Monday, July 15, 2013

காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் இறைப்பணி - நக்கீரன் இதழ்







நமது நாட்டை ஆலயங்களின் தேசம் என்றே சொல்லலாம். எல்லை தெய்வக் கோவில்கள், நடுகல் கோவில்கள் தொடங்கி வானளாவிய கோபுரங்கள் கொண்ட கோவில்கள் வரை பல்லாயிரக்கணக்கில் பரவிக் கிடக்கின்றன. பழமையும் பெருமையும் வாய்ந்த பிரம்மாண்டமான கோவில்கள் அக்கால மன்னர்களால் அமைக்கப்பட்டவையே.

பக்தியைக் கொண்டாடவும், வெற்றியின் காணிக்கை யாகவும் ஆலயங்களை அமைத்த மன்னர்கள், அதைக் கோட்டையாக அமைத்து பாதுகாப்பு அரணாகவும் பயன்படுத்தினர். அத்தகைய ஆலயங்களில் ஒன்று சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் ஆலயம்.

""கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு நடுநாட்டை ஆண்டுவந்தான்- காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன். போரில் தான் பெற்ற வெற்றியை முன்னிட்டு அவன் இந்த சிவன் கோவிலை அமைத்தான்.

இறைப்பணி, அறப்பணிகள் செய்தும், நீதி தவறாமல் ஆட்சி புரிந்தும் புகழ் பெற்றுத் திகழ்ந்தான் கோப்பெருஞ்சிங்கன். கி.பி. 1231-ல் வந்தவாசி என்னுமிடத்தில் நடந்த போரில் மூன்றாம் ராஜராஜனைத் தோல்வியுறச் செய்த இவன், சோழனை சேந்தமங்கலம் கோட்டையில் அடைத்து வைத்தான். இதையறிந்த சோழனின் உறவினரான போசள மன்னன் பாண்டியரின் துணையோடு வந்து சோழனை மீட்டுச் சென்றான் என்பது வரலாறு'' என்கிறார்- இக்கோவிலையும் அதன் வரலாறையும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ராமஜெயம்.

இவ்வாலயத்துக்கு கிழக்கே கரிக்காலமர்ந்தம்மன், மேற்கே மழையம்மன், வடக்கே காட்டு மழையம்மன், தெற்கே துர்க்கையம்மன் ஆகியோருக் கும் ஆலயம் அமைத்திருக் கிறான் கோப்பெருஞ்சிங்கன்.

கி.பி. 1248-ல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தெற்கு கோபுரத்தை உருவாக்கிய இந்த மன்னன், 1262-ல் சிதம்பரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள தில்லைக்காளி கோவிலையும் அமைத்தான் என்பர். திருவெண்ணெய் நல்லூர் பெருமாள் ஆலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்த இவன், திருவண்ணாமலையாருக்கு பத்து ஏக்கர் நிலமும், பொன்னாலான விளக்கையும் காணிக்கையாக்கியுள்ளான்.

மேலும் திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கு நூறு கழஞ்சு பொன்னும், விருத்தாச்சலம் பழமலைநாதர் ஆலயத்துக்கு திருமண மண்டபமும் கட்டிக்கொடுத்து திருப்பணி செய்துள்ளான்.

திருநறுங்குன்றம் என்னும் ஊரிலுள்ள மலையில் அப்பாண்டநாதர் கோவில் என்னும் சமண சமய ஆலயம் உள்ளது. அதற்கும் இந்த மன்னன் உதவி செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆதனூரில் பெருமாளுக்கும் சிவனுக்கும் அருகருகே ஆலயம் அமைத்து தீவிர சமயப் பணி ஆற்றியுள்ளான் கோப்பெருஞ்சிங்கன்.

சேந்தமங்கலம் சிவாலயத்திலுள்ள வானிலை கண்டீஸ்வரர் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோப்பெருஞ்சிங்கனை பல ஆபத்துகளிலிருந்து காத்ததால் ஈசனுக்கு இப்பெயர் அமைந்ததென்பர். தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களின் ஆபத்துகளை நீக்கி திருவருள் புரிகிறார் இத்தலத்து சிவபெருமான். அம்மன் பிரகன் நாயகி என்னும் பெயரில் அருள்புரிகிறாள்.

