Google+ Followers

Monday, April 30, 2012

"நாயக்கர்" பட்டம் கொண்ட "விடால்" வன்னிய பாளையக்காரர்கள்


"நாயக்கர்" பட்டம் கொண்ட "விடால்" வன்னிய பாளையக்காரர்கள்

நன்றி :  கார்த்திக் சம்புவராயர்
கட்டுரை : திரு. முரளி நாயக்கர், பி. ஏ ,
புத்தகம் : "தொன்மை தமிழும் தொன்மை தமிழரும்" - திரு. நடன காசிநாதன்


விடால் ஊரில் "நாயக்கர்" பட்டம் கொண்ட வன்னிய பாளையக்காரர்கள் (குறுநில மன்னர்கள்) வாழ்ந்து வருகிறார்கள்.

விடால் பாளையக்காரர்கள் தங்களுடைய பூர்வீகமாக "விடார் நாடு" என்று கூறுகிறார்கள். இவர்கள் கருங்குழி சீமையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்த விடார் நாடு என்பது இன்றுள்ள விடால் கிராமம் ஆகும். இது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள செய்யூர் வாட்டத்தில் உள்ளது. இப்பாளையகாரர்கள் ராஜ வன்னியர்சமூகத்தை சார்ந்தநாயக்கர்பட்டம் கொண்டவர்கள். தற்போது 200௦ குடும்பங்களுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

முதலாம் ராஜேந்திர சோழனும் அவன் தேவியும் விடாலில் உள்ள வடவா முகாக்நீஸ்வரம் உடையார் மற்றும் தாயார் வசந்த நாயகி கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாகவும், அப்போது அம்மன்னன் தங்கள் குல மரபினை சார்ந்த வன்னிய போர் குடிகளை அவ்விடால் பகுதிக்கு ஆட்சியாளர்களாக நியமித்து ஆண்டு வரும் படி கட்டளையிட்டதாகவும், மேலும் அக்கோவிலுக்கு இவர்களை பொறுப்பாளர்களாகவும் நியமித்ததாகவும் கூறுகிறார்கள்.

விடால் கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் சுருக்கம் இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-எண் 175 முதல் 185 முடிய வெளிவந்து உள்ளது.

விடால் என்னும் இவ்வூர் சோழ கேரளா சதுர்வேதி மங்கலம் என்று முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியின் போது வழங்கபெற்றது. இவனுடைய 20 இம் ஆட்சியாண்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாட்டு முந்நூரான பண்டித சோழ ச் சருப்பேதி (சதுர்வேதி ) மங்கலத்து குடிபள்ளி துட்டன் வீர தொங்கன் என்னும் வன்னிய தலைவன் வாழ்ந்து வந்தான். இவனுக்கு சோழ கேரளா பெரியரையன் என்று வேறு பெயரும் இருந்தது.

துட்டன் வீர தொங்கனான சோழ கேரளா பெரியரையன் தனது உறவினர்களை முதலாம் ராஜேந்திர சோழன் ஆசியோடு விடால் பகுதிக்கு ஆட்சியாளர்களாக அமர்த்தி இருப்பான் போன்று தெரிகிறது. இப்பாளையகாரர்களும் தங்கள் வரலாற்றை கூறும் போது இதனை தெரிவிகிறார்கள். இப்பாளையகாரர்கள் இன்று வரை இக்கோயிலுக்கு நிர்வாகிகளாகவும் மற்றும் இவ்வூரில் உள்ள பல்வேறு குல மரபினர்களும் போற்றும் வண்ணம் செம்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பலர் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் மிக , அவர்களில் ஒரு குடும்பத்தினர் Deccan Constructions என்னும் நிறுவன பொறுப்பாளர்களாகவும் இருப்பதாகவும் திரு. ராமலிங்க நாயக்கர் அவர்கள் தெரிவித்தார்கள். Deccan constructions நடத்தி வரும் திரு. வி. வி. தலசிங்கார நாயக்கர் அவர்கள் இந்த ஊரின் நாட்டாண்மை தாரர் ஆவார்.

இப்பாளையகாரர்களுக்கு உறவினர்களாக அரியலூர் ஜமீன், உடையார் பாளையம் ஜமீன், முகாசா பரூர் ஜமீன், பிச்சாவரம் பாளையக்காரர்கள், சோழ குன்னம் பாளையக்காரர்கள்( முதலியார் பட்டம் கொண்ட வன்னியர்கள்), திருகனங்ககூர் பாளையக்காரர்கள் ( கச்சிராயர் பட்டம் கொண்டவர்கள் ) போன்ற வன்னிய பாளையக்காரர்கள் விளங்குகிறார்கள். திரு. ராமலிங்க நாயக்கர் அவர்களின் தாயார் திருக்கனங்கூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சிறிய தாயார் முகாசா பரூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்கள்.

விடால் வன்னிய சிற்றரசர்களை ஆங்கிலேயர்களின் ஆவணம் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது :

"
பாளையக்காரர் கிரினிவேஸ் ஆப் வெடால் விலேஜ் "

(
பர்மனென்ட் செட்டில் மென்ட் வால்யூம் ழு. டு. 1785 )

இவர்கள் சோழர் காலம் தொட்டு விஜயநகர வேந்தர் ஆட்சிவரை அப்பகுதியில் தங்களுடைய வல்லமையை செலுத்தி இருக்கிறார்கள். பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன் முறை கொண்டு வரப்பட்டபோது இவர்களுக்கு அது கிடைக்கபெற்றிருக்கும் போன்று தெரிகிறது.

இப்பாளையக்காரர்களில் மிகவும் புகழோடு இருந்திருப்பவர் திரு. சின்னத்தம்பி நாயக்கர் மகன் திரு. வைத்தியலிங்க நாயக்கர் ஆவார். இவர் அப்பகுதியிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் இன்றும் பலரால் புகழ்ந்து பேசபடுகிறார்.இவர் தம் இன மக்களுக்காகவும் மற்றும் தங்கள் மன்னர் குல மாண்பை காக்கவும் தொன்று தொட்டு நடத்திவரும் தர்மங்களுக்காவும் பல கட்டங்களில் போராடி இருக்கிறார். இவரது புதல்வர் திரு. ராஜேந்திர நாயக்கர் தனது தாயார் திருமதி சரஸ்வதி அம்மாளுடன் வசித்து வருகிறார். இவ்வம்மையார் ஊராட்சி மன்ற தலைவியாகவும் பதவி வகித்து வருகிறார்.

இப்பாளையகாரர்கள் தங்களை பற்றி நினைவு கொள்ளும்போது மிகவும் மகிழ்வடைகிறார்கள். தங்கள்வன்னியகுல க்ஷத்ரியசமூகம் ஒரு காலத்தில் தென் இந்தியாவையும், தென் கிழக்கு ஆசிய நாடுகளையும் சிறப்பாக ஆட்சி செலுத்தியதை நினைத்து பெருமிதம் அடைகிறார்கள். அதைபோன்றதொரு காலம் மீண்டும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.