“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” ..................... “வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Thursday, August 19, 2021
வன்னியர் அழித்து வன்னியர் பட்டம் சூடிய விஜயநகரம் மற்றும் சேதுபதி
சேதுபதி அரசர் ஆவணங்களில் "வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் " போன்ற வரிகள்
மெக்கென்சி குறிப்புகளில் உள்ள கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அவரை எதிர்த்து காஞ்சிபுரம் திருவிடைச்சுரம் லேர்ந்து போரிட்ட இரு வன்னிய சகோதரர்கள் (காந்தவராயன், சேந்தவராயன் ) வீழ்ச்சி அடைந்ததை குறிப்பிட்டு விஜயநகர அரசு சூட்டிக்கொண்ட பட்டங்கள்
வன்னியர்கள் இலங்கை வரை ஆளுமை செலுத்தியவர்கள். 18 வன்னியர் அரசுகளை வீழ்த்திய விஜயநகர அரசு
18 வன்னியர் கண்டன் என்று "the lord who took 18 vanniyar heads" சூடிக்கொண்டனர்
அவர்கள் ஆளுமையை ஏற்று ஆட்சி செய்த சேதுபதி அரசும் அப்பட்டங்களை சூடி கொண்டனர்
அதாவது வடக்கில் வன்னியர் அரசு வீழந்தால் விஜயநகர அரசுக்கு கீழ் இருந்த சிலரும் வன்னியர் என்பதை சூட ஆரம்பித்தனர்
Epigraphica Indica
பள்ளி
தமிழில் "பள்ளி " என்ற சொற்றடர் அரச குல (ROYAL) சொல்லாக பார்க்க படுகிறது
எதெல்லாம் அரச பரிவர்த்தனையுடம் உயர்வாக , புனிதமாக கருதபடுகிறதோ அவைகள் அனைத்துமே "பள்ளி " என்று அழைக்க படுகிறது .
மலையாளத்தில் ,
பள்ளி கோவிலகம் - ராஜ அரண்மனை
பள்ளி மெத்தை - ராஜ மெத்தை
பள்ளிவாள் - ராஜவாள்
பள்ளிவேட்டை - ராஜவேட்டை
போன்ற அர்த்தங்களை கொடுக்கிறது .
தென்காசி பட்டயம்
தென்காசி பட்டயம் 4 பகுதி கொண்டது
முதல் 3 பட்டயம் தமிழ்
கடைசி ஒன்று தெலுங்கு
1753 கால கட்டம் இது
இதனை வைத்திருந்து தொல்லியல் துறை சந்திரவானன் மற்றும் "திருமலை நாயக்கர் மஹால் museum" வேதாசலம் க்கு கொடுத்தவர் முனுசாமி நாயுடு
பின் தமிழக அரசாங்கத்தில் கீழ் பதிவு செய்யப்பட்டது
இது வன்னியர்கள் காஞ்சிபுரம் சன்னதிக்கு கொடுத்த கொடை பற்றியது
இதில் ஈசனால் பள்ளிகள் படைக்க பட்டு படைக்கு தலைமை ஏற்றதால் படையாட்சி என்று அழைக்க பட்டனர் என்று உள்ளது
இவர்கள் அக்னி குலம் என்றும் அக்னி குதிரை ஏறியவர்கள் என்றும் உள்ளது
பள்ளிகளின் "தென்காசி பட்டையம் " சொல்வது
1. அசுரர் அழிக்க சிவன் அவர்களால் படையுடன் படைக்க பட்டோம். நாங்கள் பள்ளி
2. படைக்கு தலைமை ஆனதால் படையாட்சி ஆனோம்
3. காஞ்சி மடத்தில் ஆசி பெற்றோம்
4. அக்னி குலம் என்பதை நிரூபிக்க அக்னி குதிரை ஏறி நிரூபித்தோம். வன்னியர் என்று அழைக்க பட்டோம்
5. மகிழ்ந்த "மதுரை பாண்டியன் " எங்களை அழைத்து வெகுமதி கொடுத்தார்
6. புலிக்கொடி மகரகொடி மீன்கொடை பெற்றோம்
7. ஆட்சி செய்ய 5 இடங்கள் பெற்றோம்
