Saturday, July 6, 2013

வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறும்




கோவில்களுக்கு தானம் அளிப்பதில் கர்ணனுக்கு இணையானவன் என்றும் , ஹிந்து மதத்தை காக்க பிறந்தவன் என்றும் , குழந்தை இல்லாத வீர வல்லாளனுக்கு அவன் சிவபக்தியால் அண்ணாமலையாரே குழந்தையாய் காட்சி தந்து, உன் இறப்பிற்கு பின் உனக்கு மகனாக இறுதி காரியங்கள் நானே செய்கிறேன் என்று வரம் பெற்ற வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து  கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறு :



(அண்ணாமலையார் கோவிலில் உள்ள கோபுரத்தில் "வன்னிய மன்னர் வீர வல்லாள மகாராஜன் " சிலை)
 

சுல்த்தான் படை தமிழகம் நுழைந்ததும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருந்தனர் . பல துயரங்கள் அடைந்தனர் . கோவில்கள் நிர்மூலமாக்க பட்டது . அப்போது குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தென் தமிழ்நாடு பாண்டியர் அழிவிற்கு பிறகு அல்லோலப்பட்டது சுல்த்தானால் . வடதமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வன்னிய மன்னன் சம்புவராயன் ஆட்சியில் பாதுக்காப்பாக இருந்தனர் . பலர் தென்தமிழ்நாடு விட்டு வடக்கே சம்புவராயன் பகுதிக்கு பாதுக்காப்புக்காக தஞ்சம் அடைந்த காலம் அது .

அப்போது ஹிந்து தர்மங்களை அழிக்கும் சுல்த்தானை அழிக்க திருவண்ணாமலை ஆண்ட வீர வன்னியன் திரு.வீர வல்லாள மகாராஜ கண்டர் புறப்பட்டார் .

கிபி. 1341 ஆம் ஆண்டு கண்ணனூர் குப்பம் என்னும் ஊரில் மதுரை சுல்தானுடன் போர் நிகழ்ந்தது . வீர வல்லாளனுடைய படையில் ஒன்றரை லட்சம் வீரர்கள் இருந்தனர் . மதுரை சுலத்தானுடைய படையில் ஆறாயிரம் படை வீரர்களே இருந்தனர் . தற்போதைய குப்பம் என்னும் இடத்தில் மதுரை சுலத்தான்கள் மீது படையெடுத்து வீரவல்லாளன் 6 மாத காலம் முற்றுகையிட்டுருந்தான் .இதனால் படை வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் பதினான்கு நாட்கள் மட்டுமே போதுமானதாக இருந்த நிலை உருவானது .

இந்த நிலையில் முகமதிய படைவீரர்கள் சமாதானத்தை கோரினர் . அதற்க்கு உடன்பட்ட மூன்றாம் வீரவல்லாளன் குப்பம் நகரத்தின் மையப் பகுதியில் படைவீட்டை அமைத்துக்கொண்டு தங்கினான் . அப்போது வஞ்சப் போர் நிகழ்த்தி , வீரவல்லாளனை சுல்த்தான்கள் கொலை செய்தார்கள் .

தலைவன் இல்லாத படை வெட்டாது என்பது போர்நெறி . போர்முறைகளை பின்பற்றும் வீர்வல்லாளன் படை தோல்வியை தழுவியது .. எப்படி வேண்டுமானாலும் போரிடலாம் , சூழ்ச்சியாலும் போரிடலாம் என்று இருந்த சுல்த்தான் படை வீர வல்லாளனை கொன்றது .

வீரவல்லாளனை கொன்ற சுல்த்தான் படை , அவர் இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தன்னுடைய அரண்மனையின் வாயிலில் தொங்கவிட்டான் . இத்தனை கோரமான காட்சியை மக்கள் கண்டதாக மதுரையின் கிழக்கு பகுதிக்கு கோரிப்பாளையம் என்ற பெயர் வந்தது .

ஆதாரம் :

மதுரா விஜயம் நூல் ... விஜயநகர பேரரசு தமிழகத்தை வெற்றி கொண்ட வரலாறு உள்ள நூல் .இந்நூலை இயற்றியவர் கங்காதேவி என்னும் விஜயநகர பேரரசின் அரசியார் .


(குறிப்பு : தெலுங்கு படை அரசி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல் இது .. தெலுங்கர் படையெடுப்பை கூறுவது ...

இதில் வன்னிய மன்னர்கள் வீர வல்லாளன் பற்றியும், அவர்கள் மாலிக் கபூர் நவாப் அவர்களை எதிர்த்ததையும் , சம்புவராய மன்னர்களின் நல்லாட்சியையும் தெளிவாக விளக்குகிறது ...

அஞ்சா புகலிடம் கட்டி , தென்தமிழ்நாட்டில் நவாப் ஆட்சிக்கு அஞ்சி வந்த சமணர்கள் , பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு தந்து வடதமிழகத்தில் நல்லாட்சி புரிந்தவன் ராஜ நாராயண சம்புவராயன்
. )



 

திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் , வன்னிய மன்னர் வீர வல்லாள மகாராஜா கண்டர் அவர்களுக்கு ஈசனே மகனாகப் பிறந்த கதையை சொல்லும் அருணாச்சலேசுவர புராணத்தின் கதையம்சத்தை கோபுரத்தில் சிலையாக வடித்துள்ள காட்சி இது .



அங்கே ஓவியங்களும் இருந்தன. அவைகளை புகைப்படம் எடுக்க அனுமதிக்கபடவில்லை .  




திருவண்ணாமலையில் உள்ள "வன்னிய குல க்ஷத்ரிய வீர வல்லாள மகாராஜா மடாலயம் "

மன்னருக்கு ஈசன் மகனாக பிறந்த வரலாறு உள்ள லிங்க் 

http://vanniyarkula-kshathriyar.blogspot.com/2013/07/672-25-02-2013.html