Sunday, April 13, 2014

"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்"



"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்"





ஸ்ரீ மதுரகவி பிள்ளை சுவாமிகளின் அண்ணன் திரு. பெரியண்ணம்பிள்ளை அவர்களின் வழி எள்ளுபேரன் சுரேஷ் ராஜசேகரன் பிள்ளை (திருச்சி பகுதியில் வன்னியர்கள் "பிள்ளை " பட்டம் கொண்டவர்கள் )அவர்கள் , ஸ்ரீ மதுரகவி பிள்ளை அவர்களை பற்றிய சில செய்திகளை அனுப்பிருந்தார் .. அவைகளை சிலவற்றை பதிகிறேன் .

"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்கள் திருச்சி வன்னிய சமூகத்தை சார்ந்தவர் .

இங்கு திருச்சியில் வன்னியர்கள் "பிள்ளை " பட்டம் சூடி அழைக்க படுகிறார்கள் .

இவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வீரேச்வர ஊரில் 1846 விசுவாசு தை மாதம் பூர நட்சத்திரத்தில் ரங்கபிள்ளை , ரங்கநாயகி அம்மாள் ஆகிய தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள் .

இவர் அரங்கநாதன் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார் .

காவேரிக்கரையில் சோழன்மாதேவி கிராமத்தில் உள்ள தனது 10 காணி தோட்டத்தையும் பெருமாளுக்கு எழுதி வைத்து அதில் நீர்ப்பூ , நிலப்பூ , மரப்பூ, கொடிப்பூ என்று நாலு வகை பூக்களையும் உண்டாக்கி திருமாலை சமர்ப்பிக்கும் நந்தவனமாக ஏற்பாடு செய்த மகான் ..

இது இன்றும் "ஸ்ரீ மதுரகவி சுவாமி திருநந்தவனம் ட்ரஸ்ட்" என்னும் பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது . இன்றும் இங்கிருந்துதான் புஷ்பங்கள் கோவிலுக்கு செல்கின்றன .

தனது நந்தவனத்தில் மலரும் மலர்களை கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்து வாழும்போது , 1891 இல் ரங்கநாதருடைய விமான கலசங்களில் போடப்பட்டிருந்த பொன் தகடுகளை புதுபித்து தரும்படி , கோவில் அர்ச்சகர்கள் ஸ்ரீமான் மதுரகவி அவர்களிடம் கேட்டுகொண்டனர் .

புஷ்ப கைங்கர்யம் தவிர வேறு ஏதும் தெரியாத தன்னால் எப்படி இதை செய்யமுடியும் என்று யோசித்தார் மகான் ...

ஒரு வருடம் கழித்து 1892 இல் பெரியபெருமாள் ஸ்ரீசுவாமி கனவில் வந்து பயப்படாமல் விமான கைங்கரியம் ஆரம்பியும் , யாம் இருக்கிறோம் என்று ஆசிகூற , சுவாமி அவர்கள் தனது ஆசாரியரிடமும் தனக்கு அந்தரங்கருமான குவளக்குடி சிங்கம அய்யங்காரிடமும் விண்ணப்பித்து அனுமதிபெற்று சகாயத்திற்கு தன் அந்தரர்களுடன் ஸ்ரீவானமாமாலை முதல் ஹைதராபாத் வரை சென்று சுமார் ஐந்து வருடங்களில் 80000 வரை வசூலித்து விமான கைங்கரியம் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் பெரிய கலசங்கள் 8 க்கு கலசம் 1 க்கு மூன்று சேர் தங்கம் பதினாறு பூச்சுபூசியும் , சின்ன கலசம் நான்குக்கும் மேற்படி பூசியும் பத்மங்களும் 12 பூச்சுகொடுத்தும் 1897 இல் முடிந்தது .

ஸ்ரீரங்க கோவில் விமானத்துக்கு லக்ஷம் ரூபாய் செலவில் பொன்தகடு பூட்டி 1903 இல் விமர்சையாக மஹா ஸம்ப்ரோஷணம் நடத்தி வைத்தார் .


