இவர் சீர்காழி சீமையின் அரசர் .
இவர் பெயர் “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார் ” (காலம் : 19 – 20 ஆம் நூற்றாண்டு )
வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான வடகால் பாளையக்காரர்கள் சீர்காழி சீமையை ஆட்சி செய்துள்ளனர். இவ்வரசர்கள் தங்களை “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற ராயராவுத்த மிண்ட நயினார்” என்று தஞ்சை மராத்தியர் செப்பேட்டில் குறித்துள்ளனர் .
மஹா ராஜ ராஜ ஸ்ரீ அழகிய சிதம்பர ராயராவுத்த மிண்ட நயினார் கிபி 17௦1 இல் நிலக்கொடை அளித்ததை பற்றி செப்பேடு தெரிவிக்கின்றது . “ராயராவுத்த மிண்டனாருளா ” பாடிய புலவருக்கு அரசன் பன்னீராயிரம் பொன் பரிசளித்தான் என்று “திருக்கை வளம் ” குறிப்பிடுகிறது .
மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராவுத்த மிண்ட நயினார் கிபி 1919 ஏப்ரல் 19,௨௦ தேதிகளில் திருக்கழுக்குன்றத்தில் கூடிய சென்னை வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்க 3௦-வது ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தார் .
வடகால் அரசர்களை பற்றி தருமபுரம் ஆதீன செப்பேடுகள் குறிப்பிடுகின்றன .ஸ்ரீமத் செல்வம் ராயுத்த மிண்ட நயினார் தங்களிடம் இருந்த செப்பு பட்டயங்களை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்கு கொடையளித்தார் . வடகால் அரசர்கள் பல கோவில்களுக்கு தானம் அளித்தும் சிறப்புற நிர்வகித்தும் வருகின்றனர் .
வடகால் அரசர்கள் பெயரான ராவுத்தமிண்டன் என்பது முற்காலத்தில் இராகுத்த மிண்டன் என்றே வழங்க பட்டிருக்கிறது . கிபி 14 – 16 ஆம் நூற்றாண்டு வரை விளந்தையை (ஆண்டிமடம் ) ஆட்சி செய்த வன்னிய குல க்ஷத்ரியர்களான “விளந்தை கச்சிராயர்கள் ” தங்கள் பெயருக்கு முன் இராகுத்த மிண்டன் என்று குறிப்பிட்டுள்ளனர் .
“இராகுத்த மிண்டன் அரச மார்த்தாண்டன் வெட்டுங்கை அழகிய கச்சிராயர் ”, “இளவரசர் மணவாளன் இராகுத்த மிண்டன் ஏகாம்பரநாத கச்சிராயர் ”,
“இராய இராகுத்த மிண்ட மல்லிகார்சுன கச்சிராயர் ”
போன்றோர் குறிககபடுகின்றனர் .
விளந்தை கச்சிராய அரசர்கள் “இராகுத்த மிண்டன் ” சந்ததிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல கோவில்களுக்கு கொடை வழங்கியுள்ளனர் .