Monday, April 30, 2012

"நாயக்கர்" பட்டம் கொண்ட "விடால்" வன்னிய பாளையக்காரர்கள்


"நாயக்கர்" பட்டம் கொண்ட "விடால்" வன்னிய பாளையக்காரர்கள்

நன்றி :  கார்த்திக் சம்புவராயர்
கட்டுரை : திரு. முரளி நாயக்கர், பி. ஏ ,
புத்தகம் : "தொன்மை தமிழும் தொன்மை தமிழரும்" - திரு. நடன காசிநாதன்


விடால் ஊரில் "நாயக்கர்" பட்டம் கொண்ட வன்னிய பாளையக்காரர்கள் (குறுநில மன்னர்கள்) வாழ்ந்து வருகிறார்கள்.

விடால் பாளையக்காரர்கள் தங்களுடைய பூர்வீகமாக "விடார் நாடு" என்று கூறுகிறார்கள். இவர்கள் கருங்குழி சீமையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்த விடார் நாடு என்பது இன்றுள்ள விடால் கிராமம் ஆகும். இது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள செய்யூர் வாட்டத்தில் உள்ளது. இப்பாளையகாரர்கள் ராஜ வன்னியர்சமூகத்தை சார்ந்தநாயக்கர்பட்டம் கொண்டவர்கள். தற்போது 200௦ குடும்பங்களுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

முதலாம் ராஜேந்திர சோழனும் அவன் தேவியும் விடாலில் உள்ள வடவா முகாக்நீஸ்வரம் உடையார் மற்றும் தாயார் வசந்த நாயகி கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாகவும், அப்போது அம்மன்னன் தங்கள் குல மரபினை சார்ந்த வன்னிய போர் குடிகளை அவ்விடால் பகுதிக்கு ஆட்சியாளர்களாக நியமித்து ஆண்டு வரும் படி கட்டளையிட்டதாகவும், மேலும் அக்கோவிலுக்கு இவர்களை பொறுப்பாளர்களாகவும் நியமித்ததாகவும் கூறுகிறார்கள்.

விடால் கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் சுருக்கம் இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-எண் 175 முதல் 185 முடிய வெளிவந்து உள்ளது.

விடால் என்னும் இவ்வூர் சோழ கேரளா சதுர்வேதி மங்கலம் என்று முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியின் போது வழங்கபெற்றது. இவனுடைய 20 இம் ஆட்சியாண்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாட்டு முந்நூரான பண்டித சோழ ச் சருப்பேதி (சதுர்வேதி ) மங்கலத்து குடிபள்ளி துட்டன் வீர தொங்கன் என்னும் வன்னிய தலைவன் வாழ்ந்து வந்தான். இவனுக்கு சோழ கேரளா பெரியரையன் என்று வேறு பெயரும் இருந்தது.

துட்டன் வீர தொங்கனான சோழ கேரளா பெரியரையன் தனது உறவினர்களை முதலாம் ராஜேந்திர சோழன் ஆசியோடு விடால் பகுதிக்கு ஆட்சியாளர்களாக அமர்த்தி இருப்பான் போன்று தெரிகிறது. இப்பாளையகாரர்களும் தங்கள் வரலாற்றை கூறும் போது இதனை தெரிவிகிறார்கள். இப்பாளையகாரர்கள் இன்று வரை இக்கோயிலுக்கு நிர்வாகிகளாகவும் மற்றும் இவ்வூரில் உள்ள பல்வேறு குல மரபினர்களும் போற்றும் வண்ணம் செம்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பலர் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் மிக , அவர்களில் ஒரு குடும்பத்தினர் Deccan Constructions என்னும் நிறுவன பொறுப்பாளர்களாகவும் இருப்பதாகவும் திரு. ராமலிங்க நாயக்கர் அவர்கள் தெரிவித்தார்கள். Deccan constructions நடத்தி வரும் திரு. வி. வி. தலசிங்கார நாயக்கர் அவர்கள் இந்த ஊரின் நாட்டாண்மை தாரர் ஆவார்.

இப்பாளையகாரர்களுக்கு உறவினர்களாக அரியலூர் ஜமீன், உடையார் பாளையம் ஜமீன், முகாசா பரூர் ஜமீன், பிச்சாவரம் பாளையக்காரர்கள், சோழ குன்னம் பாளையக்காரர்கள்( முதலியார் பட்டம் கொண்ட வன்னியர்கள்), திருகனங்ககூர் பாளையக்காரர்கள் ( கச்சிராயர் பட்டம் கொண்டவர்கள் ) போன்ற வன்னிய பாளையக்காரர்கள் விளங்குகிறார்கள். திரு. ராமலிங்க நாயக்கர் அவர்களின் தாயார் திருக்கனங்கூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சிறிய தாயார் முகாசா பரூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்கள்.