இவ்வாலயத்தின் எதிரேயுள்ள திருக்குளத்தின் வடகரையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் குதிரைகள் உள்ளன. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்தக் குதிரைகளையும் ஆலயத்தையும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் புனரமைப்பு செய்து வருகிறார்கள்.

முற்காலத்தில் இங்கே மிகச் சிறப் பாக விழா நடைபெறுமாம்.

அப்போது ஆலயத் திருவிழா என்றென்றும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பெற்றான் நாயக்கர் என்பவர் தன் தலையைத் தானே அறுத்து தன்னை பலியிட்டுக் கொண்டுள்ளார். இதையறிந்த அரசு அவரது குடும்பத்துக்கு விளைநிலங்களையும் பொன், பொருளையும் வழங்கிய தாம். நாயக்கர் பலியிட்டுக் கொண்ட இடம் உதிரப்பட்டி எனப் பட்டது. அந்தப் பெயரில் தற்போதும் ஒரு கிராமம் இருப்பது வியப்பான செய்தி.

""வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் ஊரை சுற்றுலா மையமாக்கி, பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்'' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பேத்.

""சமய நல்லிணக்கத்தைப் பேணிய கோப்பெருஞ்சிங்கன் அமைத்த இவ்வாலயத் துக்கு வந்து வழிபடுவோர், வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சியைக் காண்பார்கள்'' என்கிறார்கள் மோகனசுந்தரம் குருக்கள் மற்றும் வழக்கறிஞர் வீரபாண்டியன் ஆகியோர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை யொட்டி. திருச்சி கெடிலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இவ்வாலயம். மினி பஸ், கார், ஆட்டோ வசதிகள் உள்ளன






Thanks :
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13612

Saturday, July 6, 2013

வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறும்




கோவில்களுக்கு தானம் அளிப்பதில் கர்ணனுக்கு இணையானவன் என்றும் , ஹிந்து மதத்தை காக்க பிறந்தவன் என்றும் , குழந்தை இல்லாத வீர வல்லாளனுக்கு அவன் சிவபக்தியால் அண்ணாமலையாரே குழந்தையாய் காட்சி தந்து, உன் இறப்பிற்கு பின் உனக்கு மகனாக இறுதி காரியங்கள் நானே செய்கிறேன் என்று வரம் பெற்ற வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து  கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறு :



(அண்ணாமலையார் கோவிலில் உள்ள கோபுரத்தில் "வன்னிய மன்னர் வீர வல்லாள மகாராஜன் " சிலை)
 

சுல்த்தான் படை தமிழகம் நுழைந்ததும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருந்தனர் . பல துயரங்கள் அடைந்தனர் . கோவில்கள் நிர்மூலமாக்க பட்டது . அப்போது குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தென் தமிழ்நாடு பாண்டியர் அழிவிற்கு பிறகு அல்லோலப்பட்டது சுல்த்தானால் . வடதமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வன்னிய மன்னன் சம்புவராயன் ஆட்சியில் பாதுக்காப்பாக இருந்தனர் . பலர் தென்தமிழ்நாடு விட்டு வடக்கே சம்புவராயன் பகுதிக்கு பாதுக்காப்புக்காக தஞ்சம் அடைந்த காலம் அது .

அப்போது ஹிந்து தர்மங்களை அழிக்கும் சுல்த்தானை அழிக்க திருவண்ணாமலை ஆண்ட வீர வன்னியன் திரு.வீர வல்லாள மகாராஜ கண்டர் புறப்பட்டார் .

கிபி. 1341 ஆம் ஆண்டு கண்ணனூர் குப்பம் என்னும் ஊரில் மதுரை சுல்தானுடன் போர் நிகழ்ந்தது . வீர வல்லாளனுடைய படையில் ஒன்றரை லட்சம் வீரர்கள் இருந்தனர் . மதுரை சுலத்தானுடைய படையில் ஆறாயிரம் படை வீரர்களே இருந்தனர் . தற்போதைய குப்பம் என்னும் இடத்தில் மதுரை சுலத்தான்கள் மீது படையெடுத்து வீரவல்லாளன் 6 மாத காலம் முற்றுகையிட்டுருந்தான் .இதனால் படை வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் பதினான்கு நாட்கள் மட்டுமே போதுமானதாக இருந்த நிலை உருவானது .