நெல்லை மாவட்ட வன்னியர்கள்
நெல்லை மாவட்ட வன்னியர்கள்
1930 - முத்து படையாட்சி குமாரர் "வன்னியர்"
பள்ளி நாடு - திண்டுக்கல் - பள்ளி வேளான்
8 ஆம் நூற்றாண்டிலேயே "பள்ளி நாடு " - திண்டுக்கல் மாவட்டம் (வேடசந்தூர் பகுதியாக இருக்கலாம் )
தென்னாற்காடு மாவட்டத்தில் "வன்னியனார் "
தென்னாற்காடு மாவட்டத்தில் "வன்னியனார் "
பள்ளி / வன்னியர் என்று அரியப்பட்ட பல்லவன் கோப்பெருஞ்சிங்க காடவன் "வன்னியனார்" என்று அறிய பட்டுள்ளார்
முள்ளூர் காரி பட்டம்
"பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு" - மதுரை
மதுரை திருபுவனம் பகுதியில் "இடைக்காட்டூர் " ல 13 ஆம் நூற்றாண்டில் "பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு " என்று உள்ளது கல்வெட்டில்
அழகாபுரி கைபீது
நாங்கள் திருபவனம் ல காவல் புரிந்தோம். அங்கிருந்தே நெல்லை பக்கம் சென்றோம் ன்னு சொல்றாங்க.
இதுதான் இவங்க இடம். இந்த பன்னாட்டார்களே migrate ஆனாங்க என்பதற்கு நல்ல ஆவணம் இது
அஞ்சலை அம்மாள் படையாட்சி பற்றி சட்டசபையில் உரை
உடையார், நயினார் பட்டம்
கடலூர் காட்டுமன்னார்கோவில்
அழகாபுரி ஜமீன் கைபீது - அக்னிகுல க்ஷத்ரியர்
அக்னிகுல க்ஷத்ரியர் என்று பத்ரம் வைத்துள்ள அழகாபுரி ஜமீன் கைபீது சொல்வது
1. மதுரை மீனாட்சி ஆசியால் பன்றிகள் மூலம் பாண்டிய அரசபையில் சிற்றரசு ஆனோம் ( சாளுக்கிய மரபை குறிக்கிறது இந்த பன்றி அடையாளம் . பிற்கால பாண்டியர் ஒய்சாளர் களுடன் மணஉறவு கொண்டவர்கள் . திருவண்ணாமலை ஆண்ட வன்னியன் வீரவல்லாளன் பாண்டியனுக்கு மாமனார் - இவர் பன்றி கொடி உடையவர் )
2.முதலில் ஆட்சி செய்தது திருபுவனம் . திருபுவன சீமையும் , பிறமலை நாட்டு காவலும் செய்தவர்கள் ( இங்குதான் பிற்கால பாண்டியர் ஆட்சியில் பன்னாட்டார் கோட்டை , பன்னாட்டார் குடியிருப்பு இருந்தன . மாறவர்மன் சுந்தரபாண்டிய சோழகோனார் என்ற அதிகாரி கொடுத்த நிலத்தானத்திலும் பன்னாட்டார் கோட்டை இடம்பெற்றுள்ளது )
3. இங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த பொது , சோழ ராசனுக்கும் பாண்டியனுக்கும் போர் வந்ததால் அதில் சோழருக்கு எதிராக படைதிரட்டி மதுரை பாண்டியன் போர் செய்ய சொன்னதால் , அதில் வென்று நற்பெயர் கொண்டார்கள்
4. இதனால் "மதுரை பாண்டியன் "சத்ரு சங்கார வன்னியர் " பட்டம் கொடுத்து ஆண்டு வரச்சொன்னார்
5. பின்னாளில் வந்த மதுரை பாண்டியர்கள் இவர்களின் புகழையும் மரியாதையும் கேட்டு எப்படி எங்கள் முன்னோர்கள் உங்களுக்கு இதனை கொடுத்தார்கள் என்று கேட்க , நாங்கள் மதுரை மீனாட்சி அருள் பெற்றவர்கள் என்று கூறினார்கள் . அதற்கு பாண்டியன் அதனை நிரூபிக்க சொன்னான்
6. மீனாட்சி அருளை நிரூபிக்க "செப்பு குதிரை " ஏறி நிரூபணம் செய்தனர் .
