வன்னியர் அக்கினிகுலசத்திரியரென்றும், இவர்கள் யாகத்தின் அக்னியிலிருந்து தோன்றினரென்றும் சொல்கின்றன. வன்னியரின் தோற்றம் பற்றிக் கூறுமிடத்து,
‘பங்குனித் திங்களுத்திரந் தன்னில் பரமன்
முக்கணழல் விழியில்
துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற் தோய்ந்து
செழுங்கழுநீரின் மலரைப்
பொங்கமா மகத்திலாகுதி யியற்றிட
புனிதனுக்கு வகையீந்தார்
(வ)ங்கண் வீரவன்னிய பூமன்னர்
பரிமீது தோன்றினனே.’
என வன்னியர் புராணமுங் கூறுகின்றன.
சிவனார் கொடுத்த செங்கழுநீர் மலரைச் சம்புமா முனிவர் தனது அக்கினி குண்டத்திலிட்டபொழுது வன்னியர் தோன்றினரென்பது பொருள் .
வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும். வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.
இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன:
புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்.
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.