இந்த நிலையில் முகமதிய படைவீரர்கள் சமாதானத்தை கோரினர் . அதற்க்கு உடன்பட்ட மூன்றாம் வீரவல்லாளன் குப்பம் நகரத்தின் மையப் பகுதியில் படைவீட்டை அமைத்துக்கொண்டு தங்கினான் . அப்போது வஞ்சப் போர் நிகழ்த்தி , வீரவல்லாளனை சுல்த்தான்கள் கொலை செய்தார்கள் .

தலைவன் இல்லாத படை வெட்டாது என்பது போர்நெறி . போர்முறைகளை பின்பற்றும் வீர்வல்லாளன் படை தோல்வியை தழுவியது .. எப்படி வேண்டுமானாலும் போரிடலாம் , சூழ்ச்சியாலும் போரிடலாம் என்று இருந்த சுல்த்தான் படை வீர வல்லாளனை கொன்றது .

வீரவல்லாளனை கொன்ற சுல்த்தான் படை , அவர் இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தன்னுடைய அரண்மனையின் வாயிலில் தொங்கவிட்டான் . இத்தனை கோரமான காட்சியை மக்கள் கண்டதாக மதுரையின் கிழக்கு பகுதிக்கு கோரிப்பாளையம் என்ற பெயர் வந்தது .

ஆதாரம் :

மதுரா விஜயம் நூல் ... விஜயநகர பேரரசு தமிழகத்தை வெற்றி கொண்ட வரலாறு உள்ள நூல் .இந்நூலை இயற்றியவர் கங்காதேவி என்னும் விஜயநகர பேரரசின் அரசியார் .


(குறிப்பு : தெலுங்கு படை அரசி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல் இது .. தெலுங்கர் படையெடுப்பை கூறுவது ...

இதில் வன்னிய மன்னர்கள் வீர வல்லாளன் பற்றியும், அவர்கள் மாலிக் கபூர் நவாப் அவர்களை எதிர்த்ததையும் , சம்புவராய மன்னர்களின் நல்லாட்சியையும் தெளிவாக விளக்குகிறது ...

அஞ்சா புகலிடம் கட்டி , தென்தமிழ்நாட்டில் நவாப் ஆட்சிக்கு அஞ்சி வந்த சமணர்கள் , பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு தந்து வடதமிழகத்தில் நல்லாட்சி புரிந்தவன் ராஜ நாராயண சம்புவராயன்
. )



 

திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் , வன்னிய மன்னர் வீர வல்லாள மகாராஜா கண்டர் அவர்களுக்கு ஈசனே மகனாகப் பிறந்த கதையை சொல்லும் அருணாச்சலேசுவர புராணத்தின் கதையம்சத்தை கோபுரத்தில் சிலையாக வடித்துள்ள காட்சி இது .



அங்கே ஓவியங்களும் இருந்தன. அவைகளை புகைப்படம் எடுக்க அனுமதிக்கபடவில்லை .  




திருவண்ணாமலையில் உள்ள "வன்னிய குல க்ஷத்ரிய வீர வல்லாள மகாராஜா மடாலயம் "

மன்னருக்கு ஈசன் மகனாக பிறந்த வரலாறு உள்ள லிங்க் 

http://vanniyarkula-kshathriyar.blogspot.com/2013/07/672-25-02-2013.html




 

அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா (25-02-2013) அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்


அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா (25-02-2013) அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

                                        

                              வன்னிய மன்னன் வல்லாள மகாராஜன்














இந்த நிகழ்ச்சியில் , அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்டும் முறை நடைப்பெறும் . இந்த சம்மந்தி முறையில் வந்து அந்த உரிமையை செய்வது வன்னியர்கள் மட்டுமே . வழக்கமாக இதை ஒரு ஊர் வன்னியர்கள் மட்டுமே செய்தனர் .