விடால் வன்னிய சிற்றரசர்களை ஆங்கிலேயர்களின் ஆவணம் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது :

"
பாளையக்காரர் கிரினிவேஸ் ஆப் வெடால் விலேஜ் "

(
பர்மனென்ட் செட்டில் மென்ட் வால்யூம் ழு. டு. 1785 )

இவர்கள் சோழர் காலம் தொட்டு விஜயநகர வேந்தர் ஆட்சிவரை அப்பகுதியில் தங்களுடைய வல்லமையை செலுத்தி இருக்கிறார்கள். பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன் முறை கொண்டு வரப்பட்டபோது இவர்களுக்கு அது கிடைக்கபெற்றிருக்கும் போன்று தெரிகிறது.

இப்பாளையக்காரர்களில் மிகவும் புகழோடு இருந்திருப்பவர் திரு. சின்னத்தம்பி நாயக்கர் மகன் திரு. வைத்தியலிங்க நாயக்கர் ஆவார். இவர் அப்பகுதியிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் இன்றும் பலரால் புகழ்ந்து பேசபடுகிறார்.இவர் தம் இன மக்களுக்காகவும் மற்றும் தங்கள் மன்னர் குல மாண்பை காக்கவும் தொன்று தொட்டு நடத்திவரும் தர்மங்களுக்காவும் பல கட்டங்களில் போராடி இருக்கிறார். இவரது புதல்வர் திரு. ராஜேந்திர நாயக்கர் தனது தாயார் திருமதி சரஸ்வதி அம்மாளுடன் வசித்து வருகிறார். இவ்வம்மையார் ஊராட்சி மன்ற தலைவியாகவும் பதவி வகித்து வருகிறார்.

இப்பாளையகாரர்கள் தங்களை பற்றி நினைவு கொள்ளும்போது மிகவும் மகிழ்வடைகிறார்கள். தங்கள்வன்னியகுல க்ஷத்ரியசமூகம் ஒரு காலத்தில் தென் இந்தியாவையும், தென் கிழக்கு ஆசிய நாடுகளையும் சிறப்பாக ஆட்சி செலுத்தியதை நினைத்து பெருமிதம் அடைகிறார்கள். அதைபோன்றதொரு காலம் மீண்டும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

Sunday, April 22, 2012

கீழூர் வன்னிய பாளையக்காரர்

செய்தியை அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி
தென்னாற்காடு மாவட்டம், வடலூர் அருகே உள்ள கீழூர் வன்னிய பாளையக்காரர்களுக்கு ஒருகாலத்தில் கீழ்க்கண்ட கிராமங்கள் சொந்தமாயிருந்தன

பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை,எல்லப்பன் பேட்டை,நெல்லிக்குப்பம்,மீனாட்சிப்பேட்டை, விழப்பள்ளம்.

இம்மரபு வழியில் வந்தவராக தற்போது திரு.பெரியசாமி துரை பாஷா நயினார் உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், ஆசூர் திருவாலீசுவரர் கோயில் கல்வெட்டு:

செய்தியை  அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி .
விழுப்புரம் மாவட்டம், ஆசூர் திருவாலீசுவரர் கோயில் கல்வெட்டு:

நன்றி: "வன்னியர்" - திரு.நடன.காசிநாதன் அவர்கள்

ஆதாரம்:ஆவணம், இதழ் 12, சூலை- 2001, பக்கம் 6- 8

இக்கல்வெட்டு ஆசூர் திருவாலீசுவரர் கோயிலில் மகா மண்டபக் கிழக்குச் சுவரில் பொறிக்கப்படுள்ளது.

வன்னிய நாயக்கமாரால் கோயிலைப்பெருநல்லூர் பற்று (கோலியனூர்) ஆசூரில் நாயனார் திருவாலந்துறை உடைய நாயனாருக்குக் கொடை அளித்தது குறிக்கப்பெறுகிறது.
இக் கல்வெட்டு விஜயநகர வேந்தன் வீரபுக்கண உடையார் காலத்தைச் சார்ந்தது(கி.பி. 1379).

இதன் மூலம் கி.பி 14 ஆம் நூற்றாண்டளவிலேயே வன்னியர்களுக்கு "நாயக்கர்" பட்டம் உண்டு என்பது தெரிகிறது.

