Google+ Followers

Tuesday, March 6, 2012

வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள்

வன்னி மரம் வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. - திருஞானசம்பந்தர்.


திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும்.

இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.

இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

http://www.shaivam.org/sv/sv_vanni.htm
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்தின் போது தமது ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.

இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.

வன்னிமரம் புகழ் பெற்ற சில சிவாலயங்களில் இருக்கிறது.

இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் பரிட்சையில், வழக்குகளில், வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கும் என்பது நிச்சயம். வன்னி மரத்தை வழிபட்டு வாழ்வில் வெற்றி பெருவோமாக.
http://tamil.oneindia.in/art-culture/essays/2011/16-vanni-tree-temple-agni-human-aid0090.html

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்!


இதேபோல, மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.

இதுதவிர, தெய்வீகத் தன்மைகள் இந்த வன்னி மரத்திற்கு மிக அதிக அளவில் உண்டு. ஏனென்றால் சிவாலயங்களில் பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.

வீரியம், வெற்றி என எல்லாவற்றையும் தரக்கூடியத் தன்மை இந்த மரத்திற்கு உண்டு. மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கிறது. சித்த மருத்துவர்கள் நிறைய கூறுவார்கள். நமக்குத் தெரிந்த வரையில் ஆன்மீகம், மருத்துவம் என எல்லாவற்றிற்கும் மிகச் சிறந்த மரம். இந்த வன்னி மரத்தினுடைய கன்று நட்டு பாதுகாத்து வளர்த்து வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கும். அப்படி ஒரு பெரிய சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.
http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/1102/23/1110223059_2.htm