-------


"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களால் புனரமைக்கப்பட்ட திருவரங்க விமானம்





"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" நந்தவனப் பூமாலையில் காட்சிதரும் அரங்கரும் பெருமாட்டியும்



"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களின் நந்தவனம் ட்ரஸ்ட்


"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்கள் எழுதி வைத்த உயிலின் ஒரு சிறிது தெளிவான நகல் .















இதில் அந்த ட்ரஸ்ட் இல் உள்ள ஸ்ரீமான் மதுரகவி அவர்களின் தமையனார் பெரியண்ணம்பிள்ளை (வன்னிய ஜாதி- பட்டம் பிள்ளை ) ஆகியோரும், இன்னும் பிற சமூகத்தவர்களின் பட்டியலும் உள்ளது ..




"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களின் ட்ரஸ்ட் சொத்து விபரமும் , அதில் உள்ள நபர்களும்





====

சிதம்பரம் சோழ மண்டகப்படி - 2012 ஆம் ஆண்டு

சிதம்பரம் சோழ மண்டகப்படி - 2012 ஆம் ஆண்டு


ரிஷபேஸ்வரர் ஆலயம் - மலையமான் கங்கரையர் கல்வெட்டு


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ரிஷபேஸ்வரர் ஆலயம் இது ..

இதில் பல பங்கல நாட்டு கங்கரையர்கலின் கல்வெட்டுகளும், மலையமான்களின் இரண்டு கல்வெட்டுகளும் இருக்கிறது ..

இதில் உள்ள இரண்டு மலையமான்களின் கல்வெட்டுகளும், மலையமான்களை வன்னிய மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது ..

இங்கு மலையமான் அரசர்கள் "வன்னிய நாயகர்" என்று அழைக்கப்படும் கல்வெட்டுகள் இருக்கின்றன ..

இங்குள்ள இரண்டாம் கல்வெட்டில் , கங்கரையர்களுக்கும் மலையமான்கலுக்கும் உள்ள மண உறவை குறிப்பதோடு , அவர்களுக்குள் பிற்காலத்தில் வந்த மனக்கசப்பால் , மலையமான்கள் கங்கரையர் மன்னர்களை கோவமாக திட்டுவது போல கல்வெட்டு இருக்கிறது ..

அதாவது , கங்கரையர்களிடம் யாரும் உறவு வைத்து கொள்ள கூடாது என்றும் , அதை மீறி உறவு வைத்து கொள்ளுபவர்கள் "அசல் வன்னியர் குதிரைக்கு புல்லிடம் பறையர்களுக்கு ஒப்பாவார்கள் " என்று குறிப்பிட பட்டுள்ளது .

“அசல் வன்னியர் குதிரைக்குப் புல்லுப் பறிக்கிற பறயற்கு” (1213 CE, South Indian Inscriptions, VII, 118)



சோழனார் - கொண்டியார் பட்டம் உடையவர்களின் திருமணம்

சீர்காழி , மயிலாடுதுறையை சேர்ந்த நமது சுந்தர் சம்புவராயரின் சொந்தக்காரர்கள் திருமண பத்திரிகை 



சோழனார் - கொண்டியார் பட்டம் உடையவர்களின் திருமணம் 

வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.

திருவண்ணாமலையை ஆண்ட ஹோய்சாள மரபை சார்ந்த அக்னிகுலத்தோன் வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.

வன்னிய குலோத்தாரணர் திரு.கோபால் நாயகர் அவர்களால் 1896 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது.


பெண்ணாடம்








சோழரும் பல்லவரும் பற்ப்பல வெற்றிகளை குவித்து வரலாறு படைக்க உறுதுணையாகவும் காரணியாகவும் வீரத்தின் ஆணி வேராகவும் இருந்த "நடுநாட்டின்" திருத்தலம் .

தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளையானையும் வழிபட்ட தலம்.

(பெண் + ஆ+ கடம்). இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்)
வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்’ எனப்பெயர் பெற்றதென்பர்.


இன்றும் "கடந்தையார் " பட்டம் கொண்ட படையாட்சி இன மக்களுக்கே இங்கு முதல் மரியாதை . இவர்கள் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக, படைத்தலைவர்களாக இருந்தவர்கள் .

ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர்
இத்தலத்து இறைவனைக்கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர்.

மலர் வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.

எனவே மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.

இறைவன் - சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவி - ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
தலமரம் - சண்பகம்.
தீர்த்தம் - கயிலைத்தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்,
முக்குளம், வெள்ளாறு.

1. கபிலை தீர்த்தம் :- கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது.
காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி
குளமாகியது என்பர்.

2. பார்வதி தீர்த்தம் :- கோயிலின் முன் கீழ்த்திசையில் உள்ளது.
இதற்குப் பரமானந்ததீர்த்தம் என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

3. முக்குளம் :- ஊரின் வட மேற்கில் அமைந்துள்ளது.

4. இந்திரதீர்த்தம் :- ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது.

5. வெள்ளாறு :- இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி
நடைபெறுகிறது.

இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :-

1. தயராசபதி - ஐராவதம் வழிபட்டதால் வந்த பெயர்.

2. புஷ்பவனம், புஷ்பாரண்யம் ; ஆதிநாளில் மலர்வனமாக
விளங்கியதால் வந்த பெயர்.

3. மகேந்திரபுரி. இந்திரன் வழிபட்டதால் வந்த பெயர்.

4. பார்வதிபுரம் - பார்வதி வழிபட்டதால் வந்த பெயர்.

5. சோகநாசனம் - நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த
தலமாதலின் வந்த பெயர்.

6. சிவவாசம் - இறைவனுக்குகந்த பதி.




தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் - "சேத்தியார் "


தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :



இக்கோவிலின் முதல் மரியாதைகளும் உரிமைகளும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள "பூதங்குடி " பகுதி "சேத்தியார் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பத்திடம் உள்ளது ....

இந்த கோவிலை பற்றிய செய்தி:

சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு, வனம் போன்ற பகுதியாக பூதங்குடி இருந்தது. குடியிருப்பு மிகக் குறைவாக இருந்த காலம். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த அமரர் ஜெயராமன் இவ்வூரைச் சேர்ந்தவர்.

இவரது பரம்பரைக்கு சேத்தியார் குடும்பம் என்ற பட்டப்பெயர் உண்டு. அத்தகைய சேத்தியார் குடும்பத்து வாலிபர் ஒருவர் ஒருசமயம் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அப்படிப் போகும் வழியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறு பெண்பிள்ளை காட்டில் தன்னந்தனியாக சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்.

மிருகங்கள் வாழும் இப்படிப்பட்ட கொடூரமான காட்டுப் பகுதியில் எப்படி இந்தச் சிறுமி தன்னந்தனியாக சிறிதும் பயமின்றி நடமாடுகிறாள் என்று வியப்பும் ஆச்சரியமும் மேலிட, அந்தச் சிறுமியை அணுகி, ""எப்படியம்மா இந்தக் காட்டிற்குள் தனியாக வந்தாய்'' என்று விசாரித்தார்.

அந்தச் சிறுமியோ மிகத் தெளிவாகப் பேசினாள். ""இந்தக் காட்டுவழியே உறவினர்கள் ஊருக்குப் போக என் பெற்றோருடன் வந்தேன். வரும் வழியில் பாதை தவறிவிட்டேன். பெற்றோர் சென்ற பாதை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறேன்'' என்று சொன்னாள். அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர்,

""பயப்படாதே, என்னோடு வா'' என்று தமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சிறுமியோடு ஊருக்கு வந்தபிறகு, "இப்படிப்பட்ட சிறுமியை காட்டில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளோம். அவளது பெற்றோர், உறவினர்கள் யாராவது இருந்தால் வந்து அழைத்துப் போகலாம்' என்று அக்கம்பக்க ஊர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பினார். ஆனாலும் யாருமே அக்குழந்தையைத் தேடி வரவில்லை.

