Saturday, March 10, 2012

தில்லை நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் ? தீட்சிதர்களுக்கா ? அல்லது சோழ மன்னர் பரம்பரைக்கும் , மக்களுக்குமா ?

தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :

















தில்லை மரங்கள் அடர்ந்த வனம் நகராக மாறியபின் ஊருக்கும் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. தில்லை-யில் அமைந்த கோயில் சிற்றம்பலம் என்று பெயர் பெற்றது. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என்றாகி ஊருக்கும் அதே பெயர் அமைந்துவிட்டது. மதுரை மாநகரில் உள்ள கோயில் பெயர் ஆலவாய் என்றே முன்னாளில் அழைக்கப்பட்டது.

சோழ மன்னர்கள் சிற்றம்பல நடராசரை தங்களின் குலதெய்வம் என்பர். அவர்கள் தன் குல நாயகன் தாண்-டவம் பயிலும் தில்லையம்பலம் பொன் வேய்ந்தனர். முதலாம் ஆதித்த சோழன் கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் என்று அதனால் புகழப்பட்-டான். சைவர்கள் இயல்பாக அடை-மொழி எதுவும் இல்-லாமல் கோயில் என்றே சிதம்-பரத்தை அழைத்தனர். இரணிய-வர்மன் என்ற மன்னன் முதல் முதல் கோயில் கட்டினான். பின் வந்த தமிழக அரசர்கள், வள்ளல்கள், பொது-மக்கள் எனப்பலரும் கோயிலை விரிவாகக் கட்டினர் என்று நூல்கள் கூறுகின்றன.

தமிழக மண்ணில் சிற்பிகளான தமிழர்களால் தமிழ் மக்களுக்கென்று உருவாக்கப்பட்டுத் தமிழில் வழிபாடு நடத்திய தில்லைச் சிற்றம்பலத்தில்-தான் பாரம்பரியத் தொடர்பு ஏதும் இல்லாத ஒரு கூட்டத்தால் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோயில் சொத்துக்கள், நிலங்கள், விலை-யுயர்ந்த அணிகலன்கள், சில தனியார் வசம் போகக்கூடாது என்ற எண்ணத்-தால்தான் பெரிய கோயில்களின் நிருவாகத்தை அரசு மேற்கொண்-டுள்ளது. தமிழ்நாட்டில் திருவரங்-கம், பழனி, மதுரை, திருச்-செந்தூர்க் கோயில்கள், கேரள அய்-யப்பன் கோயில் குருவாயூர்க் கோயில், ஆந்திரத்தில் திருப்பதிக் கோயில் போன்றவை அரசு நிர்வாகத்தில்தான் உள்ளன. மிகத் தாமதமாகவே தீட்சிதர்கள் வசம் இருந்த சிதம்பரம் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டது. இதை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்கு மன்றம் சென்-றுள்ளனர். சிதம்பரம் கோயில் தங்கள் வசம் அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

பண்டைக்கால வரலாறு என்ன சொல்லுகிறது என்று கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்து சான்றுகள் அடிப்படையில் இக்-கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் என்றுமே சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை என்றே தெரிவிக்கின்றன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ்நாட்டு மன்னர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், வள்ளல்-கள், பொதுமக்கள் கொடைகொடுத்த கல்வெட்டுகள் பல உள்ளன.

கி.பி. 1888 முதல் 1963 வரை 315 கல்வெட்-டுகள் சிதம்பரம் கோயிலில் படி எடுக்கப்பட்டுள்ளன. 20_க்கும் மேற்-பட்ட சிதம்பரம் கோயில் செப்-பேடுகள் உள்ளன. அவை காலந்-தோறும் நடைபெற்று வந்த நிர்வாக முறையை நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

இடைக்காலச் சோழர், பாண்டியர் பேரரசுக் காலத்திலும், விசயநகர அரசர்கள் காலங்களிலும், போசளர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலத்-திலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்-தையும் அரசுக்காக மேற்கொண்டுள்-ளனர். ஸ்ரீ மகேசுவரக் கண்காணி செய்வார், கோயில் நாயகம் செய்வார், திரு-மாளிகைக் கூறு செய்வார், ஸ்ரீ கார்யம் செய்வார், சமுதாயம் செய்வார், கோயில் கணக்கர் முதலிய பல அலுவல் பெயர்களைக் கல்வெட்-டில் காணு-கிறோம். இவர்கட்கே அரசர், அலுவ-லர்-கள், சபையார், நாட்-டார் -ஓலை (கடிதம்) அனுப்பியுள்-ளனர். இவர்கள் யாரும் சிவப்பிரா-மணரோ, தீட்சிதர்-களோ இல்லை என்பது குறிப்பிடத்-தக்கது.

கோயில் பூசை செய்வோர் கோயில் நிர்வாகிகளிடமிருந்து அன்பர்களின் அறக்கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம், தளிகை, சட்டிச்சோறு, பிரசாதம் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்-ளனர்.

கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).

