நாட்டை ஆண்டார்.
பிறகு அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் ஆனார்.
காமராசரின் 40 ஆண்டுகாலத்திற்கும் மேலான இந்த அரசியல் தலைமைதான் - நாடார் சமூகத்தின் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
தமிழ்நாட்டின் நம்பர் 1 சமூகமாக நாம் இருந்தும் காமராசரைப் போல அரசியல் ஆதிக்கம் கொண்ட ஒருதலைவர் நம் சமூகத்திலிருந்து தோன்றாததுதான் நம் சமூகத்தின் வீழ்ச்சிக்கு காரணம்?
நம்முடைய சமூகத்திலிருந்து அப்படியோர் அரசியல் தலைமை ஏன் உருவாகவில்லை?
பதவி வரும்போது காமராசரைப் போல அதை சிக்கென பற்றிக்கொள்ளும் வல்லவர்களாக பதவி மோகம் கெண்டவர்களாக வன்னியர்கள் இல்லாதிருப்பதே காரணம்.
ஊராட்சித்தலைவர் பதவிக்கு மட்டுமே போராடுபவர்களாக வன்னியர்கள் இருந்திருக்கிறார்கள். முதல்வர் பதவிக்கு போராடும் சமுதாயமாக வன்னிய சமூகத்தை மாற்ற வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த நம்மவர்கள் பற்றிய செய்திகளைச் சொல்கிறேன்.
இப்படிப் பதவி மோகம் இல்லாத தலைவர்களை வேறு எந்த சமுதாயத்திலாவது பார்க்க முடியுமா?

அய்யா ஆனைமுத்து:
 
 
பெரியாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்களில் அய்யா ஆனைமுத்து முக்கியமானவர். பெரியாரே விரும்பி திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்க அழைத்தபோது - நிர்வாகத்திற்குள் வர விருப்பமில்லை எனச் சொல்லி ஒதுங்கிக் கொண்டதாக அவரே சொல்லியிருப்பதாக எனக்கு நினைவு.
நிர்வாகப் பொறுப்பிற்குள் வந்துவிட்டால் -  பிறர் செய்கிற தவறுகளுக்கான பழிகள் தன்மீது விழும் எனக்கருதி பெரியாரின் அழைப்பை ஏற்க அய்யா ஆனைமுத்து மறுத்திருக்கலாம் என்பது எனது யூகம்.
இப்படி நல்லவர்கள் எல்லாம் வீண்பழி வருமே என அஞ்சி ஒதுங்குவதால்தான் ஆட்சியும் அதிகாரமும் பெரும்பாலான காலங்களில் தீயவர்களின் கைகளுக்குள் சிக்கி சீரழிகின்றன.
திராவிடர் கழக நிர்வாக பொறுப்பிற்குள் வர மறுத்த அய்யா ஆனைமுத்துதான்‡
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற தலைப்பில் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் 3000 பக்கங்களில் தொகுத்து 3 தொகுதிகளாக - பெரியாரின் ஒப்புதலோடு - 1974ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். அடுத்தடுத்ததலைமுறையினரும்; பெரியார் ஆய்வாளர்களும் பெரியார் பற்றி அறிந்து கொள்ள இது பெரும் வாய்ப்பாக அமைந்தது.
இதோடு தன்பணி முடிந்தது என ஓய்ந்தாரா அய்யா ஆனைமுத்து என்றால் இல்லை.
மேலும் சுமார் 40 ஆண்டுகள் உழைத்து‡
பெரியார் பற்றிய அனைத்து செய்திகளையும் திரட்டி; பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூலை 9000 பக்கங்களாக விரிவாக்கி; 9 தொகுதிகளாக 2009இல் வெளியிட்டு பெரியாருக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார்.