"சரி, இவள் யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் இருக்கட்டும்; இனிமேல் இது நம் வீட்டுக் குழந்தை. நாமே வளர்ப்போம்' என்று முடிவு செய்து, அந்தச் சிறுமிக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அந்தக் குடும்பத்தில், வனத்தில் கண்டெடுத்த நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தேவதையாக வளர்ந்து பருவ வயதை அடைந்தாள்.

இந்நிலையில் நாச்சியாரை மகள்போல் வளர்த்து வந்தவர், திடீரென்று உடல்நலம் கெட்டு இறந்து போனார். சேத்தியார் மறைவு அப்பகுதி மக்களை கடுந்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது உடலைத் தகனம் செய்யக் கொண்டு போனார்கள்.

அப்போது நாச்சியார், ""நானும் இடுகாட்டிற்கு வருவேன்'' என்றாள். ஊர்ப்பெரியவர்கள், ""பெண் பிள்ளைகள் வரக்கூடாது'' என்றார்கள். ""காட்டிலே தனியாக நின்ற என்னை இங்கு கொண்டு வந்து வளர்த்த தந்தை அவர்.

அப்படிப்பட்டவரின் இறுதிச் சடங்கின்போது நானும் உடனிருந்து பார்க்கவேண்டும்'' என்று பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி நாச்சியாரையும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் முழுவதும் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றாள் நாச்சியார்.

அவளைத் தடுத்து, ""நீ வாழவேண்டிய பெண். உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை'' என்று ஊர்ப்பெரியவர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் நாச்சியார் மிகப் பொறுமையாக- நிதானமாக- உறுதியோடு சொன்னாள். ""நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரண பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள். மற்ற பெண்கள்போல் கணவன்- மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்று சாதாரண வாழ்க்கை வாழ வந்தவள் அல்ல நான். உங்களையும் உங்களைப் போன்ற மக்களையும் தெய்வமாக இருந்து வாழவைக்க வந்தவள் நான்.

உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் நான் சொல்வதுபோல செய்யுங்கள். ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியபடி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து பஸ்பமாக மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் தீயில் எரியாமல் நீங்கள் எப்படி என் கையில் கொடுத்தீர்களோ அதேபோன்று இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.

அதன்பிறகு என்னை தெய்வமாக நினைத்து வணங்குங்கள். உங்களுக்கு எல்லா நலமும் கிடைக்கச் செய்வேன்'' என்று நாச்சியார் சொல்லிமுடித்தாள்.

ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு நாச்சியார் தீயில் பாய்ந்தாள். நாச்சியார் மறைந்து போனாள். அவள் சொன்னதுபோலவே, தாம்பூலத் தட்டும் அதிலிருந்த பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்த அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியார் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவழியினர் வழிபட்டு வந்தார்கள்.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=16626




சூரியனார் கோவில் :


1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையிலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. (தஞ்சை மாவட்டம் )

இக்கோவிலின் முதல் மரியாதை , கோவில் முழு உரிமை , தர்மகர்த்தா என அனைத்தும் "ராஜ முநேந்திரர் " பட்டம் கொண்ட வன்னியர் சமூகத்து குடும்பத்திற்கு உரியது .

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார் ஆரோக்கியம்,
வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர ஓளிவழங்கும் சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில்
அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது



வன்னிய குல தேவர் பட்டங்கள் சில

வன்னிய குலத்தினர் சோழ மண்டலமான அரியலூர் கடலூர் பகுதியில் தங்கள் குல பட்டங்களை போட்டுதான் பத்திரிகை அடிப்பது வழக்கம் .. 

