1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையிலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. (தஞ்சை மாவட்டம் )
இக்கோவிலின் முதல் மரியாதை , கோவில் முழு உரிமை , தர்மகர்த்தா என அனைத்தும் "ராஜ முநேந்திரர் " பட்டம் கொண்ட வன்னியர் சமூகத்து குடும்பத்திற்கு உரியது .
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார் ஆரோக்கியம்,
வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர ஓளிவழங்கும் சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில்
அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது