Friday, September 27, 2013

மல்லையில் காடவர் கொடி பறக்காமல் கண்டவன் கொடியா பறக்கும் ?

2013 மகாபலிபுரம் வன்னியர் மாநாடு முடிந்ததை அடுத்து கடந்த மே 2-2013 அன்று சின்ன அய்யாவை நேரடியாக பேட்டி காணும் போது , பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் சில தலித் கும்பல் கேள்வி கேட்க்கிறோம் என்ற பெயரில் நக்கலாக சில கேள்வியை முன்வைத்தார்கள் ....

அதாவது தமிழ்நாட்டின் புராதன சின்னமான பல்லவ கோவிலில் வன்னியர் சங்க கொடியை ஏன் ஏற்றினீர்கள் என்று கேட்டார்கள் ?




அட வெண்ணைகளே , எங்கள் ஊரில் நாங்கள் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் முதல் அத்தனை விழாவிற்கும் நாங்கள் போகாமல் யார் போவது ..

மல்லை கோவில் எங்கள் முப்பாட்டன் காடவர் குலத்து வேந்தன் நரசிம்மன் காலத்தில் கட்டப்பட்டது ...

என் தாத்தன் கட்டிய கோவிலுக்கு நாங்கள் போகாமல், எங்கள் கொடி பறக்காமல் வேறென்ன பறக்க முடியும் .

இதை எல்லாம் ஒரு கேள்வியன்று கேட்க வந்து விட்டார்கள் .



கோவில் கும்பாபிஷேகம் அப்போ பார்ப்பான் ஏறினால் வராத தீட்டா , கோவிலை கட்டிய மன்னனின் மைந்தர்கள் ஏறினால் வந்து விட போகிறது

பல்லவ மரபை சேர்ந்த சம்புவரையர், காடவர் கோப்பெருஞ்சிங்கன் , கருணாகர தொண்டைமான் , இன்றும் வாழும் உடையார் பாளையம் ஜமீன்தார்கள் என பல்லவ மரபை பறைசாற்றுகிறோம் வன்னியர் குல க்ஷத்ரியர்கள் ...

அதனால் எங்கள் கோவிலில் நாங்கள் மட்டுமே எங்கள் கொடியை பறக்க விடுவோம் ... 


அதை ஏன் என்று கேட்க யாருக்கும் அருகதை இல்லை ...உரிமையும்  இல்லை...........

Thursday, September 19, 2013

தஞ்சை பகுதியில் தென்மலை ஜமீனை சேர்ந்த வீர பாண்டிய வன்னியனாருடன் ஒரு நாள் சுற்றுபயணம்

சமீபத்தில் நண்பர் திரு.சுந்தர் சம்புவராயர் திருமணம் (16-09-2013) அன்று தஞ்சையில் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது .

இதற்காக வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் தலைவர் திரு.ஆறு அண்ணல் கண்டர்வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் செயலாளர் முரளி நாயகர் , சென்னை தொழில் அதிபர்  ராஜேந்திர நாயகர் , மாநில பாமக மாணவர் அணி தலைவர் திரு.கவின் கண்டர் , மற்றும் ஊடகங்களில் பணி புரியும் நண்பர் திரு.ஸ்ரீவிஜய் கண்டர் , கார்த்திக் சம்புவராயர் ஆகியோர்களும் நானும் சென்றிருந்தோம் .

சிவகிரி சமஸ்தானத்திற்கு உட்பட்ட தென்மலை ஜமீனை சேர்ந்த "திரு.வீரபாண்டிய வன்னியனார் " பாபநாசத்திற்கு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தார் .

சுந்தர் சம்புவராயர் அவர்களுக்கு திருமணம் நடந்த மண்டபம்

வீரபாண்டிய  வன்னியனார் அவர்களுடன் நான் , கார்த்திக் சம்புவராயர் , பாமக மாணவர் அணியை சேர்ந்த கவின் கண்டர் அவர்கள் .



சோழன்குடி காடுவை சேர்ந்த திரு.குமார் வாண்டையார் (வன்னியர் சமூகம் ) அவர்கள் சுந்தர் சம்புவராயரின் அருகில் இருக்கிறார் .


இணையதள வன்னிய நண்பர்கள் திருமணத்தில் சத்ரியன் என்று  பொரித்த பொருளை திருமணதிற்கு பரிசாக அளித்தனர் .



திருமணம் முடிந்ததும் வீர பாண்டிய வன்னியனார் அவர்களை அழைத்து கொண்டு , பூம்புகார் பகுதியில் உள்ள சாயாவனம் கோவிலுக்கும், தில்லை நடராஜர் கோவிலுக்கும் செல்லலாம் என்று முடிவு செய்தோம் .

வழியில் சுவாமிமலை அருகில் "திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் " ராஜ முநேந்திரர்" பட்டம் கொண்ட படையாட்சி குடும்பத்தினரை" சந்திக்க சென்றோம்  . இவர்களே சூரியனார் கோவிலின் ஆதீனம் .

தஞ்சை பகுதியில் அனைத்து நவக்ரக சுவாமிகளுக்கும் தனி கோவில் உள்ளது . இங்குள்ள சூரியனார் கோவிலின் முதல் மரியாதைகளும், கோவில் தர்மகர்த்தா பொறுப்புகளும் இந்த  " ராஜ முநேந்திரர்குடும்பத்தை சேர்ந்தது .