இதனால் அந்த ஊருக்கு சம்மந்தனூர் என்ற பெயரே பெற்றது ஆனால் கால மாற்றத்தாலும், அனைவரும் இனைந்து செயல் படவும் , இப்போது மற்ற ஊர் வன்னியர்களும் செய்வதாக கேள்விபட்டேன் .



பிறகு , சமந்தி முறையில் உள்ள வன்னியர்களை சம்மந்தம் கட்ட அழைக்கும் போது,

### நேரம் ஆச்சி சீக்கிரம் வாங்கப்பா ன்னு சொன்னா
, ஏன் மாப்பிள்ளை (இங்கே மாப்பிளை என்பவர் அண்ணாமலையார் தான் ) சிறிது நேரம் காத்திருக்க மாட்டாரா ? 

காத்திருக்க சொல்லுங்கள் மாப்பிள்ளையை ! ..... ## 

என்று சொல்வார்களாம் ..... 

அண்ணாமலையானையே வன்னியர்கள் காத்திருக்க வைக்கும் நிகழ்வு இது .
 
இந்த திருவண்ணாமலை தான் வன்னியர்களின் பல பெருமையான பழமையான நிகழ்வுகளை இன்றும் நடைமுறையில் வைத்திரக்கும் ஊர் . வன்னியர் புரணாம் கூட கூத்தாக நடிக்கும் வழக்கம் மற்ற இடத்தில் அழிந்துவிட்டது , திருவண்ணாமலை தவிர ........

பழமையை பாதுக்காப்போம் ... 


அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா அழைப்பிதழ்கள்:

வன்னியர் பூமியான திருவண்ணாமலையை ஆண்ட , வன்னியர் குல க்ஷத்ரிய மரபில் உதித்த ஹொய்சால பேரரசன் "வீர வல்லாள மகாராஜனுக்கு " மகனாகப் பிறந்த ஈசன் அண்ணாமலையார் , தன் தந்தைக்கு 25-02-2013 மாசிமகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கும் (672-ஆம் ஆண்டு நிகழ்வு ) , அரசன் இறந்தபின் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற மரபுக்கு ஏற்ப 26-02-2013 அன்று அருணாச்சலேசுவரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு நடக்கும் முடிசூட்டு விழாவுக்கும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு பக்தர்களை வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு திருவண்ணாமலையில் வைக்கபெற்ற பேனர்கள் இவை
 

உலகில் எந்த ஒரு நிகழ்வும் ஒரு மன்னனுக்கு இத்தனை ஆண்டுகளாக நடைப்பெருகிறதா என்று தெரியவில்லை .. ஆனால் நமது வன்னிய மக்கள் நம் மன்னனுக்கு இறைவனே மகனாக தோன்றி திதி கொடுக்கும் நிகழ்வை இத்தனை ஆண்டுகளாக செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது ..........  

 வாழ்க வீர வன்னியர் இனம் .............. சிவனே போற்றி !!!                அண்ணாமலையானே போற்றி !!!



சுமார் 700 ஆண்டுகள் பழமையான சம்புவராய மன்னரால் கட்டப்பட்ட வாய்க்கால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது



வேலூர்

ஆற்காடு நகரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சம்புவராய மன்னரால் கட்டப்பட்ட வாய்க்காலும், ஓரிடத்தில் அதன்மீது நிற்கும் நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நவாப் கோட்டை

ஆரணியை சேர்ந்தவர் ஆசிரியர் ஆர்.விஜயன். இவர் தற்போது கலசப்பாக்கம் வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேற்கொண்ட வரலாற்று ஆய்வின் போது ஆற்காட்டில் சம்புவராயன் வாய்க்காலும்–நவாப் கோட்டையின் தெற்கு புறவழி வாயிலை கண்டு பிடித்துள்ளார்.
 