இப்படி தன் வாழ்நாளையே பெரியாரின் புகழ்பரப்ப செலவிட்டு வரும் அய்யா ஆனைமுத்து அவர்கள்-
சேப்பாக்கம் முருகப்பா தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகைக்கு அலுவலகத்தை வைத்துக்கொண்டு-
ஒரு பக்கிரியைப் போல கால்நடையாக அலைந்து திரிந்து உழைக்கிறார் என்பதும்‡
அய்யா ஆனைமுத்துவின் பெரியார் பெருந்தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பணிகூட செய்யாத ஒருவர் -
பெரியாரின் திராவிடர் கழகத்தையும்; அதற்கான பலநூறுகோடி சொத்துக்களையும் கைப்பற்றி ஆண்டு அனுபவித்துக்கொண்டு சுகவாழ்வு வாழ்கிறார் என்பதும்‡
எதனால் வந்தது‡?
 ஆனைமுத்து நிர்வாகத்திற்குள் வர மறுத்ததாலும் - வீரமணி நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டதாலும் என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?
இதை யார்மீதும் பொறாமை காரணமாக ஒப்பிட்டுச் சொல்லவில்லை.
இவ்வளவு பெரிய பெரியாரின் சொத்துக்கள் - அய்யா ஆனைமுத்துவின் நிர்வாகத்திற்குள் இருந்திருக்குமானால் - பெரியாருக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் அய்யா ஆனைமுத்து என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.
இப்படி வாய்ப்பு தானாக வரும்போதுகூட அதை மறுத்தவர் அய்யா ஆனைமுத்து ஒருவர் மட்டுமல்ல.

வாழப்பாடியார்  :


தமிழ்நாட்டில் 1967இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து தோற்ற பின்னால்‡
காங்கிரசு கட்சிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏக்களை பெற்றுத்தந்தது வாழப்பாடியார் தலைமைதான். 64 எம்.எல்.ஏக்கள்.
முதல்வர் ஜெயலலிதா - ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அப்போது கவர்னராக இருந்த பீஷ்மநாராயண சிங்கிடம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் -
பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழப்பாடியாரைச் சந்தித்து நீங்கள் முதல்வராக ஆகுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் எனப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வாழப்பாடியார் அதனை ஏற்க மறுத்துவிட்டார் என்ற செய்தியை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சகோதரர் பலராமன் அவர்கள் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வேறு ஒரு சாதியைச் சேர்ந்த அரசியல்வாதி யாராவது ‡ தானாக வரும் இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டிருப்பார்களா?
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விருப்பமிவில்லை வாழப்பாடியாருக்கு என்பது என்னைப் பொருத்தவரை பெருமைக்கு உரியது என்பதை விட - வருத்தத்திற்கு உரியதாகவே நான் கருதுகிறேன்.
சில நாட்களே பதவியில் இருந்த சரண் சிங் பெயரும்; சில மாதங்களே பதவியில் இருந்த சந்திரசேகர் பெயரும் இந்திய பிரதமர் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.
சில நாட்களே முதல்வராக இருந்த வி.என்.ஜானகி பெயரும்; பினாமிதான் அடிமைச் சேவகம்தான் என்றாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் தமிழக முதல்வர்கள் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.
வாழப்பாடியாருக்குத் தானாக வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரானால் - தமிழக முதல்வர்களில் தனிச்சிறப்பு பெற்ற முதல்வராக இருந்திருப்பார் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.
இதேபோல்தான்-


எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் :

வன்னிய இனத்தின் எழுச்சி நாயகரான எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியாரும்.
1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராச நாடாரின் வன்னிய ஒடுக்குமுறைக்குஎதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார்‡
கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார்.
1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராச நாடார் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது. பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது - காமராசரைப் போல பதவி மோகம் கொண்டவராக இருந்திருந்தால்‡
எனக்கு துணை முதல்வர் பதவி கொடு; உன்னை ஆதரிக்கிறேன் என நிபந்தனை விதித்திருக்கலாம்.
வியாபாரச் சமூகத்தில் பிறந்த காமராசர் அதற்கு இணங்கி இருக்கவும் கூடும்.