Thursday, April 19, 2012

ஊத்தங்கால் பாளையக்காரர்:

 செய்தியை அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
 ஊத்தங்கால் பாளையக்காரர்:

நன்றி: "வன்னியர்" - நடன.காசிநாதன் அவர்கள்

ஊத்தாங்கால் எனும் சிற்றூர் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலிக்கு அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.இது முன்பு ஒரு பாளையமாக விளங்கியது.

இப்பாளையம் இருந்தது ஆனந்த ரங்கம் பிள்ளை நாட்குறிப்பால்(Anandarangam Pillai diary volume-3) தெரிய வருகிறது.இப்பாளையத்தை ஆட்சி புரிந்த பாளையக்காரரான காங்கய நயினார் என்பவரை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பாளையக்காரர்களில் புக்ழ வாய்ந்தவர் சமீந்தார் திரு.சாமியப்பா பரமேஸ்வர வன்னிய நயினார் ஆவார்(கி.பி. 1908).

திரு.சாமியப்பா பரமேஸ்வர வன்னிய நயினார் அவர்கள் தென்னற்காடு வன்னியகுல ஷத்திரிய சங்கத்தின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக இருந்து, வன்னியர் சங்கத்தை வழிநடத்தியிருக்கிறார்.

இவருக்குப் பிறகு தற்போது இப்பரம்பரையில் வந்த மூவர் பற்றி மட்டும்தான் தகவல் உள்ளது.

1.செல்லச்சாமி பரமேஸ்வர வன்னிய நயினார்.

2.தெய்வச்சாமி பரமேஸ்வர வன்னிய நயினார்.

3.அண்ணாத்துரை பரமேஸ்வர வன்னிய நயினார்.

இவர்கள் கொள்வன கொடுப்பன எல்லாம் வன்னிய பாளையக்காரகளுடன்தான். குறிப்பாக திருக்கணங்கூர் பாளையக்காரகளோடும், வடகால் பாளையக்காரர்களோடும் (வடகால் ஸ்ரீ ராய ராவுத்தமிண்ட நயினார்) கொள்வன கொடுப்பன உறவு வைத்துக்கொண்டுள்ளனர்.

திட்டக்குடி கல்வெட்டு: ---- "பன்னாட்டார் தம்பிரான்" என்னும் பட்டம் கிடைத்தை சொல்லும் கல்வெட்டு

 செய்தியை அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி ......................
நன்றி: "வன்னியர்" --- திரு.நடன.காசிநாதன் அவர்கள்

திட்டக்குடி கல்வெட்டு:

இடம்: பெரம்பலூர் வட்டம் திட்டக்குடி

காலம்: மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்,யா: 4 (கி.பி. 1338)

செய்தி: விக்கிரம சோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1122 இல்) கர்நாடகத்தில் போசள நாட்டை ஆண்டு வந்த முதலாம் விஷ்ணுவர்த்தனன் என்பவன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இதனை பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு "பெரியவடுகன் கலகம்" என்று குறிப்பிடுகிறது. சோழ நாட்டின் மீது படையெடுத்த போசள மன்னன் ஆடுதுறை பகுதியிலும் தாக்குதல் நடத்தி ஆடுதுறை சிவன் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் பிரதிமங்களையும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமாகிய துவாரசமுத்திரத்தில் வைத்திருந்தனர்.

பின்னர் இதனை அறிந்த ஆடுதுறை பகுதியைச் சேர்ந்த பள்ளிகள்(வன்னிய குலத்தவர்) அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று போசளர்களுடன் சண்டையிட்டு, அவர்களால் கவரப்பெற்ற ஆடுதுறை கோயிலுக்குரிய தெய்வத் திருமேனிகளையும், நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் மீட்டு வந்து அத்திருவுருவங்களை மீண்டும் ஆடுதுறை சிவன் கோயிலிலேயே வைத்து, நாள் வழிபாடுகள் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும், 5000 காசும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அத்திருமேனிகளை வழிபாட்டில் வைத்தனர். அதற்காக அவர்கள் குடி ஒன்றுக்கு ஒரு குறுணி அரிசியும், 50 காசும் வசூல் செவது என்று முடிவு செய்தனர்.

சிலைகளை மீட்ட பள்ளிகளை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்குப் பட்டுப்பரிவட்ட மரியாதை கொடுத்து, இறைவன் திருமுன் நின்று வழிபாடு செய்யும் உரிமையும் அளித்து, அவர்களுக்கு "பன்னாட்டார் தம்பிரான்" என்ர பட்டமும் அளித்து பெருமைப்படுத்தினர். இதற்கான ஆணையை இரண்டாம் குலோத்துங்கன் பிறப்பித்தான் என்றும் இக்கல்வெட்டு கூறுகின்றது.