அதில் தெற்கு கடலூர் , அரியலூரில் பெரும்பாலும் தேவர் பட்டங்களே உண்டு ..

கண்டிய தேவர்
நரங்கிய தேவர்
நரசிங்க தேவர்

மும்முடி சோழகனார் இப்படி ஏராளம் ,...

இதில் சில நமது சொந்தம் அவர்களின் வீட்டு பத்திரிகையில் இருந்தவை 





இது எனது நண்பர் "பாலச்சந்திர ராய ராவுத்த மீண்ட நயினார் " அவர்களின் சொந்தக்கார்களின் பத்திர்க்கை 


"கங்கைகொண்ட சோழபுரம் தமிழ் சங்கம்"

"கங்கைகொண்ட சோழபுரம் தமிழ் சங்கம்" தொடக்க விழா :

நாள் :29-03-2014 சனிக்கிழமை மாலை - 4.00 மணி



போலியோ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்க்காக மருத்துவர் அன்புமணி அவர்கள் ஜனாதிபதியிடம் விருது பெற்றார் (29-30 march , 2014)

போலியோ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்க்காக மருத்துவர் அன்புமணி அவர்கள் ஜனாதிபதியிடம் விருது பெற்றார் (29-30 march , 2014)+



பாண்டியர் அரசர் சிவகிரி ஜமீன்தார் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார் 100 ஆண்டு நினைவு அஞ்சலி



பாண்டியர் அரசர் சிவகிரி ஜமீன்தார் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார் 100 ஆண்டு நினைவு அஞ்சலிக்கு , நமது அண்ணன் சமுசிகாபுரம் திரு. சரவண பாண்டிய வன்னியனார் அவர்கள் ஏற்பாடு செய்த விளம்பரம் தந்தியில் வந்தது (january 8, 2014)









பாண்டியர் வம்சத்தை சேர்ந்த சிவகிரி வன்னியர் சமஸ்த்தானத்தின் ஐந்தாம் சமீன்தார் “மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் “ அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பு .

நெல்லை மாவட்டம் சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “ சங்கத்தின் தலைவரும் சமுசிகாபுரம் இளைய ஜமீன்தாருமான சரவண பாண்டிய வன்னியனார் , சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “சங்கத்தின் செயலாளரும் தென்மலை இளைய ஜமீன்தாருமான “வீர பாண்டிய வன்னியனார் ” மற்றும் சிவகிரி “வன்னிய குல க்ஷத்ரியர் “ சங்கத்தின் பொருளாளரும் பந்தல்புளி “சராச்சர பாண்டிய வன்னியனார் “ ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர் .

சிவகிரி சமஸ்தானத்தின் வாரிசுகளாலும், சிவகிரி பகுதி வன்னியர் மக்களாலும் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி 2014 அன்று நினைவுநாள் அனுசரிக்க பட்டது .

மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் அவர்கள் 1910 ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் சிவகிரியின் ஐந்தாம் ஜமீனாக பட்டமேற்றார் .

இவர் சிவகிரியின் நான்காம் ஜமீன்தார் “மகாராஜா ஸ்ரீ சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் ” அவர்களின் மகனாவார் .

மகாராஜா ஸ்ரீ சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் காலம் சிவகிரியின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது . இவர் 1896 இல் இயற்கை எய்தினார் . அப்போது , அவரது மகன் “இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார்’ அவர்கள் சிறுவயதாக லண்டனில் படித்து கொண்டிருந்தார் .தனது சிறுவயதிலே , ஜமீன்தாராக முடி சூடப்பட்டதால் , இவர் “மைனர் ஜமீன்தார் ” என்று பொதுமக்களால் அழைக்க பட்டார் . குதிரை பந்தயத்தில் ஆர்வமுள்ள இவர், கிண்டி குதிரை பந்தயத்தில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார் . மன்னராக பட்டம் சூட்டிய சில வருடங்களிலேயே மைனர் ஜமீந்தாரகிய இவர் இறந்து விட்டார் .

