Google+ Followers

Wednesday, November 30, 2011

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :


வன்னிய இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்.


"சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தவர் நமது இன சரித்திர ஆசிரியர் "கல்வெட்டுச் செம்மல்" திரு.நடன்.காசிநாதன் அவர்கள்.

வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில் உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
"சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்"

மற்றொரு பகுதி:
"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம் குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.

செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம் என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.
செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று கேட்டார்கள்"

விளக்கம்:

சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர்.
ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.

ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள்.
வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.

இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நண்பர்களே இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு 

முக்கிய செய்தி:

ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.