 இது குறித்த விவரம் வருமாறு

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வீரசம்பன் என்ற சம்புவராய மன்னன், ஆற்காடு உள்ளிட்ட பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1306–1317) ஆற்காடு பாலாற்றில் தொடங்கி, செய்யாறு தாலுகா வரையிலான பகுதியை வளமாக்கும் வகையில் சுமார் 15 அடி அகலமுள்ள வாய்க்கால் ஒன்றினை வெட்டினார். இதனை செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டி, பாலாற்று நீரை பாசன வசதிக்காக கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட இந்த வாய்க்கால் வீர சம்மன் வாய்க்கால் என அழைக்கப்பட்டது.

அகழி
=======
இன்றைய ஆற்காடு நகரத்தில் பாலாற்றில் தென்கரையில் உள்ள புதிய ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் தொடங்கும் இந்த வாய்க்கால், ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரில் இரண்டு பகுதியாக பிரிகிறது. ஒரு பகுதி கிழக்கு நோக்கியும், இன்னொரு பகுதி தெற்கு நோக்கியும் சென்று இறுதியில் முப்பதுவெட்டி அருகே ஒன்றிணைந்து செய்யாறு பகுதியை நோக்கி செல்கிறது.

இந்த வாய்க்கால் ஒரு முக்கோண போல பிரிந்து கூடுகிறது. இதன் நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு தான் இந்த வாய்க்காலின் உட்புறமாக பிற்காலத்தில் ஆற்காடு நவாபுகளால் ஆலம்பனா என்ற கோட்டை, கி.பி. 18–ம் நூற்றாண்டில் (சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது.
 

 ஆற்காட்டில் கஸ்பா பகுதியில் அக்காலத்தில் நவாபுகளால் கட்டப்பட்ட கோட்டைக்கு தனியே அகழி அமைத்திருந்தாலும், வீர சம்பமன் வாய்க்கால் இரண்டாவது அகழியாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் நவாபுகளின் கோட்டையானது போர்களால் முற்றிலும் அழிந்து போனது. தற்போது ராஜா குளம், ராணிகுளம், ஒரு மசூதி, கிழக்கு திசையில் கோட்டை வாயிலின் ஒரு பக்க கற்சுவர் ஆகியன மட்டுமே மிச்சமுள்ளது.

இந்தநிலையில் இக்கோட்டை பகுதியின் தெற்கில், தோப்புக்கானா பகுதியில் உள்ள மக்கான் என்ற இடத்தின் அருகே சம்புவராயர் கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வாய்க்காலின் மீது செல்லும் கோட்டையின் தெற்கு புறவாயில் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அக்காலத்தில் திருச்சிக்கு செல்லும் சாலையின் தொடக்கமாக இருந்துள்ளது. இதன்வழியாக பல படையெடுப்புகளும் நடைபெற்றுள்ளதை வரலாற்று நூல்களின் மூலம் அறியலாம்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பகுதியானது தற்போது பலரது ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. இந்த வாய்க்காலும் சிதைக்கப்பட்டுள்ளது. இவை தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது.


Source:

http://www.dailythanthi.com/node/178329

தாடாளன் கோவில் - திருக்காழிச்சீராம விண்ணகரம் சிறப்புக்கள்:

மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு
செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய
இராம இலக்குவர்களைத் துணைக் கழைத்ததாகவும் வால்மீகி
கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று பெயர்.

அந்த சித்தாஸ்ரமம் என்பது இவ்விடம்தான் என்றும் சில
ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை
நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது
என்பதேயாகும். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி
முடிவான உண்மையாக ஏற்றுக் கொள்ளுமாறில்லை.

108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம்
என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம்
என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

பரமேச்சுர விண்ணகரம
காழிச்சீ ராம விண்ணகரம்
அரிமேய விண்ணகரம்
வைகுந்த விண்ணகரம்
நந்திபுர விண்ணகரம்


ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை
திருவிண்ணகர் என்றே நம்மாழ்வார் மங்களாசாசனம்
செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு
தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக்கொள்ளையடிக்க
முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம்
செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை”
கொண்டுவிட்டார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை
இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை
மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து
தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப்
பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை
யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு
கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே
பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு
“தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட
ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க
அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள்
இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும்
கூறுவர்.

ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று
நவாபின் மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும்,
உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர
படையாட்சி கனவிலும், அர்ச்சகரின் கனவிலும் வந்து தாம்
இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக்
கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்
பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன்
என்று கூறினார்.