அனைவரும் “மகாராஜா ஸ்ரீ இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் “ அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பிற்கு வருகை புரிய வேண்டுமென்று வன்னிய சமூக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்ள பட்டது  .





சீர்காழி சீமையின் அரசர் - “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார் ”





இவர் சீர்காழி சீமையின் அரசர் .

இவர் பெயர் “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார் ” (காலம் : 19 – 20 ஆம் நூற்றாண்டு )


வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான வடகால் பாளையக்காரர்கள் சீர்காழி சீமையை ஆட்சி செய்துள்ளனர். இவ்வரசர்கள் தங்களை “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற ராயராவுத்த மிண்ட நயினார்” என்று தஞ்சை மராத்தியர் செப்பேட்டில் குறித்துள்ளனர் .

மஹா ராஜ ராஜ ஸ்ரீ அழகிய சிதம்பர ராயராவுத்த மிண்ட நயினார் கிபி 17௦1 இல் நிலக்கொடை அளித்ததை பற்றி செப்பேடு தெரிவிக்கின்றது . “ராயராவுத்த மிண்டனாருளா ” பாடிய புலவருக்கு அரசன் பன்னீராயிரம் பொன் பரிசளித்தான் என்று “திருக்கை வளம் ” குறிப்பிடுகிறது .

மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராவுத்த மிண்ட நயினார் கிபி 1919 ஏப்ரல் 19,௨௦ தேதிகளில் திருக்கழுக்குன்றத்தில் கூடிய சென்னை வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்க 3௦-வது ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தார் .

வடகால் அரசர்களை பற்றி தருமபுரம் ஆதீன செப்பேடுகள் குறிப்பிடுகின்றன .ஸ்ரீமத் செல்வம் ராயுத்த மிண்ட நயினார் தங்களிடம் இருந்த செப்பு பட்டயங்களை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்கு கொடையளித்தார் . வடகால் அரசர்கள் பல கோவில்களுக்கு தானம் அளித்தும் சிறப்புற நிர்வகித்தும் வருகின்றனர் .

வடகால் அரசர்கள் பெயரான ராவுத்தமிண்டன் என்பது முற்காலத்தில் இராகுத்த மிண்டன் என்றே வழங்க பட்டிருக்கிறது . கிபி 14 – 16 ஆம் நூற்றாண்டு வரை விளந்தையை (ஆண்டிமடம் ) ஆட்சி செய்த வன்னிய குல க்ஷத்ரியர்களான “விளந்தை கச்சிராயர்கள் ” தங்கள் பெயருக்கு முன் இராகுத்த மிண்டன் என்று குறிப்பிட்டுள்ளனர் .

“இராகுத்த மிண்டன் அரச மார்த்தாண்டன் வெட்டுங்கை அழகிய கச்சிராயர் ”, “இளவரசர் மணவாளன் இராகுத்த மிண்டன் ஏகாம்பரநாத கச்சிராயர் ”, 
“இராய இராகுத்த மிண்ட மல்லிகார்சுன கச்சிராயர் ”

போன்றோர் குறிககபடுகின்றனர் .

விளந்தை கச்சிராய அரசர்கள் “இராகுத்த மிண்டன் ” சந்ததிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல கோவில்களுக்கு கொடை வழங்கியுள்ளனர் .

வீரபாண்டியார் நாமம் வாழ்க

மகிழ்ச்சியின் வெள்ளத்தில் சேலம் கரைந்த காட்சி

வீரபாண்டியார் நாமம் வாழ்க



வன்னிய சோழ மண்டகப்படி


அருள்மிகு காளிகையாம்பாள் ஆலயம் - மீன்சுருட்டி - ராஜேந்திர சோழன் வணங்கிய தெய்வம்





மாமன்னன் ராஜேந்திர சோழன் , கங்கை வரை படை எடுத்து செல்லும்போது , போரில் வெற்றி வேண்டுமென அவர் வணங்கி சென்ற காளி அம்மன் இதுதான் ....வெற்றி பெற்ற பின்னும் அவர் வணங்கிய தெய்வம் இது .