சுவாமிமலை வழியில் நாங்கள் கண்ட திரௌபதி அம்மன் கோவில் .



 " ராஜ முநேந்திரர்"   வீட்டை அடைந்ததும் , அண்ணல் கண்டர் அவர்களும், வீர பாண்டிய வன்னியனார் அவர்களும், ராஜேந்திர நாயகர் அவர்களும் , இன்றைய சூரியனார் கோவில் ஆதீனமான "காளிமுத்து ராஜ முநேந்திரர்" அவர்களை  காண , அவர் வீட்டிற்கு சென்றார்கள் .

"காளிமுத்து ராஜ முநேந்திரர்" அவர்களுடன் அண்ணல் கண்டர் அவர்கள் .



சூரியனார் கோவில் அருள்மிகு சிவ சூரிய பெருமாள் திருகல்யாணத் திருவிழா அழைப்பிதழ் .


காளிமுத்து ராஜ முநேந்திரர் அவர்களுடன் நாங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் .



சிறிது நேரம் உரையாடிவிட்டு , பின்பு அங்கிருந்து பூம்புகார் நோக்கி சென்றோம் .பூம்புகாரில் பகுதியில் உள்ள "சாயாவனம் வில்லுடைய வேலவர்" கோவிலை அடைந்தோம் .

பூம்புகார் பகுதி எங்கும் பாமக கொடியும், வன்னியர் சங்கத்தின் கொடியும் பட்டொளி வீசி பறந்தன .

இது சிலப்பதிகாரம் காலத்து  பழமையான கோவில் .


பூம்புகாரில் பகுதியில் உள்ள "சாயாவனம் வில்லுடைய வேலவர் கோவிலில்" , சிவகிரி சமஸ்தானத்து தென்மலை ஜமீனை சேர்ந்த வீரபாண்டிய வன்னியனார் அவர்களுடன் சென்னை தொழில் அதிபர் ராஜேந்திர நாயகர்.


                                  

இயற்பகை நாயனார்க்கு இறைவன் (ஈசன் ) காட்சி கொடுக்கும் புகைப்படம் .
                              
இதைப்பற்றிய சிறிய கதை உண்டு . ஒரு வாணிக செட்டியார் சிறந்த சிவபக்தியுடன் இருந்ததாகவும் , எவருக்கும் இல்லை என்று சொன்னதில்லை என்ற கர்ண தன்மையுடன் இருந்ததாகவும் செய்தி . இவரை சோதித்து பார்க்க வந்த ஈசன் மானிட உருவில் வந்தாராம் . நாயனாரிடம்  எனக்கும் ஒன்றும் வேண்டும் , தருவீர்களா என்று கேட்டாராம் .

இல்லை என்ற வார்த்தை அறியாத நாயனார் தரேன் என்று வாக்கு கொடுத்தாராம் . உடனே எனக்கு உங்கள் மனைவி வேண்டும் என்று கூறினார் அந்த மானிடர் உருவில் இருக்கும் ஈசன் . அதற்க்கும் சம்மதித்த நாயனார், தன்  மனைவியிடம் இந்த செய்தியை கூறியிருக்கிறார் . கணவன் சொல்லே முக்கியம் என்று நினைத்த மனைவியும் இதற்க்கு சம்மதித்து அந்த மாநிடருடன் செல்ல ஒப்புகொண்டாராம் . (அந்த காலம் கணவன் எது சொன்னாலும் சம்மதிக்கும் காலம்தானே) .

இதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள்  நாயனாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இயற்கைக்கு எதிரானதை செய்யாதே என்று அறிவுரை கூறியதுடன் , நாயனாரிடம் சண்டைக்கும் வந்துள்ளனர் .
எனது பொருளை நான் யாரிடம் வேண்டுமானாலும் தருவேன் என்று கூறிய நாயனார், அவர்களை சிரைச்சேதம் செய்துள்ளார் .

பிறகு தனது மனைவியை அந்த மாநிடருடன் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினார் . வீடு திரும்பும்போது ,ஈசன் தான் யார் என்று கூறியதாகவும், அவர் மனைவியை திருப்பி தந்ததாகவும் ,அவர்கள் இருவருக்கும் ஈசனும் அம்பாளும் காட்சி தந்ததாகவும்  இந்த நாயனார் கதையை கோவில் ஐயர் எங்களுக்கு கூறினார் .

கோவிலில் ஐயருடன் நாங்கள் .
                                   


வில்லோடு காட்சி தரும் முருகர் .

                                

பூம்புகார் பகுதி எங்கும் பாமக கொடியும், வன்னியர் சங்கத்தின் கொடியும் பட்டொளி வீசி பறந்தன .

அங்குள்ள வன்னியர் சங்க கொடி கம்பத்தின் முன்பு  அண்ணல் கண்டர் அவர்களும் , வீரபாண்டிய வன்னியனாரும்.

                

பூம்புகாரில் காவேரி ஆறு



வன்னிய நாள்காட்டி

வன்னிய நாள்காட்டி :