கி.பி.1122இல் விகிரம சோழன் காலத்தில் நடந்த ஒரு அருஞ்செயலுக்காக 216 ஆண்டுகள் கழித்து சோழர் ஆட்சிக்குப் பிறகு மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் அதே பள்ளி இன மக்களுக்கு மரியாதை மற்றும் சலுகைகள் வழங்கியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வஸ்தி ஶ்ரீ திரிபுவனச் சக்கரவத்தில் ஶ்ரீ பராக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு ச(4) ஆவது வைகாசி மாதம் நாலாந் தியதி பல மண்டலங்களில் நாடும் நகரமும் எல்லா மண்டலங்களில்

2. பலநாட்டவரும் பழி காரியங் கேழ்ப்பதாக உள்ளூரில் பெரிய நாட்டான் காவி நிரவற குறைவறக் கூடி இருக்க உடையார் குற்றம் பெறுத்தருளிய நாயனார்

3. கோயிலில் எங்கள் மூதாதிகள் கல்வெட்டினபடி திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஶ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு பாண்டு ச(4) ஆவதுமுடிகொண்ட சோழ வளநாட்டு உகளூர் கூற்றத்து இறையான புஞ்

4. சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முஇடிகொண்ட சோக முத்தரையன் உள்ளிட்டாரும் ஓலைப்பாடியில் காணி உடை

5.ய பள்ளிகளில் காரிகிரிச்சன் விக்கிரமசோழ முத்தரையன் உள்ளிட்டாரும், தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்

6. மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகதசோழ முத்தரையன் உள்ளிட்டாரும் இவனைவரோம் கல்வெட்டி குடுத்த ப

7.ரிசாவது இன்னாயநார் கோயிலில் திருமேனி நாயமார் பெரிய வடுகன் கலகத்தில் செமம..... தோரசமுத்திரதேற எழுந்தருளி போகையில் இன்னாயமாற்கு நெடு அத்தம் குடுத்து மீண்டும் கோயிலிலே எழுந்த

8. ருளப் பண்ணிநர்களென்று கொண்ட உபயமாவது இன்னாயநார் திருநாளுளிட்ட பல திவலைகளுக்கும் அமுதுபடிக்கும் அரிசி நூற்றுக் கலமும் படிவெஞ்சனமஞ் சாத்துபடிக்கு காசு ஐயாயிரமும் இந்

9.த குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டார் திருநாளகத்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சை மலை கிழக்கு

10. காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக நாட்டில் வெண்கலம் எடுத்து மண்கலம் இடித்து(ம்)

11. குத்தியும் தண்டியும் முதலாக்கி திருநாள்தொறும் இப்படி குறைவறுக்கக் கடவோமாகவும் சம்மத்திதுச் சந்திராதித்தவரையும் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் பள்ளி நாட்டவரோம் இப்படி செய்

12. த பள்ளி நாட்டவர்க்கு பட்டுப் பரிவட்டமும் திருமுனொடுக்கும் பெறக் கடவதாகவும் எழுந்தருளிப் புறப்பட்டால் "வந்தான் தேவர்கள் தேவன்" என்கிற திருச்சின்னத்து முன்பே "பன்னாட்டான் தம்பிரான்" என்கிற திரு

13. ச் சின்னம் பணிமாறக் கடவதென்று பெருமாள் குலோத்துங்க சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படிக்கு ச்ரீ மாஹேஸ்வர ரஷை இக்கல்வெட்டினபடியே திருனாளகத்தொறும் தண்டி கொ

14.ள்ளவும் இன்னாயநாற்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலவது முதல் வில்லுக்கொரு பணமாக...... வெண்கலம் அடுத்தும் மண்கலம் உடைத்தும் குத்தியும் அடிக்கடி தண்டியு(ம்) முத

15.நாக்கவும் இதுக்கு இலங்கணமஞ் சொன்னாருண்டாகில் நம்மிலொருவன் அல்லவாகவும் இவன் (ஹ)பத்தி..... சோழன் எடுத்த இந்நாயனாற்கு திருப்பணி

16. க்கு முதலாக்கவும் இப்படி சம்மதித்த் சந்திராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம் இப்படிக்கு இவை பல

17. மண்டலங்களில் பள்ளி நாட்டவர் பணியால் இடங்கை விக்கிரம.... எழுத்து பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க.

--------- ------- ------------ ---------- ---------- ----------- ---------- ------

வன்னியர் என்றால் சும்மாவா?வாழ்க வன்னியர் குலம்!!!