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் மீன்சுருட்டியில் அமைந்துள்ளது இந்த கோவில் ..

ஜெயம்கொண்டாரின் களிங்கத்துபரனியில் பாடப்பெற்ற காளிதேவி ..

வன்னியர்கள் பெரும்பான்மையை வாழும் சோழர்குல படையாட்சிகளின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதியின் பெருமைமிக்க கோவில்

பள்ளி அரசன் தெரு

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பள்ளி அரசன் தெரு..


சோழர் கால "வடஎல்லை அழகர் கோயில்".

சோழர் கால "வடஎல்லை அழகர் கோயில்".

இக்கோவில் நிர்வாகம் , மரியாதைகள் அனைத்தும் சலுப்பை "தேவர் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பமிடம் உள்ளது ....


 


அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.


துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

முதனை செம்பை ஐயனார் கோவில்



முதனை என்னும் ஊர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் உள்ளது .

முதனை என்பது "முதல் நெய் " என்று இருந்து பிறகு முதனை என்று ஆனது .

அதாவது திருவண்ணாமலையில் நடக்கும் தீபத்தின் அன்று , அங்கே ஏற்றப்படும் தீபத்திற்கு "முதல் நெய் " இந்த ஊர் படையாட்சிகள் தான் எடுத்து செல்வார்கள் ..
அதன் முதல் இந்த ஊர் "முதல் நெய் " என்றும் பிறகு முதனை என்றும் திரிந்துவிட்டது .

இங்குள்ள செம்பை ஐயனார் கோவில் மிகவும் பிரபலம்... விருதை சுற்றியுள்ள பெரும்பாலான அனைவருமே இந்த கொவிளைதான் குலதெய்வமாக கொண்டவர்கள் ..

இங்குள்ள அனைவரும் தங்கள் மகன் மகளுக்கு, "செம்பாயி ,உத்தண்டராயன் " போன்ற இந்த கோவிலின் சாமி பெயர்களையே வைப்பார்கள் .



இது முழுக்க முழுக்க வன்னியர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்

ராமநவமி - "ரகுகுல கோத்திரம் "

ஆந்திராவில் வன்னியர்கள் பெரும்பாலும் "ரகுகுல கோத்திரம் " கொண்டவர்கள் .. இவர்கள் ராமநவமி-யை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்



"வன்னிய ஜாதி பிள்ளைகள்" (நோக்கர் )

"வன்னிய ஜாதி பிள்ளைகள்" இவர்கள் .

இடம் - கடலூர் பாடலீஸ்வரர் கோவில் .

வன்னியர்களுக்கு உரித்தான 32 விருதுகளும் , புலி கொடி , சிங்க கொடி என்று அனைத்து வகையான கொடிகளும் கொண்டு , வன்னியர் புகழ் பாடி , விருது கொடுத்து பெருமை படுத்துவார்கள் ..

இது பல நூறு வருடமாக இருக்கும் வழக்கம் ..

இவர்களின் தொழிலே வன்னியர் சமூகத்தை புகழ்வதுதான்




சிவகிரி பாண்டியர்களுக்கு உரித்தான சுண்டன்குலம் அங்காளபரமேஸ்வரி கோவில் (அக்னிகுல க்ஷத்ரிய வன்னியர் சமூகத்திற்கு பாத்தியப்பட்டது )

சிவகிரி பாண்டியர்களுக்கு உரித்தான சுண்டன்குலம் அங்காளபரமேஸ்வரி கோவில் (அக்னிகுல க்ஷத்ரிய வன்னியர் சமூகத்திற்கு பாத்தியப்பட்டது )





"நன்செய் இடையாறு"


