Saturday, March 17, 2012

ஸ்ரீ முதலாம் ராஜ நாராயண சம்புவராய மன்னர் கட்டிய " ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் "


Si Singiri Kovil - Sri Lakshmi Narasimhar Temple (Narasima Avatar)





ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், சிங்கிரி கோயில், வேலூர் மாவட்டம் – ஸ்தல வரலாறு


இத்திருத்தலத்தின் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் சம்புவராயர் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆண்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் இத்திருத்தலப் பெருமானை அவுபள நாயனார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இத்திருத்தலம் கி.பி. 8ம் நூற்றாண்டிலேயே திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற சிறப்பினை உடையதாகவும், கி.பி. 1337 – 1363 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக கி.பி. 14ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகவும் கல்வெட்டுத் தகவலின்படி அறிய முடிகின்றது.


கி.பி. 1426 ஆம் ஆண்டினைச் சேர்ந்த விஜய நகர மன்னரின் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஓபிளம் எனவும், இறைவனை சிங்கபெருமாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிங்கிரி கோயில் என்பது சிங்க பெருமாள் கோயில்என்பதன் திரிபாகக் கருதப்படுகின்றது.


விஜய மகாராயர் குமாரர் சச்சிதானந்த உடையார் காலக் கல்வெட்டில் முருங்கைப்பற்றைச் சேர்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவன் திருவிளக்கு நிலம் தானம் அளித்த செய்தியைத் தருகிறது.


இத்திருத்தலம் கி.பி. 14ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பே, கி.பி. 8ம் நூற்றாண்டுகாலத்தில் சிறிய சன்னதியில் எழுந்தருளியிருந்து சேவைசாதித்து பக்தர்களாகிய நம் அனைவரையும் அனுக்கிரஹித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் இத்திருக்கோயில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்ததும் (1300 years old), விஸ்தாரமான கருவறையுடன் தாயார் பெருமானின் வலது தொடையில் அமர்ந்து சேவை சாதித்தருளும் திருக்கோலம் மிகவும் அரிதான சிறப்பைப் பெற்ற திருக்கோலமாகும்.


கல்வெட்டுத் தகவல்கள்: மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை, சென்னை.


Reference: State & Central Archeological Survey of India, Chennai.



Translate


Sri Lakshmi Narasimha Swami Temple, Singiri Kovil, Vellore District, Tamilnadu State, India.


History of the Temple: Stone Scripts found and referred byArcheological Survey of India in North, South, West side of the temple inside (Garpagraha) which notifies the Deity (God) as Avubala Nayanar.


In 8th Century, Thirumangai Azhvar sung songs on this Deity and Temple.


In AD 1337-1363, the ruler First Sambuvaraya King Raja Narayanan constructed the temple.


In AD 1426 stone scripts said that the village name is OBILAM and the Deity name is SINGA PERUMAL. Hence the Singa Perumal Kovil said in turn as Singiri Kovil.


Sri Vijaya Maharayar Son Sachinanda Udayar period stone scripts said that, Meenavarayan from Murungapet donates land donation for the lamps in this temple.


Since 8th Century the Lord Sri Narasimha Swamy blessed all from this holy temple (1300 years old) is spcially known for the special and rare statue which the God Sri Narasimhar holds Sri Lakshmi Devi in his right thigh, which comes 5 feet approximate.


You can reach the temple well connected with road, 25 kms from Vellore. Travel 13 kms towards Arni, Tiruvannamalai south to Vellore town, you can reach Kaniyambadi a small town. Then take right turn which goes to Amirthi Forest. On the way, from Kilarasampet Village you take left turn and from there the temple falls at 5th Km.