"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்"
ஸ்ரீ மதுரகவி பிள்ளை சுவாமிகளின் அண்ணன் திரு. பெரியண்ணம்பிள்ளை அவர்களின் வழி எள்ளுபேரன் சுரேஷ் ராஜசேகரன் பிள்ளை (திருச்சி பகுதியில் வன்னியர்கள் "பிள்ளை " பட்டம் கொண்டவர்கள் )அவர்கள் , ஸ்ரீ மதுரகவி பிள்ளை அவர்களை பற்றிய சில செய்திகளை அனுப்பிருந்தார் .. அவைகளை சிலவற்றை பதிகிறேன் .
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்கள் திருச்சி வன்னிய சமூகத்தை சார்ந்தவர் .
இங்கு திருச்சியில் வன்னியர்கள் "பிள்ளை " பட்டம் சூடி அழைக்க படுகிறார்கள் .
இவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வீரேச்வர ஊரில் 1846 விசுவாசு தை மாதம் பூர நட்சத்திரத்தில் ரங்கபிள்ளை , ரங்கநாயகி அம்மாள் ஆகிய தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள் .
இவர் அரங்கநாதன் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார் .
காவேரிக்கரையில் சோழன்மாதேவி கிராமத்தில் உள்ள தனது 10 காணி தோட்டத்தையும் பெருமாளுக்கு எழுதி வைத்து அதில் நீர்ப்பூ , நிலப்பூ , மரப்பூ, கொடிப்பூ என்று நாலு வகை பூக்களையும் உண்டாக்கி திருமாலை சமர்ப்பிக்கும் நந்தவனமாக ஏற்பாடு செய்த மகான் ..
இது இன்றும் "ஸ்ரீ மதுரகவி சுவாமி திருநந்தவனம் ட்ரஸ்ட்" என்னும் பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது . இன்றும் இங்கிருந்துதான் புஷ்பங்கள் கோவிலுக்கு செல்கின்றன .
தனது நந்தவனத்தில் மலரும் மலர்களை கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்து வாழும்போது , 1891 இல் ரங்கநாதருடைய விமான கலசங்களில் போடப்பட்டிருந்த பொன் தகடுகளை புதுபித்து தரும்படி , கோவில் அர்ச்சகர்கள் ஸ்ரீமான் மதுரகவி அவர்களிடம் கேட்டுகொண்டனர் .
புஷ்ப கைங்கர்யம் தவிர வேறு ஏதும் தெரியாத தன்னால் எப்படி இதை செய்யமுடியும் என்று யோசித்தார் மகான் ...
ஒரு வருடம் கழித்து 1892 இல் பெரியபெருமாள் ஸ்ரீசுவாமி கனவில் வந்து பயப்படாமல் விமான கைங்கரியம் ஆரம்பியும் , யாம் இருக்கிறோம் என்று ஆசிகூற , சுவாமி அவர்கள் தனது ஆசாரியரிடமும் தனக்கு அந்தரங்கருமான குவளக்குடி சிங்கம அய்யங்காரிடமும் விண்ணப்பித்து அனுமதிபெற்று சகாயத்திற்கு தன் அந்தரர்களுடன் ஸ்ரீவானமாமாலை முதல் ஹைதராபாத் வரை சென்று சுமார் ஐந்து வருடங்களில் 80000 வரை வசூலித்து விமான கைங்கரியம் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் பெரிய கலசங்கள் 8 க்கு கலசம் 1 க்கு மூன்று சேர் தங்கம் பதினாறு பூச்சுபூசியும் , சின்ன கலசம் நான்குக்கும் மேற்படி பூசியும் பத்மங்களும் 12 பூச்சுகொடுத்தும் 1897 இல் முடிந்தது .
ஸ்ரீரங்க கோவில் விமானத்துக்கு லக்ஷம் ரூபாய் செலவில் பொன்தகடு பூட்டி 1903 இல் விமர்சையாக மஹா ஸம்ப்ரோஷணம் நடத்தி வைத்தார் .
-------
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களால் புனரமைக்கப்பட்ட திருவரங்க விமானம்
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" நந்தவனப் பூமாலையில் காட்சிதரும் அரங்கரும் பெருமாட்டியும்
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களின் நந்தவனம் ட்ரஸ்ட்
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்கள் எழுதி வைத்த உயிலின் ஒரு சிறிது தெளிவான நகல் .
இதில் அந்த ட்ரஸ்ட் இல் உள்ள ஸ்ரீமான் மதுரகவி அவர்களின் தமையனார் பெரியண்ணம்பிள்ளை (வன்னிய ஜாதி- பட்டம் பிள்ளை ) ஆகியோரும், இன்னும் பிற சமூகத்தவர்களின் பட்டியலும் உள்ளது ..
"ஸ்ரீமான் மதுரகவி பிள்ளை சுவாமிகள்" அவர்களின் ட்ரஸ்ட் சொத்து விபரமும் , அதில் உள்ள நபர்களும்
====