Sunday, August 19, 2012

ஓலையாம்புத்தூர் பாளையக்காரர்களான வண்ணமுடையார்கள்:


செய்தியை அளித்த திரு சுவாமி அவர்களுக்கு நன்றி :

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலையாம்புத்தூர் என்னும் சிறு கிராமம். கி.பி 18 ஆம் நூற்றாண்டளவில் இது ஒரு பாளையத்தின் தலைமையிடமாக திழ்ந்திருக்கிறது.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரை ஓலையாம்புத்தூர் கச்சிராயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியவருகிறது.

அதன் பிறகு "வண்ணமுடையார்" என்ற குலப் பட்டமுடைய வன்னிய குலத்தவர் ஆட்சி தொடங்கியது.

இவர்கள் தொடக்க காலத்தில் சீர்காழி வட்டம் குன்னம் என்ற ஊரிலும் பின்னர் செங்கமேடு என்ற ஊரிலும் இருந்தனர்.

கச்சிராயர்- வண்ணமுடையார் மோதல்:

செங்கமேட்டில் வசித்த வண்ணமுடையார்களுக்கும் ஓலையாம்புத்தூர் கச்சிராயர்களுக்கும் தொடர்ந்து சண்டை சச்சரவு இருந்து வந்தது.இந்த இரு குடும்பத்தாருமே இதற்கு தீர்வு காண விழைந்தனர். செங்கமெடு அம்பலவாண வ்ண்ணமுடையாருக்கு கச்சிராயரின் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.இத மூலம் வண்ணமுடையார்-கச்சிராயர் மோதல் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு வண்ணமுடையார்களும் ஓலையாம்புத்தூருக்கு வந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர்.18 ஆம் நூற்றாண்டளவில் பாளையக்காரர்களாக பொறுப்பேற்றனர்.

வண்ணமுடையார் வமிசாவழி:

கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில்


1.சிற்றம்பல வண்ணமுடையார்(கி.பி. 1790)


2. நல்ல சேவக வண்ணமுடையார்(கி.பி.1850)


இவரது மகன் 1.திரு.செல்வமணி வண்ணமுடையார் 2.திரு.பட்டையா வண்ணமுடையார்

திரு செல்வமணி வண்ணமுடையார் மனைவி திருமதி ஞான சவுந்தரி ஆயாள் ஆவார். இவர் வடக்கு மாங்குடி ஏ.ஆ.சந்திரகாசு வாண்டையாரின் மகளாவார்.

திரு. பட்டையா வண்ணமுடையார் அவர்களுக்கு திருமதி.இராஜேஸ்வரி, திருமதி. மல்லிகா என்ற இரு மனைவியர். இவர்கள் இருவரும் வடகால் பாளையக்காரர் இராமாமிர்த ராவுத்தமிண்ட நயினாரின் புதல்விகளாவர்.

இவர்கள் நிலப்பரிவர்த்தனை ஆவணங்களில் "வன்னிய ஜாதி, சிவமதம்" என்றுள்ளது.

இப் பாளையத்தின் நடராஜ உடையார் 1918 இல் அடையாறு தியஸாபிகல் சொஸைட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.அதற்கான சான்றிதழை() அன்னிபெசண்ட் அம்மையார் தம் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார்.

நன்றி: "வன்னியர் மாட்சி"-- வன்னியர் குலக்குரு ஐயா திரு.நடன.காசிநாதன் அவர்களது நூல்.