வன்னியர் சமூக முன்னேற்ற மோகம் கொண்டவராக ‡ ராமசாமி படையாட்சியார் ‡ இருந்த காரணத்தால் - எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார். அதை ஏற்று 39 சாதிகளை எம்.பி.சி.எனப் பட்டியலிட்டு பள்ளி மாணவர்களுக்கு அரைக் கட்டணச் சலுகைகளைத் தந்தார் காமராசர்.
என்னைப் பொருத்தவரையில் இது ஒரு கோரிக்கையே இல்லாத கோரிக்கை.
தனக்கு கல்வி அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டு வாங்கி; இந்த அரைக்கட்டணச் சலுகை என்ன, முழுக்கட்டணச் சலுகையையே கூட ராமசாமி படையாட்சியாரே வழங்கி இருக்கலாம்.
இப்படிப்பட்ட‡
பதவி மோகம் இல்லாத ஏமாளித்தனமான அரசியல்வாதிகளை வேறு எந்த சமூகத்திலாவது பார்க்க முடியுமா? நம் சமூகத்தவர்களின் இத்தகைய குணங்கள் தான் நம் சமூகத்தின் இன்றைய பின்னடைவிற்கு ஒரு காரணம்.
வன்னியர் சமூகம் நூறாண்டுகளாக இழந்த பெருமையை பத்தே ஆண்டுகளில் மீட்டுவிடலாம்
போனதெல்லாம் போகட்டும்;
இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை.
இன்னமும்-
மற்ற சமூக அரசியல்வாதிகளால் அபகரிக்க முடியாத ஒரு பெரும் சொத்து வன்னிய சமூகத்திடம் இருக்கிறது. தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் வன்னியர் சமூகம் என்பதுதான் அந்த சொத்து.
ஜனநாயகத்தில் இதுதான் பெரிய சக்தி.
ஒரு சமூகத்திற்கு இதுதான் பெரிய சொத்து.
பெரும்பான்மைச் சமூகம் என்ற பெரும் சொத்தை வைத்துதான் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டா சமூகம் மட்டுமே தொடர்ந்து ஆளும் சக்தியாக இருந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.
பெரும்பான்மைச் சமூகம் என்ற இந்த பெரும் சொத்தை வைத்துதான் கர்நாடகாவில் லிங்காயத் சமூகமும் கெளடா சமூகமும் தொடர்ந்து ஆளும் சக்திகளாக இருக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு முன்னேறியும் இருக்கின்றன.
இந்திய அளவில் -
வன்னியர் சமூகம் மட்டும்தான் பெரும்பான்மைச் சமூகமாக இருந்தும் ஆட்சிக்கு வரமுடியாமல் இருக்கும் சாதியாக இருக்கின்றது.
மற்ற சாதியினரைப் போல் சமூக உணர்வோடு ஒன்றிணைந்தால்  ‡ குமுதம் வார இதழ் சுட்டிக்காட்டியதைப் போல் தமிழ்நாட்டை வன்னியர்களே ஆள்வார்கள் என்ற நிலையைப் பத்தாண்டுகளில்  உருவாக்கி விடலாம்.
நூறாண்டுகளாக நாம் இழந்து போன உரிமைகளையும் பெருமைகளையும் அடுத்த பத்தாண்டுகளில் மீட்டுவிடலாம்.
அதற்கு; ஆட்சி அதிகாரம் நமது பிறப்புரிமை. அதை கருணாநிதி; எம்.ஜி.ராமச்சந்திரன்; ஜெயலலிதா போன்ற வந்தேறி சிறுபான்மைகளிடம் கொடுத்துவிட்டு இட ஒதுக்கீட்டு பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டோம். என்ற உறுதி மிக்க‡ வல்லமை மிக்க ஒரு தலைவனை நாம் உருவாக்க வேண்டும்.
நல்ல தலைவன் வேண்டும்
நல்ல தலைவனா? அதற்கு என்ன இலக்கணம் என்று கேட்கலாம்.
"ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையும் தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் முன்னேற்றத்திற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அவனே வன்னிய சமூகத்தின் தலைவன்.