அவ்விதமே அவ்விருவரும் வரும்போது
காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை
அடைந்து.

தாடாளா வா தாடாளா வா
வெண்ணெய் உண்ட தாடாளா வா
தாடாளா வா தாடாளா வா
தவிட்டுப் பானைத் தாடாளா வா
என்று கூற

உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப்
பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக்
கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் "சிதம்பரப் படையாட்சி "
வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

நன்றி : 


 http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg103/html/cg103t0273.htm

MP திரு .கிருஷ்ணசாமி அவர்களிடம் , நமது வன்னியர் நாள்காட்டியை, அண்ணல் கண்டர் அவர்கள் காண்பித்தல்

(26-01-2013) அன்று சமூக முன்னேற்ற சங்க தலைவர் கோபால் அவர்களின் மகள் திருமண reception ku MP திரு .கிருஷ்ணசாமி படையாட்சி அவர்கள் வந்த போது , நமது அண்ணல் கண்டர் அவர்கள் , MP திரு .கிருஷ்ணசாமி அவர்களிடம் , நமது வன்னியர் நாள்காட்டியை காண்பித்தார்









வன்னி ஈசர் ஆலயம்

காஞ்சிபுரம், பாலி மேடு என்று கூறப்படும் பல்லவர் மேட்டிற்கு அருகில் இருக்கும் அருள்மிகு வன்னி ஈசர் ஆலயம். 

இமேட்டில் தான் பல்லவர் அரண்மனை இருந்தது என்று கூறப்படுகிறது. அதனால் தான் இம்மேட்டிற்கு பல்லவர் மேடு என்றும், பல்லவர்கள் பள்ளிக்குடி என்பதால் பள்ளி மேடு என்றும், பல்லவர்கள் பவுத்தம் தழுவிய காலத்தில் புத்தம் மத ஊடக மொழியான பாலி மொழிக்கு ஆதரவு நல்கி, பவுத்த பிக்குகளைக் கொண்டு தம் அரண்மணை அருகே தன் வழித்தோன்றல்களுக்கு கல்வி போதித்தமையால் பாலி மேடு என்றும் செவி வழி கூறுகின்றன.



"க்ஷத்ரியன்" என்னும் வன்னியர்களின் செய்தித்தாள்


1923-இல் வன்னியர் குல குரு அர்த்தனாரீசவர்மா அவர்களால் நடத்தப்பட்ட "க்ஷத்ரியன்" என்னும் வன்னியர்களின் செய்தித்தாள் 


ஸ்ரீ ருத்திர வன்னிய மகாராஜா சுவாமி முழு உருவ சிலை



ஸ்ரீ ருத்திர வன்னிய மகாராஜா சுவாமி முழு உருவ சிலை ....

 


புகைப்படம் கிடைத்ததற்கு நன்றி :
இணையதள வன்னிய நண்பர்கள்

குமளம் வன்னிய பிராமிணர்கள் :



 

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் “குமளம்”. இவ்வூர் “தென் திருப்பதி” என்று வைணவர்களால் போற்றப் பெறுகிறது .
இவ்வூரின் நடுநாயகமாக விளங்குவது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் . இக்கோவிலில் எங்கும் காணாத வகையில் , பிராமிணர்கள் மரபில் சேராத அதே நேரத்தில் தங்களை பிராமிணர்கள் என்று அழைத்து கொள்ளும் வன்னியர் மரபில் பிறந்தவர்கள் பூசைகள் செய்து வருகிறார்கள் என்று கிபி. 20-ஆம் நூற்றாண்டிலேயே “தென்னிந்தியா சாதியும் மற்றும் மலைவாழ் மக்களும் ” என்ற நூலை எழுதிய ஆங்கிலேயர் தர்ஸ்டன் என்பார் குரிப்பிட்டுருக்கிறார் .

