Saturday, January 7, 2012

வன்னியகுலசத்ரியர் உயர்நிலைப்பள்ளி


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ளது ஏரிகொடி என்னும் சிறிய கிராமம் தாரமங்கலம் வட்டாரபகுதிகளில் தற்போது பிரபலம் ஆகிவரும் பள்ளிகூடம் இங்கு தான் உள்ளது. 

அந்த பள்ளியின் பெயர்
வன்னியகுலசத்ரியர் உயர்நிலைப்பள்ளி
 Vanniyar School
இந்த பள்ளியை பற்றி தெரிந்து கொள்ள நாம் சேலம் மாநகர் நோக்கி பயணித்தோம். சேலம் ரயில்நிலையத்தில் இறங்கி அப்பள்ளியின் நிர்வாகி திரு பாபு அவர்களை அலைபேசியின் வழியாக தொடர்கொண்டு பள்ளிக்கு வரும் வழியை அறிந்து தாரமங்கலம் செல்லும் பேருந்தில் பயணித்து தாரமங்கலத்தை அடைந்தோம். தாரமங்கலத்தில் இறங்கி ஒரு ஆட்டோ டிரைவரிடம் வன்னியகுலசத்ரியர் பள்ளி எங்கு உள்ளது என்று விசாரித்த போது வன்னியர் ஸ்கூல் தானே வாங்க இறக்கி விடுகிறேன் என்று நம்மை ஏற்றி கொண்டார் . தாரமங்கலத்தில் இருந்து அந்தப்பள்ளி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

பள்ளியை நெருங்கியதும் நமக்குள் ஒரு உற்சாகம் தலைக்கேறியது ஏன்னென்றால் வன்னியர் பெயரில் நான் பார்த்த முதல் பள்ளி இது. பள்ளிக்கூடத்தை நாம் அடைந்ததும் பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான திரு பாபு அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு மாதயையனும் நம்மை அன்புடன் வரவேற்றனர். 

சிறிது நேரம் நாம் அவர்களுடன் நமது இணையதளத்தை பற்றியும் அதன் வாருங்கள திட்டங்களை பற்றியும் பேசிக்கொண்டு பள்ளியை பற்றி கேட்டோம். அவர்கள் நம்மை அருகில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றனர் அங்கு தாரமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கண்ணையன் அவர்கள் அமர்ந்திருந்தார். அவர் தான் அந்த பள்ளியின் தாளாளர் 

அவர் கூறும் போது " இந்த பகுதியில் பெரும்பாலும் அனைத்து சாதிகள் பெயரிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளது ஆனால் இங்கு பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் பெயரில் எந்த கல்வி நிறுவனங்களும் இல்லை இது எனது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது. அதன்படி எனது நண்பர்கள் சிலருடன் இணைந்து வன்னியகுல சத்ரியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் இந்த பள்ளியை தொடங்கி உள்ளோம். 
அறக்கட்டளையின் தலைவராக திருமதி ஜானகி அவர்களும் திரு கோபால் அவர்கள் செயலாளராகவும்திரு பச்சியன்ணன் அவர்களை பொருளாளராகவும் கொண்டு வன்னியர்குல சத்ரியர் அறகட்டளை சிறந்த முறையில் இந்த பள்ளியை நடத்தி வருகிறது 

இந்த பள்ளி கடந்த 2010 - 2011 ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது ஆரம்பத்தில் ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டில் 10 ம் வகுப்புவரை நடத்த உள்ளோம் இந்த பள்ளியில் அனைத்து சாதியினரும் படிக்கின்றனர் வன்னியர் மாணவர்களுக்கு கல்விகட்டனத்தில் பல சலுகைகளை கொடுக்கிறோம்இந்த பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளை விட சிறந்த கல்வியை இங்கு கொடுப்பதே எங்கள் லட்சியம்" என்று  பள்ளியை பற்றி நமக்கு விவரித்தார். 

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு கோட்டை போன்ற கட்டுமானம் கொண்ட நமது வன்னியகுலச்சத்ரியர் பள்ளியை சுற்றி பார்த்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றோம் 

 - குமரேசன்