சம்பு குல சேகரர் , கல்வி வள்ளல் "திரு.கந்தசாமி கண்டர்" அவர்களின் பூமி நாமக்கல் மாவட்டம் "நன்செய் இடையாறு" என்னும் ஊருக்கு ஒரு பயணம்



                                  நன்செய் இடையாறு நடுநிலை பள்ளி


நன்செய் இடையாற்றின் பகுதியில் உள்ள காவேரி ஆறு .... வடதமிழ்நாட்டின் எல்லை 




நன்செய் இடையார் பகுதியில் விவசாயத்திற்கு வளம் சேர்க்கும் "ராசா வாய்க்கால்" ...

அப்பகுதி வன்னியர்களால் உருவாக்க பட்டது ..
 

கந்தசாமி கந்தர் பள்ளிகூடத்தின் வெள்ளி விழா நினைவு ஆலயம்  




சம்பு குல சேகரர் , கல்வி வள்ளல் நன்செய் இடையார் கந்தசாமி கண்டர் உயர்நிலை பள்ளி .
 

கந்தசாமி கண்டர் கல்லூரியின் புகைப்படங்கள்  

 
 








சம்பு குல சேகரர் , சேர நாட்டு கல்வி வள்ளல் , தன் சொத்து அனைத்தையும் கல்விக்காக எழுதி வைத்த மகான் "திரு.கந்தசாமி கண்டர் " அவர்கள்

இடம் - கந்தசாமி கண்டர் கல்லூரி , பரமத்தி வேலூர் , நாமக்கல் மாவட்டம்
 

 
 



இது பரமத்தி வேலூர் பகுதியில் இருக்கும் எம்ஜியார் சிலை ...

பல சாதிக்காரர்கள் கட்சிக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி, ஒரே நாள் இரவில் இந்த சிலையை பரமத்தி வேலூர் வன்னியர்கள் வைத்தார்கள் .. இனி இதன் மீது கைவைத்தால் வன்னியர்களின் கோவத்திற்கு ஆளாவோம் என்று எவரும் இதை எடுக்க முற்ப்பட வில்லை 
 



அக்னி கும்பம் ...

நாமக்கல் மாவட்டத்தில் வன்னியர் ஊர்களில் பெரும்பாலும் ஒரு ஒரு ஊர் தொடக்கத்திலும் இப்படி ஒரு கும்பம் இருக்கு ...
 







வடதமிழ்நாடு தென்தமிழ்நாட்டை பிரிக்கும் காவேரி எல்லை ..

காவேரி வடக்கு வடதமிழ்நாடு என்றும், காவேரிக்கு தெற்கு தென்தமிழ்நாடு என்றும் கூறுவார்கள் ...

அந்த பாலம் இது .. காவேரி கரையோரம் மட்டும் எப்போதுமே வன்னியர் கிராமம்தான் ... இது நாமக்கலில் மட்டும் அல்ல, நாகை தஞ்சை என்று பெரும்பாலான இடங்களில் அப்படிதான் இருக்கு .

இங்கு பாலத்திற்கு வடக்கில் நாமக்கல் , தெற்கில் கரூர் ... அங்கும் கரையோரம் வன்னியர் கிராமங்கள்தான் ..

இதனால் எல்லையில் சிங்கம் சிலை வைத்துள்ளார்கள் .. அது நமது வடதமிழ்நாட்டை பார்ப்பது போல அமைத்திருக்கிறார்கள்



வன்னியர் திருவிழா என்றாலே பூக்குழி இறங்கி தீமிதித்தல் நடைப்பெறுவது வாடிக்கை .. அனைத்து த்ரவ்பதி அம்மன் கோவிலிலும் இது நடைபெறுகிறது ..

இது நன்செய் இடையாரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் ..

இதுதான் தமிழ்நாட்டிலேயே பெரிய பூக்குழி இறங்கும் கோவில் ..
இதைவிட நீளமான பூக்குழி இறங்கும் கோவில் வேறெங்கும் இல்லை ..