தன் பிள்ளைகளை மட்டுமே வன்னிய சமுகம் எனக்கருதி தன் குடும் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபடும் எவனும் வன்னிய சமூகத்தின் தலைவனாக முடியாது."
வன்னிய சமூகத்தின் நல்ல தலைவனுக்கான இந்த இலக்கணத்தை நாம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு ரத்தின சுருக்கமாக வரையறுத்து சொன்னவர் ஒரு சாலை மறியல் தியாகி.
அவர் பெயர் வெடிகுண்டு ராஜகோபால். மின்சார வாரியத்தின் ஒரு சாதாரண ஊழியராக இருந்து; சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தால் ‡ காவல்துறை வெடிகுண்டு வைத்திருந்தார் என பொய்வழக்குப் போட்டு கைது செய்த காரணத்தால் வேலைவாய்ப்பை இழந்து; வழக்குக்காக சொத்துக்ளை இழந்து; குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு ‡ ஒரு முருகன் கோவிலை சுத்தம் செய்து அதற்காக தரப்படும் பிரசாதத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜகோபால் பாபநாசத்திற்குப் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் போது அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் பேசிய அந்தப் பேச்சினை  இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
இப்போது நம் சமூகத்திற்கு தலைவர்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஊருக்கு ஊர் வன்னியர் சங்கங்கள் புதுப்புது பெயரில் தினம் தினம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தலைவர்; செயலாளர்; பொருளாளர் என ஊருக்கு நாலைந்து வன்னியத் தலைவர்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
போதும்...
இட ஒதுக்கீடென்னும் மாயமான் வேட்டையில்
60 ஆண்டுகளை வீணடித்தது போதும்.
இவர்கள் எல்லோரும் கிளிப்பிள்ளைகளைப் போல முன்வைக்கிற ஒரு கோரிக்கை வன்னிய சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே. யாருக்கும் வேறு சிந்தனையே இல்லை.
ஒரு பெரும்பான்மைச் சமூகம் வைக்க வேண்டிய கோரிக்கையா இது? பெரும்பான்மைச் சமூக ஆட்சித் தலைவர்களிடம் சிறுபான்மைச் சமூகத் தலைவர்கள் வைக்க வேண்டிய கோரிக்கை.
நாமோ - நாம் உட்கார வேண்டிய முதல்வர் நாற்காலியை காமராசரிடமும்; கருணாநிதியிடமும்; எம்.ஜி.ராமச்சந்திரனிடமும்; ஜெயலலிதாவிடமும் கொடுத்துவிட்டு ‡ அவர்களிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கக்கேடாகவே நான் கருதுகிறேன்.
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே சாதி வன்னிய சாதி என்ற அவமானத்தை முதலில்விட்டு ஒழிப்போம்.
இந்திய அளவில் வியந்து பார்க்கப்பட்ட வரலாறு காணாத சாலை மறியல் போராட்டம் நடத்தி எம்.பி.சி.இட ஒதுக்கீடு பெற்று 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. உயர்ந்து விட்டதா வன்னியர் வாழ்வு? ஏன் உயரவில்லை என்பதை இட ஒதுக்கீடு என்றும்; தனி ஒதுக்கீடு என்றும் பேசுகிற எந்த தலைவர்களாவது சிந்தித்தார்களா?
யி
எம்.பி.சி இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு - 1991-92 முதல் 2007-2008 வரை தமிழ்நடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 17 முறை தேர்வு நடத்தியுள்ளது.
இதில் எம்.பி.சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 7773. இதில் வன்னியர் சமூகத்தவர்கள் பெற்ற பதவிகள் 3964 மட்டுமே. சராசரியாக ஒரு ஆண்டுக்கு - 2 கோடி மக்கçக் கொண்ட வன்னிய சமூகத்திற்கு கிடைத்த பதவிகள் 234 மட்டுமே!
இந்த எம்.பி.சி.இடஒதுக்கீடு வந்ததால் நமக்கு லாபமா நஷ்டமா என்றால் நஷ்டம் என்பதே உண்மை.
