Saturday, July 6, 2013

யாழப்பாணத்து அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா "- வன்னிய குல சோழனார் "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கு எழுதிய மடல்



வன்னிய சொந்தங்களுக்கு மாபெரும் மகிழிச்சியான செய்தி :

இலங்கையில் யாழ்ப்பாணம் என்னும் இடத்தை ஆட்சி செய்தவர்கள் ஆரிய சக்கரவர்த்தி (இவர்கள் தமிழ் சமூக அரசர்கள் . ஆரிய சக்ரவர்த்தி என்பது அவர்கள் குடும்ப பெயர் ).

இவர்கள் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கை சென்று பாண்டிய மன்னனின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து இலங்கை அரசனின் ஆணைக்கு இணங்கி அடங்காபற்றை வெற்றி கொண்ட வன்னிய குலத்தினருடன் , இலங்கை வந்த "சிவிங்கை ஆரிய சக்கரவர்த்தி" வம்சத்தை சேர்ந்த தமிழரும் யாழ்ப்பான அரசருமான , நல்லூர் அரண்மனையை சேர்ந்த அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் நமது சோழர் குடியின் இன்றும் வாழும் அரசரான “ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்’ அவர்களோடு சமீபத்தில் , இருவரின் ராஜ குடும்பம் நட்ப்புறவும் வளம் பெறும்பொருட்டு தொலைபேசியில் உரையாடினார் . 


                                 

பின்னர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் ,இவர்கள் இருவரின் ராஜ குடும்பமும் இன்னும் நெடுங்காலத்துக்கு என்றென்றும் நல்லுறவோடும் நட்போடும் இருக்க வேண்டும் என்று விரும்பி "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கும், உடையார் பாளையத்து சமஸ்த்தானத்தில் (பல்லவர் குடி) பிறந்து சோழனார் அரசர் குடும்பத்தில் இன்று அரசிமாராக திகழும் ராணி "ஸ்ரீ சாந்தி தேவி" அவர்களுக்கும் , யாழ்ப்பாண அரசர் குடும்பத்தின் குல கடவுள் கைலாசநாதர் சுவாமியின் அருளால் என்றும் நலத்தோடு வாழ வாழ்த்தி வாழ்த்துமடல் அனுப்பியுள்ளனர் .




இவர்களின் சந்திப்பு நிகழ்வை ஏற்படுத்தி, இதன்மூலம் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை உருவாக்கிய திரு.அண்ணல் கண்டர் , முரளி நாயகர் அவர்களின் முயற்ச்சிக்கு கோடி வன்னியர்குல க்ஷத்ரியர் குடிகளின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் ...

இதோ அந்த வாழ்த்து மடல்




1. வாழும் சோழ வாரிசுகளின் புகைப்படங்களை காண :

http://chozhar-vanniyar.blogspot.com/2011/12/blog-post_4582.html


2. வாழும் சோழ வாரிசுகளின் பேட்டிகளை காண மற்றும் அவர்களை பற்றி  நக்கீரன் தினமணி போன்ற நாளிதழ்களின் பேட்டி :

http://chozhar-vanniyar.blogspot.com/2012_06_01_archive.html