திருவாவடுதுறை ஆதின வரலா-றாகிய அரசவனத்து அறநிலையம் என்ற நூலிலும் இவ்விவரம் கூறப்-பட்டுள்ளது (பக்கம் 43). கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

கி.பி.17_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் 1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார். கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

பீஜப்பூர் சுல்தான் படைத்-தலை-வர்கள் படையெடுப்பின் போது பாது-காப்புக் கருதி அன்பர்கள் சிதம்பரம் நடராசரை 24.12.1648 அன்று குடுமியாமலைக்கு எடுத்துச் சென்றனர். குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர். 1647 ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்தும் சிதம்பரம் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக மக்கள் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டபோது நடராசர் இடம் மாறுதல் செய்யப்-பட்டார் என்ற கருத்தும் உண்டு.

அப்போது செஞ்சியிலும், தஞ்சை-யிலும் மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. செஞ்சியில் ஆட்சி செய்தவர் வீர சிவாசியின் மூத்த மகன் சாம்பாசி. பறங்கிப் பேட்டை மராட்டிய அலுவலர் கோபால தாதாசி வேண்டிக் கொள்ளவே சாம்பாசி தஞ்சையில் ஆட்சி செய்த தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இப்பணியை மேற்கொண்டு நடராசரை 21.11.1684 இல் சிதம்பரம் கொண்டு வந்து மீண்டும் எழுந்தருளச் செய்து குடமுழுக்கு விழாவையும் நடத்தியவர் சிதம்பரம் திருச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பவர். (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது. கிஸீஸீணீறீ ஸிமீஜீஷீக்ஷீ ஷீயீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ் 21--_23 ஷீயீ 1947)

கி.பி.1702_ஆம் ஆண்டு சிதம்பரம் கோயில் நிரு-வாகியாக இருந்து திருப்-பணி, வழிபாடு முதலிய-வைகளை மேற்பார்வை செய்தவர் பாதபூசை அம்-பலத்தாடும் பண்-டாரம் என்பவராவார்.

21.1.1711 அன்று சிதம்பரம் கோயில்-களின் நிருவாகியாக வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவர் இருந்த-போது சிதம்பரம் கோயிலைச் சேர்ந்த புதுமடத்தில் வழிபாட்-டுக்காக சீர்காழிச் சீமை ஏழு மாகாணத்தார் மற்றும் பெரிய வகுப்பு, சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குடி-யானபேர் அனைவரும் நெல் கொடையளித்தனர். இதற்காக எழுதப்-பட்ட செப்பேட்டில் நடராசர் சிவகாமியம்மை உருவத்துடன் வேளூர் அம்பலவாணத் தம்பிரான் பெயரையும் உருவத்தையும் பொறித்-துள்ளனர்.

31.12.1747 அன்று பரங்கிப்-பேட்-டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்-காரர் முதலிய அனைவரும் சிதம்பரம் கோயிலில் நிர்வாகியாக இருந்து, ஆயிரங்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளைத் திருப்பணி செய்த சண்முகத்தம்பிரான் என்பவரிடம் கொடை கொடுத்தனர். அதே நாளில் பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்த ஆலந்து நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் (உலாந்தா கம்பெனி) சண்முகத் தம்பிரானிடம் மகமைக் கொடை கொடுத்துள்ளனர்.

முத்தையத் தம்பிரான் என்பவர் நெடுங்காலம் திருப்பணி செய்யப் பெறாமலிருந்த இராசசபையைத் திருப்பணி செய்தார். பெரும் பொருட்-செலவில் நிருவாகி முத்தை-யத் தம்பிரான் திருப்பணிக்குத் தில்லை மூவாயிரவர் தினம் அரக்கால் காசு, கொடுத்த விவரம் ஒரு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் நிருவாகமும் திருப்பணியும் தீட்சிதர் வசம் இல்லை என்பது தெரிகிறது. மேற்கண்ட செய்திகள் கூறும் நான்கு செப்-பேடுகள் திருப்பனந்தாள் காசி-மடத்தில் உள்ளன. இதேபோல் சிதம்-பரம் கோயிலுக்குரிய பத்துச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. இச்செப்பேடுகள் எதுவுமே தில்லை தீட்சிதர்களிடம் இல்லை என்பதால் அவர்கட்குத் திருப்பணி-யிலும் நிர்வாகத்திலும் அக்காலத்தில் பங்கு இல்லை என்பது தெளிவா-கிறது. அரியலூர் மழவராயரி-டமும் சில சிதம்பரம் செப்பேடுகள் உள்ளன.

சிதம்பரம் கோயில் வழிபாடு, விழாக்களில் பங்கு பெறவும், விழாக்-களுக்கு வரும் அடியார்கட்கு உதவிகள் செய்யவும் சிதம்பரத்தில் புதுமடம், நாற்பத் தெண்ணாயிரவர் மடம், அம்பலப் பெருந்தெரு திருநாவுக்கரசு தேவன் திருமடம், அறுபத்து மூவர் மடம், அம்பலத்தடிகள் மடம், கந்ததேசிகள் மடம், முதலிய பல மடங்கள் இருந்தன, எப்போழுதுமே இம்மடங்களில் உப்பு, ஊறுகாய், நீராகாரம் வழங்கப்பட்டது. குழந்தை-கட்குப் பாலும், தலைக்கு எண்ணெய்யும் வழங்கப்பட்டது. அன்னதானம் நடை-பெற்றது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவாரத் தொடர்.

