Friday, November 14, 2014

கடந்தையார் - சோழர் படைத்தளபதி , குறுநில மன்னர் வம்சம் (வன்னியர் சமூகம் )



சோழர் படைத்தளபதி , குறுநில மன்னர் வம்சம் (வன்னியர் சமூகம் )

தென்னார்க்காடு பகுதியில் பெண்ணாகடம், குடிகாடு , திட்டக்குடி போன்ற பகுதியிலும், கீழ்பெரம்பலூர் பகுதியிலும் வன்னியர் குடும்பத்தினர் கடந்தையார் பட்டம் சூடியவர்கள் .

இவர்கள் அனைவருமே தங்களை ஒரே குடும்பமாக ,பங்காளி முறை என்று கருதுபவர்கள் .அதனால் பெண் எடுப்பதோ கொடுப்பதோ வேறு பட்டத்தில்தான் .

பெண்ணாகடம் சிவன் கோவிலில் நடக்கும் தேரோட்டத்தில் தேர்வடம் பிடிக்கும் முதல்மரியாதை கடந்தையார்களுக்கே .
தேரோட்டத்தின் போது இக்குடும்பத்து மூத்த பிரதிநிதிகளுக்கு சந்தனம், மாலை , வெற்றிலை பாக்கு , தீபாராதனையுடன் பரிவட்டம் கட்டபடுகிறது...

பெண்ணாகடம் ஊரின் பழைய பெயர் கடந்தை (ஏழாம் நூற்றாண்டு ). இப்பகுதியை ஆட்சி செய்ததால் இவ்வன்னியர்களுக்கு கடந்தையார் என்ற பெயர் .

கிபி 1136 கல்வெட்டில் "பெண்ணாகடமான ஸ்ரீமுடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலம் " என அழைக்க பட்டது .

விக்கிரம சோழன் காலத்தில் திட்டக்குடி - உகளூரை சேர்ந்த பகுதிகளில் வன்னிய இனத்தை சேர்ந்த அதிகாரிகள் முத்தரையர் என்ற பட்டத்துடன் விளங்கியதை ஆடுதுறை கல்வெட்டுகள் தெரிவிக்கிறது .

1. உகளூர் கூற்றத்து இறையான் புஞ்சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னான முடிகொண்ட சோழ முத்தரையன்

2. ஒலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காணி திரிச்சன் விக்ரமசோழன் முத்தரையன்

3. துங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகன் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன்

4. மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன்

என கல்வெட்டு வாசகம் வருகிறது .

இதிலிருந்து , கடந்தையை பூர்வீகமாக கொண்ட வங்காரம் ஊரில் காணி உரிமை உடையவர்களாகவும் முத்தரையர் என்ற அரசியல் பட்டபெயர்கொண்டும் விளங்கிய மேற்சொன்ன பள்ளிகள் (வன்னியர்கள் ) தெளிவாகிறது .

இன்றளவும் இப்பகுதியில் கடந்தையார் என்பது வன்னியர் இனத்திடையே மட்டுமே இருக்கும் பட்டமாகும் .

குறிப்பு :

நூல் : திருக்கடந்தை வரலாறும் உறையும்
ஓலைச்சுவடி உரிமை : கோவிந்தசாமி கடந்தையார்
வெளியீடு : ச.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் - 245