Saturday, July 6, 2013

குமளம் வன்னிய பிராமிணர்கள் :



 

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் “குமளம்”. இவ்வூர் “தென் திருப்பதி” என்று வைணவர்களால் போற்றப் பெறுகிறது .
இவ்வூரின் நடுநாயகமாக விளங்குவது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் . இக்கோவிலில் எங்கும் காணாத வகையில் , பிராமிணர்கள் மரபில் சேராத அதே நேரத்தில் தங்களை பிராமிணர்கள் என்று அழைத்து கொள்ளும் வன்னியர் மரபில் பிறந்தவர்கள் பூசைகள் செய்து வருகிறார்கள் என்று கிபி. 20-ஆம் நூற்றாண்டிலேயே “தென்னிந்தியா சாதியும் மற்றும் மலைவாழ் மக்களும் ” என்ற நூலை எழுதிய ஆங்கிலேயர் தர்ஸ்டன் என்பார் குரிப்பிட்டுருக்கிறார் .

“தென்னார்க்காடு மாவட்டம் , குமளத்தில் உள்ள சில வன்னியர்கள் (பள்ளி ) தங்களுக்கென ஸ்ரீநிவாசர் கோவில் ஒன்றை அமைத்துக்கொண்டு அதன் அருகில் வாழ்ந்து வருகின்றனர் . அக்கோவில் வருமானத்தை கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் . அவர்களில் பெரும்பாலோர் கோவில் பட்டர்கள் போன்றே உடை அணிந்து கொள்கின்றனர் . ஊருக்கு புதியவர்கள் அவர்களை காணின் பிராமணப் பட்டர்கள் என்றே கருதுவர் .
கோவில் வழிப்பாட்டில் அவர்களில் சிலர் நல்ல தேர்ச்சி பெற்றவர் . அவர்கள் தங்கள் இளைஞர்களுக்கும் சந்தியாவந்தனம் மற்றும் வேதங்களை ஒரு பிராமணக் குருக்களை கொண்டு கற்றுத் தருகின்றனர் .
இக்குமளம் வன்னியர்கள் மற்ற வன்னியர்களின் நன்மை தீமை நிகழ்ச்சிகளில் குருக்களாக “ செயல்படுகின்றனர் .அவர்கள் தங்களை கொவிலார் (கோவில் மக்கள் ) என்று அழைத்து கொள்கின்றனர் . 
 
வன்னியர்கள் தவிர்த்து பிற சாதியினரால் “குமளம் பிராமிணர்கள் ” என்று அழைக்க படுகின்றனர் . அவர்கள் “க்ஷத்ரியர் “ என்றும் “ராயர்” என்றும் அழைக்க படுகின்றனர் .

இவ்வூரில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலை வன்னியர் மரபில் வந்த அனந்தநாத சுவாமிகள் தான் ஏற்ப்படுத்திருக்கிறார் .இதற்க்கு ஆதாரமாக இந்த கோவிலில் அந்த பெரியாரின் சிற்பமும், ஓவியமும் இடம்பெறுகின்றன .

இவ்வன்னிய பிராமிணர்கள் பூணூல் அணிந்திருப்பார் . காரியங்களுக்கு பிற வன்னியர் வீட்டுக்கு வருவர் .இரவு தங்கவேண்டிய சூழ்நிலை வந்தால் தங்குவார்கள் . ஆனால் அவர்கள் வீட்டு உணவை உண்பது கிடையாது . இவர்களே தனியாக சமைத்து தான் உண்பர் .பிற வன்னிய பெண்களை திருமணம் செய்து கொண்டால் , முதலில் அந்த பெண்ணை தங்கள் கோவிலில் அமரவைத்து தங்கள் பழக்கவழக்கங்களை அந்த பெண்ணுக்கு கற்ப்பித்த பிறகுதான் அவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வர் .இவ்வன்னிய பிராமிணர்கள் க்ஷத்ரியர்களுக்கு உரிய உடற்க்கட்டோடு விளங்குவர் .

குமளத்தை சுற்றியுள்ள அனைத்து கோவிலிலும் உள்ள சுவாமிகளுக்கு அலங்காரம் செய்வதும் இவர்கள் மட்டுமே .

Reference:
=========

1.E.Thurston, Castes and tribes of southern india(1909), P.13
2. நற்றிணை , 274:4
3. E.Thurston, Op.Cit, P.23

ஆதாரம் :
=========
நூல் : தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
பக்கம் : 150