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது. சாமிதுரை சூரப்ப சோழனார், தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், ஆண்டியப்ப சூரப்ப சோழனார் ஆகியோர் சிதம்பரம் கோயில் நிர்வாகி-களாக இருந்துள்ளனர். அவர்கள் வீட்டு ஆவணங்கள் இதைத் தெரிவிக்-கின்றன.

கோயில் அணிகலன்களும், சாவியும் பிச்சாவரம் சமீன்தார் வசமே இருந்தன. கோயிலில் அர்த்த சாம பூசை முடிந்த பின் தீட்சிதர்கள் கோயிலைப் பூட்டிச் சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டுசென்று பிச்சாவரம் சமீன்-தாரிடம் ஒப்படைப்பர். அதுபோல் அதிகாலையில் சென்று சாவியை வாங்கி வருவர்.

தீட்சிதர்களிடையே வழக்கு ஏதேனும் ஏற்பட்டால் பிச்சாவரம் சமீன்தார் தீர்த்து வைப்பார். 5.11.1911 அன்று தில்லை தீட்சிதர்கள் பன்னிரண்டு பேர் சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்றில் மகா.ரா.ரா.ஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்றே சமீன்தாரைக் குறிப்பிட்டுள்-ளனர்.

தேவாரம் பாடிய மூவர் தாங்கள் பாடிய 11 பதிகங்களில் தில்லை இறை-வனைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். தில்லைக்கூத்தன் காலிங்கராயன் என்பவர் எல்லாத் தேவாரப் பாடல்-களையும் செப்பேட்டில் பொறித்துச் சிதம்பரம் கோயிலில் வைத்தார். ஆனால் மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

சேக்கிழார் பெரியபுராணம் பாட உலகெலாம் என்ற முதற்சொல்லை அடியெடுத்துக் கொடுத்தவர் சிதம்-பரம் நடராசர் என்பது மக்கள் நம்-பிக்கை. ஆனால் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் சேக்கிழார் விழாவை அரசு நடத்துவதைத் தீட்சிதர்கள் தடுத்தனர்.

ஆனந்தத் தாண்டவமாடும் நடராசர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடத்தத் தடை விதித்தனர். அத்தடைகளை-யெல்லாம் உடைத்து தமிழக அரசு சிதம்பரம் கோயிலை இன்று நிர்வகித்து வருகிறது. தமிழ்நாட்டுப் பக்தர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தமிழக அரசின் நிர்வாகத்தை நீக்க தீட்சிதர்கள் நீதிமன்றப் படியேறுகின்றனர். இதைப் பஞ்சாட்சரப் படிக்கு மேல் பக்தர்கட்குக் காட்சியளிக்கும் நடராசர்கூடப் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

சில ஆண்டுகட்கு முன் சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா_ தீட்சிதர்களுக்கா? என்ற கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடைபெற்றது. அருட்செல்வர் நா. மகாலிங்கம், ம.பொ.சி, நீதியரசர்கள் கிருஷ்ணசாமி ரெட்டியார், சதாசிவம், முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு, பேராசிரியர் வெள்ளைவாரணம், அன்புகணபதி போன்ற பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருமனதாக மக்க-ளுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில, மத்திய அரசுக்கு அனுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முத்துசாமி சிதம்பரம் கோயில் மக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ள-னர். நிர்வாகத்தில் என்றும் தீட்சி-தர்கட்குப் பங்கு சிறிதும் இல்லை, பூசை செய்வது மட்டுமே அவர்கள் பணி என்று அனைவரும் கூறினர்.

செப்பேடு, கல்வெட்டு, வரலாற்று ஆவணங்களின் படி என்றுமே தீட்சி-தர்கள் வசம் இருந்திராத சிதம்பரம் கோயில் நிருவாகத்தை எப்படியோ சூழ்ச்சிகளால் அபகரித்துக் கொண்ட தில்லை தீட்சிதர்கள் அதன்மூலம் பல சுகம் கண்டதால் மீண்டும் நிரு-வாகத்தைப் பெற முயல்கின்றனர். அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கும், தமிழக அரசிற்கும் ஆதரவாக தமிழகப் பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆதினத் தலைவர்கள் ஆகியோர் உடனே ஒன்று திரள வேண்டும். தீட்சிதர்களை வழக்-கைத் திரும்பப் பெறவைக்க வேண்டும்.


கட்டுரை ஆக்கம்:

புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,

முன்னாள் தலைவர்

கல்வெட்டியல் - தொல்லியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தொலைபேசி: 0424 2262664 .




http://viduthalai.periyar.org.in/20100102/snews07.html