Saturday, July 12, 2014

விஜயநகர பேரரசை சேர்ந்த க்ஷத்ரியர் வம்ச கம்பண்ண உடையாரும், வன்னியர் குல க்ஷத்ரிய வம்சத்தின் சம்புவராயரும் "மாமன் மைத்துனர் " கல்வெட்டு :






விஜயநகர பேரரசை சேர்ந்த க்ஷத்ரியர் வம்ச கம்பண்ண உடையாரும், வன்னியர் குல க்ஷத்ரிய வம்சத்தின் சம்புவராயரும் "மாமன் மைத்துனர் " கல்வெட்டு :
============================================

விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தமிழகம் நோக்கி வந்தது . அவர்களின் நோக்கம் மதுரை சுல்தான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது .

அதற்க்கு பெரும்படை திரட்டிய விஜயநகர படை, மதுரைக்கு வடக்கே உள்ள தொண்டைமண்டல பகுதியை முதலில் வெற்றி கொள்ள நினைத்தார்கள் . அதன்படி வன்னிய அரசர்களுடன் போர் செய்தார்கள் .

இதில் சம்புவராயனோடு ஏழாண்டு போர் செய்து , தனது வன்னிய தளபதியான "கண்டர கூளிமாராயன்" துணையோடு வெற்றி கண்டார் . அத்துடன் சம்புவரயார்களோடு இணக்கமான உறவை ஏற்ப்படுத்திகொள்ள திருமண உறவை வைத்து கொண்டார் .

அதன்மூலம் தொண்டைமண்டல படையையும் தன்னோடு சேர்த்து பெரும்படையுடன் மதுரை சுல்தானுக்கு முடிவு கட்டினார் ..

இந்த உறவை பற்றிய கல்வெட்டு "ஸ்ரீ ராஜா நாராயண சம்புவராயர்-111" அவர்கள் காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

கல்வெட்டு செய்தி :
===============

சகலலோக சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜா நாராயண சம்புவராயர்-III கல்வெட்டு :-

"முன்னாளில் மைத்துனனார் கம்பணர் குடுத்த
ஓலைப்படியே நடத்திக் கொள்ளும்படி
குடுத்தோம்
"

இடம் : ஆவூர் (திருவண்ணாமலை) கல்வெட்டு,
A.R.E. No.306 of 1919.

ஆண்டு : 23rd year 1379 A.D.