Saturday, August 17, 2013

தென்மொழிவாரி மாநிலங்களும்; தமிழகம் இழந்தவைகளும்;




-          கட்டுரையாளர்: “விஞ்ஞானி” சக்தி, சிங்கப்பூர். 
 
அறிமுகவுரை:
மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கையில், பல கசப்பான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.
நம் சமுதாய தந்தை "மருத்துவர் அய்யா" அவர்கள் கூறியது போல், இந்த தென்மொழிவாரி மாநில பிரிவினையால் தமிழ் நாட்டுக்கு தான் மிக பெரிய இழப்பு.

விளக்கவுரை:

1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.

தமிழர்கள் (குறிப்பாக வன்னியர்கள், சுமார் 70% வரை ஆந்திர மற்றும் கர்நாடக எல்லை ஒட்டிய பகுதிகளில்) அதிகமாக வாழும் சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள் (ஆந்திராவுடன் இணைக்கப்பட்டவை,  பதிலாக சென்னை விட்டுகொடுக்கபட்டது), கோலார் (தங்க வயல்), பெங்களூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்கள் (கர்நாடகாவுடன் இணைந்தவை), வயநாடு, பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் (கேரளாவுடன் இணைக்கப்பட்டவை, பதிலாக கன்னியாகுமரி விட்டுகொடுத்தார்களாம்?) போன்றவை மறுபடியும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டால், தமிழ் நாட்டின் தீராத தண்ணீர் தாகம், நதிநீர் சிக்கல் தீரும்.
அதற்கான, அச்சாணியைதான் மருத்துவர் அய்யா இப்பொழுது (முதலில் இழந்த ஆந்திர பகுதிகளை பெறுவது) செய்கிறார் என்று எத்தனை பேர் அறிவர் என்பது உங்களுக்கே வெளிச்சம். 
"அய்யா" என்றாலும், "பாமக" என்றாலும் கசப்பாகி போன மற்ற அரசியல் இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தும் இந்த நியாயமான கோரிக்கையை வரவேற்க தவறிவிட்டன. 
பாலாறும், பெண்ணையாறும் தோன்றி பாயும் பகுதிகளான கோலார், பெங்களூர், சித்தூர் போன்றவை ஆகும். காவேரி மற்றும் அதன் கிளை நதியான கபினி போன்றவை தோன்றி பாயும் பகுதிகளான குடகு, வயநாடு, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் போன்றவை ஆகும். பெரியாறு பாயும் இடுக்கி மாவட்டம் தமிழர்க்கு உரியது.
"பெருந்தலைவர்" என்றும் "கர்மவீரர்" என்றும் "கல்விக்கண் திறந்த தந்தை" என்றும் போற்றப்படும் நமது மரியாதைக்குரிய திரு.கு.காமராஜ் அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக, ஒட்டுமொத்த பாரத அரசியலை கட்டுபடுத்தும் பொறுப்பில் இருந்தபோதுதான், அவருடைய அலட்சியத்தாலோ, அறியாமையாலோ, இரண்டு வரலாற்று பிழைகள் நடந்த பொழுது அமைதியாக இருந்துவிட்டார் போலும்.
பிழை#1: தமிழ்நாட்டை நதி நீருக்காக, நம் அண்டை மாநிலங்களை கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு காரணமான, நம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க தவறியது.
பிழை#2: அன்றைய இலங்கை அதிபர் திருமதி பண்டாரநாயக இந்தியவாழ் வம்சாவழி மலையக தோட்ட தொழிலாளர்களை இலங்கை குடிமக்களாக ஏற்க மறுத்து, தாயகத்திற்கு திருப்பி அனுப்பிய பொழுது, அதை நம் காமராஜால் பிரதமர் பணியில் அமர்த்தப்பட்ட திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் முன்னிலையில் வரவேற்றது. அன்றே, இந்திய அரசு மலையக மக்களை திருப்பி அனுப்புவதை தடுத்து, 

இலங்கை குடியுரிமையை அவர்களுக்கு உறுதி செய்திருந்தால், இன்றைய இலங்கை சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க வாய்ப்பில்லை. அவர்களும், இன்றைய மலேசியா தமிழர்கள் போல் அமைதியாக, பல குறைகளுக்கு அப்பால் வாழ்ந்து இருப்பார்கள் போல.
முடிவுரை:
நான் தமிழ் நாட்டின் எல்லை பகுதியை சேர்ந்தவன் என்பதால் "மருத்துவர் அய்யா" அவர்களின் “ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்” என்ற நியாயமான, ஆக்கபூர்வமான கோரிக்கையை (என் ஆழ்மனதில் உள்ளதும்) பாராட்டி வரவேற்கிறேன்.
உண்மையில், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு என்று சொல்வதை விட வன்னியர்கள் அதிகம் வாழும் தமிழ் நாட்டின் எல்லை பகுதிகளை கூறுப்போட்ட, இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றைய பாலாறு, தென்பெண்ணை, காவேரி, பெரியாறு போன்ற தீர்க்க முடியாத “தமிழக நதி நீர்” சிக்கலுக்கு உள்ள மிக சிறந்த வழி, நிரந்தர தீர்வும் இழந்த தமிழர் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதே.

குறிப்பு#1: இந்த கட்டுரையின் நோக்கம் கட்டுரையாளரின் கருத்தை நண்பர்களுக்கு தெரிவிக்க, பகிர்ந்து கொள்ள மட்டுமே. யாருடைய குறைகளையும் சுட்டி காட்டுவது அல்ல. என் கருத்தில் பிழை இருப்பின் பொறுத்து கொள்ளவும். 

உண்மையில், கட்டுரையாளரின் பாட்டனார் திரு.காமராஜ் அவர்களின் இறுதி காலம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்து, பெருந்தலைவரின் காலத்திற்கு பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
குறிப்பு#2: இக்கட்டுரையை "மருத்துவர் அய்யா" அவர்களுடைய தொலை-நோக்கு எண்ணங்களுக்கு உரியத்தாகி சமர்பிக்கிறேன்.