அம்பா சங்கர் அறிக்கைப் படி-
எம்.பி.சி பட்டியலில் உள்ள 109 சாதிகளும் முன்பு பி.சி.பட்டியலில் இருந்தபோது பெற்ற மொத்த பதவிகளில் வன்னியர் சமூகம் 54.92 சதவீதப் பதவிகளைப் பெற்று வந்தது.
எம்.பி.சி உருவான பின்னால் இதுவரை (2008-2009) தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் மூலம்109 சாதிகள் பெற்ற மொத்த பதவிகள் 50.87 சதவீதம்.
ஆகவே‡எம்.பி.சி ஆனதால் வன்னியர் சமூகத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 4.05 சதவீதம்.
இதற்காகவா 60 ஆண்டுகளுக்கு மேலாக இட ஒதுக்கீடு கேட்டுப் போராடினோம்?
இதற்காகவா இந்திய வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை நடத்தி 20க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறிகொடுத்தோம்?
இதற்காகவா பல்லாயிரக்கணக்கானோர் அடி உதைபட்டு சிறைசென்று வழக்குகளில் சிக்கி சீரழிந்தோம்?
காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்டவன் கதையாக - எம்.பி.சி.இட ஒதுக்கீட்டை வாங்கி நஷ்ட்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இப்போது‡
வன்னிய சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று எல்லா என்னிய அமைப்புகளும் கோரசாக கூப்பாடு போடுகிறார்கள்.
தனி ஒதுக்கீடு தராவிட்டால்; ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதைப் போல ஆயிரம் மடங்கு பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்கிறார் பெரியவர் ராமதாசு.
எதற்கு?
யாரோ அனுபவிக்க சாலை மறியல் போராட்டத்தில் வன்னியர்கள் செத்தது போதாதா?
மாயமான் வேட்டையாகிவிட்ட இட ஒதுக்கீட்டிற்காக இன்னும் எத்தனை வன்னியர்களை சாகடிக்கத் திட்டம்?
இதற்காக‡
எம்.பி.சி பட்டியலில் 109 சாதிகளைச் சேர்த்ததால்தான் வன்னியருக்கு எம்.பி.சி.வந்தும் பலனில்லை என்றும் காரணம் சொல்கிறார்கள்.
இது உண்மையல்ல,
1991‡92 முதலான 17 ஆண்டுகால அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் இதுவரை 75 சாதிகள் ஒரே ஒரு பதவி கூட பெறாத சாதிகள். இதனால் வன்னியருக்கு ஒன்றும் பாதிப்பில்லை. மீதி இருக்கிற 34 சாதிகள் மட்டுமே எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் கிடைத்த 7773 பதவிகளையும் பெற்றுள்ளன.
இந்த 34 சாதிகளில் கூட தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் நம்மை விட குறைவாக பதவிகள் பெற்ற சாதிகள் 10. இந்த 10 சாதிகளாலும் நமக்கு பாதிப்பில்லை
வன்னியரல்லாத மீதமுள்ள 23 சாதிகள் தான் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதலாகப் பதவிகளைப் பெறும் சாதிகள்.
இந்த 23 சாதிகளால்தான் எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை.
இந்த 23 சாதிகளையும் எம்.பி.சியில் முன்னேறிய சாதிகள் என வகைப்படுத்தி ‡ இவர்களை எம்.பி.சி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டாலே போதும் ‡ எம்.பி.சியால் வன்னியர்களுக்கான நஷ்டத்தை குறைக்கலாம் இதை விட்டுவிட்டு‡
தனி ஒதுக்கீடு என்றும்; தராவிட்டால் ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதைப் போல் ஆயிரம் மடங்கு போராட்டம் நடத்துவேன் என்பதெல்லாம்‡
அரசியல் பிழைப்பு நடத்த வன்னியரை ஏமாற்றும் பொய்ப்பிரச்சாரங்களே.