“தென்னார்க்காடு மாவட்டம் , குமளத்தில் உள்ள சில வன்னியர்கள் (பள்ளி ) தங்களுக்கென ஸ்ரீநிவாசர் கோவில் ஒன்றை அமைத்துக்கொண்டு அதன் அருகில் வாழ்ந்து வருகின்றனர் . அக்கோவில் வருமானத்தை கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் . அவர்களில் பெரும்பாலோர் கோவில் பட்டர்கள் போன்றே உடை அணிந்து கொள்கின்றனர் . ஊருக்கு புதியவர்கள் அவர்களை காணின் பிராமணப் பட்டர்கள் என்றே கருதுவர் .
கோவில் வழிப்பாட்டில் அவர்களில் சிலர் நல்ல தேர்ச்சி பெற்றவர் . அவர்கள் தங்கள் இளைஞர்களுக்கும் சந்தியாவந்தனம் மற்றும் வேதங்களை ஒரு பிராமணக் குருக்களை கொண்டு கற்றுத் தருகின்றனர் .
இக்குமளம் வன்னியர்கள் மற்ற வன்னியர்களின் நன்மை தீமை நிகழ்ச்சிகளில் குருக்களாக “ செயல்படுகின்றனர் .அவர்கள் தங்களை கொவிலார் (கோவில் மக்கள் ) என்று அழைத்து கொள்கின்றனர் . 
 
வன்னியர்கள் தவிர்த்து பிற சாதியினரால் “குமளம் பிராமிணர்கள் ” என்று அழைக்க படுகின்றனர் . அவர்கள் “க்ஷத்ரியர் “ என்றும் “ராயர்” என்றும் அழைக்க படுகின்றனர் .

இவ்வூரில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலை வன்னியர் மரபில் வந்த அனந்தநாத சுவாமிகள் தான் ஏற்ப்படுத்திருக்கிறார் .இதற்க்கு ஆதாரமாக இந்த கோவிலில் அந்த பெரியாரின் சிற்பமும், ஓவியமும் இடம்பெறுகின்றன .

இவ்வன்னிய பிராமிணர்கள் பூணூல் அணிந்திருப்பார் . காரியங்களுக்கு பிற வன்னியர் வீட்டுக்கு வருவர் .இரவு தங்கவேண்டிய சூழ்நிலை வந்தால் தங்குவார்கள் . ஆனால் அவர்கள் வீட்டு உணவை உண்பது கிடையாது . இவர்களே தனியாக சமைத்து தான் உண்பர் .பிற வன்னிய பெண்களை திருமணம் செய்து கொண்டால் , முதலில் அந்த பெண்ணை தங்கள் கோவிலில் அமரவைத்து தங்கள் பழக்கவழக்கங்களை அந்த பெண்ணுக்கு கற்ப்பித்த பிறகுதான் அவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வர் .இவ்வன்னிய பிராமிணர்கள் க்ஷத்ரியர்களுக்கு உரிய உடற்க்கட்டோடு விளங்குவர் .

குமளத்தை சுற்றியுள்ள அனைத்து கோவிலிலும் உள்ள சுவாமிகளுக்கு அலங்காரம் செய்வதும் இவர்கள் மட்டுமே .

Reference:
=========

1.E.Thurston, Castes and tribes of southern india(1909), P.13
2. நற்றிணை , 274:4
3. E.Thurston, Op.Cit, P.23

ஆதாரம் :
=========
நூல் : தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
பக்கம் : 150

ஏழைகளின் கல்வி கண் திறந்த கல்வி வள்ளல் கந்தசாமி கண்டர்

 ஏழைகளின் கல்வி கண் திறந்த கல்வி வள்ளல் "கந்தசாமி கண்டர்" . அவரின் சொந்த ஊர் நன்செய் இடையாரில் வைக்கப்பட்ட பேனர்






வன்னியரின் உரிமைகளை கேட்டு நமது முன்னோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி. - 1987

1987- ல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் நமது அய்யா கைதுசெய்யப்பட்டு சிறை செல்லும் காட்சி.






வன்னியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையில் இருந்தவர்களை மீட்க்க நமது அய்யா நீதிமன்றம் வந்த காட்சி
இடம்:விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்....


நாள் :17 / 09 / 1987


வன்னியரின் உரிமைகளை கேட்டு நமது முன்னோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

நாள் :17 / 09 / 1987