7. பாண்டிய ராசா மகிழ்ந்து ராமேஸ்வரம் பாதையில் உள்ள "ஆனையூர் , ஆப்பனூர் , பசுமையூர் , மங்கையூர் , இளசையூர்,அம்பையூர் " என்று ஆறு நாடு கோட்டை " ஆறுகோட்டை வன்னியனார் " என்று பட்டம் கொடுத்து ஆட்சி செய்ய சொன்னார்கள்
8. பிறகு மதுரை பாண்டிய ராசா இவர்களை அழைத்து " சுண்டன் குளத்தில் " ஒரு பள்ளன் கலவரம் செய்கிறான் என்றும் அடக்க சொல்லியும் அனுப்பினார்கள் . அவனை அடக்கியும் வந்தார்கள்
( இந்த சுண்டன்குளத்தில் தான் வன்னியர்கள் அங்காளபரமேஸ்வரி கோவில் கட்டி வாழ்கின்றனர் . இங்கு பெரியசாமி கோவில் ஒன்று உள்ளது . இது தென்மலை ஜமீந்தார்க்கும் , பள்ளர்களுக்கு குலதெய்வம் . இதுதான் வெற்றியின் அடையாளம் )
9. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுரை பாண்டியர் , வன்னியர்களுக்கு " அவனியங்கோன் , அச்சந்தவிளத்தான் , தென்மலை , புத்தூர் , திருவேங்கடம் " என்று ஐந்து இடம் கொடுத்து ஆள சொன்னார்கள் . இவர்களுக்கு "ரெட்டைகுடை வன்னியனார் " என்றும் பட்டம் கொடுத்தார்கள்
10. பாண்டிய ராசா தென்காசி க்கு போன பிறகும் , எங்க முன்னோர் "வரகுணராம ரெட்டைகுடை வன்னியனாருக்கு " செவ்வல்குளம் ஊரில் காவல் அதிகாரம் கொடுத்தார் தென்காசி பாண்டியர் "அழகம் பெருமாள் ராசா " . பின் " அழகம் பெருமாள் வன்னியராயன் ரெட்டைகுடையார் " பட்டமும் கொடுத்தார் அழகம்பெருமாள் பாண்டியன்
11. பின்னாளில் கள்ளர்களை ஒடுக்கியதால் , அவர்களை பாண்டியர் முன்பு நிறுத்திய பிறகு , அவர்களுக்கு மரண தண்டனை தராமல் பாதுகாத்ததால் , கள்ளர்கள் வன்னியருக்கு " தாலிக்கு வெளியிட்ட ரெட்டைகுடையார் " பட்டம் கொடுத்தனர்
12. இவ்வளவு விருதுகளை கண்டு பிற்கால சாளுவ ராசா யுத்தம் வருகையில் அவர்களை வென்று "சாளுவ கட்டாரி " என்று பட்டம் பெற்றனர்
13. பின்னாளில் நாயக்கர்கள் பாண்டிய நாட்டிற்கு அதிபதியாக வந்து 72 பாளையங்கள் உருவான போது, செவ்வல்குளம் உள்ளவர்க்கு "அளகாபுரி" காவல் பொறுப்பு கிடைத்தது
இடங்கை புராணம்
இடங்கை புராணம் என்று சவுந்தரப்பாண்டியன் அவர்கள் பதிவு செய்தது "வன்னியர் புராணம் " ஆகும்
காசிநாதன் ஐயா அவர்கள் தொல்லியல் துறை இயக்குனர் ஆக பணியாற்றியதால் (head of the department ) யார் என்ன ஆவணம் பதிவு செய்தாலும் காசிநாதன் பெயர் இருக்கும். அதனால் அவர் தான் பதிவு செஞ்சார் ன்னு பொலம்புவது வீண்
இப்போ செய்திக்கு வருவோம் - இடங்கை புராணம் என்ன சொல்லுதுன்னா
1. சாபத்தால் இரண்டு பேர் "வாதாபி, வில்லவன் " என்று அசுரர்கள் இருந்தார்கள். இவர்களை அழிக்க அக்னியில் ஒரு வீரனை படைக்க வேண்டும் என்று சொல்லி சிவன் "சம்பு முனியை" அழைத்து யாகம் ஏற்பாடு செய்தார்
2. யாகத்தில் பிறந்த வீரன் "ருத்ரப்பள்ளி " ஆவான் (இவனைதான் ருத்ர வன்னியன் என்கிறோம் ).