தனி ஒதுக்கீடு; தனி ஒதுக்கீடு என்கிறார்களே‡ எம்.பி.சி. இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் வன்னியருக்கு எத்தனை சதவீதம் கிடைத்துவிடும்?
இது தொடர்பாக -
வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் சார்பாக பிற்பட்டோர் நல ஆணைய தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்தை சந்தித்து  ‡ தனி ஒதுக்கீடு என்று வந்தால் குறைந்தது 15 சதவீத ஒதுக்கீட்டிற்காகவாவது நீங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அப்போது அவர் சொன்னார்‡
அம்பாசங்கர் அறிக்கைப் படி எம்.பி.சி. பட்டியலில் உள்ள சாதிகளின் மக்கள் தொகையில் வன்னியர் சமூக மக்கள் தொகை எத்தனை சதவீதம் இருக்கிறதோ அத்தனை சதவீதம் தான் ஆணையத்தின் மூலம் பரிந்துரைக்க முடியும் என்றார்.
அம்பாசங்கர் கொடுத்துள்ள மக்கள்தொகை விபரம்‡ ஒரு ஃப்ராடு புள்ளி விபரம் என்று கோபமாகச் சொன்னோம். உடனே அவர்‡
அதுதான் உச்சநீதிமன்றம் வரை இட ஒதுக்கீட்டிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் புள்ளிவிபரம் ‡ அதை மீறி பிற்பட்டோர் நல ஆணையம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
அப்படியானால்‡
நமக்கு லாபமா நஷ்டமா?
109 சாதிகளின் மக்கள் தொகையில் வன்னியர் சமூக மக்கள் தொகை - அம்பாசங்கர் மோசடிப் புள்ளி விபரப்படி சுமார் 55 சதவிகிதமே.
இதைவைத்து தனி ஒதுக்கீடு தந்தால் ‡ வெறும் 11 சதவிகிதமே கிடைக்கும் இப்போது 20 சதவீதத்தில் 10.17 சதவீதம் பெறுகிறோம். இந்த 1 சதவீதத்திற்காகவா - ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதை விட ஆயிரம் மடங்கு போராட்டம் நடத்தப்போகிறார் பெரியவர் ராமதாசு?
வேண்டாம்-
அரசியல் பிழைப்புக்காக இன்னொரு போராட்டம் நடத்தி வன்னியர்களை வீணாக சாகடிக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட வன்னியர் சமூகம் தயாரில்லை.
இட ஒதுக்கீடு என்னும் மாயமான் வேட்டைக்காக வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை வீணடித்து விட்டோம். அதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டாமா?
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கேட்டு போராடியற்கு பதிலாக-
60 ஆண்டுகளாக தனிமாநிலக் கோரிக்கைக்காக போராடி இருந்தால்-
சலை மறியல் போன்ற வரலாறு காணாத ஒரு போராட்டத்தை தனிமாநிலக் கோரிக்கைக்காக நடத்தி இருந்தால் -
இந்நேரம் வடதமிழ்நாடு தனி மாநிலமாகி இருக்கும்.
தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை
வன்னியரின் பிறப்புரிமை
இட ஒதுக்கீடு என்னும் மாயமான் வேட்டையில் - கானல் நீரினில் தாகம் தணித்திடும் வேட்கையில் - வன்னிர் சமூகத்தின் சிந்தனையை மழுங்கடித்து; வன்னியர் சமூகத்தின் போராட்ட சக்தியை வீணடித்துவிட்டோம்.
எனவே பாதையை மாற்றுவோம்-
ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கே ஆட்சி உரிமை என்ற அடிப்படையில்‡
தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை-
தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகமான வன்னியரின் பிறப்புரிமை என்பதை‡
ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தின் போர்முழக்கமாக்குவோம்.
வன்னியர் சமூகத்தின் ஆட்சியுரிமை என்பது ‡ தமிழ்நாட்டிற்கு வந்தேறி சிறுபான்மைகளின் பிடியிலிருந்து விடுதலை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி  : http://achamillai.org/ta/component/k2/item/12-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D