Friday, February 17, 2012

படையாட்சி (படை +ஆட்சி )




தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :

படையாட்சிகள் - இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்கள்

அருணகிரிநாதர் இயற்றிய "திருப்புகழ்" நூலில் பாடல் 928 காண்க:

சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்

தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க்.......................

நமக்குத் தேவை முதல் இரண்டு வரிகளின் விளக்கம் எனவே அதை மட்டும் பார்ப்போம்.

திருப்புகழ் நூலுக்கு உரை எழுதியுள்ளார் ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள்.

மேற்கண்ட பாடலில் உள்ள முதல் இரண்டு வரிகளுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கம்:

"துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும்"

------

இதன் மூலம் படையாட்சிகள் என்பவர் இள வீரர்களுடைய படைத்தலைவர்கள் என்பது நன்கு விளங்கும்.