இவனுக்கு இந்திரன் மகளான் மந்திரமாலையை மனமுடித்து வைக்கிறார் ஈசன்
3. ருத்ரபள்ளியார் க்கு "வஜ்ரபாகன், நீலகங்கன், கங்கபரிபாலன், சம்பு குலவேந்தன்,பரசுராமன் " என்று ஐந்து பிள்ளைகள்
4. ருத்ரப்பள்ளியார் தம் மகன்களுடன் போருக்கு செல்கிறார்
அப்போது "ஜம்பு மஹாபுரி பட்டினம் ல மனைவி மந்திரமாலையை விட்டுட்டு நான் சென்று வருகிறேன் ன்னு சொல்லிட்டு செல்கிறார்.
ஒரு தூண்டாவிளக்கு ஏற்றி வைத்து விட்டு இது அணையாமல் இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்னையும் வராது என்று எண்ணிக்கொள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்
5. போர் செல்லும் முன் காளகஸ்தி, காஞ்சி காமாட்சி வணங்கி திருக்கழுக்குன்றம் செல்கிறார்
விஷ்வகர்மா பல கப்பல்களை உருவாக்கி தருகிறார்
6. வாதாபி பட்டினம் போகும் முன் முழுக்க கடல் சூழ்ந்து உள்ளது. இந்த கடலை தாண்ட யோசிக்கும் பொழுது தூர்க்கை வணங்குகிறார்
7. தூர்க்கை அம்மன் ஒரு இடையர் பெண்ணாக வந்து ஒரு எலுமிச்சம் கொடுத்து இதனை நீரில் வை. நீர் வற்றும், உன் படை செல்லும் என்று சொல்கிறார்
8. அதே போல ருத்ரப்பள்ளியார் செய்ய, நீர் வற்றி பாதை பிறந்தது. ருத்ரப்பள்ளியார் படையுடன் சென்றனர்.
அசுரன் வாதாபி மாயையால் பின்னால் வந்தபடை மக்கள் கண்களுக்கு இவர்கள் காணாமல் போனது போன்ற மாயை தென்பட்டது
9. அவர்கள் மீண்டும் மந்திரமாலை இருந்த ஜம்புமாபுரி பட்டினம் சென்று பள்ளியாரும் படையும் இறந்து விட்டனர் என்று சொல்ல
மந்திரமாலை " தூண்டா விளக்கு அணைய வில்லையே, வலம்புரி சங்கிலும் நாதம் உள்ளதே" என்று எண்ணி
இவர்கள் பொய் உறைக்கிறார்கள் என்று நினைத்து
"போடா கள்ளா, போடா மறவா " என்று திட்டுகிறார் இந்திரன் மகளும் ருத்ரப்பள்ளி மனைவியுமான மந்திரமாலை
10. இதனாலேயே கள்ளன் என்றும் மறவன் என்றும் பள்ளி இறந்தார் என்று வந்து சொன்னவர்களுக்கு குலம் நிலை பெற்றது
11. பின் பள்ளியோடு சென்ற வீரர்களை வைத்து ருத்ர பள்ளியார் என்ற வீரவன்னியன் போரிட்டு வென்று மீண்டும் துர்கை துணையோடு நாடு திரும்பி தம் பிள்ளைகளுக்கு நாடு பிரித்து தந்து ஆட்சி செய்கிறார்
சேலம் தெலுங்கு நாயக்கர் சபையில் "சேலம் எழுக்கரை நாட்டு பன்னாட்டார் " தலைமையில் வாதம் நடந்தது
(இந்து எழுக்கரை பன்னாட்டார் என்ற வன்னியர் குடும்பம் இப்போ கூட கீழ நடக்க வைக்காம அவங்க குடும்பத்தை ஊர் மக்கள் தூக்கியே சென்றாங்கனு செய்தியில் வந்ததே அந்த குடும்பமே. அவங்க படங்கள் மற்ற பதிவில் போடுறேன் ")
இதில் நாராயண ஐயர் வன்னியர் சார்பாக வன்னியர் புராணம் சொல்லி இடங்கையே சிறந்தது என்று வாதிட்டு வெற்றி பெற்றார்
அதில் வன்னியர்களை பற்றி
வீர வன்னியர் என்ற ருத்ர பள்ளியார் க்கு 5 மகன்
1. நீலகங்கன் வரத்திலே வந்த பள்ளி - கிருஷ்ண வன்னியர் - அவன் கோத்ரம்
2. வஜ்ரபாகன் வம்சத்து துஷ்டப்பள்ளி - ஜம்பு வன்னியர் - அவன் கோத்ரம்
3. கங்கபரிபாலன் வம்ச - சிஷ்ட பள்ளி - பிரம்ம வன்னியர், அவன் கோத்ரம்
4.வன்னியப்பள்ளி வம்ச - கங்கவன்னியர் - அவன் கோத்ரம்
5. அரச பள்ளி - இந்திர வன்னியர் - அவன் கோத்ரம்
ஆக இந்த 5 பள்ளிகளும் (பள்ளி,சிஷ்ட பள்ளி, அரசப்பள்ளி, வன்னிய பள்ளி, துஷ்ட பள்ளி ) அக்னியில் பிறந்தனர்
இவர்களுக்கான குலங்கள் எட்டு ( அதாவது இவர்களுக்கு துணை சமூகம் )
1. கள்ளர்
2. மறவர்
3. கம்மாளர்
4. நகதகர்
5. இடையர்
6. வேடர்
7. எகிளியர்
8.சக்கிலியர்
இல்லை இல்லை நாங்களும் அக்னி குலம் ன்னு சொன்னா தாராளமா சொல்லாலம்
ஆனா அப்படி அக்னி ண்ணா மேலே சொன்ன 5 வகை பள்ளியில் இருந்து வந்தோம் ன்னு உறுதி ஆகும்
வாண்டையார் அரசு
வாண்டையார் அரசு (வன்னியர்) பட்டமும் கல்வெட்டும்: - அரியலூர்
விளந்தையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று 'விளந்தை வாண்டையார்களை' பற்றியும் அவர்கள்
உடையாற்பாளையத்து அரசர்களான (இன்னொரு பல்லவ வழித்தோன்றல் வம்சம்) 'காலாட்கள் தோழ உடையார்'களின் உறவினர்கள் என்றும் குறிக்கிறது
கல்வெட்டு வரிகள்:
மூன்றாவது வரியிலிருந்து..
ரோகினி நக்ஷத்திரம் இந்த சுபதினத்தில் விளந்தை அக்ஷ திசுர
சுவாமியார் தர்மஸவர்தினி கோவில் சீரணஉத்தாரம்
கச்சிப பிறம்ம வன்னியர் சிங்கக்கொடி தலைவறான முத்து விசயரங்கப்ப காலாக்கதோழர் னாலில் பந்து செனமான
குடியானவன்
விலங்குகளைப் போன்ற வாழ்வியல் முறையிலிருந்து மாறிய சொந்த நிலமுடைய காணியுடைய பள்ளி, காணியுடைய வேளாளர்
ஓரிடத்தில் நிலைபெற்று யாரையும் சாராமல் தனக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் ஒருவன் குடியானவன்
சம்புவராயர் , காடவராயர் மற்றம் சோழ அரசு அதிகாரிகளான குடிப்பள்ளிகளான - வன்னியர்கள்
Kudipalli (குடிப்பள்ளி) - landholding pallis (காணி உடைய பள்ளிகள்) are identified as landed warriors (நிலப்படைகள் )
Subscribe to:
Posts (Atom)